அப்பா
அப்பா
என்னை செதுக்கி செதுக்கி
தேய்ந்து போன உளி
துன்பத்தின் பாலைவனத்தில்
நிழல் தந்த தரு
வறுமைக்கடலின் சூறாவளியில்
என்னை அமிழாது தவிர்த்த
நங்கூரம்
மழை நீர் மறைக்க முந்தானை
தந்தாள் மாதா
தன் முதுகையே குடையாய்
தந்தான் இந்த பிதா
வறுமையின் கட்டிலில் துயிலும்போதும்
அவன் கனவுகளில் நான் மட்டும் அரசன்
பணியின்பால் பகல் மறைந்து
இரவு திரும்பும்
என் வாழ்வின் சந்திரன்
நடைபாதையில்
என் கால் இடரும்போதெல்லாம்
அவன் இதயமும் இடறுவதை நானறிவேன்
பாதரட்சகையை எனக்கு தந்துவிட்டு
முள்மீது நடந்தவன்
உழைத்து களைத்தாலும் என்
உதட்டு சிரிப்புக்கண்டு அவன்
இதயம் நெகிழ்வதை
கண்வழி கண்டிருக்கிறேன்
எனோ தெரியவில்லை
என் ஒரு தலை காதலிபோல் அவன்
அன்பை மறைத்து மறைத்தே
மறைந்துவிட்டான்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro