💃அவள் மனம் இரும்பல்ல💃
யாரும் வேண்டாம் தனிமை போதும் என்றிருந்தவளுக்கு
கிடைத்தது உயிரின் உயிரான உறவொன்று
இன்று அதை பிரிந்து இருப்பது உயிரே போவது போல் வலிக்கிறது ஏனோ?
அன்று தனிமையே கதி என்றிருந்தவள்
இன்று தண்டுடைந்த
தாமரையாய் ஒடிந்து வீழ்ந்து விட்டாள்-
தனிமையின் வலியைத்
தாங்காமலே
மீண்டும் ஓர் தனிமை!!!!!
மீள முடியவில்லை
மீள வருமா அவ்வுறவு
மீட்டுத்தருமா இழந்த இன்பத்தை.
பதில் சொல்லத்தான் யாரும் இல்லையே
திரும்ப தனிமையிலே இருந்து விடட்டும்- அதுவே
திருப்தியானது
அடிமேல் அடி பட்டு வலைந்து கொடுக்க அவள் மனம் ஒன்றும் இரும்பல்ல.
அவளும் இறைவன் படைத்த ஒரு இளகிய மனம் கொண்ட இளம் பெண் தான்.
இதயம் உள்ளவர்கள் புரிந்து கொள்ளுங்கள்.
💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro