!! 5!!
காலை 6 மணிக்கு.. எல்லாரும் எழும்பி விட , நந்தகுமார்..
வேலா எல்லாம் ரெடியா இருக்கா.. சாப்பாட்டுல எந்த குறை வந்துர கூடாது… வரவங்கள.. நல்ல கவனிச்சு அனுப்பனும்.. என்ன சரியா..
சரிங்க ஐயா நான் பாத்துக்கிறன்.. அப்போது அங்கே வந்த.. அருண் இன்று எப்பிடியாவுது.. தந்தை இடம் பேசிவிட வேண்டும்.. என்று.. அவரை பார்த்து..
அப்பா… இங்க வாங்க.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்….
அப்போது தான் அந்த பக்கமாக சவி எதையோ எடுத்துக்கொண்டு அவசரமாக போய் கொண்டு இருக்க…
” என்ன ப்பா. இன்னும் நீ ரெடி ஆகலையா.. இந்த நேரத்துல என்ன பேசணும்.. என் கிட்ட..”
” அது இந்த கல்யாணம் பத்தி அப்புறம் நம்ம சங்கீ.. “
” சங்கீ என்கிற வார்த்தையே கேட்ட உடன்.. சவி அப்பிடியே பிரேக் அடித்தது போல்.. நின்றுவிட்டாள் .. அவளை பத்தி என்ன பேசணும்.. சொல்லுறாங்க.இவங்க அதுவும் எல்லாரும் வந்துகிட்டு இருக்காங்க இப்போ போய் இது தேவை தான “ என அவள் யோசிக்க
” பாப்பா பற்றி என்ன அருண் ஏதும் பிரச்சனையா. “ பெற்றவரின் மனது.. கிடந்தது பதறியது..
அதை கவனித்த அருண்...
” பிரச்சனை ஏதும் இல்ல அப்பா.. ஆனா இந்த கல்யாணம்.. ..”
இங்க சவிக்கோ.உதறல் எடுக்க ஆரம்பித்தது.. போச்சி.. நேத்து அவ பேசினது கேட்டு இருக்காங்க போல.. அதான் இப்பிடி. பேசுறாங்க.. ஏதாவுது பண்ணு ஷன்னு இல்லை.. அவ்வளோ தான்.. என . வேகமாய் . அவர்கள் அருகில் சென்று..
அங்கிள் .. “ என அழைத்துவைத்தாள்
” என்னமா “
“ அது வந்து ஆன்டி உங்களை வர சொன்னாங்க அதை சொல்ல தான் வந்தேன் அங்கிள். “
” இதோ.. என அவர் சென்று விட..
தந்தை இடம் பேச முடியவில்லையே என்கிற கவலையுடன்..
அருண்.. திரும்பி.. போக .என்னும் போதே.. “ ஷன்வி அவனை தடுத்து நிறுத்தினாள்
நில்லுங்க அப்படியே , அங்கிள் கிட்ட என்ன சொல்லிட்டு இருந்திங்க..
அவளது கேள்வியில் கடுப்பானவன்..
” என்ன கேட்ட.”
” ஹ்ம்ம் என்ன சொல்லிக்கிட்டு இருந்திங்க அங்கிள் கிட்ட கேட்டேன்.. “
” அது எதுக்கு உனக்கு..”
” எது.. , நீங்க பண்ணுறது உங்களுக்கே நல்லா இருக்கா’ என அவளும் அவனுக்கு சலிக்காமல்.. கடுப்பாக கேட்க..
” என்ன . ?
” இப்போ என்ன பண்ண இருந்திங்க.. அங்கிள் கிட்ட நீங்க ஏதாவுது சொல்லி இருந்தா..என்ன ஆகுறது.. “
” அதுக்காக என் தங்கை ஓட வாழ்க்கையில.. விளையாட சொல்லுறியா.. அது என் நால முடியாது. “
” இன்னும் கொஞ்சம் நேரத்துல நிச்சயதாம்பூலம் மாத்த போறாங்க இப்போ இப்பிடி சொன்ன.. அப்பா மனசு என்ன பாடு படும் யோசிச்சு பார்த்திங்களா.. இல்ல.. சங்கீ ஓட நிலைமையே யோசிச்சீங்களா.. “
” அவளோட நன்மைக்கு தான் நான் அப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன்”
” நல்ல நன்மையே செய்திங்க போங்க.. .” என அவள் சலித்து கொள்ள..
“ஏன் என்ன ஆச்சு..”
” உங்களுக்கு என்ன சார் ஆயிரம் பொண்ணு கிடைப்பாங்க நிச்சயம் நின்னு போனா கூட ஆனா பெண் பிள்ளைக்கு அப்பிடியா..”
” இப்போது தான் அவனுக்கு அவள் சொல்ல வருவது புரிந்தது.. , ஓ இப்பிடி ஒன்னு இருக்கோ.. மறந்தே போயிட்டேன் .. ஆனா இப்போ நான் என்ன பண்ணுறது.. “
” நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம்.. போயிட்டு கிளம்புற வழியே பாருங்க.. எல்லாம் அந்த கடவுள் பார்த்துப்பார்.. அது மட்டும் இல்லை . கூ ட்டம் எல்லாம் போன உடனே பொறுமையா அங்கிள் கிட்ட பேசிக்கலாம்.. இப்போ போங்க... “
” அப்போதான் என்னம்மா சீதா என்ன கூப்பிடவே இல்லை சொல்லுறா என்கிற கேள்வி உடன்.. நந்தகுமார் மீண்டும் வந்த சேர்ந்தார்..”
” ஹீஹீஹீ .. சாரி அங்கிள் டென்ஷன்ல மாத்தி சொல்லிட்டேன்.. அது வேற ஒரு அங்கிளை வேற ஆண்ட்டி கூப்பிடங்களா நான் தான் மாத்தி சொல்லிட்டேன் அதான்.. சொல்லிட்டு இருந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க.. “
” சரி மா , என்ன அருண் என்னமோ சொல்லிட்டு இருந்த.. “
” அது ஒன்னும் இல்லை பா நான் போய் கிளம்புறேன்.”
” ஹாப்ப டா. என்கிற நிம்மதி உடன்.. ஷன்வியும் அந்த இடத்தை விட்டு சென்றாள்… “ சென்றவள் நேராக
சங்கீ ரெடி ஆகிடியா எல்லாரும் வந்தாச்சு.. என உள்ளேய வந்த சவி….
என்னடி இது எல்லாம் அப்பிடியே இருக்கு.. இன்னும் ரெடி ஆகம இருக்க. உட்காந்து... .நேரம் ஆச்சு சங்கீ..சீக்கிரம் கிளம்பு.. “
” இதோ.. “ ஏனோ.. எதையோ பரி கொடுத்தவள் போல்.. மெதுவாக.. கிளம்பி கொண்டு இருக்க..
என்ன டி குரலே சரி இல்லை உன் முகமும் சரி இல்ல என்ன ஆச்சு ம்மா உன் முகம் என் இப்பிடி.. வாடி போய் கிடக்கு.. யாரு ஏதும் சொன்னார்களா என்ன..”
” அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லை ஷன்னு இரு இதோ ரெடி ஆகிட்டு வாரேன்.. “ என எழுந்தவளை தடுத்த ஷன்வி
” இரு சங்கீ என்ன ஆச்சு கேட்டேன். “
” ஹ்ம் அது அத்தை தான் “ சொல்லும் போதே சங்கீதாவிற்கு கண் கலங்க ஆரம்பித்தது
” என்ன சொன்னாங்க.”
” ரொம்ப பேசுறாங்க டா..”
” என்னவாம். “
” அவங்க பையனுக்கு இதை விட பெரிய பெரிய இடத்துல இருந்து எல்லாம். பெண் கொடுக்க வந்தார்களாம் ஆனா வேற வழி இல்லாம தான் அதுவும் அவங்க மகள் சொல்லி தான் இந்த கல்யாணம் ஏற்பாடாம்.. “
“சரி விடு.. இப்போ ரெடி ஆகிட்டு வா இந்த பிரச்சனையே என்னனு அப்புறம் பார்ப்போம்.. “
” எப்பிடி டா// “
” பார்ப்போம் நீ ரெடி ஆகு.. இப்போ இங்க ஏதும் பேச வேண்டாம். வீடு பூரா ஆளுங்க வந்துட்டாங்க... ..யார் காதுளையாவுது விழுந்தா தப்பா...போய்டும் “
” சரி டா.,”
சங்கீ கிளம்ப சவீ உதவி செய்யே..
சீதா அங்கே வந்து.. என்ன ம்மா கிளம்பிடீயா..
இதோ ஆச்சு ஆண்ட்டி.. பொண்ணு ரெடி.. எப்பிடி இருக்கா பார்த்து சொல்லுங்க..
சீதா தான் மகளை பார்த்து..” அழகை இருக்க டி ராஜாத்தி “
” தாங்க்ஸ் ம்மா.”
சரி சரி கிளம்பி கிழ வாங்க நேரம் ஆச்சு.. என சொல்லிவிட்டு அவர் .நகர்ந்து விட.
சவி தன் உடன் அவளை அழைத்து கொண்டு கீழே வந்தாள்..
மெல்ல சங்கீ காதில்..” ஒய்மச்சி இதுல கல்யாண பொண்ணு யாரு டி.. “
” எதுக்கு டி இப்போ..” என சங்கீத சற்று பயத்துடன் கேட்க
” சொல்லேன். பிலீஸ்..” ஷன்வி கெஞ்சினால்
” அதோ அங்கே நிக்குது.. பாரு.. ஒரு முருங்கைக்காய்.. அது தான். பொண்ணு “
” யாரு ? டி சரியா சொல்லு
” அதுதான் அந்த பச்சை கலர் சுடி போட்டு இருக்காள அவ தான்.. “ சங்கீத அவ்வளோ வெறுப்பாக சொன்னாள் அணித்டவை பார்த்து
” ஓஹோ….”
” ஏண்டி “
” ஹ்ம்ம் சும்மா தான் கேட்டேன் எல்லா ஒரு பொது அறிவ வளர்த்துக்க தான்..”
” என்னமோ சொல்லுற. ஒண்ணுமே புரியலே.. போ.. “
” போக போக புரியும்..” ( மனதுக்குள்.. காலைல ரொம்ப பதட்டமா யார் கிட்ட பேசிட்டு இருந்தா இவ.. இவ கண்ணுல போய்.. இருக்கு.. என்னனு பார்ப்போம்.. )
ஆமா எங்க இந்த ஹீரோ.. என சுற்றி பார்த்தவள்.. அங்க.. இருண்ட முகத்துடன்.. யாருடனோ.. அவன் பேசி கொண்டு இருப்பது தெரிந்தது..
அதை பார்த்த. ஷன்விக்கோ இது என்னடா கொடுமையா இருக்கு..முகத்துல ஒரு தெளிவே இல்லையே இந்த மனுஷனுக்கு என்னவா இருக்கும்.
இது கல்யாண வீடா இல்லை கண்பியூஷன் வீடா தெரியலையே..
*****
Next epi
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro