Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

விடிகின்ற பொழுது - 6

காட்டு தீ போல கண்மூடி தனமாய் என் சோகம் சுடர் விட்டு எரியுதடா,
மனசுக்குள் சுமந்த ஆசைகள் எல்லாம் வாய் பொத்தி கதருதடா...

லிரிக்: சினேகன்.


"அதான் கவலை பட நீ இருக்கியே guardian angel" என்று சொன்ன பிறகுதான் அது எவ்வளவு உண்மை என்றதை அதிர்ச்சியுடன் உணர்தேன்.......

"என்னால யாருக்கும் angel அ இருக்க முடியாது யாசீன், restorent ல என்ன பத்தி வருட கணக்கில் தெரிஞ்ச ஒருத்தி என்னை பற்றி என்ன சொல்லிட்டு போனான்னு யோசித்து பாரு, அவள் சொன்னது எதுவும் பொய் இல்ல நானே சொல்லறேன்,இது உன் life... உனக்கு நீயே தான் கவலை படனும், இதை இப்ப மட்டும் இல்ல உன் life long ஞாபகம் வச்சிக்கோ" என்று அவன் படக்கென்று என் எண்ணம் செல்லும் பாதையை அடைத்து விட்டான்,

எனக்கு வெகு நேரம் என்ன சொல்வதென்று தெரியவில்லை கடேசியாக கை கழுவும் முன்,

"ஆனால் ரிஸ்வான் என் lifeல இதுவரை நான் கற்றுக்கொண்ட ஒரே பாடம் நீயா ஒரு விஷயத்த பாக்குற வரைக்கும் யாரு என்ன சொன்னாலும நம்ப கூடாதுங்குறது தான், நான் அதை அவ்வளவு சீக்கிரம் கை விடறதா இல்லை sorry" என்று நான் சொல்ல அவன் எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை

நாங்கள் இருவரும் டாக்ஸி இல்லாதால் டாக்ஸியை பார்க்கும் வரை கால் போன பாதையில் அமைதியில் நடந்து கொண்டு இருந்தோம்,

அப்போது தான் அவன் என்னுடன் இல்லா விட்டால் இந்நேரம் நான் எவ்வளவு ஆடி போய் இருப்பேன் என்று ஒரு எண்ணம் வந்தது அத்துடன் பயமும் வர நான் கொஞ்சம் நகர்ந்து அவன் அருகில் வந்து நடக்க ஆரம்பித்தேன்,

அவன் பேச ஆரம்பித்தான்,

"நான் first பார்த்தப்ப ஏன் அவ்ளோவ் make up போட்டு இருந்தே?" என்று பேசுவதற்கு ஏதும் இல்லாமல் கேட்க்க,

"அதான் இப்போ பார்க்குறியே இன்னுமா காரணம் தெரியல?" என்று நான் ஒரு பெருமூச்சுடன் கேட்க,

"என்ன தெரியணும்?" என்று அவன் உண்மையிலேயே குழப்பத்தில் இருப்பது போல் கேட்டான்,

"joke பண்ணாத ரிஸ், என்ன பாரு make up இல்லாம முகத்த பாக்குற மாதிரியா இருக்கு?"என்று நான் அவன் முன் நின்று கொண்டு கூற,

"well நேத்து make up ஓட பாதத்துக்கு இன்னைக்கு பாக்குற மாதிரி தான் இருக்கு" என்று அவன் கூற எனக்கோ அவன் கிண்டலடிப்பதை பார்த்து எரிச்சல் வர,

"சும்ம்மா வெறுப்பேத்திக்கிட்டே இருக்காத ரிஸ்வான் நான் நீ ஏதோ எனக்கு ஹெல்ப் பண்ணுரியே அதுனால உன்ன அடிக்க கூடாதுன்னு பாக்குறேன்" என்று நான் அவனை முறைத்தவாறு கூற,

"ஹஹ்ஹ.. சீரியஸா சொல்லுறேன்பா நேத்து உன் முகம் பாக்குற மாதிரியே இல்ல.." பிறகு நான் முறைப்பதை பார்த்துவிட்டு

"ஓகே may be நீ ரொம்ப நேரம் அழைந்ததால மோசமா போய் இருக்கலாம் விடு"

என்று அவன் மழுப்ப எனக்கு உடனே ரோஷம் வந்து விட்டது, நான் அவனை அடிக்க கூடாது என்று கட்டு படுத்தி கொண்டு பேச ஆரம்பித்தேன்,

"என் மனச கஷ்ட படுத்த கூடாதுன்னு எல்லாம் நீ பொய் சொல்ல தேவ இல்லை, நீயும் என் அம்மா மாதிரி சொல்லு கண்ணு இவ்ளோவ் பெருசா இருந்தா யாருக்கு புடிக்கும், மூக்கு இவ்ளோவ் சப்பையா இருந்தா யாரு பார்ப்பார்கள், இவ்வளவு உண்டா இருந்தா யாரு கல்யாணம் பண்ணிப்பாங்க, எல்லாத்தையும் சொல்லு, எல்லாத்தையும் கேட்டுட்டு தான் வந்து இருக்கேன் நீ ஒன்னும் புதுசா எல்லாம் ஒன்னும் சொல்லிட போறது இல்லை-" நான் புலம்பித் தள்ளும்போது இடையில் வந்து,

"எல்லாம் போகுது உன்ன குண்டுன்னு சொன்னதையுமா நம்பின?" என்று அவன் சிரித்துக்கொண்டே கேட்க்க நான் குழப்பத்துடன் அவனை பார்த்தவாறு,

"என்ன நம்பினே? I can't understand" என்று மினுங்கும் கண்களுடன் மூக்கை துடைத்து விட்டு நான் நிர்க்க,

"i know you can't understand that" என்று அவன் கூற, நான் சீரியபடி " you think of me as an idiot" என்று கேட்க,

"இன்னைக்கு எதுக்கு உனக்கு பிலோசபி கிளாஸ் எடுக்குறேன்னு புரியல but இருந்தாலும் கேட்டுக்கோ, இந்த உலகத்தில் எல்லா பொருளுக்கும் அடிப்படையான ஒரு ஒற்றுமை என்னன்னா, everything is beautiful in it's own way, அதை போய் colour நல்லா இல்ல shape நல்லா இல்லன்னு சொல்றதுல அர்த்தமே இல்லை, இந்த லிப்ஸ்டிக், பவுடர் எல்லாம் விக்கிறதுக்கங்க சில பேரு பொய் சொல்றாங்க பல பேர் அதை பார்த்து ஏமாறுறாங்க, நீ அதை பார்த்து ஏமாற்றது கூட பிரச்சனை இல்லை but அதுக்காக depress ஆயிக்கிட்டு இருக்காதன்னு சொல்லவந்தேன்" என்று வழக்கத்திற்கு மாறாக அவன் பெரிய வசனம் பேசியவுடன்,

என் மூளை எல்லாவற்றையும் ஜீரணிக்க நேரம் எடுத்து பிறகு அதில் எனக்கு தோன்றிய ஒரு கேள்வியை நான் அவனிடம் கேட்டேன்,

"you think I'm pretty in this dirty dress?" என்று கேட்டவுடன் அவன் தன் கையால் நெற்றியை அடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தவன் தான் ஒரு பத்து நிமிடங்களுக்கு அதை நிறுத்தவே இல்லை....

அன்று காலை அவனின் நினைவுகளுடன் முகத்தில் புன்னகையுடன் எழுந்த எனக்கு காலையில் அவனை காணமுடியாமல் டேபிளில் காலை உணவு மட்டும் அமர்ந்து கொண்டிருக்க என் புன்னகை காணாமல் போனது,

இரவு அவன் வர தாமதமாகும் பிரிட்ஜ்ல் இறப்பதை சூடு செய்து கொள்ளவும் என்று அவன் எழுதி வைத்ததை வாசித்தவுடன் என் நெற்றியில் சுருக்கம் வர ஆரம்பித்தது.

அடுத்தநாள் காலையும் அவனை காண முடியாமல் அவன் எதுழி வைத்த செய்தியும் சமைத்து வைத்த உணவும் மட்டும் கண்ணிலே பட எனக்கு ஏமாற்றத்துடன் கோபமும் சேர்த்து கொண்டது,

ஆனால் இதுவே தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நீடிக்க கோபம் போய் கவலையும் தனிமையும் தான் மிஞ்சியது....

"ஏன் காலைலருந்து இப்படி blue whale game விளையாடர மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு இருக்கே" என் ஹரிணி (harry potter) கேட்க்க,

அவள் வினோத உதாரணங்களுக்கு இன்னும் முழுக்க பழகாத நான் சற்று யோசித்து விட்டு,

"ஒன்னும் இல்லப்பா வீட்ல ப்ராப்ளேம்" என்று நான் திரும்பவும் அவனை பற்றி யோசிக்க ஆரம்பித்தேன்,

அவனுடன் பேசி 1 வாரம் ஆனதும் எனக்கு பொறுக்க முடியாமல் நேற்று இரவு அவனுக்காக தூங்காமல் காத்திருந்தேன்,

அவனும் வந்தான்,

அவனை பார்ப்பதற்கு முன் அவன் என் கண்ணில் பட்டால் நன்கு கேட்க்க வேண்டும் என்றுதான் நினைத்தேன்,

ஆனால் அவன் மிக சோர்வுடன் கண்களில் கருவலையத்துடன் நெற்றியில் சுருக்கத்துடன் வந்தவுடன்,

ஒருவகையில் அவனின் இந்த நிலைக்கு காரணம் நான் தான் என்று எனக்குள் குத்த ஆரம்பித்தது,

வெளிச்சம் இல்லாமல் இருந்ததால் அவனுக்கு நான் அங்கு இருந்தது தெரியவில்லை என்பதால் அவன் நேராக அவன் அறைக்கு செல்ல,

நானும் அவன் பின்னேச் சென்றேன், அவன் உடை மாற்ற தயாராகி அப்போது சட்டை பட்டன்களை கலட்டிக் கொண்டிருந்தான்,

"i'm sorry" என்றவுடன் நிமிர்ந்து பார்த்தான், சற்று நேரம் அமைதியாய் இருந்து விட்டு பிறகு பின்கழுத்தை தேய்த்துக்கொண்டே...

"இன்னும் ஏன் நீ தூங்காம இருக்க" என்று அவன் எதுவுமே நடக்காத மாதிரி கேட்க்க,

"seriously riz? Drop the act, நீ என் கண்ண பக்காத அளவுக்கு நான் என்ன தப்பு பண்ணேன்?" என்று நான் கேட்க அவன் ஒரு பெருமூச்சுடன்,

"night 2 மணிக்கு drama வ ஆரமிக்காத யாசீன் எனக்கு தூக்கம் வருது" என்று அவன் பாத்ரூம் போக திரும்ப,

"sorry இனி நான் நீ இல்லாம சாப்பிட மாட்டேன் அதுக்காக என் கூட பேசாம இருக்காத" என்றவுடன் ஒரு நொடி உறைந்து நின்றவன்

திரும்பி 2 நொடிகள் ஏன் கண்களை ஆராய்ந்து விட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டான்,

எனக்கோ கோபம் கோபமாய் வந்தது, "ஏன்டா இப்ப சிரிக்கிற, 1 வாரம் ஆச்சி ரிஸ்வான் உண்ண பாத்து ஒரு வாரம் ஆச்சி எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நீ உயிரோட இருக்கியா இல்லையான்னு...அந்த...அப்பறம் தினமும் அந்த sticky note வேற அதை மொத்தத்தையு பிச்சி போட்டுடலாமானு தோணுது" என் கோபம் திரும்பவும் எனக்கு கைக்கொடுக்க நான் மனதில் உள்ள சிலவற்றை கொட்டி தீர்த்தேன்,

அவனோ கிட்ட தட்ட ஒரு களைத்துப்போன குறளுடன் ஆரம்பித்து

"exactly...அது தான் problem கொஞ்சம் நாள் முன்னால நான் உயிரோட இருக்கனா தெரியாம தானே இருந்தே திடீர்னு எங்க இருந்து பொத்துகுட்டு வந்தது இந்த அக்கறை...
இன்னக்கி ஏன் late அ வர்ரன்னு கேப்ப, நாளைக்கு ஏன் சாப்பிடவரளன்னு கேப்ப, அப்படியே படி படியா போய், ஏன் கால் பண்ணல, ஏன் அதை வாங்கி தாரள, ஏன் அந்த பொண்ணோட பேசுரேன்னு wife னு உரிமை எடுத்துப்ப, அடுத்து நாலு வார்த்தை நான் சிரிச்சி பேசுனா போதும் என் lifela எல்ல டிசிஷன்ஸயும் நீ எடுக்க ஆரமிச்சிடுவ, எனக்கு round 2 போக விருப்பம் இல்லை யாசின் just get of my back, ஏதோ என் sister காக உனக்கு இங்க இடம் தந்து இருக்கேன், அதுக்கு thanks கூட சொல்ல வேணாம், just என்ன தொந்தரவு பண்ணாம இரு போதும்" என்று அவன் பேசி முடிக்கும்போது என் கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது,

'எனக்கு ஏன் அவன் சொல்றது ரொம்ப ஹர்ட் ஆகுது? இது ரிஸ்வான் அவன் எப்பவும் இப்படி தானே பேசுவான் ஏன் இன்னைக்கு...'என்று மனம் குமுர ஆரம்பித்தது,

"இப்ப எதுக்கு அழர"என் அவன் மிரட்ட,

எனக்கு ஏன் அப்போது அவன் மீது அவ்வளவு பயம் வந்ததென்றே தெரியவில்லை,

இவன் ஏன் இப்படி பேசுகிறன் என்பதற்கு காரணமும் புரியவில்லை,

பிறகு ஏதோ ஒரு எண்ணத்தில் எனக்கு அவள் நினைவு வர...

"நீ எதுக்கு நானும் அ-வளை மாதிரி பண்ணுவன்னு நெனக்கிற ரிஸ்வான், ந-ான் அப்படி இ-ல்லை நான் உன்னை விட்டுட்டு போகமாட்டேன்" என்று அழுகையை என் வார்த்தைகள் குலறினாலும் அது நூறு சதவீதம் உண்மை என்று எனக்கு தெரியும்,

அவன் இன்னொரு முறை அந்த வெற்று சிரிப்பை சிரித்தான்,

எனக்கு அந்த சத்தம் பிடிக்கவில்லை பயம் அதிகமாகி உடல் நடுங்கியது,

"அவள் என்னை விட்டுட்டு போய்ட்டானு வேற நீ நினைச்சிட்டு இருக்கியா? So funny"என்று அவன் திரும்பவும் சிரிக்க,

"அப்ப அன்றைக்கு ரெஸ்டாரெண்ட்ல அவள்-"

"absolutly, அவள் cheat பண்ணதான் செஞ்சா but நீ பாதி கதையை மட்டும் தெரிஞ்சிக்கிட்டு என்ன ஹீரோன்னு நம்புனா அது என் தப்பா?

அப்புறம் என்ன நடந்துச்சின்னு சொல்றேன் கேளு,

அவள் என்ன cheat பண்ணது என்னவோ உண்மைதான்,

அதுக்காக என்னை நீயே ஹீரோன்னு முடிவு பண்ணிட்டா????

நான் ஹீரோ இல்லமா i'm not a *******hero,

என்னதான் அவள் cheat பண்ணாலும் ஒரு ஸ்டேஜ்ல அவள் விடற பீலாவை எல்லாம் நம்பிக்கிட்டு இருக்குற அளவுக்கு நான் ஒன்னும் முட்டாள் இல்ல, எனக்கு ஒரு சில விஷயத்துல சந்தேகம் வந்ததுனால நான் கொஞ்சம் background checking பண்ணேன்,

ரெண்டு பேரும் பப்ளிக் நல்லா சுத்தி இருக்காங்க, எனக்கு கூட first அவள மூஞ்ச செத்து நாலு விட்டுட்டு வேலையை பாத்துட்டு போய்டலாம்னு தான் நினைச்சேன்,

then யோசிச்சேன் என்ன இழிச்ச வாயான ஆக்குன இவங்கள எப்படி சும்மா விடறேன்னு, so information gather பண்ணேன் photos ready பண்ணேன், எனக்குன்னு ஒரு புது நம்பர் வாங்குனேன் that's it அவள் செம்மையா மாட்டுனாள்,

ஆச்சர்யம் என்னன்னா என்னையே ஏமாதிக்கிட்டு எனக்கு தெரியாம இருக்க எவ்லோவ் பணம் வேணும்னாலும் தர்ரெங்குரா...

இதுல beauty என்னன்னா blackmail போன்றதே நான் தான், so and so ஒண்ணு இல்ல ரெண்டு இல்ல அஞ்சி கோடி கிடைச்சது இதுல என் சம்பளம் கேவலம் 75000 தான், கடேசியாக காச எல்லாம் என் கிட்ட தந்தப்பரம் blackmail பண்ணாதே நான்னு தெரிந்தபோது அவள் முகத்த பாக்கணுமே, thats worth it i'm satisfied...அப்புறம் அடுத்தநாள் உன் கிட்ட அன்னிக்கி சொன்ன மாதிரி அவளுக்கும் போஸ்ட்ல டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிட்டேன்" என்று அவன் சொல்லி முடிக்க என்ன செய்வது என்ன நினைப்பது என்று தெரியாமல் மலைத்து போனேன் என் நடுக்கமோ நிற்பதாக இல்லை,

நீ இங்கே இருந்து கிளம்பலாம் இதுக்கு மேல எல்லாம் என்னால drama வ பாக்க முடியாது" என்றவாறு அவன் குளியல் அறைக்குள் சென்றான்,

'நான் முதல்ல நினைத்தது சரிதான் அவன் கல்லு தான் உள்ளிருந்து வெளியே வரை'

இரவு கொஞ்சமும் தூக்கம் இல்லை,

அடுத்த நாள் காலை நான் அவன் வைத்திருந்த உணவையும் தொட மனமில்லை,

அவன் மீது ஏதோ ஒரு கோபம் எதனால் என்று எனக்கு எந்த தடையமும் இல்லை,

இப்போது நான் எதற்கு அமைதியாக இருக்கிறேன்,

எனக்கு அவன் மீது கோபமா?

இல்லை அவன் செய்தது தவறு என்பதால் அவனிடம் பேச மணமில்லையா?

இல்லை அவன் செய்தது தவருதானா இல்லையா?

எனக்கு ஒன்றும் புரியவில்லை எனக்கு கொஞ்சம் தனிமை வேண்டும் அவ்வளவு தான் எனக்கு தெரியும்...

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro