Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

கண்ணான கண்ணே - 17

கடல் அலை போல காலொட உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி...
கடல் மண்ணை போல உன் காலொட ஒட்டி கரை தாண்டும் வரையில் நான் இருப்பேனடி...

லிரிக்: விக்னேஷ் சிவன்.

நான் எழுந்து வெளியில் வந்து கிட்ட தட்ட 5 நிஷம் ஆயிடுச்சு அவன் இன்னும் வெளியில் வரவில்லை....

நேரம் ஆக ஆக எனக்கு உள்ளபோய் என்ன நடக்குதுன்னு பாக்கணுங்குற எண்ணம் அதிகமாகிக்கொண்டே இருக்கு...

இவள் எதுக்கு இப்போ வரணும்???

இப்போ தான் கொஞ்சம் நாளாக அவன் என் கூட மனுஷன் மாதிரி பேச ஆரம்பிச்சு இருக்கான் அது குள்ள இவள் வேறு...

இவ்வளவு நாளாக கண்ணுக்கு தெரியாத அவன் இப்போது மட்டும் அவள் கண்ணுக்கு பட்டானாமா?

Uhh...i hate her sooo much...

அவள் ஏன் அழகா இருக்கா? அவள் என் அவனை காயப்படுத்தினால்? ஏமாற்றினால்?

அவன் ஏன் இன்னும் முழுசா அவளை மறக்காம இருக்கான்?

இப்போ இதுக்கு அவனை தேடி வந்தால்...இன்னும் எதுக்கு அவனுக்கு அவள் மேல் உள்ள அக்கறை குறையல?

ஏகப்பட்ட காரணங்களும் கேள்விகளும் என் மூளையை துளைத்துக் கொண்டு இருக்கு...இத்துடன் சேர்த்து அவன் மீது இருக்கும் அந்த அரைகுறை கோபம் வேறு...

நேற்று அவன் மேல் கோபமாய் தானே இருந்தேன் சட்டப்படி அவனுடன் பேசாமல் தானே இருந்து இருக்கணும்...

ஆனால் அவன் அருகில் அவன் மீது இழுத்துக் கொண்டதும் அப்படி ஒரு கோபம் இருந்ததையே மறந்து போனேன்...

இன்று காலை மீண்டும் அவள் வாயை திறந்து அதையெல்லாம் திரும்ப கொண்டு வந்து விட்டாள்...

எனக்கு தெரியும் எனக்கு தெரியும் நான் கொஞ்சம் ஆவரேஜ் லூகிங் தான்னு...

அவனுக்கு அவ்வளவு மேட்ச் இல்ல தான்னு...

அப்புறம் நான் ஒன்னும் எல்லோரும் விரும்புற போல ஐடியல் வைஃப் இல்லைன்னும் எனக்கு தெரியும்...

அதுக்காக என்னை குத்தி காண்பிப்பதற்கு அவள் யார்? அவதான் அவனை வேணான்னு சொல்லிவிட்டு போய்ட்டாலே அப்படியே போக வேண்டியது தானே...

அவள் தான் கேட்டாள் என்றாலும் இவன் எதற்க்கு அவளை திரும்பவும் அவன் வாழ்க்கைக்குள் அழைத்து வரவேண்டும்?

ஓகே ஒத்தக்குறேன் நான் அவனுக்கு மூணாவது ஆள் தான் வேறு வழி இல்லாமல் தான் என்னை அவன் என்னை கல்யாணம் பண்ணிக்கொண்டான்...

அதுனால அவன் பெர்சனல் விஷயத்தில் தலையிடுற உரிமை எனக்கு இல்லை தான்...

அப்போ அந்த கிஸ்? அது என்ன கணக்கு? அவளை அவனால் மறக்க முடியலன்ன எதுக்கு அன்று அவன் என்னை தொடவேண்டும்?

எனக்குள் எதற்க்கு நம்பிக்கையுடன் சேர்த்து ஏதுஎதையோ வளர்க்கணும்?

அய்யோ...இப்படியே யோசித்து கொண்டு போனா--

இந்த நேரத்தில் தான் என் மனக்குறல்களை நிறுத்தும் விதமாக அவனும் நான் நிற்கும் அவன் காருக்கு அருகில் வந்து சேர்ந்தான்...

Harry இப்போதெல்லாம் அவள் போலீஸுடன் செல்வதால் இப்போதெல்லாம் அவனுடன் தான் காலேஜிர்க்கு செல்லவேண்டி இருக்கிறது...

முதலில் காரினும் மௌனமே சத்தமாக இருக்க ஓரளவிற்கு மேல் அவனே பேச ஆரம்பித்தான்...

"அப்செட்டா இருக்கியா?" அவன் அந்த கியரை மாற்றிக்கொண்டு கேட்க்க எனக்கோ கோபம்தான் வந்தது...

வேறென்ன... உன் முன்னால் மனைவியை உன் தற்போதைய மனைவியுடன் தங்க அழைத்து வந்து விட்டு இவன் என் கிட்ட இருந்து வேறு என்ன எதிர்பார்க்கின்றான்?...

"அப்செட்டா? இல்லையே ரொம்ப குளுகுளுன்னு இருக்கேன்" என்று நானோ அந்த பொய் உற்சாகத்துடன் அவனிடம் கூற அவனோ கண்ணை உருட்டிவிட்டு பேசட்டத் தொடங்கினான்....

"லிசென் யாஸீன் அவள் சொல்லரத எதையும் காதுல வாங்கிக்காதே... அவள் ஒரு சைக்கோ"

"ஓஹ் அப்படியா?" அப்போ எதுக்கு அந்த சைக்கோ மேல உனக்கு இவ்வளவு அக்கறை?...

என்று நான் அவனிடம் என் பாதி எண்ணத்தை கூறிவிட்டு அந்த நம்பாத பொய் சிரிப்பை முகத்தில் காட்ட அவனோ ஒருகையால் ஸ்டெரிங்கை பிடித்துக்கொண்டு மறுகையால் தலையை கோதிக்கொள்ள நான் நினைத்தபடி அவன் பதற்றமடைவதை அறிந்துக்கொண்டேன்...

நல்லா டென்ஷன் ஆகட்டும் எனக்கென்ன? இது எல்லாத்துக்கும் அவன் தானே காரணம்...

இப்படியாக ஒருவழியாக காலேஜிற்க்கு வந்து சேர்ந்தோம்... இன்னும் நான் அவனிடம் எதையும் பேச முயற்சிக்கவில்லை அவனும் எதேயோ சொல்ல வாய் எடுக்கிறவன் பிறகு பேச்சு வராதவன் போல் அமைதி ஆகிக் கொள்கிறான்...

கடேசியாக நான் என் பையை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறும்போது என்னவோ கூறினான்..

"என்ன சொன்னிங்க?" என்று நான் கார் ஜன்னலிற்குள் தலையை விட்டவாறு அவன் கூறியது உண்மை தானா இல்லை மன ப்ரம்மய்யா என்று உறுதி படுத்திக்கொள்ள கேட்டேன்...

அவனோ அவன் குரலை சரி செய்துக்கொண்டு அவன் பின் கழுத்தில் கைவைத்தவாறு ஒரு சந்தேக குரலில்...

'seriously இப்போ கூட எதுக்கு எனக்கு இவன் அழகா தெரியிறான்'

"இன்னைக்கு நைட் நம்ம எங்கயாவது வெளிய போய் சாப்பிடலாமா?" நான் கேட்டது மனபிரம்மை இல்ல என்பதை நிரூபணப் படித்தினான்....

இல்லையே...எங்கேயோ இடிக்குதே...இவன் நம்மகிட்ட இப்படியெல்லாம் பேசமாட்டானே?

என்ற குழப்பத்துடன் நான் நிர்க்க அவன் மீண்டும் குரலை சரிசெய்தபோது தான் அவன் என் பதிலுக்காக காத்துகொண்டு இருப்பதை உணர்ந்தேன்...

முதலில் அவன் கேட்டது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் பிறகு அவன் மீதிருந்த கோபம் நினைவிற்கு வர நானோ மீண்டும் என் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டு பேசினேன்...

" i am sorry நைட் நான் சரியான நேரத்துல ஆபீஸ்ல இல்லையென்றால் என் பாஸ் அவன் மூக்கு வழியாக நெருப்புவிட்டே என்னை எறிச்சிடுவான் so thanks but no thanks" என்று நான் அவனை இரு புறமும் இருந்து தாக்க முதலில் கோபத்தில் பல்லை கடித்து கொண்டவன் பிறகு " i don't think your boss would mind if you come out with me" என்று அவன் மீண்டும் முயற்சிக்க என் பிடிவாதமோ கொஞ்சம் பலம் இழக்க தொடங்கியது...

சற்றுநேரம் அவனை அதே சந்தேகக்கண்களுடன் பர்த்துக் கொண்டிருந்த என்னை இன்னும் அவன் அந்த எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்...

"என்னை ஹர்ட் பண்ணிட்டு இப்போ லஞ்சம் கொடுத்து சரி பண்ணலாம்னு பாக்குரியா?" நான் யோசிக்கும் முன்பே அந்த வார்த்தைகள் வெளியே வர அவனோ அதற்கு மறுப்பு தெரிவிப்பதற்காக வாயை திறக்க நானோ அவனை இடையில் பேசவிடாமல் "எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கி தருவியா?"

என் வார்த்தைகளுக்கு அவன் முகத்தில் புன்னகை மலர்ந்து அந்த கன்னங்களில் குழிவிழ ஆரம்பித்தது...

omg இன்னும் ஒரு நாலஞ்சு தடவை கூட அவன் என்னை ஹர்ட் பண்ணினா பரவா இல்லை போல இருக்கே... இவன் ஏன் இவ்வளவு அழகா இருக்கான்...

இதுல இந்த ஹார்ட் பீட் வேற அப்பப்போ பெருசாகுது...

அவன் கண்ணு எதுக்கு அப்படி பலபலன்னு மின்னுது இதற்கு முன்னால் அவன் கிரிக்கெட்ல 6 அடிச்சாதர்க்கோ இல்லை ஹேரியை வெளிய விட்டு கதவை பூட்டினதர்க்கோ சிரிக்கும்போது அவன் கண்ணு அப்படி இல்லையே...

என்னால் எதுக்கு அவன் முகத்தில் இருந்து கண் எடுக்க முடியல...

அப்பறம் அந்த...அவனோட... அந்த...லிப்ஸ்...கொஞ்ச நாள் முன்னால் என்னை கிஸ் பண்ண அதே லிப்ஸ்...

.

.

"யாஸீன்"

I think யாரோ என்னை கூப்பிடரங்க...

.

.

.

"யாஸீன்" இந்த தடவை ஹேரியோட குரள் கடேசியாக என் மூளையை தட்டி எழுப்பி விட்டது...

நான் கார் ஜன்னலில் இருந்து தலையை எடுத்துவிட்டு எப்போது தூங்கி எழும்போது என் முகத்தில் இருக்கும்...

'நான் எங்க இருக்கேன்? இங்க என்ன நடந்தது' என்பது போன்ற முகத்துடன் அவளை பார்க்க அவளோ அதை கவனிக்காமல் என் கையை பிடித்து என்னை இழுத்துக் கொண்டு சென்றாள்...

ப்பா ஒரு சிரிப்புக்கே இப்டின்னா நான் எல்லாம் எப்படி வாழ போறேன்?

அதுசரி நான் என் வாயிலிருந்து அருவி கூட்டிட்டு இருக்கும்போது அவன் என்ன செய்துகொண்டு இருந்தான்...என் கணிப்புபடி அவன் அவனோட அழகை புகழ்ந்து குறைத்தது 4 வரிகளாவது பாடி இருக்கணுமே...

அவன் எதற்க்கு அமைதியாய் இருந்தான்?...

--------

அது தானே நான் எப்படி சும்மா இருந்தேன்?

I mean என்ன பார்வைடா அது?நான் கொஞ்சம் மிஸ் ஆகி இருந்தால் இந்நேரம் ஏதாவது பப்லிக் நியூசென்ஸ் ஆயிருக்கும்...

இவள் கிட்ட சொல்லி இந்த மாதிரி பப்ளிக்ல எல்லாம் என்னை இப்படி பார்க்க வேணான்னு சொல்லணும்... To dangerous...

But வீட்டுக்குள்ள its alright...

actually its more then alright...

என்ற என்னத்தோடு என் உடல் சிலிர்க்க அதை நான் உதறிவிட்டு ஆஃபீசை நோக்கி வண்டியை திருப்பினேன்...

.

.

.

.

.

இன்னும் என்னும் என்னை அவள் முழுதாய் மன்னிக்க வில்லை ஆனால் பேசாமல் இருக்கும் அளவிற்க்கு கோபமாய் இல்லை...

அன்று ஞாயிற்று கிழமை என்னை திடீரென்று மீண்டும் அவள் முகத்தில் அந்த கோபப் பார்வையை என்னவென்று கேட்டதற்கு முதலில் அவள் ஒன்றும் சொல்லவில்லை... பிறகு சற்று நேரம் கழித்து அவள் என்னை ஸ்டார்ரூமிற்கு இழுத்து சென்று அங்கு எதையோ கை காட்டினாள்...

அவள் கை முனையில் அமர்ந்து கொண்டு இருந்ததோ இரண்டு பைண்ட் டப்பா...அதாவது அவளின் அறைக்கு பூசுவதற்காக நான் பல வாக்குவாதங்களுடன் வாங்கி வைத்த அந்த பிங்க் கலர் பைண்ட் டப்பா...

அந்த டப்பாவை குழப்பத்துடன் பார்த்த என்னிடம் அவள் முகத்தை சுருட்டிக்கொண்டு..

"உன் ட்ரீம் லவ் மட்டும் இப்போ என் ரூம்ல ரொம்ப relaxedடா high way to hell பாட்டை full volumeமில் கேட்டுக் கொண்டு இருக்கலன்னா இந்நேரம் என்னோட ரூம்ல நான் என் favorite பிங்க்குடன் டூயட் பாடிக்கொண்டு இருப்பேன்...இப்போ பாரு எல்லாம் உண்ணாலதான்..." என்று அவள் காலை தரையில் அடித்துக்கொள்ள நானோ புருவத்தை தூக்கி கொண்டு...

அவள் வார்த்தைகளுக்கு ஏனோ எனக்குள் கொஞ்சம் கோபம் உருவானது...

"obviously...but நீ எதுக்கு ஒரு changeக்கு எல்லாரும் பண்ணற மாதிரி மனுஷங்களோட ரொமான்ஸ் பண்ண try பண்ண கூடாது" என்று என் எதார்த்தமான சந்தேகத்தை அவளிடம் கேட்க்க நான் என்னவோ மலையில் ஏற்றி விட்டு குதி என்று சொன்னது போல் என்னை பார்க்கிறாள்...

Seriously woman...உன்னால என்னை பார்க்கவே முடியலையா? Me...rizwan..your husband...

இவள் எங்க என்னை பார்க்கப்போகிறாள் என்னைக்கு அந்த சாத்தானை வீட்டிற்கு வந்து விட்டேனோ அன்றிலிருந்து ஒரே முறைப்பும் கோபமும் வாக்குவாதமுமாக இருக்கிறாள்...

நான் என் கண்ணை உருட்டி விட்டு அங்கிருந்து வெளியே கிளம்ப சென்றேன்...பிறகு அறையின் வாசல் வரை போன உடன் தான் பின்னால் அவள் வரவில்லை என்று தெரிந்தது...

பின்னால் திரும்பி பார்த்த போது தான் அவள் அந்த பைண்ட் டப்பாவை ரொம்ப சோகமாக பார்த்துக்கொண்டு இருந்தததை கண்டேன்...

.

.

.

இல்ல வேணாம் ரிஸ் அப்படி சொல்லாதே

.

.

.

இல்லை வேணாம் அப்பறம் நீ தினமும் கஷ்டப்பட வேண்டி வரும்

.

.

.

வேணாண்டா ரிஸ்வான் வாயை திறக்காத

.

.

அப்போது தான் அதே சோக கண்களுடன் அவள் என்னை பார்த்தாள்...

Blast it..

"நீ..." குரலை சரி செய்துவிட்டு மிக்க கடினத்துடன் அந்த குரலை என் தொடை குழிக்குள் இருந்து மீண்டும் எடுத்தேன்...

"நீ வேணுன்னா..." அவள் எதிர்பார்க்கும் கண்களை பார்த்துவிட்டு ஒரு பெரு மூச்சுடன் "நீ வேணுன்னா நம்ம ரூமில் இருக்கும் இன்னொரு சைடு அந்த பைண்ட் பண்ணிக்கோயேன்" என்று கூறியதோடு அடுத்தநொடி உடனே மறுக்கப்போன என்னை அவள் முகத்தில் வந்த அந்த கண்கூசும் புன்னகை என் வார்த்தைகளை விழுங்க வைத்தது...

Oh God i'm hopless...

.

.

.

.

அன்றைக்கு என்று எனக்கு தீடீரெண்டு ஒரு மீட்டிங் பிக்ஸ் ஆகி விட்டதால் வேறு வழி இல்லாமல் நான் ஆஃபீஸிற்கு போக வேண்டியதாக போனது...அதற்கு அவள் முகத்தை மட்டும் நீங்க பார்த்து இருக்கணும்...

நான் அல்மோஸ்ட் அந்த மீட்டிங்கை கேன்சல் செய்ய போனேன் ஆனால் அந்தநேரம் தான் என் பரம எதிரி வீட்டிற்குள் நுளைந்தாள்...

"யசீ...எனக்கு ரொம்ப போர் அடிக்கிது யாஸீன் வா எங்கயாவது-" போகும் வழியில் நான் எதிர்பார்த்தது போல் என் கால் தடுக்கி அவள் கீழே விழுந்தாள்...

பிறகு மிக கடினத்துடன் எழுந்து அமர்ந்து என்னை கொண்டு அந்த புல்லட் தாக்கும் பார்வையை விட்டதற்கு நான் ஒரு பொய் சிரிப்புடன் "ஹி" என்றதோடு எங்கிருந்து கிளம்ப ஆரம்பித்தேன் நான் பாதி வலிபோக என் பின் தலையில் என்னவோ பலமாக அடிக்க நான் திரும்பி பார்த்தேன் கீழே விழுந்து கிடந்ததோ அவள் கையில் வைத்திருந்த கைப்பை நானோ பல்லை கடித்துக்கொண்டு அவளை பார்க்க அவளோ ஒரு 'அப்படியே போய்டு திம்ப வதுடாதே' என்பது போல் சிரித்துக்கொண்டு "bye" என்றதோடு என் முதுகை தள்ளி என் முகத்தில் என்வீட்டுக் கதவை அடைத்தாள்...

"b****" என்று முணங்கியதோடு நான் பஸ்டாப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...

நேற்று என் காரை சர்வீஸிர்க்கு கொடுத்ததால் இன்று நான் ட்ரைனில் தான் என் சேருமிடத்தை அடையமுடியும்...

------------

இன்று அவன் கார் இல்லாமல் எப்படியும் ட்ரைனில் தான் பிரயாணம் செய்தாக வேண்டும் என்ற என்னடத்தோடு நான் அந்த பைண்ட்டை என் முன்னிருந்த சுவற்றில் பூசிக்கொண்டிருக்க அருகில் என் தோழியோ...

"Seriously yaseen how can you be silent even after he have done this to you...that jerk...அவனுக்கு எவ்வளோவு தைரியம் இருந்திருந்தால் நீ வீட்டில் இருக்கும்போதே அவன் ex wifeபை வீட்டிற்கு அழைத்து வந்து இருப்பான்? இவனை எல்லாம்..." அவள் முடிப்பதற்குள் நான் இடையில் புகுந்து..

"இல்லை ஹேரி அவன் தகுந்த காரணம் இல்லாமல் எதையும் பண்ண மாட்டான்...அவன் அவளுக்கு ஏதோ பிரச்-" நான் முடிப்பதற்குள் அவளோ கோபட்டதோடு இரு கையையும் விரித்துக் கொண்டு...

"என்ன தான் பிரச்சனையா இருந்தாலும்-- oh my god yasee அங்க பாரேன்" என்று அவள் வாயில் கை வைத்துக்கொண்டு சொல்ல அப்போது தான் அவள் கையில் பைண்ட் பிரேஷுடன் கையை ஆட்டியபோது அதிலுள்ள பிங்க் நிறம் எல்லாம் ஆங்காங்கே அவன் புரமுள்ள சாம்பல் நிறம் பூசிய சுவற்றில் போய் ஒட்டிக் கொண்டதை கவனித்தேன்...

"அய்யய்யோ இப்போ என்ன பண்ணறது" என்று நான் கேட்க்க என் தோழியோ திருதிருவென முழிக்க எனக்கோ பதற ஆரம்பித்தது...

"போச்சு போச்சு...அவனே ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு சைடு பைண்ட் பண்ண ஒத்துகொண்டான் இப்போ அவன் பார்த்தான் நான் அவலோவு தான்.." என்று நான் புலம்பிக்கொண்டு இருக்க அவளோ என் அருகில் வந்து முகத்தில் கசப்பான மருந்தை குடித்தது போல் வைத்துக்கொண்டு பேசினால் "இரு இதற்கு ஏதாவது ஒரு வழி இருக்கும்...எதுனா பண்ணலாம் என்று அவள் என் தோளை தட்டினாள்....

அப்போது தான் எனக்கு ஒரு சுவாரஸ்யமான யோசனை வந்தது...

.

.

.

.

"இன்று மாலை 7 மணி அளவில் ______சென்று _____ வரும் மெட்ரோ ரயிலில் தீ விபத்து 20 தீர்க்கும் மேற்பட்ட பயணிகள் பாலி...100 க்கும் மேற்பட்டோர் படுகாயம்" முதலில் எனக்கு இதை கேட்டதும் எதுவும் விநோதமாக தோன்றவில்லை...

விபத்து...

ரயிலில்...

பயணிகள் பலி...

.

.

.

.

அப்போது தான் தலையில் ஆணி அறைந்தது போல் இருந்தது...

"ஹேரி ____ நம்ம எரியாக்கு வர்ற ட்ரெயின் தானே?" அவள் இல்லை என்று சொல்லி விடுவாள் என்ற நம்பிக்கையில் நான் கேட்டேன்...

ஆனால் சிப்ஸை வாயில் வைக்க போன அவள் கைய்யோ உறைந்து நின்றது புருவங்கள் சுருங்க ஆரம்பித்தது அவள் படக்கென்று என் புறம் திரும்பி பார்த்தாள்

அவள் கண்களில் தெரிந்தது நான் கவலை பட்டது சரிதான் என்பதை நிரூபித்தது...

எனக்கு இதயம் படபடக்க வியர்த்து வலிய ஆரம்பமானது... இருவரும் ஒரு சில நொடிகள் அதிர்ச்சியில் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்க திடீரென்று ஹேரி என் கைகளை பிடித்துக்கொண்டு "வா போகலாம்" என்று இழுக்க ஆரம்பித்தாள் எனக்கு கைகால்கள் எல்லாம் உறைந்து ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டது...

அவளோ நகராத என் உடம்புக்கு இழுத்துச்சென்றால்...ஒரு கட்டத்தில் எனக்கு சுய நினைவு வர என் கை கால்கள் வேலை செய்ய கண்களிலிருந்து கண்ணீரும் வழிய ஆரம்பித்தது...

போகும் வழி எல்லாம் என் பார்வை மங்களாய் போனாலும் என் கண்முன் என்னவோ அவன் காயப்பட்டு துடிப்பதும்...

அவன் அசையாத உடலும்...ஒளி இல்லாத பார்வையும் அவ்வப்போது கண்களில் வந்து வந்து போய்கொண்டிருந்தது...

என் கைகால்கள் நடுங்க ஆரம்பிக்க என் பார்வை இருளை ஆரம்பிக்க நான் கட்டாயப்படுத்தி என்னை விழிக்க வைத்துக்கொண்டு ஹேரியின் ஸ்கூட்டியில் அமர்ந்தேன்...

போகும் வழி எல்லாம் என் கண்களில் வழியும் அருவி வற்றுவதாக இல்லை...

ஆனால் போய் சேர்ந்த இடத்தில் வழியில் துடிக்கும் மனிதர்களையும் துடிக்காமல் கிடப்பவர்களுக்கு அருகில் அமர்ந்து அழுதுக்கொண்டு இருககும் உறவுகளையும் பார்க்க எனக்கு மூச்சு திணற ஆரம்பித்தது...

ஒரு கட்டத்திற்கு மேல் எனக்கு குடலை பிரட்டிக்கொண்டும் கண்ணை இருட்டிக்கொண்டு போக ஆரம்பித்தது அப்போது தான் ஹேரி என் கைகளை இழுத்ததை உணர்ந்தேன்...

திரும்பி பார்த்தபோது அவள் ஒரு புறம் கைநீட்டி காண்பிக்க எனக்கோ பயம் அதிகரித்தது...

ப்ளீஸ்...அவன் நல்லா இருக்கானும் அவனுக்கு ஒன்னும் ஆயிட கூடாது யா அல்லாஹ்...ப்ளீஸ்...அவன் நல்லா இருக்கணும்...

என்ற வேண்டுதலோடு நான் அவள் சொன்ன புறம் திரும்பி பார்க்க அந்த திசையிலிருந்து ஒரு கதறல் சத்தம் கேட்டதும் நான் கண்ணை இருக்க பொத்திக்கொண்டேன்...

பிறகு தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெதுவாக கண்ணை திறக்க என் முன்னாலோ தீயில் கருகி வலி தாங்கமுடியாமல் துடித்துக்கொண்டிருந்த ஒரு நபர் ஸ்டேசரில் ஏற்றிக்கொண்டு அவன் அருகில் அழுக்கு படிந்த ரத்தம் படிந்த அந்த உடையுடன் அவர்களுக்கு உதவிக்கொண்டு இருந்தான்...

அல்ஹம்துலில்லாஹ்...

அப்போது தான் எனக்கு மூச்சே வந்தது...

அதற்கு மேல் நான் என்ன செய்கிறேன் என்று எனக்கு தெரிவதற்கு முன் நான் அவன் கைகளுக்கிடையில் என் முகத்தை அவன் நெஞ்சில் புதைத்து அழுதுக் கொண்டிருக்கிறேன்...

------------

முதலில் ஏதோ ஒன்று வந்து என் நெஞ்சில் தாக்கியது போல் இருந்தது பிறகு அவளின் மனம் என்னை சூழ்ந்திட ஒவ்வொன்றாக எனக்கு புரிய ஆரம்பித்தது....

அவளின் குழுக்கம் என் மார்பில் அதிகமான போது தான் அவள் அழுத்துக்கொண்டு இருப்பதை உணர்ந்தேன்...

எனக்கு முதலில் என்ன செய்வதென்று புரியவில்லை இதுவரை யாரும் எனக்காக அழுது நான் பார்த்ததில்லை இது தான் முதல் முறை...எனக்கு அவளை எப்படி சமாதானப் படுத்துவதென்று புரியவில்லை நான் என்ன சொன்னால் அவள் அழுகை நிற்கும் என்று யோசித்தபோது எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை அதனால் தான் யோசிக்காமல் இயல்பாக எனக்கு வந்த ஒன்றை செய்தேன்...

அவளை என் நெஞ்சுடன் இணைத்து என் கைகளை கட்டிக் கொண்டேன்...

அவள் குழுக்கம் குறைய இது தான் சரியான வழி என்று நான் இன்னும் அவளை எனக்குள் இருக்கிக் கொண்டு அவள் தலையை தடவிக்கொண்டு...

"It's okay... It's okay baby...i am here..i am here" என்பதை அவள் காதிற்க்கு அருகில் முனங்க அவள் மூச்சு சீராகவரத் தொடங்கியது.

என்றாலும் அவள் என்னை பிரியும் எண்ணத்தில் இல்லை என்பதை அவள் கைகளை என் முதுகிலிருந்து எடுத்து என் கழுத்தின் பின்புறம் கோர்த்துக்கொண்டு போது தெரிந்துக் கொண்டேன்...

நானும் அவளிடம் அதை பற்றி எதுவும் குறையாக கூறும் எண்ணத்தில் இல்லை எனவே தான் அவள் இடுப்பில் என் கையை சுற்றியவனாக ஒரு சில அடி எடுத்து வைத்தவன் முதலில் என் முன்னால் வந்த taxi யை நிறுத்தி அதற்குள் அவளுடன் நானும் ஏறிக்கொண்டேன்...

---------

காரின் ஹாரன் சத்தத்தில் தான் நான் இடம்மாறி இருப்பதை உணர்ந்தேன்...

அப்போது அவன் தோலில் என் தலையை எடுத்து என் சுற்று புறத்தை பார்க்க முன்னாள் ட்ரைவர் அமர்ந்திருக்க என் அருகிலோ அவன் முகத்தில் கேள்வியுடன் என் தாடையில் கை வைத்தவாறு...

"you alright?" என்று அவன் கேட்டிட நானோ அந்த சங்கடம் கலந்த வெட்கத்துடன் தலையை ஆட்டிவிட்டு சற்று நகர்ந்து சென்று அமர்ந்துக்கொண்டேன்...

.

.

.

.

மணி 10 இருக்கும் நான் அவனுடன் சாப்பிட்டு விட்டு குளித்து என் இரவு ஆடைகளை மாற்றிவிட்டு எங்கள் கட்டிலின் இடதுபுறம் படுத்துக்கொண்டு ஒரு அரைமணி நேரமாவது புரண்டிருப்பேன்...

ம்ம்ஹும்ம்...தூக்கம் வந்தது போலில்லை...அவ்வப்போது என் தலைக்குள் அந்த எறிந்த உருவங்கள் வேறு...

வேறு வழி இல்லாமல் எழுந்து தண்ணீர் எடுப்பது போல் அந்த கிச்சனுக்கு சென்றேன் நல்ல வேளையாக எனக்கு பிடிக்காத அவள் அங்கு இல்லை...

நான் என் பணியை தொடர்ந்தேன்...
கிச்சனுக்கு சென்று கையில் கிளாசுடன் ஹாலில் இருக்கும் அவனை நோட்டமிட அவனோ அந்த மொபைலில் யாருடனோ பேசிக் கொண்டிருக்கிறான்...

எனக்கோ தூக்கம் கண்ணைகட்டுகிறது ஆனால் அங்கு சென்றால் என்னால் தூங்க முடியாது என்று மட்டும் எனக்கு நன்றாக தெரியும்...

சற்று நேரம் தயங்கிய நான் பெரிதாக மூளைக்கு வேலை கொடுக்காமல் சோபாவின் அருகில் சென்று முதலில் அமர்ந்து கொண்டு சற்று யோசித்தேன் என் தூக்கம் படிந்த மூலையில் பெரிதாக ஒன்றும் தோன்றவில்லை எனவே நான் அங்கிருந்து தவழ்ந்து அவன் சோபாவிலிருந்து அவன் ஒருகாளை தள்ளி விட்டுவிட்டு அந்த இடத்தில் நான் படுத்துக்கொண்டு அவன் நெஞ்சில் தலையை வைத்துக் கொண்டேன்...

முதலில் பேசுவதை நித்தியவாறு உறைந்தவன் எதிர்புரத்திலிருந்து மங்கலாக சத்தம் கேட்க்க அவன் மீண்டும் பேச ஆரம்பித்து விட்டான் எனக்கோ அத்துடன் உலகம் இருளை ஆரம்பிக்க காடேசியாக என் இடையை சுற்றி கொண்ட அவன் கையை தான் உணர்ந்தேன்....

----------

இந்த ரயில் விபத்தை தெரிந்த ஜீ என்னிடம் கால் செய்து பேசிக் கொண்டிருந்தபோது தான் அவள் சிறு பிள்ளைபோல் ஒரு முகட்டதோடு என்னருகில் வந்து... என் நெஞ்சின் மீது படுத்துக் கொண்டாள் முதலில் எனக்கு ஆச்சர்யம் இருந்தாலும் எண்ணுடலோ எப்போதும் அவளுக்கு பழக்கம் ஆனது போல் அவளை கீழே விழ விடாமல் என் கைகள் அவளை சுற்றிக்கொண்டது...

இப்படி நான் ஒருகையால் போனே பிடித்துக்கொண்டு மறு கையில் அவளை தாங்கிக்கொண்டு பேசி முடித்த பிறகு தான் அவளை மீண்டும் கவனித்தேன்...

மிக அமைதியான அந்த குழந்தை முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தாள் அப்போது தான் அவள் கொஞ்சம் முன்னாள் அவள் உலகமே உடைந்து போனது போல் அழுதது நினைவிற்கு வந்தது...

ஒரு சில நிமிடங்களுக்கு எனக்குள் வந்த உணர்வுகளை என்னால் கணிக்க முடியவில்லை ஏதோ என் மனம் நிறைந்து விட்டது போல்...ஏதோ இல்லாத பொருள் திடீரென்று அதன் இடத்தில் ஒட்டிக் கொண்டதுபோல்... ஏதோ நான் அவளுடன் போய் இணைந்து தாழ்விட்டு கொண்டது போல் ஒரு உணர்வு...

அப்போது தான் அது புரிந்தது...

இனி நான் தனியாக இல்லை இவள் தான் என் உறவு என்பது...

அந்த நினைவோடு என் இதழ்களில் புன்னகையும் எழ அந்த புன்னகையுடன் நான் அவள் நெற்றியில் இருந்த முடியை விலக்கிவிட்டு அங்கு முத்தமிட்டுக்கொண்டு என் இதழ்களை எடுக்க மனமில்லாமல் அங்கேயே வைத்திருக்க அப்போது தான் மீண்டும் என் புன்னகை பறி போனது...

என் முன்னே நின்றவள் தான் என் சிரிப்பை கொஞ்ச காலம் கொன்று புதைத்தவள்...

"ஆஹா ரிஸ் என்ன உன் பொண்டாட்டிய முன்னாலேயே தூங்க வச்சிட்ட போல இருக்கு.... வர்றியா கொஞ்சம் சீட்டிங் கேம் விளையாடலாம்...it would be trilling..."

அவள் என் கோபத்தை பார்ப்பதற்க்கே இதை செய்கிறாள் என்று தெரிந்துகொண்டு நான் அவள் இல்லாதது போல கையில் தூங்கி கிடந்த என் மனைவியுடன் என் அறைக்குச் செல்ல அவளோ மீண்டும் பேச ஆரம்பித்தாள்...

"நான் அவள் கிட்ட சொல்ல மாட்டேன்டா i promise" என்றவள் முகத்தில் கதவை அடைத்தேன்...

.

.

.

.

நான் என் அறையில் நிரமில்லாத இலைகள் உதிரும் மரத்தை வரைய சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது...

அந்த படத்தை பார்த்த போது எனக்கு என் ஞாபகம் வந்தது...துணைக்கு யாரும் இல்லாமல் நிரமில்லாமல் உயிரில்லாமல்...தனிமையில் இருந்தது...

ஆனால் இன்று என்னருமை மனைவியிடம் நான் கோபப்படுவதா இல்லை எப்படி ரியாக்ட் செய்வது என்றே எனக்கு தெரியவில்லை...

இன்று காலை நான் எழுந்து என் அருகில் அழகாய் உறங்கி கொண்டு இருப்பளிடமிருந்து கண் எடுத்து பார்த்தபோது அவள் புறம் நான் எதிர்பார்த்ததுபோல் அந்த பிங்க் கலரில் பைண்ட் பல்லை இழித்துக்கொண்டு இருந்தது....

நேற்று நான் வரும்போது லைட்டை ஆன் செய்யாததால் என்னால் பார்க்க முடியவில்லை...ஆனால் இப்போது அதில் சாம்பல் நிறத்தில் கூட்டிலிருந்து பறவைகள் பரப்பதுபோல வரைத்திருந்தது....

ஹ்ம்ம்...பராவைல்லை நான் நினைத்த அளவிற்க்கு மோசம் இல்லை என்ற எண்ணத்தோடு நான் என் கழுத்தை திருப்ப என் புறம் இருந்த என் சாம்பல் நிற சுவரோ இன்று வித்தியாசமாக தெரிந்தது...

அதாவது நான் முதலில் வரைந்து இருந்த மரத்தில் இன்று வெள்ளை நிற இலைகளுடன் அவள் புரமிருந்து பறந்து வந்த பிங்க் பறவைகள் என் மரத்தில் அமர்ந்தது போல வரைந்து இருந்தது...

இதற்கு நான் என்ன உணரவேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை...

நான் கோபப்படனுமா? சந்தோஷ படனுமா?...

கண்டிப்பா எனக்கு கோபம் வரவில்லை...இதயம் என்னவோ நிறைந்து வலிந்து கொண்டிருப்பது போல இதயத்தில் குமிழிகள் உருவாகி உடையது போல ஒரு உணர்ச்சி...

இது வரை எனக்கு இனி எந்த உணர்ச்சியும் கிடையாது என்று முடிவெடுத்த பிறகு என்னவோ புதிதாக பிறந்தது போல தோன்றுகிறது...

அவளுக்காக...

-----------

அன்று வழக்கத்திற்கு மாறாக மும்தாஜும் எங்களுடன் உண்ணும்போதோது இணைந்து இருந்தாள்...

ரிஸ்வான் அவளிடம் ஏதோ அவளின் புது வேலை ஒரு வார காலத்திற்குள் தயாராகி விடுவதை பற்றி கூறிக்கொண்டிருக்க அவன் முகத்திலோ எப்போதும் எனக்கு பிடிக்காத அந்த வினோத சிரிப்பு...

எனக்கு தெரியாத எதுவோ அவளுக்கு தெரியும் என்பதுபோல் என்னை சந்தேகப்படுத்தும் அந்த சிரிப்பு...

எனக்கு இவளை சுத்தமாக பிடிக்கல...

அப்போது தான் அவள் தட்டில் இருக்கும் இறாலை எடுத்து வாயில் அருகில் கொண்டு போனவள் அப்படியே உரைந்தாள் பிறகு விறுவிறுவென கிச்சன் சிங்கிற்குள் அவன் உள் அனுப்பியவைகளை வெளியேற்ற ஆரம்பித்தாள்...

முதலில் உறைந்து நின்ற ரிஸ்வியோ திடீரென உயிருக்கு வந்து அவள் முதுகைதட்டி விட்டு அவளிடம் நீரை கொடுத்து குடிக்க சொல்ல எனக்கு எங்கேயோ குத்த ஆரம்பித்தது...

ஆனால் அதற்கு பின் அவன் கேட்ட கேள்விகளோ என்னை இன்னும் சந்தேகத்திற்கு உள்ளாக்கியது...

"பிரான் ஸ்மெல் ஒத்துகளையா உனக்கு? டாக்டர் கிட்ட வோமிட் அதிகமாக இருக்குன்னு நேத்து சொன்னியா?"

என்று அவன் முகத்தில் கரிசனத்துடன் கேட்க்க என் மனமோ சந்தேகத்துடன் இருக்கமானது...

"என்ன டாக்டர்? எதுக்கு அவளுக்கு வாந்தி வரணும்?" என்று நான் என் மனதை அதிகம் குலைக்காமல் உடனே என் கேள்விகளை கேட்டிட...

ரிஸ்வான் இருந்த இடத்தில் நின்று முகத்தை சுருக்கி கொண்டு என்னவோ யோசித்து விட்டுபபேசுவதற்கு முன் மும்தாஜ் பேச ஆரம்பித்தாள்....

"ரிஸ் உன் கிட்ட சொல்லவே இல்லையா?...என்ன ரிஸ் அவள் கிட்ட எல்லாத்தையும் சொல்லி தான் என்னை கூட்டிட்டு வந்தேன்னு நினைச்சேன்? என்னை பற்றி முழுசாக உன் wife கிட்ட சொல்லலியா?...." என்று அவள் கேட்டக்க அவனோ எரிச்சலுடன் "நான் எதுக்கு அவள் கிட்ட உன்னை பற்றி சொல்லணும்..." அவன் எரிந்து விழ அவளோ முகத்தில் கரிசனத்துடன்...

"ரிஸ் நான் pregnantகிறதை நீ எப்படி அவள் கிட்ட இருந்து மறைக்கலாம்?" என்று அவள் மீதும் அவளிடம் கேட்ட போது தான் என் தலையில் யாரோ பளார் என்று அறைந்தது போல் இருந்தது ஆனால் அவனோ இன்னும் ஒரு துளி அளவு கூட முகத்தில் சலனம் இல்லாமல் "again இதை நான் அவள் கிட்ட சொல்லி என்ன ஆகிட போகுது?" என்றிட அவன் என்னை தூக்கி எரிவது போல ஒரு உணர்வு...

"but i thought you're loyal to her?" என்று அவள் கேட்க்க அவனோ "so என் நேர்மையை பற்றி பேசுறது தான் இப்போது நீ செய்துகொண்டு இருக்கின்ற வேலையா?" என்று அவன் திரும்ப பேசிட எனக்கோ குழப்பம் ஒருபக்கம் அவனை சந்தேகப்பட கூடாது என்ற எண்ணம் ஒரு பக்கம் ஆனால் சந்தேகத்தின் பின் போகும் என் மனம் ஒரு பக்கம்...

"ஆனால் அவள் எதிர்காலத்தை பற்றியும் யோசிக்க வேண்டாமா?" என்றிட அவனோ குழப்பத்துடன் "அதுக்கு என்ன இப்போ? அதை பற்றி உனக்கென்ன கவலை?" எனக்கோ கண்களில் தண்ணீர் தேங்க ஆரம்பித்து விட்டது அவனோ இன்னும் அவன் கண்ணை அவளிடமிருந்து திருப்பாவில்லை...

அவன் எப்போ என்னை பார்த்தான்...

"என்ன ரிஸ் அட்லீஸ்ட் 2 month முன்னால நீ என்ன மீட் பண்ணப்போ நடந்ததை அவள் கிட்ட நீ சொல்லி இருக்கலாமே?" என்று அவள் கூறினால்...

என்ன?

"நான் உன்னை பார்த்ததை எதுக்கு நான் அவள் கிட்ட permission கேக்கணும்? நீ என் கிட்ட சொல்லரா?....." சற்று நேரம் மௌனத்திற்கு பிறகு அவன் கண்கள் கோபத்தில் எரிந்தன..."mumu that's your limit stop it"

அப்படின்னா என் கிட்ட வேணுன்னு தான் மறைத்து இருக்கான்...

அவளோ அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் பேச ஆரம்பித்தாள்...

"அட்லீஸ்ட் அப்போ நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் தப்பு நடந்து பேபி form ஆனதை அவள் கிட்ட inform பண்ணறது தானே முறை? இல்ல யாசின்?" என்று அவள் கேட்டிட எனக்கோ அதற்கும் அவர்கள் குடும்ப பிரச்சனையை கேக்க தைரியம் போதவில்லை...

நான் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டேன் ஆனால் பின்னால் அவனோ என் பெயரை அழைக்க நான் கொஞ்சமும் திரும்பாமல் ஓட ஆரம்பித்து விட்டேன்...

அதற்கு பிறகு அவனின் குரல் கேட்க்க வில்லை...வழக்கம் போல் அவளிடம் பேச சென்று இருப்பான்...

இவ்வளோவு நாளாக நான் அவனுக்கு சுமையாக மட்டும் தான் இருந்திருக்கிறேன் போல் தெரி்கிறது...

அப்போ ஒரு நாள் கூட ஒரு நொடி கூட அவன் என்னை மனைவியாய் நினைத்ததில்லை இல்ல?....

நான் தான் முட்டாள் தனமான அவன் மாறி விடுவான் என்று நம்பி கொண்டு இருந்திருக்கிறேன்...

இதற்கு மேலும் அவனுக்கு சுமையாய் எனக்கு விருப்பம் இல்லை...

-------------------

"என்னை ஒழுங்கா வெளிய விடு...கதவு கிட்ட இருந்து நகரு முமு நீ pregnantடா இருக்க நான் உன்னை ஹர்ட் பண்ண விரும்பள..." என்று நான் கூறிட அவளோ சிரிப்பை கட்டுக்குள் கொண்டு வர முயற்ச்சி செய்து மீண்டும் சிரித்துக்கொண்டு " ஹ...ஹ...இரு இரு அவள் என்ன தான் பண்னுரான்னு பார்ப்போம்...
ஹ..ஹ..ஹ..ஹ..அவள் என்ன சொன்னாலும் நம்பீடுறா சரியான ஸ்டுப்பிடா இருப்பா போல இருக்கு கொஞ்சம் கூட மூளை இல்ல...எப்போ பாத்தாலும் ரிஸ்வி ரிஸ்வி...நீ எப்படி தான் அவளை ச-" நான் அவள் கழுத்தில் பிடித்து மூச்சு கிடைக்காததால் அவளால் அதற்கு மேல் பேச முடியவில்லை...

நான் என்ன செய்கிறேன் என்பதை அறிந்து அவள் கழுத்தை நான் விட்டு விட அவளோ இருமலோடு மூச்சு வாங்கிக்கொண்டு இருந்தாள்...

"என்ன..அவள் நீ சொல்ல ற எல்லாத்தையும் நம்பராள? அது ஏன்னா நீ பொய்யிலையே போறந்து வழந்ததால் எல்லாரும் பொய் சொல்லுவங்கன்னு நினைக்கிறே ஆனால் அவள் அப்படி இல்லை... அதுனால தான் அவள் உன்னை நம்பினால்...அப்பறம் என்ன ஸ்டுபிட்...யாரு ஸ்டுபிட்? உன்னை பாவப்பட்டு வீட்டில் இருக்க விட்ட அவளா? இல்லை உண்னை ஒருத்தன் ஏமாத்துறான்னு கூட தெரியாமல் அவன் கூட படுத்து வயிற்றில் குழந்தையோடு வந்து நிக்கிற நீயா?...இவ்வளோவு கஷ்டப்பட்டும் உனக்கு புத்தி வரளல்ல? நான் திரும்ப வரும்போது நீ இந்த வீட்ல இருக்க கூடாது...எங்க வேணுன்னாலும் போ...எவன் கூட வேணுன்னாலும் இரு...i don't care just get the hell out of my life"

நான் சொல்லி முடிக்கும்போது அவள் கண்களில் அந்த அவமானத்தையும் கோபத்தையும் கண்டேன்...

இன்னும் நான் அவள் மீது அக்கறை வத்திருக்கிறேன்னு அவள் நினைத்திருந்தால் அது அவளோட தப்பு..

நான் அங்கிருந்து வெளியேறி வாசலுக்கு வந்து பார்க்க அவளை எங்கும் காணவில்லை...

A/N: Just so you know readers... Ennadhaan andha gumthajkku rizwan mela intrest kuraindhu avanai vittu poi aval irundhaalum ennaikko oru naal avanai pidichchu dhaan avan kooda irundhaa...oru stagela avanukkaaga care pannadhaaladhaan avanai divorce pannaradha patri pesi avanai hurt panna thayanguna... Riz innum avalukkaaga care pannaraanu nambaraa..
Adhunaala dhaan ippo riz avan wife kooda sandhoshama irukkuradha paarththu jealous aaguraa...
It's such a selfish thing to do but that what she is...selfish...
So readers indha chapter patri enna ninaikkureenga... Yaseen unmaiyaave rizza vittutu poiduvaala?
Idhukku apparam enna nadakkumnu ninaikireenga?

Please vote and comment your opinions..

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro