நீங்கும் நேரத்தில் - 7
நீங்கும் நேரத்தில் நெஞ்சம் தன்னாலே
நங்கூரம் பாய்த்தால் நான் என்னாகுவேன்,
நியாயம் பார்க்காமல் நீயும் என்னுள்ளே கூடாரம் போட்டால் நான் என்னாகுவேன்...
லிரிக்: மதன் கார்கி.
ஒருவழியாக ஒரு டாக்ஸி வழியில்
வந்ததால் என் கால்கள் தப்பித்தது,
பிறகு பேருந்து நிலையத்தில் திக்கித்தினரி விசாரித்து கேட்டதில், நான் போகவிருக்கும் பஸ் காலை 7 மணிக்கு தான் என்று சொல்லியவுடன் இருவருக்கும் சிறிது நேரம் என்ன செய்வதென்று தெரியவில்லை,
சிறிதுநேரம் அவன் பஸ் ஸ்டாப்பிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்த அவன்,
திடீரென்று யோசனை வந்ததுபோல் என்னை அழைத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான் இவன் எங்கு தான் போகிறான் என்று பார்த்தால் கடைசியாக பஸ்டாப்பிற்கு பின்னால் இருக்கும் ஹாஸ்பிடலிற்குள் கூட்டி செல்கிறான்,
நானும் பேசாமல் பின்னால் நடக்க, என்னை அங்கிருந்த நாற்காலியில் அமர செய்து விட்டு அங்கிருந்த நர்ஸ் ஒருவரிடம் சென்று பட்டனை தட்டியதுபோல் முகத்தில் ஒரு வித்தியாசமான சிரிப்பை ஒன்றை மாட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தான்,
'அடப்பாவி...இவனுக்கு சிரிக்க எல்லாம் தெரிஞ்சு இருக்கு'
அந்த நர்ஸும் பதிலுக்கு பேச ஆரம்பித்தாள் ஒரு 10 நிமிடம் இருக்கும் அந்த நர்ஸ் ஒரு சாவியை கொடுக்க அவன் முகத்தில் வெற்றி சிரிப்புடன் என் முன் வந்து நின்று, "வா போகலாம்" என்றான்.
"night தங்குறதுக்கு இடம் கிடைச்சிடுச்சி" என்றவன் முகத்தில் வெற்றி சிரிப்புடன் என்னை முதல் மாடிக்கு இழுத்து சென்றவன் அங்கு உள்ள ஒரு ரூமை ஓபன் செய்து என்னை உள்ளே போக சொன்னான்,
"எப்படிடா இப்படியெல்லாம்? இதெல்லாம் allowed டா? எப்படி அந்த பொண்ணு ஒத்துக்குகிச்சு?" என்று நான் கேட்க்க,
அவனோ ஒரு பக்கம் இதழ்களை சற்று மேல் தூக்கியவாறு
"one she is from hyderabad so communication பிரோப்ளேம் இல்லை, two... apparently நீ என்னோட pregnant சிஸ்டர் relative அ மீட் பண்ண வந்த எடத்துல நம்ம பஸ்ஸ மிஸ் பண்ணிட்டோம், நீ வேற pregnant பாவம் night நின்னு வைட் பண்ணா உடம்பு என்னகுறது அதான் ரொம்ப பாவப்பட்ட brother....that's me...... still single brother உனக்காக அவங்க கிட்ட பேசுனேன் so ரூம்..." என்று அவன் மூச்சு விட என் தாடையோ தரையில் கிடக்கும் அளவுக்கு நான் வாயை பிளந்தவாறு நின்றுகொண்டு இருந்தேன்,
"அடப்பாவி எப்படிடா இப்படி பொய் சொல்லுற?And sister Seriously? எனக்கும் உனக்கும் ஏதாச்சும் ஒரு ஒத்துமை இருக்கா?"
"இன்னக்கி காலையில் இருந்து நீ எனக்கு என்னவெல்லாம் ஆயிருக்கே தெரியுமா? காலைல வழிகெட்டவருக்கு நீ என் அத்த மகள், அப்பறம் அங்க கம்பெனி ரிசெப்ஷனிஸ்டுக்கு நீ என் fiance, தென் என் ex க்கு நீ என் wife அப்பறம் அங்க ரைல்வேஸ் ஸ்டேஷனுக்கு வழிகெட்டப்போ நீ எனக்கு மருமகள், and இப்போ வந்த taxi driver க்கும் நர்ஸக்கும் என் தங்கச்சி"என்று அவன் ஒப்பிக்க எனக்கோ கீழே விழுந்த தாடை மேலே ஓட்டுவதாக இல்லை,
"ஏன் அவசியமில்லாமல் பொய் சொலிக்கிட்டிருக்க ரிஸ்?" என்று நான் சந்தேகமாக கேட்க்க அவனோ கிட்டத்தட்ட என்னை அடிக்க வருவது போல் முகத்தை வைத்துக்கொண்டு,
"அவசியம் இல்லமையா? லூசு, நான் நம்ம ரெண்டு பேரும் யாருன்னு வெளிய வழிகேக்குரவன் கிட்ட எல்லாம் சொல்லிக்கிட்டு இருந்தனா யாரு நம்புவா? உண்ண தான் எல்லாரும் தப்பா நெனபங்க, அங்க reception ல நீ என் fiance னு சொல்லலன்ன உண்ண உள்ள ஒக்கார விட்டிருக்க மாட்டாங்க and நைட் 11 மணிக்கு மேல ஒரு வயசுபொன்னு பையன் கூட நின்ன என்னனென வெல்லாம் நினைப்பங்க- ஓகே நெனக்கிறதா பத்தி பிரச்னை இல்லன்னாலும் குடிச்சிட்டு நாலு பேர் உன் கிட்ட பிரச்னை பண்ணா உண்ண காபாதுறதுக்கு என்ன பார்த்தால் சூப்பர் ஹீரோ மாதிரியா இருக்கு? எனக்கு ஏதாவது பிரச்னைனு தெரிஞ்சா போதும் காப்பாத்துவேன்னு எல்லாம் கனவுல கூட நினைக்காதே திரும்பி கூட பாக்காம ஓடி போயிடுவேன், அதான் எதுக்கு அந்த ரிஸ்க் எல்லாம்னு முடிவு பண்ணி இந்த மாதிரி ஒரு setup" என்று அவன் முடிக்க,
"கொஞ்சம் கூட வெக்கமில்லாம ஓடிபோய்டுவேன்னு சொல்லுற நீ எல்லாம்...." என்று நான் விரட்தியில் அவன்புறம் கேவலமான ஒரு பார்வையை எய்து விட
அவனோ கூலாக, " நம்பர் 1 நான் ஆம்பலன்னு உன்கிட்ட நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல, நம்பர் 2 உயிர் இல்லாம போறதுக்கும் வெட்கம் இல்லாம போறதுக்கும் நடுவுல 2nd ஆப்ஷனை choose பண்றது தான் புத்திசாலி தனம்னு நான் நினைக்கிறேன், ஓகே எனக்கு தூக்கம் வருது நான் patient பெட்ல படுத்துக்குறேனது அது தான் நல்ல comfortable ல இருக்கு, நீ அட்டெண்டெர் பெட் எடுத்துக்கோ...bye" அவன் சொல்லிவிட்டு பெட்டில் பொத்தென்று விழுந்தான்,
"ரிஸ்வான் நீ பேசாம இருக்கும்போது தான் எனக்கு உண்ண ரொம்ப புடிச்சி இருந்ததது" என்று கூறியவாறு நான் இன்னொரு பெட்டின் மெல் படுத்து கொண்டேன்,
"thanks" என்று அவன் கண்களை மூடிக்கொண்டு சொன்னான்...
அன்று காலை பஸ்ஸிற்காக இருவரும் காத்துஇருந்த சமையம் அது நானோ எப்போதும் போல வளவளவென பேசிக்கொண்டு என் பாத்திரத்திற்கு ஏற்றவாறு மீண்டும் அவனுக்கு தொல்லை கொடுக்கும் வேலையை சளைக்காமல்
செய்துகொண்டிருந்தேன்....
பேருந்து நிலையம் சுத்தமில்லாமல் இருப்பதை பற்றி பேசிக்கொண்டு இருக்க அவனும் அவன் பாத்திரத்திற்கு ஏற்றவாறு என் பேச்சை காதில் வாங்காமல் அமைதியாக நகத்தை கடித்துக்கொண்டு பேருந்திற்கு காத்துகொண்டு இருந்தான்,
நான் அதை சற்று நேரம் பார்த்துக்கொண்டு இருந்து விட்டு,
"ரிஸ் நகத்த கடிக்காதே நல்ல பழக்கம் இல்லை, அதோட அது உன் பல்லுக்கும் நல்லது இல்ல, அப்பறம் உனக்கு வயசானப்பரம் யோசிச்சி பாரு பல்லு தேஞ்சி போய் எதுவும் சாப்பிடமுடியாம, அப்புறம் ஒருநாள் உன் பேரப்புள்ளைங்க எல்லாம்-"
"எம்மா தாயி நான் இனிமே நகத்தயே கடிக்க மாட்டேன்,கொஞ்சம் உன் fm ம நிறுத்துருயா" என்று நான் சொல்ல வந்ததை நிறுத்தினான் அழுத்தபடி,
நானும் சிறுது நேரம் பேசாமல் இருந்து விட்டு மீண்டும் அருகில் கடையில் நிற்கும் ஜோடிகளை பற்றி பேச ஆரம்பித்தேன், அவனும் திரும்ப நான் பேசாதாது போல நடிக்க ஆரம்பித்து விட்டான்,
ஒருவழியாக அந்த பஸ்ஸும் வந்தது, நாங்கள் இருவரும் ஏறினோம் நான் என் சீட்டில் அமர்திருக்க, அவனோ அவன் பைகளை மேலே இருந்த தட்டில் வைத்து கொண்டிருந்தான்,
பிறகு என்னை பார்த்து "ok உனக்கு வேற ஏதாவது வேணுமா என்று அவன் கேட்க்க நான் என் ஜன்னலின்புறம் பார்த்து விட்டு,
அந்த ஜோடி நின்ற கடையை பார்த்துவிட்டு,
"எனக்கு அங்க இருக்குற பிங்க் கலர் ஹார்ட் keychain வேணும்" என்று கூற,
இந்த முறை அவன் அதிர்ச்சியோ குழப்பமோ அடையாமல்,
"hey இம்சை ஏதாவது சாப்பிறதுக்கோ இல்ல traveling தேவையானது ஏதாவது வேணுமான்னு கேட்டேன்" என்று அவன் கூற நானோ பதறிப்போய்,
"ஏன் என்ன இங்கேயே விட்டுட்டு போகபோரியா? ரிஸ்வான் என்ன நீ ஊர் வரைக்கும் வந்து விடறேன்னு சொல்லி இருக்கே, ப்ளீஸ் ப்ளீஸ் என்ன விட்டுட்டு போய்டாத" என்று நான் கெஞ்ச,
அவனோ தன் உள்ளங்கையை நெற்றியில் அடித்தவாறு,
"அவகிட்ட போய் கேட்டதுக்கு உனக்கு இது தேவதாண்ட ரிஸ்வான்" என்று அவன் தனக்குள் புலம்பிக்கொண்டு கீழே இறங்கியவன் வரும்போது தண்ணீர் பாட்டலும் டீ பண்ணும் கொண்டு வந்தான்,
ஆனால் நான் அப்போது நினைக்கவில்லை எதிர்காலத்தில் அவனே என் கணவனாக அந்த keychainனுடன் அவன் வீட்டு சாவியை ஒருநாள் என் கையில் ஒப்படைப்பான் என்று,
அன்று அவனை முத்தமிட்டத்தில் அவனுக்கிருந்த அதிர்ச்சியை விட எனக்கு தான் அதிகம் இருந்தது,
இன்னும் எனக்கு ஏதோ இதெல்லாம் ஒரு கனவு போல் இருக்கிறது, அவனுடன் இருந்த அந்த மூன்று நாட்களை போல் இதுவும் களைந்து போய் நான் விழித்து பார்க்கும்போது நான் மட்டும் தனியாக இருப்பேன் என்று தோன்றுகிறது,
அவனுடன் இருக்கும்போது எனக்கு தெரியவில்லை அவன் எவ்வளவு முக்கியம் என்பது அன்று,
அவன் அன்று பள்ளி வாசலில் என் தலையை தட்டி விட்டு இனியாவது கவனமாக இரு என்று மெல்லிய சிரிப்புடன் சொன்ன அந்த நிமிடம் தான்,
இனி நான் என் வாழ்க்கையில் பார்க்க போவதே இல்லை என்பது என் கன்னத்தில் பலார் என்று அடித்தது போல் உரைத்தது,
எனக்கு அதற்கு பதில் சொல்வோ இல்லை என் எண்ணங்களை வெளிப்படுத்தவோ வாய்ப்பு கிடைக்கும் முன்னே என்னை அவனிடமிருந்து அழைத்து சென்று விட்டார்கள்,
கடேசியாக மெல்லிய புன்னகையுடன் என்னை பார்த்த அவன் முகம் அடுத்து வந்த நாட்களில் என் இதயத்தில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது,
அதன் பிறகு என் சொந்த வீட்டிலும் பாதுகாப்பில்லாத உணர்வு, நான் மட்டும் உலகில் தனியாய் இருப்பது போல ஒரு எண்ணம், என் நெஞ்சத்தில் ஏதோ துளை
போட்டது போல் வெறுமை,
திடீரென்று ஒருநாள் என் கனவில் நான் அவன் கையை பிடித்துக்கொண்டு அந்த ஒரு அதிகாலை நேரத்தில் நீண்ட சாலையில் நடந்து கொண்டும் பேசி சிரித்துக்கொண்டும் இருப்பது போல ஒரு கனவு,
என் மனம் எல்லாம் பூப்பூத்து நிரம்பி வழிவதுபோல் ஒரு உணர்வு அப்போது தான் அவன் என்னை பார்த்து சிரித்தான் நான் பூரணமாகி விட்டவாறு ஒரு எண்ணம்....
கண்ணை விழித்து பார்த்தபோது அவன் அருகில் நிறைந்து வழிந்த அந்த நெஞ்சத்தில் மீண்டும் துளை போட்ட வாறு அந்த வெற்றிடம்....
அன்று அவனை திரும்ப சந்தித்தபோதும் அவனை முதல் முறை பார்த்தது வேறு ஒரு ஆளாகத்தான் பார்த்தேன் அவன் என் கையில் அந்த சாவியை தரும்வரை....
கனவாகி போன அந்த மூன்று நாட்களின் அடையாளத்தை அவன் கையில் பார்த்தது எனக்கு என்னவோ நீண்ட காலம் வெளியே சுற்றி விட்டு என் வீட்டை வந்து சேர்த்தது போல் தான் இருந்தது...
---------
அன்று எங்களின் அந்த கடேசி தருணங்களை நினைத்த வாறு நான் யோசனையில் இருந்தேன்...
கடந்த சில நாட்களாக என் மனம் ராட்டினம் போல் அவனையே சுற்றிக்கொண்டி இருந்தது,
அன்று என்னிடம் அவன் முந்தைய திருமணத்தை பற்றி பேசியதிலிருந்து அவனை காண்பது இன்னும் கடினமாக இருந்தது ஒருசில இரவுகள் அவன் வீட்டிற்கு வராமலே அவனை எதிர்பார்த்த வாறு சோபாவிலே கூட கழித்தேன் ஆனால் ஒரு வாரம் ஆகியும் அவனை காணாது என் நெஞ்சு மீண்டும் துளையிட எனக்கோ ஒரு புறம் என் பேட்ச்சை கேட்காத மனதின்மேல் எனக்கே கோபம் வந்தாலும் அவனை காணாத வெறுமை கரைவது போல் இல்லை.
நானும் என் கவனத்தை தோழிகள் புறமும் படிப்பின் புறமும் திருப்ப எவ்வளவோ முயன்றும் எதுவும் வேலைக்கு ஆனது போல் இல்லை.
இன்று எழும்போதோ அவனை காணமுடியாத அந்த தருணங்களின் சாரம்....
'எனக்கு அவனை பாக்கணும்'
முன்னாள் பாடம் நடத்தி கொண்டிருக்கும் ஆசிரியரின் குரலை கேட்க விடாமல் என் மனம் என்னை நச்சரிக்க...
நான் விரக்தியில் தலையை என் முன்னிறுத்த மேஜையில் முட்டிக்கொண்டிருக்க அப்போது தான் அந்த சத்தம் எனக்கு கேட்டது...
"ஸ்ஸ்ஸ்ஸ்.....ஸ்ஸ்ஸ்ஸ்..." முதலில் பாம்போ பள்ளியோ என்று அலற போன நான் பிறகு சுதாரித்து கொண்டு சத்தம் வந்த திசையை கவனிக்க அங்கோ என்தோழி ஜன்னலுக்கு அருகில் நின்று கொண்டு என் கவனத்தை ஈர்க்க வித்தியாசக நடனமாடுவது போல ஏதோ காய் கால்களை அசைத்து கொண்டிருந்தாள்...
'இப்ப தானே என் பக்கத்துல உக்கார்ந்து இருந்தால் எப்படி அதுக்குள்ள அங்க போனா?' என்று என் மனதுக்குள் வியந்து கொண்டே நான் என் கை அசைவில் என்ன வெனவென்று அவளிடம் கேட்க்க அவளோ அங்கு வருமாறு பதிலுக்கு கை ஜாடை காட்டுகிறாள்...
எனக்கோ ஒரு பக்கம் பயம் மறு பக்கம் அங்கு எப்படி போவதென்று குழப்பம்... நான் திரும்பி பாடம் நடத்தி கொண்டிருக்கு ஆசிரியரை ஒரு நோட்டமிட்டு விட்டு அவளிடம் எப்படி வர என கேட்க்க அவளோ வெகுநேரம் போராடி செய்கையில் மேஜைக்கு அடியில் குனிந்து கொண்டு வா என்று எனக்கு புரிய வைக்க எனக்கோ ஒருபுறம் பயமாக இருந்தாலும் மறுபுறம் சிலிர்ப்பாக இருந்தது.
கருபலகையில் எழுத ஆசிரியர் திரும்பவே நானும் அங்கிருந்து மாயமாகி என் தோழியின் அருகில் போய் நின்று விட்டேன்...
"என்னை எதுக்கு கூப்பிட்டே?" இருவரும் வராண்டாவில் நடந்து கொண்டிருக்க நான் அவளிடம் அதை கேட்டேன்,
"seriously? அந்த அம்மா read பண்ணிக்கிட்டு இருந்தது உனக்கு புரிஞ்சதுன்னு மட்டும் என் கிட்ட சொல்லிடாத" என்று அவள் கூற எனக்கு சிரிப்பு எழுந்தது...
'அதுதானே!' என் மனதும் அவள் சொல்லியதை ஒற்றுக்கொண்டது.
"so இப்போ நம்ம என்ன பண்ண போறோம்?" படிக்கட்டில் நடந்து கொண்டிருந்த வாறு நான் அவளிடம் கேட்க்க,
"ம்ம்...விண்வெளிக்கு அடுத்த ராக்கெட் அனுப்புறதுக்கு ஹெல்ப் பண்ணுகன்னு நாசா என்னை request பண்ணி இருந்தது அதுதான் உன்னையும் கூட்டிட்டு போறேன்" என்று அவள் வழக்கம் போல கிண்டல் அடிக்க,
"okay நீ எங்க கூட்டிட்டு போறேன்னு இனி கேக்க மாட்டேன் ஆன எனக்கு இந்தி தெரியாது என்னை பத்தரம கூட்டிட்டு வந்துடு" என்று நான் அவள் கல்லூரி வாசலை கடந்த போது கூற,
"அது நீ ஏன் இப்பல்லாம் ப்ளூ வேல் கேம் விளையாடர மாதிரி இப்படி சோகமா சுத்துறன்னு சொல்லறதுள்ள இருக்கு இல்லன்னா...இங்க பக்கத்துல நல்ல லேக் ஒண்ணு இருக்கு அங்க கூட்டிட்டு பொய் உன்னை தள்ளி விட்டுட்டு வந்துடலாமானு ஒரு ஐடியால இருக்கேன்" என்று அவள் கூற
நான் நடப்பதை நிறுத்தி விட்டு அவளை பார்த்து முறைக்க அவளோ சிரித்த படி என் கையை பிடித்து கொண்டு "கவலை படாதே உன்னை பத்தரம கூட்டட்டு போய்ட்டு கூட்டிட்டு வந்துடறேன்" என்று கூறியவாறு அவள் என்னை இழுத்து சென்றாள்...
சிறிது நேர பஸ் ப்ரயானத்திற்கு பிறகு அவள் கூறியது போல் நாங்கள் இருவரும் சற்று நேரம் நடக்க அவள் கூறியது போல் என் கண்களுக்கு முன்னாள் ஏரியை காண நான் அதிர்ச்சியில் அவள் முகத்தை பார்க்க அவளோ சற்று நேரம் குழப்பத்தில் நின்றவள் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்....
"don't worry babe, எனக்கு உன்னை புடிச்சிருக்குறதால ஒன்னும் பிரச்சனை இல்லை இவ்வளவு ஆட்கள் இருக்குற இடத்திற்கு பட்ட பகள்ள கூட்டட்டு வது உன்னை கொள்ள மாட்டேன்" என்று கூறியவள்
கூட்டம் இல்லாத பகுதிக்கு என்னை அழைத்து சென்று நீருக்குள் கால் விட்ட வாறு அமர்ந்து கொண்டவள் என்னையும் அது போல் அமர சொன்னாள்...
"எனக்கு மைண்ட் சரி இல்லாதப்ப எல்லாம் நான் இங்கே தான் வருவேன் எனக்கு இந்த lake அ பாத்துகிட்டு இருந்தால் நிம்மதியா இருக்கும்...என்ன தான் நீ பேட் friend அ என்கிட்ட எதுவும் சொல்லலன்னாலும் உன்னை பார்க்க பாவமா இருந்தது அது தான் உன்னை இங்க கூட்டிட்டு வந்தேன்" என்று அவள் கூற எனக்கோ அவள் செய்கைகளில் மனம் குளிர்ந்து அவள் என் இன்னும் நெருங்கிய தோழி ஆனது போல் இருந்ததது.
அவளை பார்த்து ஒரு நன்றி கூறுவது போல் புன்னகை செய்து விட்டு எனக்கு நேராய் இருக்கும் எரியை பார்க்க ஆரம்பித்தேன்...
அன்று நேரத்தில் என் வாய் தானாக பேச ஆரம்பித்தது...
"harry எனக்கு ஒரு குழப்பம்.." என்று நான் கூற அவள் மௌனமாகவே இருந்ததால் நான் தொடர்ந்தேன்,
"என் ஸ்டோரில இந்த character அவன் எல்லாரையும் மாதிரி தான கொஞ்சம் insensitive ஒரு பொண்ணுக்கு வேற வழி இல்லாம ஹெல்ப் பண்றதுனால அந்த பெண்ணுக்கு அவன புடிச்சி போய்டுது" என்று நான் நீரில் காலை வைத்த வாறு கூற இடையில் என் தோழி,
"எதுக்கு இந்த பொண்ணுங்களுக்கு jerks சயே புடிக்கிது? பொண்ணுகளோட டேஸ்ட் வரவர மட்டமாகிக்கிட்டே போகுது" என்று அவள் புலம்ப ஆரம்பிக்க நான் அவளை நிறுத்தி,
"டேஸ்ட் ட பத்தி மட்டும் பேசாதே அவன் ஆரடில broad shoulder and caramel eyes எக்ஸ்பெசல்லி அ perfet நல்லா ஜொள்ளு விடற அளவுக்கு தான் இருக்கான், நான் அதபத்தி பேசல நான் எதை பத்தி பேசிட்டு இருந்தேன், ஹாஹ்... அவன் wife...?" என்றவளை திரும்பவும் மடக்கி,
"ஒஹ் இந்த கதைல wife எல்லாம் இருக்கா?" என்று அவள் சைடு கமெண்ட் அடிக்க,
"சொல்லரத மட்டும் கேளு harry"
"ஓகே சொல்லு"
"இந்த wife அவன் மோசமானவன்னு இவ கிட்ட வந்து சொல்லுறா"
"exes comments are invalid, அதை கணக்குல சேர்க்க கூடாது"
"ஓகே but அவனே அவகிட்ட என் ex சொன்னது தான் உண்மை னு சொல்லி அதுக்கு விளக்கமும் கொடுக்குறான், and அவன் wife பன்னது பெரிய தப்பா இருந்தாலும் trust me அவன் பண்ணதுக்கு அவன் wife அவன நம்பாம இருக்க சொன்னதுல தப்பே இல்லை"
"so?"
"so அவன் என்ன விட்டு விலகி இருன்னு பெருசா அவளுக்கு ஒரு டோஸேயும் விட்டுட்டு, அதுக்கு நல்ல காரணத்தையும் சொல்லி இருக்கான், so இந்த ஹீரோயின் என்ன யோசிக்கிறதுன்னு தெரியாம குழம்பி போய் இருக்கா? இப்போ இந்த பொண்ணு என்ன பண்ணனும்?"
"நீ எதுக்கு அந்த ஸ்டோரிய முழுசா படிச்சி முடிச்சி தெரிஞ்சிக்க கூடாது" என்று அவள் கேட்க்க,
" அந்த author uptate பண்ண time ஆகும் நீ சொல்லு harry அவ என்ன பண்ணனும்?" என்று நான் சிணுங்க,
"you mean நீ என்ன பண்ணனும்னு கேக்குற?"
அதை மறுக்க நான் வாய் எடுக்க,
"பிலீஸ் உன் ப்ளூ வேள் face அப்பறம் உன் மிட்டெரியஸ் ரைட்டர் எல்லாம் புரியாம இல்ல"
என்று சொல்லிவிட்டு,
"இப்போ உன் ஆளு நல்லவனா அவன நீ நம்பலாமான்னு எந்த கேக்குற ரைட்டா?
என்று அவள் கூற நான் எந்த பக்கம் தலை ஆட்டுவது என்று தெரியாமல் எல்லா பக்கமும் தலை ஆட்ட,
"என்ன?" என்று அவள் கேட்க்க,
"இல்ல எனக்கு அவன் மேல நம்பிக்கை எல்லாம் இருக்கு but என்னவோ...பயம்"
"லுக் இதை நீ ரொம்ப எமோஷன்னல் எடுக்குத்துக்குற்ற அதுதான் இங்கே பிரச்னை, லாஜிகலா யோசிச்சி பாரு, அவன் உண்ண ஏதோ ஒரு காரணத்துக்காக தள்ளி இருக்கணும்னு நினைக்கிறான், so அவன் உன்ன அவன் நினைச்ச வில்லன் கலர்ல பாக்க வெக்கிறான், அதிஷ்ட வசமா நீயும் அவன் நினைச்ச மாதிரி தான் அவன பாதுகுட்டு இருக்க,meaning நீ பயந்துட்டே but இங்க உன் மூளை தப்புன்னு சொல்றத கேக்காம உன் மனசு அவன நம்புது...so" அவள் சொன்னதை ஒரு வார்த்தையையும் விட்டு விடலாம் கூர்ந்து கவனித்து கொண்டு இருந்த நான் அவள் நிறுத்திய உடன்,
"so? அப்போ நான் என்ன பண்ணனும்?" என்று கேட்க,
"இரு இரு டீய குடிச்சிக்கிர்றேன்" என்று அவள் டீயை குடிக்க போக,
"harry potter இப்ப எனக்கு பதில் சொல்லரிய இல்லையா?" என்று நான் சத்தம் போட வழியில் நடந்து சென்ற ஒரு பையன் எங்களை அசரமத்தில் சேர்க்க வேண்டிய கேசுகளை போல் பார்த்து செல்ல,
" so... அவன் உன்கிட்ட சொன்ன angle ல யோசிக்காம வேரா angle ல யோசி" என்று சொன்னதற்கு நான் மீண்டும் என் குழப்பத்தை முகத்தில் காட்ட,
"don't give up buddy, அவன் உண்மையிலேயே உண்ண விரற்றதுக்காக சொல்லி இருந்தானா உன் கிட்ட முழு கதையை சொல்லி இருக்க சான்ஸ் இல்ல, அவன் சொன்ன கதைல ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருப்பான் யோசிச்சி பாரு" என்று அவள் எனக்கோ அவ்வளவு தகவல்களையும் தலையில் போட்டுக் கொண்டதால் இன்னும் தலை வழி தான் அதிகமானது...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro