பெண்ணே எழுந்து வா
மங்கையே!
இவ்வுலகில் உன்னால்
முடியாதது எதுவும் இல்லை!
விண்ணை தொட்ட
வீர மங்கைகளும் உண்டு!
வாள் எடுத்து போர் புரிந்து
வெற்றி வாகை சூடிய
மங்கைகளும் உண்டு!
காயங்களை எண்ணியிருந்தார்
கல்பனா சாவ்லா சரித்திரம்
படைத்திருக்க மாட்டார்!
வேலு நாச்சியார்
வீரமங்கையாகி இருக்க மாட்டார்!
வேதனைளை விலக்கி
வெற்றி வாகை சூடிய பெண்ணே
ஏளனமாக எண்ணியவர்கள் முன்பு
என்னால் முடியுமென எழுந்து வா!
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro