அன்பு பரிசு என் தாயிக்கு
அன்பின் உருவில்
உயிரின் வடிவில்
இறைவனின் வரமெனக்கு நீதானம்மா !
உன் வயிற்றில் ஒரு முறை பிறந்தேனம்மா உனதன்பிலோ தினம் தினம் பிறக்கிறேனம்மா !
எனக்கு உணவு ஊட்டியே
நீ பசியாற்றி கொண்டாயே
சாப்பிடம்மா என நான் சொன்ன போது
உன் புன்னகை மட்டுமே விடையாய் தந்தாயே
அது ஏனம்மா ?
வறுமையின் வாட்டமோ ?
இறைவனின் நாட்டமோ ?
முகம் சொல்லவில்லையம்மா
உன் மெலிந்த உடல் சொன்னதம்மா ...
உன் உடல் நோக என் உடல் வளர்த்தாயே !
உன் உயிர் கரைய என் உயிர் காத்தாயே !
உனக்கு நான் என்ன செய்தேனம்மா ?
என்ன செய்ய போறேனம்மா ?
உன் தியாகத்தை நினைக்கையில் ,
தொண்டை அடைக்கிறதம்மா !
கண்கள் நனைகிறதம்மா!
பரிசாக நீ இருக்கையில்
நான் உனக்கென்ன பரிசளிப்பதம்மா?
எனக்கெல்லாமாகவும் நீ இருக்கையில்
நான் உனக்கென்ன தருவதம்மா ?
நீ பட்ட கஷ்டம் மறந்து போக
நீ படும் துயரம் பறந்து போக
உன் பிள்ளையாய் நீ சொன்ன நேர்வழி சென்று
ஓர் நாள் உன்னை இவ்வுலகம்
உற்று நோக்க செய்வேனம்மா !
சோகத்தை தன்னுள் மறைத்து
சிரிக்கும் உன் உதடுகள்
உள்ளம் பூரிப்புடன் சிரிக்க செய்வேனம்மா !
உதாரணமாய் இருக்கும் உன்னை
உலகறிய செய்வேனம்மா !
என் சிரிப்பில் கரைந்து போன உன்னை
சிரிக்க வைத்து நான் கரைவேனம்மா !
அந்த நாள் தூரமில்லை அம்மா ..
என்னை ஈன்றெடுத்த நாள்
நீ பெற்ற இன்பம்
உன்னை சான்றோரும் புகழும்
அந்நாளில் நான் கொள்வேன் அம்மா ...
இது தானம்மா என்
சிறிய அன்பு பரிசு .
உன்
தியாகம் ,
பாசம் ,
அன்பின் முன் ஏதும் ஈடாகா..
என்றுமே நீதானம்மா
என் உயிர் துடிப்பு !
காலமெல்லாம் வாழ்வேன்
உன்னை போற்றி கொண்டே .
நீ நீண்ட காலம் வாழ
பிரார்த்திக்கிறேன் அம்மா ..
என்றும் உன் துடிப்புடன்
உன் அன்பு மகள்
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro