எனக்கு இவ்வுலகைக் காட்டிய என் தந்தைக்கு.....
தாய் வயிற்றில் நானிருக்கும் போது
என்னை சுமக்கும் தாயையும் சேர்த்து
சுமந்தவரே நீ அப்பா(வாப்பா)
தன் குடும்பம் பசியார
நீ பசி மறந்து உழைத்தாய்
அல்லும் பகலும் இயந்திரமாய்
*நான் விழி திறக்கும் முன் நீ வெளிக்கிளம்பி-நான்
விழி மூடும் முன் என்னைக் காண
ஓடி வந்து என்னை அள்ளிக்கொஞ்சுவாய்
என் மழலைச் சிரிப்பில் உன் களைப்பை தீர்த்தாய்
என் ஒவ்வொரு அசைவிலும்
உன் துன்பம் தொலைத்தாய்
நான் அடம்பிடிக்கும் வேளையிலே
முத்தத்தாலே என்னை அடக்குவாய்
என் ஒவ்வொரு வெற்றிக்கும் நீயே
முதல் பரிசு தந்து என்னை ஊக்கப்படுத்தினாய்
என் ஒவ்வொரு தோல்வியிலும்
நான் துவண்டு விடாமல் என்னை
தாங்கிப் பிடித்து நிமிர்த்தினாய்
நீ தண்டிக்கும் ஒவ்வொரு முறையும் உன் கோபம் மட்டுமே தெரிந்த எனக்கு அதில் இருக்கும் ஆழமான அன்பு ஏனோ தெரியவே இல்லை
என் வெற்றியில் தட்டிக்கொடுத்த
என் தோல்வியில் துணை நின்ற
என் வாழ்வில் நான் ஜெயிக்க
எனக்கு பல அறிவுரை
வழங்கிய என் அப்பா(வாப்பா)
வாழ்க்கை முழுவதும் இறை ஆசியோடு ஆரோக்கியத்தோடு
மனம் முழுதும் மகிழ்ச்சி,திருப்தியோடு என்
வாழ்க்கை முழுதும் என்னை வழிநடத்த பிரார்த்திப்பதோடு,
நான் என்னவாக வேண்டும் என ஆசைப்பட்டாயோ அவ்வாறே ஆகிவிடுவேன் என உறுதியும அளிக்கிறேன்.
என்றும் உன் நம்பிக்கையுள்ள
உன் பூ
*elumbiyuruntha poha Vida mattene athan en wapa na elumba munne poiduwar
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro