2
" அம்மா.." என மெல்ல ஷன்வி அழைக்க.
" பேசாத சவி எங்க இருந்த இவ்வளோ நேரம்.. உனக்காக எவ்வளோ நேரம் நாங்க காத்து இருக்கிறது ஒரு போன் கூட பண்ண மாட்டியா எங்க உன் போன் என கோபமாய் ராதா மகளை பார்த்து கேட்க
" சாரி அம்மா நான் வீட்டுக்கு தான் வந்துடு இருந்தேன் அப்போ வர வழில ஸ்கூட்டி பஞ்சர் ஆகிடுச்சு அதை சர்வீஸ் க்கு விட்டுட்டு எந்த வண்டியும் கிடைக்காத நால வீட்டுக்கு நடந்தே வந்தேன் அது தான் நேரம் ஆகிடிச்சு."
" அவ்வளோ நேரம் அவள் சொல்லுவதை பொறுமையாய் கேட்ட ராதா அவள் நடந்து வந்ததை கேட்டு.. " என்னது நடந்து வந்தியா. இந்த நேரத்துலையா உன் . போன் எங்க டி .. "
" அது அது வந்து அம்மா.. சார்ஜ் தீர்ந்து போச்சி.. ம்மா .."
" சுத்தம்... நீ எல்லாம் எப்போ தான் திருந்த போறியோ...தெரியல எத்தன தடவ சொல்லி இருக்கேன்/.. போன் சார்ஜ் ல போட்டு எடுத்துட்டு எங்கயும் போகணும்ன்னு , சரி சரி உள்ள வா.. எனக்கு ஏக பட்ட வேலை கிடக்கு.. . .சங்கீதா வேற வந்து இருக்கா பாவம் புள்ள எவ்வளோ நேரம் உனக்காக காத்து இருக்கா தெரியுமா
சங்கீதா என்கிற பெயரை கேட்ட உடன்.. ஐயையோ. இவள . மறந்தே போயிட்டேனே நாளைக்கு இந்நேரம் மதுரைல இருந்து ஆகணுமே .. சீட் ... அம்மா.. என மீண்டும் அவள் அழைக்க "
" என்ன பார்க்காத நீ ஆச்சு சங்கி ஆச்சு.. அவ கிட்ட நீயே பேசிக்கோ... இங்க நின்னு நேரத்த வீண் அடிக்காம உள்ள வா என அவர் முன்னால் செல்ல போக....
அவளோ கேட் மேல் ஏறி அமர்ந்து கொண்டு " அம்மா நான் வரமாட்டேன் சாவு அடிப்பா ம்மா அவ.. " என கிழே இறங்கமால் அடம் பிடிக்க
" ஹ்ம்ம் அனுபவி அப்போவாது திருந்துவியான்னு பார்க்குறேன் நான் என சொல்ல்விட்டு உள்ளே சென்று விட.. "
" ஷன்வி , மனதுக்குள் என்ன இது அம்மா இப்படி சொல்லிடு போறாங்க இப்போ உள்ள போகவா வேணாமா , மெல்ல கிழ இறங்கி எவ்வளோ நேரம் இப்படியே உட்காந்து இருக்கிறது முருகா அவ கிட்ட இருந்து என்ன காப்பாத்து என்று வேண்டியே படி ராதா பின்னால் சென்றாள் .
": அங்கே சங்கீதாவும் , " ஏய் அறிவு உனக்கு இருக்கா டி எப்போ வரன்னு சொன்ன இப்போ மணி என்னனு பார்த்தியா நீ என தன் பங்கிற்கு முடிந்த அளவிற்கு அவளை திட்டிதீர்த்தாள் ,
போதும் சங்கீ போதும் நீ இப்படி திட்டி கிட்டே இருந்தா நாம எப்போ ஊருக்கு போறது என ஷன்வி தோழியே சமாதனம் செய்யே
அவளை முறைத்து கொண்டே பொழச்சு போ ஷன்னு , இனி இப்படி எதாவுது பண்ணு உன்ன பேசிக்கிறேன் என சங்கீதா செல்லமாய் மிரட்டினாள்
அப்போது தான் அறையில் இருந்து
ராதா வந்து ஷன்வி கையில்.. ஒரு பெரியே பேக்கை கொடுத்து இந்தா ஷன்வி இதுல உன் மாத்திரை .. லேப்டாப்... ப்ராஜெக்ட் கு தேவையான எல்லாம் எடுத்து வச்சுட்டேன்... அப்புறம் ஸ்னாக்ஸ் கூட இருக்கு வழில எங்கையும் இறங்காத சரியா நைட் நேரம் வேற பார்த்து கவனமா போகணும் என பெண்கள் இருவருக்கு ராதாம்மா பாதுக்காப்பை பற்றி எடுத்து சொல்ல
வாவ் சூப்பர் அம்மா.. ஐ லவ் யு சோ மச் என அன்னையின் கன்னத்தில் முத்தம் இட.."
" ஏய் ச்சீ வேகமா சாப்புட்டு கிளம்புங்க என்ன பழக்கம் இது " என்று ஷன்வியே எண்ணி சிரித்தார் ..
" சரிம்மா என இருவரும்.. ராதா செய்து வைத்து இருந்த இட்லி.. இரண்டு வகை சட்னி சேர்த்து ஒரு கை பார்த்துவிட்டு இரண்டு பெண்களும் இருவரும் சங்கீதாவின் காரில் மதுரைக்கு கிளம்பினார்கள்..[ ஷன்விக்காவிற்கு அங்கே தான் தன் வாழ்கையே மாற போவது தெரியாமல்.. தன் தோழி உடன் சிரித்து.. . விளையாடியே படி சென்றாள் .... " ]
ஷன்வியே விட்டுவிட்டு அருண் பேருந்து நிலையம் வந்து சேர.. அங்கே மதுரை செல்ல..இருந்த பஸ்சில் ஏறி அமர்ந்தான்... இரவு நேரம் என்பதால் கூட்டம் சற்று ..கம்மியாகவே இருந்தது ஜன்னல் அருகே இருந்த சீட்டில் அமர்ந்து நிம்மதியான மூச்சை ஒன்றை விட்டான்.... " ச்சபா .. என்ன பேச்சு பேசுது அந்த பொண்ணு.. இப்போதான் மழை அடிச்சு ஒஞ்ச மாதிரி இருக்கு.. என நினைத்துவிட்டு. அத்தோடு தனக்கும் அவளுக்கும் அவ்வளோ தான் இனி சம்பதம் இல்லை என்று. அவளை பற்றி நினைவை அகற்றி விட்டு தன் தங்கை பற்றி யோசித்தான்... இந்நேரம் கிளம்பி இருக்குமா சங்கி.. . சேர்ந்து போகலாம்னா கேட்குதா பாரு இந்த வாழு..வரட்டும் ஊருக்கு இருக்கு அதுக்கு.. என்று தங்கைக்கு சிறிது நேரம் மனதுக்குள் அர்ச்சனை செய்த படி ஊரில் இருக்கும் தனது தந்தைக்கு போனில் அழைத்தான்.."
இரண்டே ரிங்கில் போனை எடுத்தவர் சொல்லு பா.. போன வேலை எல்லாம் முடிஞ்சதா. "
" முடிஞ்சது ப்பா.. அங்க எல்லாரும் எப்பிடி இருக்கீங்க.. வேலை எல்லாம் சரியா போகுதா அப்பா.. "
" அது எல்லாம் நான் பார்த்துகிறேன் தம்பி.. நீ பத்திரமா வந்து சேறு.. இங்க எல்லாரும் நல்லா இருக்கோம்.. "
" நீங்க சொன்னா சரி ப்பா.. அப்புறம் நம்ம சங்கீ வந்தாச்சா அப்பா , "
" இன்னும் இல்லையே தம்பி "
" போன் ஏதும் செய்துச்சா "
" கொஞ்சம்.. நேரம் முன்னாடிதான் பேசிச்சு.. வந்துகிட்டு இருக்காம்.. "
" சரி அப்பா நீங்க ரொம்ப அலட்டிகாதிங்க.. நான் வந்து பார்த்துகிறேன் எல்லாம் முடிஞ்சா அவளு மட்டும் பாருங்க "
" எல்லாம் வேலையும் முடிஞ்சது ..தம்பி .. நீ வரது மட்டும் தான் பாக்கி. .. சீக்கிரம் வந்துரு பா. என பேசிவிட்டு.. வேலா... அந்த கம்பி கிட்ட சரியா பெயிண்ட் அடிக்கல பாரு சரியாய் பண்ண சொல்லு என்று அவர் குரல் கொடுக்க..
என்ன அண்ணே. வேலை எல்லாம் எந்த அளவுல கிடக்கு.. என்று அவரது உயிர் தங்கை சகுந்தலா அவளது மகள் அனிதாவுடன் வந்து சேர்ந்தாள் [ இரவு நேரம் என்பதால் திருமணம் செய்ய போகும் அனிதாவை தங்கை அழைத்து கொண்டு வந்தது நந்தனுக்கு பிடிக்காமல் போனது இருந்தாலும் ஏதும் பேசாமல் அவர்களுக்கு பொறுமையாக பதில் சொன்னார் ] அங்கே நடக்கும்வேலையே மேலோட்டாமாக பார்வை பார்த்த படி.. அண்ணே வேலை எல்லாம் சீக்கிரம் முடிஞ்சருமா.. ஏன் கேட்குறேனா உங்க மாப்பிள்ளை பத்தி உங்களுக்கே தெரியும்ல அவர் எல்லாம் கிராண்டா தான் எதிர்பார்ப்பரு அவுக பிரெண்ட்ஸ் அப்பிடி
சரிம்மா எல்லாம் அப்பிடியே பண்ணிடலாம் நீயும் மருமகளும் உள்ளர போய்.. பலகாரம் சாப்புடுங்க..கொஞ்சம் வெள்ளணை வந்து இருக்க கூடாதா .
அது எல்லாம் ஒரு பயம் இல்லை அண்ணே , சரி நீ பார்த்துக்கோ அண்ணே , நீ வாடி அனிதா என தன் மகளை அழைத்து கொண்டு உள்ளே சென்று விட.. அவள் போவதை பார்த்து
நந்தன் படி அடுத்த வேலையே பார்க்க சென்றார்..
இரவு நேரம் என்பதால் தான் அவர் அப்பிடி கேட்டது
அனிதாவோ அம்மா என்ன ம்மா நீ எதுக்கு இவங்கள பிடிச்சு இப்போ நாமா தாங்கிகிட்டு கிடக்கோம் .. ஊருல இல்லாத மாப்பிள்ளையா .ஏதோ நீ சொன்னியே தான் அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்.. ஆனா இப்போ எல்லாம் அவன எனக்கு பிடிக்கவே மாட்டேங்குது ம்மா என்று அனிதா சொன்ன உடன்
சகுந்தலா..மகளது பேச்சை கேட்டு சுற்றி பார்க்க யாரவுது இருகிறார்கள என பார்த்துவிட்டு..
அடியே அறிவு இருக்கா உனக்கு.. எங்க வந்து என்ன பேசுற யார் காதுல விழுந்த என்ன ஆகுறது.. சந்குதலா மகளை அதட்ட
அதை ஏதும் பொருட்படுத்தாமல் அனிதா
ஏன் நான் சொன்னதுல என்ன தப்பு.. உன் மருமகன் ஒன்னும் அந்த கேசவ் மாதிரி இல்லை அவனுக்கு இருக்கிற பணத்துக்கு.. இவன் எல்லாம் சமம் ஆவனா.. [ இவனின் உயரம் அறிமால் அவள் பேச கொண்டு இருந்தாள் ]
சகுந்தலா.. போதும் டி நிறுத்து உன் மனசு புரியாமல் இல்லை ஆனா நாம பேசுறது இது இடம் இல்லை..உன் பிரச்சனையே அப்புறம் பார்போம் இப்போ வா.. என சமாதனம் செய்த படி.. உள்ளே அழைத்து சென்றார்...
இப்பொது எல்லாம் அவளின் பேச்சு இவ்வாறு தான் இருந்தது.. எல்லாம் சகுந்தலாவின் கை வண்ணம் .சாரி எண்ணத்தின் வண்ணம்..
இரண்டு வருடமாக அருணிற்கு தான் அனிதாவை.. திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சகுந்தலா.. தன் அண்ணனை பேசியே கரைத்தாள் . ஆனால் இன்றோ பணம் அவள் இடத்தில பெருக பெருக.. .. கணவன் – மனைவி.. இடத்தில.. மாற்றங்கள் வந்தவிட்டது என்னமோ உண்மை.. இதை தெரிந்த கொண்ட ஒரு மனமோ வேதனையில் யாரும் அறியாமல் துடித்து கொண்டு இருப்பதை தாயும் மகளும் அறிவார்களா
வா சகுந்தலா.. கல்யாண வேலை எல்லாம் எப்பிடி போகுது... என்று சீதா கேட்க..
" ஹ்ம்ம் ஹ்ம்ம் போகுது போகுது... இங்க என்ன நிலவரம் தான் பார்த்துட்டு போக வந்தேன்... என பட்டும் படாமல் அவள் பேச.. சீதாலக்ஷ்மிக்கோ உள்ளுக்குள் .. பதட்டம் ஆனது.. என்ன இவ இப்பிடி பேசுறா.. இன்னும் ரெண்டு நாள்ல நிட்சயம் . வச்சுக்கிட்டு . என்னமோ வேண்டா வெறுப்பா பேசுற மாதிரி இருக்கே
அம்மா மடபுரத்தாலே .. நீ தான் ம்மா என் ரெண்டு புள்ளைங்களும் காத்து க்கொடுக்கணும்.. எந்த தடங்கல் இல்லாமல்.. ... . ரெண்டு பேரு ஓட கல்யாணம் முடியனும். என நடக்கவே போகாத திருமணத்துக்கு.. அந்த மடப்புரம் அம்மன் இடம் சீதாலஷ்மி வேண்டிக்கொள்ள அனால் இது ஏதும் அறியாமல்.. அனிதா .. மாம் கிளம்பலாம்.. எனக்கு வேலை. இருக்கு.. தாய் இடம் எரிந்து விழுந்து கொண்டு இருந்தாள் ...
#�Zɳ�!
hai friends itho epi 2 pottuten.................... paidchutu unga comments sollunga spelling mistake irunthaalum sollunga i will crt it
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro