நண்பர்கள் தினம்.
நான் யாரோ நீ யாரோ
என்று இருந்த நம்மை
கட்டிப்போட்டது இறுக்கமாய்
நட்பு எனும் கயிறு
உன் சிரிப்பில் நான் மனம் களிக்க
உன் கண்ணீர் நான் துடைக்க
உனக்காக என்னையும் உனக்காக என்னையும்
தந்தது இப்புனித நட்பல்லவா
தவறின் போது தண்டிக்க
உரிமையோடு கண்டிக்க
தோளோடு கை போட்டு
உறவாட வைத்தது நம் நட்பு
நட்பு இல்லா மனிதனில்லை
நட்பு இல்லாவிட்டால் மனிதனே இல்லை
நாம் கொண்ட நட்பானது
நாளும் நீடிக்க வேண்டுவோம்
கல்லில் செதுக்கிய சிற்பமாய்
என் இதயத்தில ஆழப் பதிந்த
என் இனிய நட்புக்களுக்கு
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
"இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்"
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro