நானே வருகிறேன் - 12
நானே வருகிறேன்...
கேளாமல் தருகிறேன்...
கண் தீண்டி உறைகிறேன்...
கைத் தீண்டி கரைகிறேன்..
நினைவுகளை மறக்கிறேன்...
நிகழ் கணமும் மறக்கிறேன்...
இடம் பொருளை மறக்கிறேன் ...
எது எனது மறக்கிறேன்...
லிரிக்: வைரமுத்து.
“எல்லாம் என்னால தான் என்னால தான் அவன் மழைக்குள்ள அலைஞ்சான்… atleast தலையையாவது ஒழுங்கா துவட்டி விட்டு இருக்கலாம்….ஏன் யாஸீன் இப்புடி சோதப்புற....."
என்று எனக்கு நானே புலம்பிக்கொண்டு கை பேசியை எடுத்து என் தோழியை அழைத்து அன்று கல்லூரி வரப்போவதில்லை என்ற தகவலை சொல்லி விட்டு குளிரில் நடுங்கிய அவனை என் அறையில் இருந்த இன்னொரு போர்வையை அவனுக்கு போர்த்தி விட்டு விட்டு….
அவனுக்கு எனக்கு தெரிந்த அந்த பிரேட் ஆம்லெடை தயார் செய்து உணவையும் தண்ணீரையும் ட்ரேயில் வைத்து மீண்டும் அவன் அரைக்கு சென்று எழுப்பிட முதலில் எழுந்து என்னை குழப்பமான பார்த்தவன் பிறகு உணவை கண்டதும் எழுந்து பழைய காட்டு வாசி பாணியில் சாப்பிட ஆரம்பித்து விட்டான் அவன் அதை முடித்ததும் நான் மாத்திரைகளை நீட்டியவாறு,
“இல்லை தெரியாமல் தான் கேக்குறேன் கார் எடுத்துட்டு போகும்போது எப்படி நனைஞ்ச?” என்று நான் கேட்க்க அவனோ தண்ணியை குடித்து விட்டு,
“பரவா இல்லை இப்பல்லாம் பிரேட் ஆம்லெட் நல்ல பண்ண கத்துகிட்ட” என்று நான் கேட்க்கும் கேள்விக்கு பதில் கூறாமல் வேறெதோ ஒன்றை கூற நான் அவனை முறைத்தேன்,
இதை கண்ட அவனோ முதலில் குழப்பத்தில் இருந்தவனோ அப்போது தான் ஏதோ ஞாபகம் வந்தது போல் கண்களில் கோபத்துடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்,
“எல்லாம் உன் தப்பு தான் நீ உன் boyfriend கூட இருக்கேன்னு சொல்லி இருந்தா நான் மழைக்குள்ள அலைந்து இருக்க வேண்டிய தேவையே வந்து இருக்காது…” என்று அவன் மீண்டும் எனக்கு பிடிக்காத அந்த b வார்த்தையை உபயோக படுத்த எனக்கு மீண்டும் கோபம் வந்தது.
“ஹா..உனக்கு தான் நான் தொலைந்து போனால் சந்தோஷம் தானே வேற எதுக்கு தேவை இல்லாமல் தேடிக் கொண்டு அப்படியே விட்டு விட வேண்டியது தானே” என்று நான் ஆரம்பிக்க
அவனோ முதலில் அதிர்ச்சி அடைந்தவன் பிறகு மீண்டும் சுய நினைவுக்கு வந்து,
“ஆமா எனக்கு சந்தோஷம் தான் ஆனா உனக்கு தான் அதை கூட சரியா செய்ய தெரியாதே….” என்று அவன் கூற
நானோ அதிர்ச்சியில் “அப்போ என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்லரியா” என்று நான் கேட்க்க
அவனோ “இல்லை போனால் திரும்ப வந்துடாதேன்னு சொன்னேன்” என்று அவன் கண்களை கடினமாக வைத்திக் கொண்டு சொல்ல என் கண்களிலோ கண்ணீர் தாரை தாரையாக ஓட அவனோ சிரிக்க ஆரம்பித்து விட்டான்,
“hey...hey...சும்மா joke பண்ணேன்…. உண்ண reel up பண்ணறது ஜாலியா இருக்கு...ஹ..ஹா...அப்படியெல்லாம் நான் நினைத்து இருந்தால் மழைல உன் காலேஜ் வீடு பஸ் ஸ்டாண்ட் ரைல்வே ஸ்டேஷன் என்று சுத்தி இப்படி ஜுரத்தை எல்லாம் வாங்கிட்டு வந்திருப்பனா ?” என்று அவன் சிரித்துக்கொண்டே கூறிட
“ம்ம் நிஜமாவா? எனக்காக இவ்வளவு இடத்துல தேடினாயா?” என்று நான் ஆச்சர்யத்தில் கேட்க்க
அவன் தலையை வலது இடது புறமாக ஆட்டிக்கொண்டு “இல்ல சும்மா ஜோக் பண்ணேன்” என்று அவன் மீண்டும் சிரிக்க…
“போடா jerk” என்று அவனை திட்டி விட்டு அறையிலிருந்து வெளியே வர ஆரம்பித்தேன்,
‘again நான் எதுக்காக இவனை போய் லவ் பண்ணேன்...நடாஷா சொன்னது உண்மை தான் இவன் ஒரு..’
“இன்னைக்கு lunch க்கு பிஸ்சா ஆர்டர் பண்ணீடு ” என்று அவன் பின்னாலிருந்து சத்தம் போட
நான் இன்னும் என் எரிச்சல் குறையாமல் இருக்க அவன் முன்னால் திரும்பி முகத்தை சுழித்து காட்டி நாக்கை வெளியே நீட்ட…
“அடடா யாஸீன் இப்ப தான் ரொம்ப அழகா இருக்க” என்று அவன் என் முகத்தை சைகை செய்தவாறு கூற என் எரிச்சலுக்கோ அளவில்லை.
“போடா…..” என்ன சொல்லி என்ன திட்டுவதென்று தெரியாமல் நின்றுவிட்டு கடேசியாக “dragon” கடேசியாக நடாஷாவை குருவாக ஏற்று கொண்டேன்.
நான் என்ன திட்ட போகிறேன் என்று எதிர் பார்த்து நின்றவன் நான் அந்த வார்த்தையை சொன்னவுடன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்…
“இவ்ளோ யோசித்து...ஹாஹா..போயும் போயும்..ஹஹ்ஹ” அப்புறம் அவனால் நிறுத்த முடியவில்லை…
இதற்கு மேல் என்னால டேமேஜ் ஆக முடியாதென்று நினைத்துக் கொண்டு அவன் சிரிப்பு சத்தம் வீட்டை வெளிச்சமாக்க நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன்…
சிறிது நேரம் கழிய…. என் கோபமும் கொஞ்சம் குறைய….நானும் என் அறைக்கு செல்ல தயாராக... அப்போது தான் அங்கு வீட்டில் vaporizer ஒன்றை பார்த்த ஞாபகம் வந்தது,
நான் store ரூமிற்கு சென்று அதை தேடி எடுத்து அவன் ரூமில் அதை செட் செய்து வைக்க சென்றேன் அங்கோ அவன் லெப்டோப்பும் கையுமாக இருந்த அவன் என்னை பார்த்து விட்டு,
“நீ காலேஜ் போகவில்லையா?” என்று கேட்க்க,
“நான் இங்கே வந்து பார்க்கும் போது you where practically unconscious...actually நீ பேசுனதுக்கு நான் அப்டியே விட்டுட்டு போய் இருக்கணும் but நீ வேற ரொம்ப பாவமா…”
“சரி சரி ரொம்ப வாராத...வீட்ல சும்மா வெட்டியா தானே இருக்க போற ஏதாவது movie பாக்கலாமா?” என்று கணினியின் திரையை பார்த்த படியே கேட்க்க,
‘no way…this guy is unbelievable..இப்பதான்... forget it.. i’m stopping my attempts to understand him’
.
.
.
.
ஒரு அறை மணி நேரம் கழிந்து இருக்கும்...
“இல்லை எனக்கு விண்ணை தாண்டி வருவாயா தான் பாக்கணும்” என்று நான் அடம் பிடிக்கஅவனோ சோபாவில் அமர்ந்தவாறு போர்வையை அவன் மேல் சுற்றிக் கொண்டு,
“you and your love crap….மாத்தி மாத்தி crappy dialouges சொல்லிக் கிட்டு அழுத்துக்குட்டு இருப்பாங்களே அந்த மாதிரி படம் தானே அதெல்லாம் வேணாம்...நம்ம துப்பாக்கி படம் பாக்கலாம்” என்று அவன் கூற...
“துப்பாக்கியா...இந்த ஒரு ஹீரோ ஒரே நேரத்துல 20 பேற அடிக்கிற மாதிரி ஸீன் பண்ணுவானே அந்த மாதிரி ஆக்ஷன் movie தானே நீ சொல்லறது…. இல்ல அது வேணாம் i want to watch something romantic that's it” என்று நான் விடாமல் நிற்க்க,
“துப்பாகிள காஜல் நல்லா இருப்பா எனக்கு அது தான் பாக்கணும்” அவன் கூறியதற்கு முதலில் அதிர்ச்சியில் வாயை திறந்தவள்,
‘நீ மட்டும் தான் பண்ணுவியா’
“vtvல சிம்புவும் நல்லா இருப்பான் நானும் பாக்கணும்…”
“ஆக்ஷன்”
“ரொமான்டிக்”
“துப்பாக்கி”
“vtv”
“okay let’s make a deal”
“Okay”
இத்துடன் அவன் சிரித்துக் கொண்டே கைபேசியை கையில் எடுத்தவன் 2 லர்ஜ் நான் வெஜ் சுப்ரீம் பிட்ஸா ஆர்டர் பண்ணிவிட்டு என்னை பார்த்தான்….
“so...யாரு பிட்ஸாவை first முடிக்கிறாங்களோ அவங்களோட choiceல movie பாக்கலாம்”
“i’m in..”
.
.
.
.
.
ஒரு வழியாக பிட்ஸா வந்ததும் டைனிங் டேபிளில் நான் ஒரு புறம் அவன் ஒரு புறமும் ஒருவர் மீது ஒருவர் கண்ணெடுக்காமல்…
இல்லை இது எந்த மாதிரியான ரொமான்சும் இங்க போகல…
அவன் முதலில் ஆரம்பித்து விடுவான் என நானும் நான் ஆரம்பித்து விடுவேன் என்று அவனும் கண்காணித்து கொண்டு இருந்தோம்…
ஒரு வழியாக இருவரும் அமர்த்த உடன்…
“get”
இருவரும் சேர்ந்தவாறு அந்த பார்சலை திறக்க…
“Set”
பிட்ஸாவின் மீது கண்ணை திருப்ப…
.
.
.
.
‘என்ன சத்ததையே காணோம்...இன்னும் go சொல்லாமல் என்ன-’
அவனை திரும்பி பார்த்த நானோ அதிர்ச்சியில் உரைந்தேன்…
அவன் வாயில் ஒரு முழு பீஸை திணித்து கொண்டவனாக “என்ன பார்த்துக்குட்டு இருக்க நீ இன்னும் ஆரம்பிக்கல” என்று அவன் உணவை மெண்டு கொண்டே கேட்க்க..
நானோ கோபத்தில் அதிர்ச்சியில்…”you...you...you..che-”
“இன்னும் நாலஞ்சு யூ சொல்லு அதுக்குள்ள நான் சாப்பிட்டு முடிச்சிடுவேன்” அவன் கூறியவுடன் தான் நான் சுய நினைவிர்க்கே வந்தேன்…
“ஏமாத்துக்காரன் ஏமாத்துக்காரன் cheater...jerk” என்று நானும் சாப்பிட்டுக் கொண்டே அவனை மனதில் திட்டி கொண்டு முறைக்க அவன் அல்ரெடி 2வது பீஸையும் முடிக்க போகிறான்…
‘அட கடங்காரா எனக்கு ஒரு அளவுக்குமேல வாய்க்குள்ள வைக்க முடியலையே... இவன் கிட்ட போயா சாப்பிடறதுக்கு போட்டி போட்டேன்..’
என்று புலம்பிக்கொண்டே அப்போது தான் நான் என் 2வது பீஸை முடிக்க போகிறேன் என் முன்னால் அவனோ கடேசி பீஸை சாப்பிட ஆரம்பித்து விட்டான்…
‘போச்சி போச்சி இப்ப இவன் கிட்ட தோத்தேன் என்னை வைக்க மாட்டான்…’ என்று நினைத்தவாறு இன்னும் வேகமாக சாப்பிட ஆரம்பித்தேன் ஆனால் அவனோ முடித்து விடுவான் போல் இருக்கிறது..
ஒரு கட்டத்தில் எப்படியும் தோற்கத்தான் போகிறேன் என்ற முடிவிற்கு வந்து விட்டேன் அந்த நேரத்தில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது…
.
.
.
அவன் கையில் வைத்திருந்த அந்த பீஸ் சரியாக அவன் கையிலிருந்து தவறி அவன் கைக்கு அடியில் தரையில் இருந்த குப்பை தொட்டிக்குள் விழுந்தது…
எனக்கோ அதீத மகிழ்ச்சி நான் மிக சந்தோஷமாக புன்னகைத்துக் கொண்டே என்னுடைய மீதம் இருந்த பீஸ்களை சாப்பிட்டு விட்டு கடேசி ஒரு துண்டிற்கு வந்தேன் அவனோ மிக கோபத்துடன் அந்த குப்பை தொட்டியை பார்த்துக் கொண்டு இருந்தவன் என் திகிலூட்டும் வகையில் அந்த குப்பை தொட்டியினுள் கை விட்டு அந்த துண்டை எடுக்க ஆரம்பித்தான்….
“ரிஸ் என்னடா பண்ணற?” அதிர்ச்சியில் என் கை இருந்த இடத்திலேயே நின்றிட நான் அவனிடம் கேட்டேன்…
“பார்த்தால் தெரியல i don't like to loose” என்ற வார்தைகளுடன் அவன் குப்பை தொட்டியில் இருந்த துண்டை கையில் எடுக்க எனக்கோ முதலில் என்ன செய்வதென்று தெரியவில்லை...பிறகு ஏதோ ஒரு வேகத்தில் என் கையில் இருந்த எல்லா வற்றையும் என் வாய்க்குள் திணித்துவிட்டு…
“I WON” என்று வாயில் வைத்த வாறு கத்த வாய் வரை கொண்டு சென்ற அவன் கை உறைந்து நின்றது முகத்திலோ அருவருப்பு மாறி எரிச்சல் தின்றோயது….
“அடச்ச்சே” என்ற வாறு அவன் மீண்டும் அந்த துண்டை குப்பை தொட்டிக்குள் எறிந்த உடன் தான் எனக்கு மூச்சே வந்தது…
“that was crazy riz… ஒரு பந்தையத்துக்காக இப்படியா குப்பை தொட்டிக்குள்லே எல்லாம் கை விடுவ” என்று நான் கேட்க்க
அவனோ அந்த அட்டை பெட்டியை மடக்கியவாறு மீண்டும் அந்த அருவருப்பான முகட்டதோடு…
“நீ சாப்பிட்டு முடித்துருக்க வில்லை என்றால் நான் அதை சாப்பிட்டும் இருப்பேன்" என்ற அவன் பதிலுக்கு என் கண்கள் பெரிதாக அவனோ அங்கிருந்து எழுந்தவாறு...
“எப்படியோ... நான் 3 மணிநேர சித்திரவதைக்கு ரெடி ஆயிட்டேன் அந்த படத்தை போட்டு தொல” என்றான் முன்னிருந்த டீ டேபிளில் காலை தூக்கி போட்டு வாறு….
.
.
.
.
.
படத்திற்கிடையில் என் அழு குரலை கேட்ட போதெல்லாம் என்னை ஏலியன் போல் அவ்வப்போது பாப்கார்னும் கையுமாக நோட்ட மிட்டு கொண்டிருந்தவன்,
முடிவில் என் குரல் பெரிதாக...
“seriously இதற்கெல்லாம்….அவங்க ஆக்ட் பண்றாங்கன்னு உனக்கு தெரியுதுள்ள?” என்று அவன் கேட்க்க,
எனக்கோ பொறுக்க முடியவில்லை, “you...You are such a heartless guy…அங்க….கார்த்திக்...பாவம் ஜெஸ்ஸிக்கு கல்யாணம் ஆகியும்...மம்மம்ஹா” என்று நான் மறுபடியும் அவன் அருகில் இருந்த tissue பேப்பரை எடுத்து என் மூக்கை துடைத்த வாறு அதையும் நான் இதற்குமுன் குவித்து வைத்த டிசு குவியளில் போட்டு விட்டு அவனை காண அவனோ சந்தேக கண்ணுடன் அவன் இதழ்களை கீழிறக்கியவாறு தலையாட்டிக்கொண்டே…
“you seriously got some issues” என்று கூறிக்கொண்டே இன்னும் அவன குளிரில் போர்வைக்குள் புகுந்துகொண்டு.
“remember யாசின் நீ tv ல பாக்குற இந்த things இதெல்லாம் உண்மை இல்லை just a advertisement for money, இதெல்லாம் நம்பாதே லவ்னு உலகத்தில் எதுவுமே இல்லை” என்று அவன் கண்களில் கரிசனத்துடன் கூற
எனக்கோ அவன் சொல்வதில் உடன்பாடில்லை…
‘அது எப்படி அவன் லவ் இல்லன்னு சொல்லலாம்??? அவன் சொல்றது உண்மையா இருந்தா எனக்கு அவன் மேல இருக்குறது என்ன? எனக்கு அவனை பிடிக்கிற மாதிரி இது வரையும் யாரையும் பிடிச்சதில்லை இதுக்கு மேல யாரையும் புடிக்கும்னு நம்பிக்கை இல்லை, அவன் சொல்லறது உண்மைனா நான் அவன் மேல வச்சிருக்கறதுக்க்கு பெயர் என்ன?’ என்று அவள் மனமோ அவன் கூற்றை மறுக்க,
“love னு எதுவும் இல்லன்னு நீ எப்படி அடிச்சு சொல்ற” என்று அவனிடம் நான் கேட்க்க அவனோ சற்று கோபத்துடன்,
“அப்படி ஏதாவது இருந்து இருந்தால் அவ-” என்று சத்தமாய் ஆரம்பித்தவன்
என் முகத்தை பார்த்து நிறுத்தி விட்டு வேறு பக்கம் திரும்பி கொள்ள எனக்கு அவன் சொல்ல வந்தது எனக்கு தெளிவாக புரிந்தது…
சற்று நேரம் எங்களுக்குள் மௌனத்தில் கடக்க…
அவன் எழுந்து போக ஆரம்பித்தான்… நானோ அவன் கையை பிடித்துக் கொண்டு “ரிஸ்வி” என்று நிறுத்த…
“நான் கேட்டதுக்கு உன் கிட்ட பதில் இருக்கா? ஏனென்றால் இத்தனை வருஷமா என் கிட்ட இதே கேள்வியை தான் நாணும் கேட்டு கொண்டு இருக்கேன் இது வரைக்கும் பதில் கிடைக்கல… நீ சொல்ற இந்த காதல் பாசம் எல்லாம் உண்மையா இருந்தால் அவள் எதுக்கு என்னை விட்டு போனாள்” அப்போது தான் எப்போதும் என்னிடம் பேசும் அவன் வெற்றுக் குறளில் முதல் முதலாய் வலியை கேட்டேன்…
எனக்கோ அவன் கேள்விக்கு பதில் தெரியவில்லை ஆனால் எனக்கென்று இன்னொரு கேள்விதான் முளைத்தது…
“உன் கேள்வியை கேட்க்க வேண்டி ஆள் நான் இல்லை ரிஸ்… என்ன்னோட கேள்விக்கு நீ பதில் சொல்...இத்தனை வருஷம் ஆகியும் அவளை பற்றி பேசும் போது இன்னும் உன் குரல் ஆடுவதற்கு காரணம் என்ன? லவ் இல்லை என்றால் நீ ஏன் இன்னும் வலியில் இருக்குற…உன்னால ஏன் அவளை மறக்க முடியல....." எண்குரல் சிறுத்து போக தரையை பார்த்தவாறு "உன்னால ஏன் இன்னும் என்னை பார்க்க முடியல...”
‘இதற்கு பெயர் தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்பது...சீரியஸா உனக்கு அறிவே இல்ல யாசின்’ என்னை நானே திட்டிக்கொண்டாலும் என் கேள்விக்கு பதிலை எதிர் பார்த்து நின்ற எனக்கு பார்வையையே பதிலாய் தந்து அங்கிருந்து சென்றுவிட்டான்…
.
.
.
.
.
எப்போதும் ஞாயிற்று கிழமைகளில் எனக்கு ஒரு வழக்கம் இருந்து வந்தது...வீட்டில் bore அடிக்கும் நேரத்தை போக்குவதற்காக வீட்டை அலங்கரிக்க ஏதாவது செய்து கொண்டு இருப்பேன்....
அன்று நான் என்னை சுற்றி இருக்கும் வெள்ளைகலை பார்த்து வெறுத்து போய் ஹாலை பைண்ட் செய்து கொண்டு இருந்தேன்...
அவன் வழக்கத்திற்கு மாறாக ஆஃபீஸிற்கு போகாமல் அன்று தாமதமாய் எழுந்ததை பார்க்க எனக்கு வியப்பாக இருந்தது...
காலை பத்து மணி இருக்கு அவன் அந்த அறை தூக்கத்துடன் எழுபது வந்து சோபாவில்அமரும் பொழுது...
அரை தூக்கத்துடன் தலை கலைந்து உடை சுருங்கி நின்றாலும் இன்னும் அழகில் கொஞ்சமும் குறையாமல் அந்த குழப்ப பார்வையுடன் என்னை பார்த்துக்கொண்டு இருந்தான்…
“என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கையில் பிரஸும் பைண்ட்டுமாக நின்ற என்னை பார்த்து கேட்டான்.
“என்ன பைண்ட் அடிச்சி வச்சிருக்க வீட்ல ஒரே ஒயிட் அண்ட் போரௌன்னா இருக்கு அது தான் கொஞ்சம் பசுமை கொண்டு வரலாம்னு….” என்றவாறு மீண்டும் என் முன்னிருந்த சுவற்றில் அந்த இலை பச்சை வரைய ஆரம்பித்தேன்…
சற்று நேரம் ஆகியும் அவன் இன்னும் என்னையே குழப்பத்துடன் பார்த்துக்கொண்டு இருக்க நான் விவரிக்க ஆரம்பித்தேன்…
“சாட்டர்டேய் சண்டே வீட்டில் சும்மா இருக்கும்போது போர் அடிக்கிதுன்னு நானே ஒரு ஹோபிய க்ரெயேட் பண்ணிக்கிட்டேன்” என்றவாறு என் கையில் இருந்த பிரஷை காட்டினேன்...
அவனோ இன்னும் தெளிவாகாத தூக்க தன்னுடன் கொட்டாவி விட்டவாறு தலையை ஆட்டிக்கொண்டு நான் இடம் மாற்றி வைத்திருந்த சோபாவில் அமர்தான் நாணும் முன்னாள் இருந்த சுவற்றில் background forestgreenனை பூச ஆரம்பித்தேன்…
சற்று நேரம் அமைதியாய் இருந்தது….
“யசீ...டீ இருக்கா?” என்று கேட்டவாறு அவன் சோபாவில் முதுகை சாய்க்கும் இடத்தில் தலையை வைத்துக்கொண்டு என் புறம் திரும்பி கேட்க்க…
இவன் ஏன் எப்போ பார்த்தாலும் அழகா இருக்கான் என்னை எல்லாம் தூக்க கண்ணோட பக்கரவங்க பயந்து ஓடிடுவாங்க…
என்று பாதி பொறாமை பாதி ரசனையை நான் கையை என் உடையில் துடைத்துக்கொண்டு கிச்சனுக்கு சென்று சற்று முன் செய்து வைத்த டீ யை சூடு செய்து அவனுடன் கொண்டு வந்து கொடுக்க அவன் அதை குடித்துக்கொண்டே சற்று நேரம் நான் நிறம் பூசுவதை பார்த்துக்கொண்டு இருந்தவன் பிறகு சிறிது நேரத்தில் அவனும் அருகில் இருந்த இன்னொரு பிரஷை கையில் எடுத்துக்கொண்டு எனக்கு உதவ ஆரம்பித்தான்…
அதன் பிறகு ஞாயிற்று கிழமை ஒன்றாய் பொழுது போக்குவது எங்களுக்கு ஒரு பழக்கமானது…
திரைப்படம் பார்ப்பதோ...
farah வீட்டிற்கு செல்வதோ…
இல்லை ஷாப்பிங் போவதோ…
.
.
.
அந்த ஞாயிற்று கிழமையும் முதலில் அது போல் தான் ஆரம்பித்தது...நானும் அவனும் அவன் முடிவு செய்த படி அவனின் அறைக்கு அந்த சாம்பல் நிற பைண்டை பூசிக்கொண்டும் நான் அதற்க்கு இடை இடையே அவனின் வண்ண தேர்வை பற்றி இடை இடையே குறை கூறி கொண்டும் இருக்க... அவனும் அதற்கு பதில் சொல்வதுமாய் இருந்தது…
கடேசியாக அடித்து முடித்து அவன் நாங்கள் செய்த வேலையை தூரத்தில் நின்று கண்ணால் எடை போட்டுக்கொண்டிருந்தான்...
“ க்ரே கலர் எல்லாம் ஒரு கலரா? இதுக்கு முன்னால உன் ரூம்ல இருந்த வெள்ளை கலரே பரவாயில்லை...
இதுல நீ எடுத்து இருக்குற ஸ்டென்சில் அதைவிட...இலை உதிர்கிற பட்டுப்போன மரத்தை எல்லாம் எப்படி அழகுன்னு நினைக்கிறே” என்ற வாறு
நான் அந்த ரோல் பிரஷ்சில் இருந்த சாம்பல் நிற பைண்ட்டை பார்த்துக் கொண்டு சொல்ல அவனோ முதலில் முகத்தில் எந்தவித பாவனையும் இல்லாமல் அமைதியாய்...
அவன் சுவற்றை பரிசோதித்தவன் பிறகு முணுமுணுக்க ஆரம்பித்தான்…
“கலரை பற்றி பேசுறவங்களை பாறுயா...இவளே கண்ணுல பார்க்க முடியாத கலரை எல்லாம் அவள் ரூமிற்கு வாங்கி வச்சிருக்கா இதுல என் சேலெக்ஷன வந்து குறை சொல்லராலாம்” என்று என்னிடம் கூறினாலும் பரவா இல்லை தன்னால் முனங்கி கொண்டிருக்க ஏனோ எனக்கு அது வழக்கத்திற்கு அதிகமாகவே கோபம் வந்தது…
“ஹலோ என்ன சொல்லறதா இருந்தாலும் நேர என் கிட்ட சொல்லு...இந்த முணங்குற வேலை எல்லாம் வேணாம்” என்றவுடன் என் புறம் திரும்பி என் கண்ணை பார்த்து...
“ஓகே...நீ எடுத்து வச்சிருக்க பிங்க் கலரை பார்க்கும் போது என் கண்ணு வலிக்குது…” என்று கூறிய தோடு மீண்டும் பின்னால் திரும்பி பைண்ட் பிரஷை கையில் எடுத்துக்கொண்டு...
“அதை எப்படி next வீக் என் கையாள எடுத்து கண்ணால பார்த்து உன் ரூமில் அடிக்க நினைக்கும் போது பயமா இருக்கு...இப்பல்லாம் கனவில் கூட பிங்க் கலரா வருது…. வேற எவ்வளவோ கலர்ஸ் இருக்கும் போது உனக்கு அந்த கலர் தான் கண்ணில் பட்டதா? ஏலியன் வாந்தி எடுத்த மாதிரி ஒரு கலர்” என்று கடேசி வார்த்தைகளை மீண்டும் முனங்கிக்கொண்டான்…
“ஹலோ பிங்க் கலர்க்கு என்ன குறைச்சல் அது தான் என் favorite கலர்” என்று நான் கண்கள் பெரிதாகி கோபத்துடன் கூறியதற்கு
அவனோ வாந்தி இடுப்பது போல் சத்தம் போட்டுக் கொண்டு சைகை செய்ய...
எனக்கு கோபம் தலைக்கு ஏறிட கையிலிருந்த ரோலிங் பிரஷை அவன் மீது தூக்கி எறிய இதை எதிர்ப் பர்க்காத அவனோ முதலில் அதிர்ச்சியில் உறைந்து இருக்க எனக்கோ பைண்ட் படிந்த அவனின் முகத்தை பார்த்து எனக்கு சிரிப்பு வர ஆரம்பித்தது…
அவன் பிறகு சுய நினைவிற்கு வர அவன் கண்களிலோ கோபம் வர நான் என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன்…
“ஓடினால் தப்பிச்சிடு வேன்னு நினைக்கிரியா….யாஸீன் ஒழுங்கா நீயே வந்துடு நானே பிடிச்சா இன்றைக்கு நீ பிங்க் சிலை தான்” என்றதோடு அவன் என் பின்னால் வந்தான்…
“ரிஸ்வி என் பிக் பைண்ட்டை ஏதாவது பண்ணினா அப்பறம் உன் ரூம் எல்லாம் ஏலியன் வாந்தி தான் சொல்லிட்டேன் என்றதோடு நான் கிச்சனுக்கு அருகில் சென்று பின்னால் திரும்பி பார்க்க அவனை காணவில்லை என் அறைக்கு சென்று இருப்பானோ என்று மெதுவாக என் அறையை நோக்கி செல்ல அதே நேரத்தில் பின்னால் இருந்து இரு கைகள் பாம்பு போல என் இடையில் சுற்ற நான் கத்த ஆரம்பித்து விட்டேன்….
அவனோ ஒரு கையால் என்னை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் என் வாயை பொத்திக் கொண்டு….
“லூசு...கத்தாத பக்கத்து ஃபிளாட் காரங்க எல்லாம் யாரோ உன்னை கொலை பண்ணரங்கன்னு போலீசை கூப்பிட்டுட போறாங்க” அவன் சொல்லுவது பாதி புரிந்து மீதி கவனம் எல்லாம் அவன் கைகள் இருக்கும் இடத்தில் போக மீண்டும் தலைக்குள் தேனியை அடைத்தது போல ஒரு சலசலப்பு ஆரம்பித்தது....
கால்கள் எல்லாம் எழும்பில்லாமல் ரப்பர் போல் ஆன ஓரு உணர்வு அவன் என்னை அப்போது விட்டு இருந்தால் நான் நிச்சயம் கீழே விழுந்து இருப்பேன்…
இதெல்லாம் தோன்றிய தோடு பதற்றமும் சேர்ந்து வந்திட அங்கிருந்து ஓட தயாரான எனக்கு வழிஇல்லாமல் அவனோ என் இடுப்பை ஒரு கையால் இருக்க பிடித்திருக்க நான் ஓட முயன்றபோது அவன் இன்னும் இருக்கினான்…
‘அய்யோ என் மூளை முழுசா shut down ஆகுறதுக்கு முன்னால இவன் கிட்ட இருந்து நகரணுமே’
என் எண்ண ஓட்டத்தை முடிப்பதற்கு முன் என் வாயில் இருந்த கை காணாமல் போக.. கால் தரையில் இல்லாமல் போனது…"ரிஸ்வான் அஸீஸ் என்ன பண்ணிக் கொண்டு இருக்கின்றாய்?” என்னை அவன் கைகளில் தூக்கிச் சென்ற அவனிடம் குரலில் கோபத்தை வரவைத்துக் கொண்டு நான் கேட்க்க,
“பார்த்தால் தெரியவில்லை its called revenge” என்றான் அவன் என்னை அவன் அறைக்குள் தூக்கி சென்றவாறு…
இல்ல நான் revenge பண்ணற mindல இல்லை என்னை விட்டுட்டுடா நான் ஏதாவது லூசுத்தனமா பண்ணிடு வேன்னு பயமா இருக்கு…
'Okay என் மைண்ட் வாய்ஸ் எப்படியும் அவனுக்கு கேக்கப்போறது இல்லை'
“வேணாம் வேணாம் ரிஸ் என்னை கீழ விட்டிடுடா ப்ளீஸ் ரிஸ் நான் தெரியாமல் பண்ணிட்டேன்” என் வார்த்தைகளை மதிக்காமல் அவனோ என்னை அந்த பைண்ட் டப்பாவில் அருகில் சென்று அங்கு நிற்க வைக்க நான் மீண்டும் ஓட முயல இந்த முறை அவன் என்னை சுவற்றுடன் சேர்த்து கைது செய்து கொண்டான்…
திரும்பவும் அந்த ஹார்ட் பீட்…
No யாஸீன் சுய நினைவுக்கு வா அவன் உன்னை ரொமான்ஸ் பண்ண கநேர் பண்ணல revenge பண்ணறதுக்காக பண்ணி இருக்கான் இங்க இருந்து ஓடிடு…
அவனோ என் இரு கைகளையும் ஒன்று சேர்த்து தலைக்கு மேல் தூக்கி பிடிக்க அப்போது தான் கைகால்கள் இதுவரை மூளை சொன்னதை கேட்டது போதும் இனி கேட்க தேவை இல்லை என்று முடிவு எடுத்து விட்டது…
அவனிடம் முன்பு காட்டிய மொத்த எதிர்ப்பும் என் உடலை விட்டு நீங்கி போக மொத்தமாக அவன் கைகளுக்குள் நான் சரணடைந்தேன்..
என் அசைவுகளில் வித்தியாசத்தை பார்த்த அவனும் என் இடுப்பிலிருந்து இறுக்கத்தை குறைத்ததான்...
இன்னும் என்னிடம் எந்த எதிர்ப்பும் இல்லாததை கண்டு அவன் (நான் கவனிக்காத போது) பைண்டிற்குள் விட்டிருந்த கையை என் கன்னத்தில் வைத்து அவன் என் கண்களை அவனை பார்த்திட வைத்தான்...
அப்போது என் கண்களில் அவன் கண்டது என்னவோ அது அவனை உறைய வைத்திட அவன் கண்களின் பார்வையோ மாற ஆரம்பித்தது...அது அதிர்ச்சியா? ஆச்சர்யமா? இல்லை...மோகமா?...
.
என் மங்கலான மூளை சொல்லும் எதையும் என்னால் நம்ப முடியவில்லை…
இதெல்லாம் பத்தாது என்று நினைத்த அவன் கைகள் மீண்டும் என் கன்னத்தை கட்டை விரலால் தடவ பைண்டில் இருந்த ஈரத்தால் உடல் சிலிர்த்தது...
இதுவரை எங்கு இருந்தது என்று நான் அறிந்திடாத என் கைகள் அப்போது தான் அவன் அணிந்திருந்த டீ ஷிர்டின் shoulderரை இருக்க பிடிப்பதை கண்டேன்…
No...no..no..my hand it's dangerous நீ அங்க போகாத நீ இங்க வந்துடு…
என் கை என் பேசிச்சை கேட்டிருக்கும் என்று நினைத்திருந்தால் நான் ஏமார்ந்து இருப்பேன்...
ஆனால் நான் கணித்தபடி அது நான் சொன்னதை கேட்கவில்லை…
அவன் பார்வையும் என்னை விட்டு போகவும் இல்லை இன்னும் அவன் அந்த வினோதமான பார்வையுடன் என் தலையை துளைப் போட்டு கொண்டு தான் இருக்கிறான் ஆனால் இந்த முறை அவன் கண்கள் இன்னும் இருள் சூழ்த்திருந்தது…
தீடீர்ரென்று அவன் மூச்சுக்காற்று என் மீது படும் அளவிற்க்கு அவன் மிக அருகில் இருக்கின்ரான்...
நான் இழுக்கறேனா? அவனே வர்றானா?....
அவன் வாசம் என்னை சூழ மிச்சம் மீதம் இருந்த சுய நினைவும் என் மூளையோடு உருகி ஓடிவிட்டது…
அப்போது தான் அவன் மீண்டும் அந்த தாழ் குரலில் பேசினான் ஆனால் என்ன பேசினான் என்று தான் ஒன்றும் புரியவில்லை…
“யாசின்...என்னை நிறுத்த சொல்லு” இரண்டாவது முறை அவன் சொன்னது புரிந்தாலும் அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்பது முற்றிலும் விளங்க வில்லை...
நான் குழப்பத்தில் ஏதோ சொல்லிட நான் வாயை திறக்க அதிலிருந்து சத்ததிற்கு பதில் காற்று தான் வந்தது…
திடீர்வ்ன்று என் தொண்டாய் குழிவறண்டு போய் இருப்பதை உணர்ந்து அதற்கு எதிர் வினையாக நான் என் உதட்டை நாக்கால் நனைத்திட அப்போது தான் அவன் நெற்றி என் நெற்றியில் பட்டது அவன்...
அவன் மூச்சு காற்று இன்னும் பலமாக அடிக்க என் உடல் மீண்டும் சிலிர்த்தது அவன் மீதிருக்கும் என் கை இன்னும் அவனை இருக்க பிடித்தது…
எதற்காகவோ காத்திருந்த என்னை அவன் ஏமாற்றியது போல் அவன் நெற்றி என் மீதிருந்து போக அதற்குபதில் என் கன்னத்தில் உரசிய அவன் இதழ்கள் என் காதை தீண்டிட இந்த முறை எனக்கு சிலர்போடு நடுக்கமும் வந்தது…
“என்னை தள்ளிவிடு யசீ make me stop” இந்தமுறை அவன் கூறியது எனக்கு தெளிவாக புரிந்தாலும் அதை செய்யும் எந்த விதமான எண்ணமும் எனக்கு இல்லை…
இதை தெரிந்த அவனோ சொன்ன உடனே என் காதில் பட்டும் படாத ஒரு முத்தத்தை வைத்திட என் கைகளோ உணர்வு இன்றி அவன் தோழில் இருந்து கீழே விழுந்திட
அவனோ மீண்டும் என் கைகளை பிடித்து அவன் கழுத்திற்கும் தொழிற்க்கும் நடுவில் வைத்துக் கொண்டு மீண்டும் என் கண்களை கண்டு அந்த இருண்ட கண்களுடன்.
“then you kiss me” அவன் கூறியதற்கு என் மூலயோ வெற்று காகிதம்போல் வெள்ளையாக போய்விட…
அவன் இன்னும் என் அருகில் என் மூக்கை அவன் மூக்கால் தொடும் அளவிற்க்கு அருகில் வந்து “kiss…...me” நான் பயந்தது போல் என் உடம்பும் அவன் சொன்ன படி எங்களுக்கும் மீதம் இருந்த தூரத்தை கடந்து அதன் இலக்கை சென்றடைந்தது…
என் தலைக்குள் நெருப்பு தெறிக்க ஆரம்பித்த அதே நேரத்தில் அவன் கை முடிக்குள் புதைந்து இன்னும் என்னை அருகில் இழுக்க என் அடிவயிற்றில் இறுக்கம் வர நான் இன்னும் அவனுக்கு அருகில் செல்ல முயன்றேன்...அவனும் அதற்கு ஏற்றாற்போல் என்னை சுவற்றுடன் நெருக்கினான்…
.
.
.
.
கிஸ் பண்ணறது இவ்வளவு நல்லா இருக்கும்னு ஏன் இது வரை யாரும் என்னிடம் சொல்லவே இல்லை...தெரிந்து இருந்தால் இதை நான் இங்கே வந்த அன்றைக்கே try பண்ணி இருப்பேனே…
அது தான் அவன் சத்தம் போட்டு மொபைலை எடுக்கப்போவதற்கு முன்னாள் என் மனதில் ஓடிய கடேசி வார்த்தைகள்...
ஆனால் அதன் பிறகு அப்படி ஒரு சம்பவம் நடக்காதது போல அவன் நடந்து கொண்டபோது தான் புரிந்தது அவன் இதற்காகத்தான் அவனை நிறுத்த சொன்னான் என்பது…
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro