மாயம்: 5, 6, 7
மாயம்: 5
வெகு நாட்களுக்கு பிறகு, நிம்மதியாக தூங்கி சந்தோசமாக கண்களை மலர வைத்தான் ராகேஷ். தூக்கத்திலிருந்து தன்னை விடுவித்து கொண்டு சோம்பலை முறித்து, 'இனி தனக்கு எதிரி என்பதே கிடையாது' என நினைத்து மனதுக்குள் கர்வப்பட்டுக்கொண்டான்.
'இனிமேல், சித்தப்பா சொத்தையும் நம்மதான் ஆளப்போறோம், அவருக்குதான் வாரிசு இல்லையே, நம்மதான் தனிக்காட்டு ராஜா' என கற்பனையை வளர்த்துக்கொண்டான்.
ராகேஷ், சித்தப்பாவிடம் "உங்க கம்பெனியை தானே பார்த்துக்கொள்கிறேன்" என கேட்டதுக்கு, "தனக்கு ஒரே மகனான விஷ்ணுக்கு தான் தனது கம்பெனியும் சொத்தும் சேரும் எனவும், எனக்கு பிறகு தன் மகனே இதையெல்லாம் பார்த்துக்கொள்வான்" என திட்டவட்டமாக கூறினார் சுப்பிரமணியன்.
விஷ்ணுவும், ராகேஷும் சித்தப்பா, பெரியப்பா முறையில் அண்ணன், தம்பி முறை ஆவர். இருவரின் தாத்தா விஸ்வமூர்த்தி தனது இரு மகன்களான ராமநாதனையும் சுப்பிரமணியனையும் பாகுபாடின்றி நன்றாகவே வளர்த்தார். இருவரும் நன்றாகவே படித்தனர். கல்லூரி படிப்பையும் முடித்துவிட்டு தானாகவே கம்பெனி வைத்து நடத்தும் அளவுக்கு திறமை வாய்ந்தவராக தேறினார்.
ஆனால், ராமநாதனோ குறுக்கு வழியில் சில தொழிலை நடத்தினான். இதனால், வருமானமும், செழுமையாக வருகை தந்தது. ஆகையால், இவரால் இந்த தொழிலை கை விட முடியவில்லை. ஆனால், சுப்பிரமணியனோ இதற்கு எதிர்மறை குணம் படைத்தவர். தனது கம்பெனியை நேர்வழியில் நடத்தி சிறு தொகை வந்தாலும், அதை மனதார ஏற்றுக்கொண்டார். நேர்மையையே பின்பற்றும் இருவரின் தந்தைக்கு மூத்த மகனின் செயல் பிடிக்காமல் அறிவுரை வழங்கினார். இதை கேட்கும் மனநிலையில் ராமநாதனோ இல்லை. தந்தை சொல் கேட்காமல் தனது வேலையை தொடர்ந்தார். மூத்த மகனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர் அவரது பெற்றோர், 'அப்பவாவது பொறுப்பு வரட்டும்' என. அடுத்து, சுப்பிரமணியனுக்கும் திருமணம் முடித்து வைத்தனர். விஸ்வமூர்த்தி சொத்தை தனது இரு மகன்களுக்கும் சரி பாதியாக பிரித்து எழுதி கொடுத்தார். மறுவருடமே சிங்கக்குட்டிகள் போல இரு மகன்களும் ஆளுக்கொரு வாரிசுகளை வெளிப்படுத்தினர். சுமுகமாக போன குடும்பத்தில் பிறகுதான் பொறாமை என்னும் குண்டு வெடித்தது.
குறுக்கு வழியில் சம்பாதித்த ராமநாதனின் கம்பெனியில், நஷ்டத்துக்கு மேல் நஷ்டமே குவிந்தது. சுப்பிரமணியனுக்கு தொழில் நன்றாக நடந்து கொண்டிருந்தது. 'இவனுக்கு மட்டும் லாபமாக குவிகிறதே' என்று ராமநாதனுக்கு பொறாமையாக இருந்தது. இதனாலே இரு குடும்பமும் பிரிந்தது.
ஒற்றுமையாக இருந்தவர்கள் ஆளுக்கொரு திசை என நகர்ந்தனர். ராமநாதனுக்கு வளர்ந்து வரும் தன் தம்பியின் வளர்ச்சியின் மீது மோகம். தந்தை போலவே, 'சித்தப்பாவின் சொத்தை தானே ஆளவேண்டும்' என்னும் வெறி ராகேஷுக்கும் ஊறியது. இதுவே, ராகேஷ் விஷ்ணுவை கொல்ல காரணமாகும்.
அவனது பழியுணர்ச்சி, தந்தையின் ஆசை, சுப்பிரமணியன் மறுத்ததால் ஏற்பட்ட பகை, சொத்து மீதுள்ள மோகம் என எல்லாமே ஆட்கொண்டு அவனை ஆட்டிப்படைத்து விஷ்ணுவை கொல்ல வைத்தது. 'விஷ்ணுக்கு அப்புறம் தனக்கே எல்லா சொத்தும் வந்துவிடும்' என்ற நம்பிக்கையில்.
ஆனால், இவனின் எல்லா திட்டமும் அரங்கேறாது என்பது இவனறியா கடவுளின் திட்டமாகும்.
வர்ஷித் இரவு முழுவதும் தூங்காமல் இருந்ததால், விடியற்காலையில் தான் தூக்கத்தை தழுவினான். தூங்கி இரண்டு மணி நேரத்திலேயே, அலாரம் அடித்து சென்னைக்கு புறப்படுவதை நியாபக படுத்தியது.
கண் விழித்தவன் புரண்டு ஆதிகா படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தான். அலாரம் சத்தத்தில் கண்களை விழித்து, துடைத்து கொண்டே, எதேச்சையாக வர்ஷித் படுத்திருக்கும் பக்கம் திரும்பி படுத்தாள் ஆதிகா.
இருவரும் ஒரே நேரத்தில் எதிர் நோக்கும்போது, இருவிழிகளும் ஒரு நிமிடம் சந்தித்து மீண்டன. வர்ஷித் ஒரு வெற்று பார்வையை அவளிடம் செலுத்தி, "கிளம்பு இன்னைக்கு சென்னைக்கு போகணும்" என்றான்.
வர்ஷித் முதலில் திருமணம் முடிந்து, தான் மட்டுமே சென்னைக்கு போவதாக அவனது மாமாவிடம் கூறினான். அதற்கு அவர்தான், "நீ மட்டும் தனியா போறதுக்கா உனக்கு மெனக்கெட்டு கல்யாணம் பண்ணி வைக்கிறது. ஒழுங்கா அந்த பொண்ணையும் கூட்டிட்டு போ" என்றார் கட்டளையாக. அவர் கூறும்போது, அவரது வார்த்தையில் சிக்கிய "மெனக்கெட்டு" என்கிற வார்த்தை வர்ஷித்தை காயப்படுத்தியது என்னவோ உண்மை தான். 'தனக்கென்று பெற்றோர் இருந்திருந்தால், இதை அவர்கள் பாரமாக எடுத்திருக்க மாட்டனர். நமக்கு தான் அது கொடுத்து வைக்கலயே' என எண்ணி மனதை தேற்றிக்கொண்டான் . மாமா கூறிய பிறகு இதனை மறுக்கமுடியாமல் வர்ஷித், அவளை தன்னுடன் அழைத்து செல்ல சம்மதித்தான், முழு மனதில்லாமல்.
வர்ஷித் கூறியதற்கு ஆதிகாவும் சரி, என்று தலையை மட்டும் அசைத்து தனது பதிலை தெரிவித்தாள், பயந்த விழிகளோடு.
பொழுதும் பளபள வென விடிந்தது. இருவரும் வீட்டை விட்டு கிளம்பும் நேரமும் வந்தது. தன் காதல் கண்ட ஏமாற்றமும், அதனின் வலியும், திருமணம் முடிந்து வீட்டை விட்டு பிரியும் சராசரி பெண்ணிற்குரிய சோகமும் போட்டி போட்டு கொண்டு துயரத்திற்குள் ஆதிகாவை மூழ்கடித்தது. ஆதிகா தந்தையையும் தாயையும் கட்டி தழுவி கொண்டு கண்ணீர் சிந்தினாள். இருவரும் மகளிற்கு, "இன்னும் கொஞ்ச நாள் தானே, அப்புறம் இங்க வந்துருவிங்க அழுக கூடாது, போய்ட்டு வாங்க" என கூறினார். அவளின் தாயோ, "பாத்திரமா பாத்துக்கோ, அவர நீ தான் மாத்தணும். எல்லாமே சரி ஆகிடும்" என அறிவுரை கூறினார் மகளுக்கு. சுதா மட்டும், வர்ஷித் எதிலும் ஈடுபாடு இல்லாமல் இருப்பதை கண்டு கலக்கம் கொண்டார், 'போக போக சரி ஆகிடும்' என நம்பினார். இங்கு நடந்த எதையும் வர்ஷித் கண்டுகொள்ளவேயில்லை. 'போய்ட்டு போன் பண்ணுங்க" என கூறி வழியனுப்பி வைத்தனர், ஆதிகாவின் பெற்றோர்.
ஆதிகா, வர்ஷித்துடன் அவனது மாமாவும் பேருந்து நிலையம் வரை சென்று அவர்களை சென்னை பஸில் ஏற்றிவிட்டு, தன்னுடைய ஊருக்கும் பஸ் ஏறினார்.
பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் ஆதிகாவும், அவளுக்கு அருகில் வர்ஷித்தும் அமர்ந்திருந்தனர். வெகு அருகில் அமர்ந்திருந்தும், இருவரது உடல், ஒருவரையொருவர் தொடும் தூரத்தில் இருந்தும் தொடாமல் இருந்தது, உடல் மட்டும் இல்லை மனமும் அப்படிதான். பேருந்து பயணத்தை தொடங்கியது.
மதி மறைந்து, ஆதவன்
ஆட்சியை தொடங்க,
பறவைகள் கூட அமைதி
காக்காமல் கூச்சலிட்டு
தங்கள் இருக்கையை
தெரிவிக்க, மக்கள்
பரபரப்பாக வேலையில்
ஈடுபட,
இப்பேருலகமே அமைதியை
இழந்துகொண்டிருந்தது,
இவர்கள் இருவரை தவிர,
அந்த காலை பொழுதில்...
ஆதிகா திரும்பி, 'வர்ஷித் என்ன செய்கிறான்?' என கூட பார்க்காமல், ஜன்னல் பக்கமே தலையை பதித்திருந்தாள். வர்ஷித்தா இதற்கு சளைத்தவன்? அவனும் ஆதிகாவை கண்டு கொள்ளாமல் போனையே பார்த்துக்கொண்டு வந்தான்.
பேருந்து வேகமாக செல்லுவதால் , பனிக்காற்றும் புயலென வீச, குளிர் தாங்க முடியாமல் ஆதிகா அணித்திருந்த சுடிதாரின் துப்பட்டாவை இழுத்து போர்த்தியிருந்தாள். அவனோ, உள்ளே குளிர்ந்தாலும், வெளியில் குளிர்வதை அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
சிறிது நேரம் இப்படியே நகர, வர்ஷிதிற்க்கு போனை பார்த்துக்கொண்டே வருவதால், போர் அடித்தது. கொஞ்ச நேரம் கழித்து தன் தோளில் பாரம் ஏறுவதை உணர்ந்தவன், சற்று திரும்பி கண்களை ஆதிகா மேல் பதித்தான். அவளோ, சிறு பிள்ளை போல், இவன் தோள் மீது அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள்.
மாயம்: 6
அழகு பதுமையென தூங்கும் தன் மனையாளின் முகத்தை அப்போதுதான், வெகு நெருக்கத்தில் பார்த்தான் வர்ஷித். அவ்வளவு நேரமிருந்த மன போராட்டங்கள் சிறிது அமர்ந்து, சற்று முன் பிறந்த மன அமைதியும் பனிக்காற்றின் ஈரப்பதமும் ஆதிகாவின் அழகை ரசிக்க தூண்டியது அவனுக்குள்.
வீசும் காற்றுக்கு ஏற்றவாறு முடிக்கற்றைகள் நடனமாடும் மைதானமாக அவளது நெற்றி, தூங்கும் போது கூட கதை பேசுவது போல காட்சியளிக்கும் உருண்டை விழிகள், அந்த விழிகளுக்கு ஏற்ப இறைவனே இறங்கி வந்து வரைந்தது போல அமைந்திருக்கும் இரு கருமை நிற புருவங்கள், முகத்திலே கொஞ்சம் மேடிட்டு வளர்ந்து, மூச்சு காற்றை உள்ளே ஏற்றியும் வெளியே இறக்கியும் செயல்படும் மூக்கு என இது வரை எல்லாத்தையும் ரசித்தவன், அதற்கு கீழே இறங்கினால், நடக்க கூடாத விபரீதம் நேரிடும் எனும் பயத்தில் மனதை கடிவாளமிட்டு, 'இவள் தனக்கு என்றுமே கிடைக்க போவதில்லை, கிடைத்தாலும் தான் என்றுமே இவளை ஏற்க போவதில்லை' என தன் மனதை அடக்கினான். விதி வலியது ஆயிற்றே...
தூங்கிய நிலையில் இருந்தலும், அவளது அதரங்களும் பற்களும் நடுங்கி கொண்டே குளிரின் வீரியத்தை எடுத்துரைத்தது. அவள் தூக்கம் கலையாத வண்ணம், பையிலிருந்து போர்வையை எடுத்து அவளுக்கு போர்த்திவிட்டான். 'இவள் தனக்கில்லை என்றாலும் தன் கூட இருக்கும் சில நாட்கள் நன்றாக பார்த்துக்கொள்ளவேண்டும்' என முடிவெடுத்தான். ஆனால், இதை அவன் நிறைவேற்றுவானா?
என்னதான் வலி கொடுத்தாலும், சிறுபிள்ளை போல் தூங்கும் அவளது சோகத்தை சுமந்து கொண்டிருக்கும் முகத்தை தன் தோளிலிருந்து, அகற்ற மனமில்லாமல் சுமந்து கொண்டே தானும் சீட்டின் மீது தலையை சாய்த்து தூங்கி போனான்.
சாலையில் வாகனங்களின் பேரிரைச்சல், இவர்களை விழிக்க செய்து தெரியப்படுத்தியது, சென்னை மாநகரம் வந்துவிட்டது என்று, இல்லை இல்லை சென்னைக்கு தாங்கள் வந்துவிட்டோம் என்று.
சென்னைக்கு வரப்போகிறோம் என முடிவு செய்த பொழுதே, வர்ஷித் ஆகாஷிடம் போனில், " மச்சான் உன்னோட பிரண்ட் கவின், கிட்ட சொல்லி சென்னைல எனக்கொரு வீடு பாக்கசொல்லுடா ஒரு வாரத்துக்கு மட்டும்" என கூற, "சரி மச்சான் சொல்றேன், அவனுக்கே இன்னொரு வீடு இருக்குடா, நான் அவன்கிட்ட பேசிட்டு அவனோட நம்பரும் அட்ரஸும் அனுப்பி விடுறேன்டா" என பதிலளித்தான் ஆகாஷ்.
சென்னையில் இறங்கியதும் ஆதிகாவிற்கு படபட வென இருந்தது. வர்ஷித், ஆகாஷ் அனுப்பிய அட்ரெஸ்ஸை வைத்து, அவனது நண்பனான, கவின் வீட்டுக்கு ஆதிகாவை அழைத்து சென்றான்.
ஆகாஷ் கவினிடம், வர்ஷித்தின் வருகையை பற்றி கூறியிருந்தான். கவினும், அவனது மனைவியும் வர்ஷித்தையும், ஆதிகாவையும் நன்றாக உபசரித்தனர். அவர்கள் இருவரும் தங்கப்போகும் வீட்டிற்கு கூட்டி சென்று காட்டிவிட்டு, "ஏதாவது உதவின தயங்காம கேளுங்க" எனவும் கூறிவிட்டு, சமையலுக்கு தேவையான பொருட்களையும் இவர்களே ஏற்பாடு செய்து கொடுத்து வந்தனர்.
சென்னைக்கு வந்து சேர்ந்து, வீடு பார்த்து முடிக்கும்போதே அன்றிரவு நெருங்கியது. காலையிலிருந்து சரியாக சாப்பிடாமல் இருந்ததால், 'தானே கடைக்கு சென்று, இருவருக்கும் உணவு வாங்கி வரலாம்' என முடிவு செய்த வர்ஷித், ஆதிகாவிடம் "நாளைக்கு சமைச்சுக்கலாம், இன்னைக்கு வெளில வாங்கிட்டு வரேன். உனக்கு என்ன வேணும்?"என கேட்டதுக்கு தயக்கமாக, "இட்லி" என்றாள்.
அவன் சென்ற பிறகு, ஹாலிலே சுருண்டு படுத்துக்கொண்டாள். அப்பொழுது, ஆதிகாவிற்கு போனில் அழைப்பு வந்தது பெற்றோரிடமிருந்து. அவர்களிடம் பேசி முடித்து மறுபடியும் படுக்க போன போது, வர்ஷித் சாப்பாடு வாங்கி வந்தான். "இந்தா சாப்பாடு, சாப்பிட்டு தூங்கு, காலையிலிருந்து ஒழுங்கவே சாப்பிடலைல" என்றான். இருத்தட்டை கொண்டு வந்து வைத்தவள். அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல், "நீங்களும் வாங்க சாப்பிடலாம்" என்றாள். அதற்கு அவன், "இல்லை இப்போ நீ சாப்பிடு, எனக்கு பசிக்கல நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன்" என்றான். அவள் மனதில், 'எனக்கு மட்டும் தான் பசிக்குமா, இவரும் தானே காலையிலிருந்து சாப்பிடல' என நினைத்தவள், அவனை மீண்டும் வற்புறுத்த விரும்பவில்லை.
வர்ஷித்தும் அங்கு இருக்க விரும்பாமல், பேசி முடித்த மறு நொடியே உடையை மாற்றி வெளியேறினான்.
அவன் வெளியேறிய சில நிமிடத்திலே, ஆகாஷ் அவனை போனில் அழைத்தான். பால்கனியில் நின்று அவனுடன் உரையாட ஆரம்பித்தான் வர்ஷித். "என்னடா மச்சான் வீடு எல்லாம் ஓகே தானே, பாத்து போயிட்டீங்களா?" என ஆகாஷ் கேட்க, "வந்துட்டோம்டா, நல்லா பேசுனாங்க, உபசரிப்பு எல்லாம் பலமா இருந்ததுடா" என்றான் மன நிறைவுடன் வர்ஷித். "நீ சாப்பிட்டியா?" என ஆகாஷ் கேக்க வர்ஷித்தோ, "இன்னும் இல்லடா, இப்போதான் வாங்கி கொடுத்துட்டு வந்தேன் அவ சாப்பிட்டதுக்கு அப்புறம் தான் நான் சாப்புடனும்" என்றான். ஆகாஷ் "ஏன்டா அவுங்க கூட சாப்பிடலாம்ல, இப்படியே எத்தனை நாள் இருக்க போற, நடந்தது நடந்து போச்சு, இவுங்க கூட பழகுடா எல்லாமே மாறும்" என அறிவுரை மொழிந்தவன், "சரி இப்போ எதுக்கு திருச்சி வேண்டாம்ணு சென்னை கேட்டிருக்க? என்ன ஆச்சு?" என ஆகாஷ் கேட்க, இதற்கு வர்ஷித், "என்னால அங்க இருக்கமுடியும்ணு தோணல அதான்டா, கொஞ்சம் சேஞ்சுகாக சென்னை சூஸ் பண்ணேன்டா. ஆனால், என் வாழ்க்கையில இப்போ என்னென்னமோ நடந்து போச்சு, இப்போ ரொம்ப குழப்பமா இருக்குடா என்ன பண்றதுனே தெரியல?" என வர்ஷித் கூறிய மொழிகளை கேட்ட ஆகாஷ், "என்ன குழப்பம் மச்சி" என கேட்டு முடிப்பதற்குள்ளவே வர்ஷித்தின் போன் சுவிட்ச்ஆப் ஆகியது, சார்ஜ் இல்லாமல்.
வர்ஷித் நொந்து கொண்டே, 'இது கூட எனக்கு சதி பண்ணுது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடாதே இது...இது மட்டும் இல்லை எல்லாமே தான்' என பார்வையை மனைவி மீது செலுத்தினான். உள்ளே சென்று சார்ஜ் போட்டுவிட்டு இவள் படுத்துவிட்டாளா? என ஒரு நோட்டம் விட்டு சாப்பிட தொடங்கினான். மனித கோபத்தை எல்லாம் உயிரற்ற கருவியிடம் காட்டினால், அது தான் என்ன செய்யும்.
ஆதிகா உண்டு முடித்து, அறையில் சென்று கீழே முடங்கிக்கொண்டாள். படுத்தவுடன் காலையிலிருந்து அடக்கி வைத்த அழுகையையெல்லாம் தலையணையிடம் கொட்டி தீர்த்தாள். அவள் மனம் முழுவதிலும் விஷ்ணும் நியாபகங்களே நிரம்பி அவளை வாட்டியது. அவனும், தான் இருக்கிற சென்னையில் இருக்கும் போது தானே நம்மிடம் கடைசியாக பேசினான். அன்று அவன் பேசிய வார்த்தைகள் காற்றில் கலந்து அவளது செவி முழுவதும் ஆட்கொண்டது. பேசிய மனிதனுக்கு அழிவிருந்தாலும் பேசிய வார்த்தைக்கும் அதை உள்வாங்கிய காற்றுக்கும் அழிவு உண்டோ....
நிழல் அது தான் பிரிகிறதே...
நிஜம் அது தான் மறைக்கிறதே...
கண்ணும் கண்ணும் தவிக்கிறதே...
ஒன்றை ஒன்று தொலைக்கிறதே..
எத்தனை கனவு, எத்தனை ஆசை எல்லாமே கலைந்து விட்டதே. எல்லா பழியையும் விஷ்ணு மீது சுமத்தினாள், அந்த பேதை. இனிமேல், 'அவனுக்காக அழுக கூடாது. 'அவன் தானே என்னை விட்டு போனான், அவன் தான் வருந்தனும். நான் எதற்கு அழுகணும்?' என தன்னையே தேற்றிக்கொண்டாள். ஒட்டுமொத்த அவனது நினைவுகளையும் அழித்துவிடும்படி அழுது ஓய்ந்தாள்.
மாயம்: 7
'நாளையிலிருந்து, இவரோட பேசணும். பேசுனாதான் எல்லாமே சரி ஆகும், இது தான் ஒரே வழி. இவர் கூட தான் இனி என் வாழ்க்கை' என தீர்மானமாக நினைத்துக்கொண்டாள். காலையில் முதல் வேலையாக அவரிடம் என்னோட கடந்த காலத்தை பத்தி பேசி, 'கொஞ்சம் டைம் கேட்போம்' என முடிவெடுத்தாள்.
இவள் குழப்பத்தில் இருந்ததால், அவனும் குழப்பத்தில் உள்ளான் என்பதை, இவள் அறியாமல் விட்டாள். என்ன சொன்னாலும் அவன் தன்னை ஏற்க முன்வரமாட்டான் என இவளுக்கு துளியளவும் தெரியவில்லை. தெரிய வரும்போது என்ன செய்வாள்?
இவள் தூக்கத்திற்கு போராடி கொண்டிருக்கும்போது தான், வர்ஷித் உள்ளே நுழைந்தான். இவள் கீழே படுத்திருப்பதை பார்த்தவன், "நீ மேல படுத்துக்கோ, நான் ஹால்ல படுத்துக்குறேன்", என கூறி இவள் பதில் கூற நேரம் கொடுக்காமல் அறையை விட்டு வெளியேறினான்.
காலையில் எழுந்தவுடன் வர்ஷித்தும் முதல் வேலையாக ஆதிகாவிடம் பேச வேண்டும் என முடிவெடுத்தான்.
வர்ஷித் காலையில் குளித்து முடித்து அலுவலகத்திற்கு கிளம்பி, ஆதிகாவிடம் பேசுவதற்காக காத்து கொண்டிருந்தான். ஆதிகா அப்போதான் தூங்கி முழித்து வெளியில் வந்தாள். அவள், மாலையில் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு பேசலாம் என நினைத்தாள். வர்ஷித்தோ இப்பவே பேசிவிடனும் என முடிவாக இருந்தான்.
ஆதிகாவிற்கும் மாலை வரை இந்த விஷயத்தை மனதில் போட்டு குழப்பிக்கொள்ள விரும்பவில்லை. எனவே, இப்பவே கூறிவிடலாம் என நினைத்து, அவனிடம் பேசுவதற்காக வந்தாள். "உங்களிடம் ஒன்னு பேசணும்" என ஆரம்பித்தாள் ஆதிகா. வர்ஷித் நிமிர்ந்து பார்த்தான், தன் எதிரில் நிற்கும் ஆதிகாவை. "என்னோட கடந்த காலத்தை பத்தி" என ஆதிகா கூறி முடிப்பதற்குள்ளவே அவன் கை நீட்டி தடுத்து, "வேண்டாம் எல்லாம் எனக்கு தெரியும்" என்றான். ஆதிகா திரு திரு வென முழித்தாள். அவன்மேலும், "இன்னும் கொஞ்ச நாள் தான், அதுக்கு அப்பறம் நான் உன் வாழ்க்கைய விட்டு போயிருவேன். நீ எந்த கவலையும் படாத, உன் வாழ்க்கையில் நான் தலையிட மாட்டேன். இந்த வீட்டிலயும் நீ எனக்காக ஒன்னும் செய்ய வேண்டாம். நான் வெளியில் சாப்பிடுகிறேன்" என ஆதிகாவை பேச விடாமல் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் வர்ஷித்.
அவன் போன பிறகு, இவளும் நின்ற இடத்திலேயே உணர்வற்று அமர்ந்தாள். 'தான் காதலித்தது தெரிந்து தான் இப்படி பேசுகிறான். தானே கல்யாணத்திற்கு முன்னாடி அவனிடம் கூறியிருக்க வேண்டும் தப்பு செய்துவிட்டோமே' என தன்னையே நொந்துக்கொண்டாள். 'இது மட்டும் வீட்டிற்கு தெரிந்தால் எல்லாருக்கும் என்ன பதில் சொல்வது, என்னோட வாழ்கை இப்படி ஆகிடுச்சே, தானே மாறி வந்தால் கூட இவன் ஏற்றுக்கொள்ளமாட்டான்' என நினைத்து அழுது மடிந்தாள் அந்த அறியா பெண். ஆனால், அவன் இப்படி கூறியதற்கு இவள் நினைப்பது காரணமில்லை என்பதை இவள் உணர்வாளா?
நாட்கள் இதுபோலவே நகர்ந்தது இருவருக்கும், ஒருவரையொருவர் பார்க்காமலே. வர்ஷித் காலையில் சென்று மாலையில் தான் வீட்டிற்கு வருவான். ஆதிகாவோ, நாள் முழுவதும் வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்தாள். வர்ஷித் அவசரத்துக்கு மட்டும் தனது நம்பரை மட்டும் ஆதிகாவிடம் பகிர்ந்து கொண்டான். பதிலுக்கு அவள் எண்ணை கூட அவன் வாங்கிக்கொள்ளவில்லை.
ஒருநாள், ஆதிகாவின் தம்பி முகேஷ் போன் செய்தான். தம்பியின் புகைப்படத்தை போனில் பார்த்ததும் கண்கள் குளமாகிப்போனது ஆதிகாவிற்கு. அதை உயிர்ப்பித்து, காதில் வைத்து, தம்பி என பேசும்போதே அவளின் குரல் கரகரத்தது. மறுபக்கம் முகேஷ், "அக்கா... அழுகாத ஏன் அழுகுற?" என்றான், கஷ்டமிருந்தாலும் அதை மறைத்து அக்காவை தேற்றும் பொருட்டில்.
அவள் பதிலேதும் பேசாமல் இருந்தாள். அவனே மேல தொடர்ந்தான், "அப்பா இப்பதான் போன் பண்ணி நடந்த எல்லாமே சொன்னாங்க. நான் காலேஜ்ல கேம்ப் போன ஒரு வாரத்துல இப்படியெல்லாம் நடந்து போச்சு, சரிக்கா கவலைப்படாத. பழச மறந்துட்டு இந்த வாழ்க்கையை ஏத்துக்க பழக்கிக்கோ அக்கா. எல்லாமே ஒரு நாள் கண்டிப்பா மாறும்", என கூறினான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம் வந்தும் கொல்லும் தன் தமக்கையின் வாழ்க்கையை சரி செய்யும் நோக்கில். தன்னை தூக்கி வளர்த்து, தனக்கு மறு அன்னையாகவே வாழ்ந்த அக்காவின் வாழ்க்கையை நினைத்து மிகவும் வேதனை கொண்டான். அவளுக்கு ஆறுதல் மொழி பேசி, ஆறுதலாகவே மாறினான் முகேஷ். என்னதான் தம்பி ஆறுதலாக இருந்தாலும் ஆதிகாவிற்கு, வர்ஷித் கூறிய சொற்கள் பயம் அளித்தது, எதிர் கால வாழ்க்கையைப்பற்றி. வர்ஷித் கூறியதை தன் தம்பியிடம் அவள் கூறவில்லை. தன் கஷ்டம் தன்னோடவே இருக்கட்டும் என நினைத்தாள். பிறகு, தம்பியிடம் பொதுவாகவும் அவனது படிப்பு பற்றியும் பேசி விட்டு அழைப்பை துண்டித்தாள். தன் கடந்த கால காதல், எதிர்கால வாழ்வை அழிக்கப்போகிறது எனும் பயம் இவளை மிரட்டியது. வாழ்க்கையே கேள்வி குறியாக மாறிப்போனது.
வாழ்க்கையின் விடை தெரிந்துவிட்டால், வாழும் போது என்ன சுவாரசியம் இருக்க போகிறது என்பதை இந்த பாவை புரிந்துக்கொள்ளவில்லை. இந்த பயம், இதனை தெரிந்துக்கொள்ளவும் விடவில்லை. சரி பயப்படுவதால் என்ன ஆகப்போகிறது? நடக்கும் போது பார்த்து கொள்ளலாம் என நினைத்து பயத்தை மூட்டை கட்டி வைத்தாள்.
பிரச்சனையை நாம் ஒதுக்கி வைத்தாலே போதும், தானாகவே நம்மை விட்டு அது நீங்கிவிடும். நாம் அதை நினைக்க நினைக்க தான், அதுவும் நம்மையே நாடுகிறது.
நான்கு நாள் கழித்து, வர்ஷித் அலுவலகத்திலிருந்து வந்தது முதல் உச்சக்கட்ட கோபத்தில் இருந்தான். யாருக்கோ போன் செய்து கொண்டிருக்க, மறுபக்கம் எடுத்தவுடன் காட்டு கத்து கத்தினான். ஆடை கூட மாற்றமால் கோபத்தில் இருந்தவனை கண்டவள், 'அலுவலகத்தில் ஏதோ பிரச்சனை போல' என நினைத்தாள். அதனால், அவள் அவனிடம் ஏதும் கேட்டு கொள்ளவில்லை. நேரம் ஆக ஆக அவனின் கோபம் அதிகரிப்பதை பார்த்து அரண்டு போனாள். அவள் சென்று கேட்டதிற்கும் அவன் பதிலளிக்கவில்லை. இப்படி இருப்பவனிடம் என்ன கேட்பது என தெரியாமல், அறைக்குள் சென்று படுத்துக்கொண்டாள். இரவு 11மணிக்கு அறைக்கதவை திறந்தவன் திடுதிடுமென உள்ளே நுழைந்தான். சத்தம் கேட்டு விழித்தவள், எழுந்து அமர்ந்தாள்.
சட்டென வர்ஷித், "உன்னோட திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிக்கோ, இப்பவே ஊருக்கு கிளம்பனும்" என்று கூறி கொண்டு அவன் பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருந்தான். அவன் முகத்தை உற்று பார்த்தாள் ஆதிகா ஒரு நிமிடம், கோபம் கோபம் கோபம் மட்டுமே பிரதிபலளித்தது. பிறகு, "ஒரு வாரம் இருக்கணும்ணு சொன்னிங்க, இப்ப வந்து கிளம்பனும்னு சொல்றிங்க என்ன ஆச்சு, எதாவுது பிரச்சனையா?" என அவள் கேட்டதுதான் தாமதம், உடனே அவன் "எதிர்கேள்வி கேட்காமல் கிளம்பு சீக்கிரமா, இன்னும் கொஞ்ச நேரத்துல கார் வந்துரும்" என கத்தினான். இவன் திட்டிய வேகத்தில் பயந்து இவளும் கிளம்ப ஆரம்பித்தாள். வர்ஷித் தனது உடைமை எல்லாம் எடுத்து வைத்து விட்டு, கவினிடம் வீட்டை காலி செய்வதாக தெரிவித்தான். ஆதிகவோ சமையல் அறையை சுத்தம் செய்துவிட்டு, தானும் ஆயத்தமானாள்.
கார் இவர்களை சுமந்துக்கொண்டு திருச்சியை நோக்கி சென்றது. ஆதிகாவிற்கு பயம் தொற்றிக்கொண்டது, 'தன் காதல் தெரிந்து தான் பிரச்சனை செய்ய போறான்' என. திருச்சி செல்லும் வரையிலும் அவன் கோபம் மட்டுப்படவேயில்லை. இருவருக்கும் ஒரு நிமிடம் கூட கண் அயரவில்லை அவனுக்கு கோபத்தில், இவளுக்கு பயத்தில். ஒரு வழியாக காலை பொழுது நெருங்கியதும் கார் திருச்சியை அடைந்து விஷ்ணுவின் வீட்டின் வாசலில் நின்றது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro