!!8!!
மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அருண் குடும்பத்தினர் அப்படியே அதிர்ச்சியில் இடிந்து போய் அமர்ந்து விட்டார்கள் ஊர் மக்கள் அவர்கள்குள் ஏது-ஏதோ பேச ஆரம்பிக்க ஷன்வி அனைத்துக்கும் தன் தமையன் இடம் பேசி முற்று புள்ளி வைத்தாள் அதில் , எல்லாரும் கிளம்பி வீடுக்கு வந்து சீதா மனது முழுவதும் கவலை சூழ்ந்து கொண்டது, , ஐயோ இனி என் புள்ளைங்க வாழ்கை என்னாவது, என யோசித்து கொண்டே வந்தவர் வீட்டின் தூணில் அப்படியே சரிந்து அமர்ந்துவிட்டார் அவரின் நிலையே பார்த்து அருண் பதறி , அம்மா என அலறியே படியே அவரை தாங்கி பிடித்தான் மற்ற எல்லாரும் கூட பயந்து விட , நந்தனும் அருணும் தான் அவரை சமாதானம் செய்தார்கள் ,
இப்போ என்ன ஆச்சுன்னு , இப்படி இடிஞ்சி போய் உட்கந்துட சீதா , நம்ம புள்ளைங்க தங்கம் ம்மா , கவலை படாத அவங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமையும், இப்போ நடந்து கல்யாணம் ஆன போரவு நடக்கமா போச்சேன்னு சந்தோஷ படு இல்லை அவ்வளவுதான் என சொல்லிவிட்டு நான் கடை வரைக்கும் போயிட்டு வாரேன் , என நந்தன் கிளம்பிவிட்டார் கடைக்கி.
அருணும் தந்தை செல்வதை கவலையுடன் பார்த்து விட்டு தாயின் கைகளை ஆறுதலாக பற்றி. ," எல்லாம் சரியா போகும் ம்மா நீங்களும் அப்பாவும் தான் எங்க தைரியம் நீங்களே இப்படி ஒடைஞ்சு போயிட்டா நாங்க எங்க அம்மா போவோம்
மகனின் கவலையான குரலில் சீதாம்மா சற்று தெளிந்தார் , தம்பி எனக்கு ஒன்னும் இல்லைப்பா, உங்க சந்தோசம் தான் எனக்கும் முக்கியம் , உங்க ரெண்டு பேருக்கும் நல்ல வாழ்க்கை அமைஞ்சுட்டா அதுவே எனக்கு போதும் ,
கண்டிப்பா அமையும் ம்மா இப்போ நீங்க சாப்டு ரெஸ்ட் எடுங்க நானும் கடை வரைக்கும் போயிட்டு வந்துறேன், என அருண் பார்வையாலேயே ஷன்வி மற்றும் தங்கைக்கு சீதாம்மாவை பார்த்துக்கொள்ளும் படி உத்திரவு போட்டுவிட்டு கடைக்கு கிளம்பி சென்றான்
அவன் சென்றவுடன் , ஷன்வி, சரி நான் போய் சமைச்சு எடுத்துத் வாரேன் என்று சொல்லிவிட்டு, அவர்களுக்காக உணவை செய்து எடுத்துத் வந்து அடிக்கினாள்.
ஆனால் யாருக்கும் சாப்பிட தான் தோன்றவில்லை
அதையும் கவனித்த அவள் , ஹ்ம்ம் இது சரி பட்டு வராது என்று தோழிக்கும் , சீதாம்மாவுகும் சேர்த்தே உணவை தட்டில் போட்டு எடுத்து வந்து பேசி சமாதானம் செய்து சாப்பிட வைத்தாள்.
இவளின் செயல் இரு ஆண்களும் கவனித்து நெகிழ்ந்து விட்டார்கள்,
தாங்க்ஸ் டி ஷன்னு, என சங்கீ தோழிக்கு நன்றி சொல்ல அதை கேட்டு ஷன்வி, பொய் கோபத்துடன்
, என்னடி நன்றி எல்லாம் சொல்லுற , அப்பிடி பார்த்தா நான் உனக்கு எவ்வளவோ தடவ நன்றி சொல்லணும் என கவலையான குரலில் சொல்ல
ஷன்வியின் பேச்சு , சங்கீதாவை பதற வைத்தது பின்பு சுதாரித்து , அவசரமாக , சரி நன்றி சொல்லல இப்போ நீயும் சாப்பிட்டு தூங்கு கொஞ்சம் நேரம் என சமாதானம் செய்தாள் அவள்.
தங்கையின் பதற்றம் அருணை யோசிக்க வைத்தது என்னவா இருக்கும் என்று , பின்பு எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட்டு அவர் அவர் அறையில் ஒய்வு எடுக்க சென்று விட அருண் மட்டும் ஷன்வியே பற்றி யோசித்து படியே படுத்து கிடந்தான்.
அவளின் தமையன் இப்படி தான் பதறி போய் அவளின் நலன் பற்றி விசாரித்தான் இப்போது தங்கையும் பதறுகிறால் என்றால் விசயம் சற்று பெரிதோ என்று அவனுக்கு தோன்றியது , எப்பிடி தெரிந்து கொள்வது என்கிற யோசனையில் அப்படியே உறங்கியும் விட்டான் .
விடியல் அழகாய் விடிந்தது,
ஷன்வி தான் எல்லோருக்கும் டீ போட்டு கொடுத்தாள், பிறகு நந்தனிடம், அங்கிள், நான் சங்கீயே கோவிலுக்கு அழைச்சுட்டு போயிட்டு வரவா என அனுமதி கேட்டாள், அவளுக்கு தன் தமையன் உடனான திருமணத்தை பற்றி பேச வேண்டியது இருந்தது , நந்தனும் , போயிட்டு வாங்க ம்மா
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro