தள்ளிப் போகாதே -3
"தள்ளிப் போகாதே துணையே தூரம் கண்டு கொள்ளாதே
மனதின் வலிகள் மறைதாய் நீதானே...
லிரிக்:தாமரை
அது காலை நேரம் குளிருடன் தென்றலும் அடிக்கும் நேரத்தில் சூரிய ஒளி முகத்தில் அடிக்க, பிறந்த குழந்தையின் உள்ளங்கை நிறத்தில் வானம் என்னை வரவேற்க பச்சை பசும் புல்வெளிகள் என் இருபுறங்களிலும் முன்னாள் நடப்பதர்க்கோ முடிவில்லாத சாலை என் முன்னிருக்க, என் மனம் இறகு போல் லேசாய் இருந்தது,
என் பின்னலோ தன் சூழ்நிலையை நொந்துகொண்டு வரும் என் தற்காலிக காவலன்/தோழன் ஆம் தோழன் தான் என்னதான் என் சூழ்நிலை சரி இல்லாமல் இருந்து நான் மீண்டும் மீண்டும் முட்டாள் தனம் செய்து கடிந்து கொண்டும் என்னை எப்போதும் முறைத்துக் கொண்டும் இருந்தாலும் இடையில் ஏதோ ஒரு இடத்தில் அவன் எனக்கு நிஜமாகவே உதவ நினைக்கும் அவன் உள்ளத்தை என்னால் பார்க்கமுடிந்தது அவனிடம்,
சற்று முன்பு அவன் வழியில் என்னுடைய ஹீல்சை பார்த்து 'இந்த ஸ்டூல் போட்டு நடந்தா நம்ம நாளைக்கு க்கு தான் போய் சேர முடியும்' என்று கடையில் வேறொரு செருப்பு வாங்கி தந்தபோது கூட என்னால் அந்த மனிதனை பார்க்க முடிந்தது,
ஒருவழியாக அந்த 6 சென்டிமீட்டார் குச்சியிடமிருந்து இன்று எனக்கு விடுதலை கிடைத்து விட்டதாலோ என்னவோ தான் இந்த காலை இன்னும் அழகாய் தெரிகிறது,
நான் என் கைகளை ஆட்டிக்கொண்டும் சுற்றிக்கொண்டும் நடந்து போக அவனோ எனக்கு முழுதாக நட்டு கழண்டு விட்டது என்று முடிவு செய்து பின்னால் அமைதியாக நடந்து வந்தான் அப்போது தான் அந்த முயல் குட்டிகள் என் கண்களில் பட்டது...மீண்டும்,
நான் அதை நோக்கி போக ஆரம்பிக்க அவனோ என் முதுகு சட்டையை இழுத்து,
"திரும்பவும் தொலைஞ்சு போக போறியா"
"இல்ல ரிஸ், அங்க bunnies அ பாரேன் so cuteeee" நான் திரும்பவும் அதன் பின்னால் ஓட அவனோ,
"திருந்தவே மாட்டா போலயே" என்று முணங்கிக் கொண்டு பின்னால் வந்தான்,
எங்களை பார்த்ததும் குட்டி முயல்கள் ஓட ஆரம்பிக்க அவன் அதில் இரண்டு குட்டிகளை அவன் கையில் எடுத்து என்னிடம் தர,
"oh my god...Ohmygod... Ohmygod எனக்கு வாங்க பயமா இருக்கு, ஒரு வேலை நான் அதை hurt பண்ணிட்டேன்னா" என்றேன்,
"இல்ல இதை இப்படி பிடிச்சி தூக்கணும், இப்படி தூக்கினா ஒன்னும் ஆகாது" என்று அவன் காட்ட,
நான் அவைகளை கையில் வாங்கி கொஞ்சிக் கொண்டு இருந்தேன்,
ஒன்றின் நிறம் பால் போன்றும் இன்னொன்று சாம்பல் நிறத்திலும் இருந்தது,
அவன் கையில் வைத்திருந்த carrot டை அதற்கு கொடுக்க அது சாப்பிட்டு கொண்டிருந்ததை பார்த்து வியந்து கொண்டிருந்தேன்,
"என் அம்முவுக்கும் bunnies நான் ரொம்ப பிடிக்கும், நான் அவளோட 6th birthday க்கு அதை gift பண்ணேன், நாங்க ரெண்டு பேரும்தான் தான் அதை வழர்த்தோம், என் அம்மாக்கு அதை பாத்தாலே பயம் but நானும் அம்முவும் அதை கூட்டுக் குள்ளேயே விட மாட்டோம் mostly அது எங்க ரெண்டு பேரோட கைல தான் இருக்கும், அப்பறம் ஒரு நாள் அது ஓடி போயிடுச்சு.."
என்று அவன் ஒரு சோகம் கலந்த புன்னகையுடன் கூற எனக்கோ அதை எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை,
"அம்மு யாரு?" என்று என் சந்தேகத்தை கேட்டேன், திடீர் என்று அவன் கண்களில் பளீர் என்று ஒரு ஒளி, அப்போது தான் அவன் சிரிப்பதையே முதலில் பார்க்கிறேன்,
தீடீரென என் கண்களில் அவன் மிக அழகாக தெரிகிறான்,
"என் தங்கச்சி" என்றான், சிறிது நேரம் கழித்து அவன் அவைகளை கீழே விட்டு விட்டு,
"இப்படியே நின்னுட்டு இருந்தா பஸ் போய்டும்" என்று சொல்லி கொண்டு மீண்டும் நடக்க தொடங்கினான்,
நானும் அவன் பின்னால் போக பேருந்து நிலையமும் வந்தது,
எங்கள் அதிஷ்டம் அங்கு ஒருவருக்கு இந்தி தெரிந்திருந்ததால்,(அவனுக்கு இந்தி தெரியும் not me எனக்கு தமிழே சரியா தெரியாது) எங்கள் வண்டி எப்போது வரும் என்று அவன கேட்டு தெரிந்து கொண்டான்,
ஒருவழியாக அவ்வாறே 20 மாடி இருக்கும் ஒரு குடி இருப்பை சென்றடைந்தோம்,
அவன் ரிசெப்ஷனில் இருந்த பெண்ணிடம் பேசிவிட்டு என்னை அங்கிருந்த நாற்காலியில் அமர செய்துவிட்டு மீண்டும் வரும்போது கையில் file ளுடன் கோட்டும் சூட்டுமாக வந்தான்,
அவன் தோல் பையை என் கையில் தந்து லெப்டோபை எடுத்து கேட்ட வாறு அவன் டையை சரி செய்து கொண்டிருந்தான்,
பிறகு லெப்டோபை வாங்கிக்கொண்டு பர்ஸை என்கையி தந்துவிட்டு,
"நா வர்றதுக்கு time ஆகும், உனக்கு பசிச்சா அங்க கேன்டீன் இருக்கு ஏதாவது வாங்கி சப்ட்டுக்கோ இங்கேயே வெய்ட் பன்னு நான் வந்துடுறேன்" என்று அவசர அவசரமாக ஒப்பித்து விட்டு அங்கிருந்த lift டிற்குள் நுழைந்தான், எனக்கோ நான் தொலைந்து போய் இதுவரை வராத பயம் அப்போது தான் தலை தூக்கியது,
இப்போது தான் உண்மையில் தொலைந்து போனது போல இருந்தது, பசித்தும் தாகம் வந்தும் நான் அவன் விட்டு சென்ற அந்த இடத்தை விட்டு நகரவில்லை, சிலைப்போல் அங்கேயே அமர்ந்துவிட்டேன்,
அவன் திருமபவும் அந்த lift ல் இருந்து வெளியே வரும்போது மணி 2.30, அவனை பார்த்த உடன் தான் எனக்கு எனக்கு நிம்மதி பெருமூச்சே வந்தது,
என் தந்தையை வெகுநாள் பார்க்காமல் இருந்து வீட்டிற்கு வரும்போது ஓடி போய் கட்டி கொள்வது போல அவனை காட்டிக்கொள்ள தோன்றியது,
பிறகு நானே என் எண்ணகளை உதறிவிட்டு அவனிடம் அவன் தோள் பையயை கொடுத்தேன் அந்த முகம் சுருக்கம் இல்லாமல் இருப்பதால்போன காரியம் அவளவு மோசமாக இருந்திருக்காது என்ற நம்பிக்கையில் அவனிடம்,
"மீட்டிங் எப்படி போச்சு?" என்றேன் அவன் இதழ்களை சற்று விரித்தவாறு,
"actually நான் நெனச்சதை விட நல்ல போச்சு, thanks to you" என்றான்,
"thanks எல்லாம் வேணாம் எனக்கு பசி உயிர் போகுது எதாவது சாப்பிட வாங்கிதா" என்றேன் நான்,
"பர்ச தந்துட்டு சாப்பிட சொல்லிட்டு தானே போனேன்" என்று அவன் முறைப்புடன்,
"chance ஏ இல்ல என்ன யாராவது அழகா இருக்கேன்னு கிட்னாப் பண்ணிட்டா என்ன பண்றது" என்று நான் கூற,
"நீ என்ன பண்ணுவியோ தெரியாது but நா அவன ரொம்ப thank பண்ணுவேன்" என்று கூற நான் அவனை ஒரு சுடுப்பார்வையில் எரிக்க..
இருவரும் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறினோம்,
"அப்பாடா வெளிய வந்துட்டோம் எனக்கு அந்த இடமே பிடிக்கல" என்று நான் கூறியவாறு அவனை பார்த்து நடந்தேன்,
இப்படி நினைவுகளில் மூழ்கிப்போய் இருந்த என்னை வெளியே கதவை தட்டும் சத்தம் என்னை எழுப்பியது,
"வர்றேன்" என்று கூறிக்கொண்டு நான் போய் கதவை திறக்க,
என் கணவன் அவனுக்கு மிகவும் பழக்கப்பட்ட அந்த முறைப்புடன் என் முன் நின்றான், நான் அவனை பார்த்து புன்னகைக்க அவன் இன்னும் பலமாக என்னை முறைத்தான் பிறகு,
"ஏன் இப்பய முழுசா லூசாயிட்ட மாதிரி சிரிக்கிற?" என்றான்,
"பசிக்கிது ரிஸ்...கேன்டீன் சமோசா வயிதுல எவ்லோவ் நேரம் தான் நிக்கும்னு நெனக்கிற" என்றவுடன் பல்லை கடித்துக்கொண்டு ஏதும் சொல்லாமல் ஒரு ஆதங்கத்தில் அவன் தலையை விரல்களால் தேய்த்துவிட்டு,
என்னை ஒரு நொடி புருவத்தை சுருக்கி பார்த்தவாறு,
தனக்குள் ஏதோ கொடுமையை பற்றி முனங்கி விட்டு அவன் அறைக்கு சென்றவன் சிறிது நேரத்தில் வேறு உடையுடன் வெளியேறினான்,
அவன் அடுக்கலைக்குள் செல்ல நானும் அவன் பின்னே நாய்க்குட்டி போல் தொடர்ந்துகொண்டே,
"ரிஸ் நான் ஏதாவது ஹெல்ப் பன்னவா, அந்த yummy பிரேட் ஆம்லெட் எப்படி பண்ணனும் இன்னைக்கும் அதான் பண்ண போறியா? எனக்கும் அது எப்படி பான்-" வாய்க்கு வந்ததை பேசிக்கொண்டிருந்த நான் அவன் பின்னால் திரும்பவும் அமைதியாகிட்டேன்,
நான் அவன் பக்கத்தில் நின்றுகொண்டு இருந்ததால் அவன் திரும்பியவுடன் என் முகம் அவன் நெஜோடு உரசும் அளவிற்க்கு பக்கத்தில் வர அவன் கண்களில் தெரியும் நெருப்பினாலா இல்லை அவன் நெருக்கத்தினால என்று தெரியவில்லை என் நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது,
சற்று முன்பு குளிரில் நடுங்கிய எனக்கு திடீரென்று வியர்க்க ஆரம்பித்தது,
"நீ பேசாம இருந்தாலே எனக்கு ரொம்ப helpfull ல இருக்கும் எதுக்கு நீ ஹால்ல tv எதையாவது பாத்து எனக்கு ஹெல்ப் பண்ண கூடாது" என்று அவன் கண்களுக்குள் தொலைந்து போக போன என்னை அவன் குரல் வெளியே கொண்டு வந்தது,
"but நா..." என்று நான் பேச ஆரம்பிக்கும் முன்,
"நீ ஒன்னும் பண்ண வேணாம்" என்று என் தோளை பிடித்து தள்ளி என்னை கிட்சேனில் இருந்து விரட்டிவிட்டான்,
சற்று நேரம் கழித்து
டைனிங் டேபிளில்,
"farah வந்து இருந்தாள், காலேஜ்க்கு அப்ளை பண்ண நீங்க ஒத்துகிட்டதா சொன்னா"
Farah வந்தால் என்று ஆரம்பிக்கும்போது சற்று ஆச்சிரியத்தை காட்டிய அவன் முகம் பிறகு வந்த வார்த்தைகளில் திரும்பவும் அந்த வெற்று முகமாக மாற ஆரம்பித்தது,
"ம்ம்...அதுதானே உன் கரீர்க்கும் நல்லது so சீக்கிரம் என் வீட்டு திரும்பவும் என் வீடா ஆக்கிகலாம்" என்று அவன் வீட்டை சுற்றி பார்த்து விட்டு திரும்பவும் அவள் கற்பனைகள் எல்லாம் கற்பனைகள் தான் என்று உறக்கச் சொல்ல அதை அவள் பொருள் படுத்தாமல்,
"may be இதுக்கு இடையில் நீ என் மேல ஹெட் ஓவர் ஹீல்ஸ் லவ்ல விழறதுக்கு ஒரு 5 பெர்ஸன்ட சான்ஸ் கூடவா இல்லை" என்று நான் என் ஏக்கத்தை நகைச்சுவையில் கேட்க்க அவனோ வழக்கம் போல முறைக்காமல்.. என்னை ஏளனம் செய்யும் விதமாக ஒரு மூக்கின் வலியாய் சத்தம் எழுப்பியவாறு அதற்கு ஏற்றவாறு முகத்தில் ஒரு சிரிப்பையும் மாட்டிக்கொண்டு அடுத்த சப்பாத்தியை எடுத்து வைத்த் வாறு,
" 0.01 பெர்சென்ட் சான்ஸ் கூட இல்லை"
'இதுக்கு மொரசிச்சே இருந்திருக்கலாம்'
"மொதல்ல நீ இந்த எடத்துல டேரா போடலாங்குற ஐடியாவ கைவிட்டுட்டு படிச்சிட்டு எதுனா வேலைல போய் சேர்ற வேலையை பாரு"
'எப்படி என் பிளான் இவனுக்கு தெரிஞ்சது'
"இல்லனா even பெட்டர் ஏதாவது boyfriend கீஃப்பிரண்டு கிடக்கிறானானு பாரத்து கரெக்ட் பண்ணி அவனோட போய்டு"
'என்னாது????? அடப்பாவி ஒரு புருஷன் மாதிரியாடா பேசுற?'
"adress மட்டும் சொல்லிடு நான் உனக்கு டிவோரேஸ் papers அ போஸ்ட்ல அனுப்பி விடறேன்....பிச்...எதுக்கு ஈமெயில் அட்ரஸ் மாட்-" என்று நிற்காமல் பேசிவன் கையில் நறுக்கென்று கிள்ளியவுடன் அவன் அதிர்ச்சியில் கடத்தி விட்டு,
'உன்னை லவ் பன்னதுக்கு ஒரு சுவரை லவ் பண்ணி இருக்கலாம் போல அதுக்காவது உன்னைவிட நெறய feelings இருந்திருக்கும்' என் மன புலம்பளை அவன் குரல் நிறுத்தியது,
"ஏண்டி இப்ப கிள்ளுனே லூசு, இதுக்கு தான் இந்த கல்யாணம் எல்லாம் வேணான்னு நிம்மதியா இருந்தேன், இப்ப பாரு வீட்டுக்கு வந்த ரெண்டு நாள்ல அடிக்க ஆரமிச்சிட்டா, இன்னும் ஒருமாசம் ஆனால் என்னடி பண்ணுவே என்னையே வீட்டை விட்டு வெளிய தொரத்தி விடுவியா" என்று எழுந்து சென்று கையை கழுவ சென்ற என்னிடம் அவன் சத்தம் போட,
எனக்கு வந்த கோபத்தில் என் வார்த்தைகளை வடிக்கட்டமல் அவன் மீது எய்துவிட்டேன்,
" இல்லடா நீ தூக்கிக்கிட்டு இருக்கும்போது உண்ண ரேப் பண்ணிடுவேன்" என்று நான் அதே சத்தத்தில் கூறிய வாறு கிச்சனுக்குள் போய் நான் பாத்திரத்தை சின்கில் போட.
அவனோ சற்று நேரம் மௌனமாய் இருந்துவிட்டு பிறகு, "ஹேய் இந்த வேலைலாம் என் கிட்ட வச்சிகாதே" என்று அவன் முதுகு பின்னால் வந்து மிரட்ட,
மீண்டும் அவனை மிக அருகில் பார்த்ததும் உடல் சிலிர்த்தவளாய் அவனை பார்க்க அவன் கண்களிலோ அப்படி ஒரு கோபம் அவன் இன்னும் அருகில் வந்து அவள் உயரத்திக்கு தலையை குனிந்து அவள் தோல் புஜங்களை இருக்க பிடித்தவாறு,
"இந்த அட்ட பூச்சி வேலையை எல்லாம் traveling ஓட நிறுத்திக்கோ, என் lifeளையும் வந்து ஒட்டிக்கிட்டு குடும்போம் குழந்தைன்னு எதாவது plan பண்ண அவ்வளவு தான் நசுக் கிடுவேன்" என்று அவன் மிக அருகில் வந்து சொல்ல எனக்கு ஒரு நொடி அதிர்ச்சியும் ஆசையும் ஒரே நேரத்தில் எழுந்தது,
'seriously யாசின் அவன் உன் கழுத்த நெறிக்கிற அளவுக்கு கோபத்துல இருக்கும்போது கண்டிப்பா உனக்கு romace தேவையா?' என்று என்னை நானே சுய நினைவுக்கு வரவலைத்தவாறு,
"நீ யாரையாவது love பன்றியாடா?" என்று நான் திடீரென அவனிடம் கேட்க்க அவனோ முதலில் குழப்பத்தில் நின்று விட்டு பிறகு
எனக்கு முழுதாய் பித்து பிடித்தது போல் ஒரு பார்வையை பார்த்து விட்டு, "are you serious? அன்றைக்கு நீயும் தானே என் ex wife அ மீட் பண்னே அதுக்கு அப்புறமும் நான் இந்த relationshit குள்ள விழுவேன்னு நினைக்கிரியா?" என்று அவன் எனக்கு ஒரு கேள்வியை விட,
"அப்ப நீ யாரையும் லவ் பண்ணல"என்று நான் தீர்க்கமாய் நான் சொல்ல,
"so?"என்று அவன் எரிச்சலுடன் கேட்டான்,
"so you can love me" என்று நான் உற்சாகமாய் கூற அவனோ என்னை பைத்தியம் என்று முடிவு செய்து பின்னால் திரும்பாமல்,
"போடி லூசு"
என்று முனங்கி கொண்டு சென்றுவிட்டான்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro