எந்தப்பக்கம் காணும்போதும் -9
"உன் சோகம் ஒரு மேகம் நான் சொன்னால் அது போகும்
உன் கண்ணீர் ஏந்தும் கன்னம் நான் ஆகும்..."
லிரிக்:வைரமுத்து.
நல்ல காலம் நாங்கள் சென்ற அந்த நேரம் பார்த்து லிப்டிற்கு அருகில் இருக்க வேண்டிய receptionist டை காணவில்லை இல்லை என்றால் harry பேசி திசை திருப்பும்போது நான் கீழே குனிந்தவாறு அவனிருக்கும் இடதுபுறம் போவது தான் திட்டம் இப்போது இன்னொரு ஆள் இல்லாததால் அங்கிருக்கும் பிரம்மாண்டமான இரு அறைகளில் எது அவனது அறை என்று யோசித்தவாறு நாங்கள் உள்ளே செல்ல ஏன் தோழியோ,
"சோ அவன் கிட்ட எப்டி confess பண்ணலாம்னு இருக்கே" என்று கேட்க்க,
நானோ குழப்பத்தில் முகத்தை சுருக்க அவளோ
"அப்போ நீ இங்க அவன் கிட்ட confess பண்ண வரலையா ?" என்று அவளும் குழப்பமடைந்தவாறு ,
"அப்போ எதுக்கு உன்னை நான் இவ்வளவு தூரம் கஷ்ட பட்டு கூட்டிட்டு வந்தேன் ?" என்று சற்று அமைதியாகிவிட்டு,
"ஓகே அவன் கிட்ட என்ன பேசலான்னு இருக்க?" என்று கொஞ்சம் கோபமாக கேட்க்க
நானோ ஒரு அசட்டு சிரிப்புடன் "நான் எதுக்கு பேசணும்" என்று நான் கூறியவுடன்
அவள் முகம் சிவக்க ஆரம்பித்து அவள் என்னை முறைக்க ஆரம்பித்தாள்,
"ஓகே இப்ப எதுக்கு நம்ம இங்க வந்திருக்கோம்"என்று ஏன் தோழி கேட்க்க
நானோ தோழி குழுக்கி விட்டு " அவனை பார்க்க" என்று கூற
அவளோ என்னை திட்டுவதற்கு வார்த்தை தெரியாமல் தேடிகொண்டிருக்க
அங்கு வலது புறம் இருந்த அறையிலிருந்து ஏதோ சத்தம் வர நான் அதை நோக்கி சென்றேன்
என் தோழியும் வேறு வழி இல்லாமல் என் பின்னால் புலம்பிக்கொண்டே வந்தாள்,
நடுவில் நிற்கும் ரெக்கை வைத்த அந்த அழகிய தேவதையின் சிற்ப்பத்தை ரசிக்க நேரம் இல்லாமல் மாலை சிகப்பு சூரியனிலிருந்து வரும் வெளிச்சத்தில் இருந்து முழு நகரம் வரை அங்கு தரையில் இருந்து விட்டம் வரை இருக்கும் முழு நீல கண்ணாடியில் தெரிய அங்கு நின்று பார்க்க ஆசை இருந்தாலும்,
அருகில் செல்ல செல்ல அவனின் குரல் இன்னும் தெழிவாக கேட்க்க இதெல்லாம் என் மனதிலிருந்து மறைந்து அவன் குரல் மட்டும் என்னை வழி நடத்த ஏன் தோழியின் குரல் அந்த மாய வலையை கலைத்தது
"நாள் ஆக ஆக நீ முழு psychoவா ஆயிட்டு இருக்கே உனக்கு தெரியுதா? " என்று அவள் கேட்க்க,
நானோ அதை பொருள் படுத்தாமல் "போ போய் யாரும் வராம இருக்காங்களான்னு பாரு நான் போய் அவன பாத்துட்டு வரென்" என்று நான் கூற
அவளோ தோலை சிலிர்த்துக்கொண்டு பொய் கோபத்துடன் முகத்தை சுழித்து விட்டு லிப்டின் பட்டனை அமர்த்தி அது கீழே போகாத வாரு திறந்து வைத்துக்கொண்டு
"CCTV கேமரால எவனாவது என்ன பாத்துட்டு இங்க வர்றதுக்கு முன்னால சீக்கரம் வந்து சேறு"
"அது சரி அவன இங்க இருந்து லாங் டிஸ்டன்ஸ்ல பாரத்தால் போதாதா கண்டிப்பா உனக்கு closeup shot அவசியமா?" என்று கேட்டவளை நான் சற்றும் மதிக்காமல் மீண்டு அவன் குரலின் மாயைக்குள் சென்டறேன்...
"நீங்க இன்னொரு தடவை படிச்சு பார்தால் தெரியும் Mr azeez எங்க கம்பெனியோட scheam உங்களுக்கு நிறைய ப்ரோபிட் தரும் இந்த collabration தான் நீங்க பன்ர புத்திசாலி தனமான முடிவுன்னு நான் சொல்லுவேன் நீங்க உங்க chairman கிட்ட பேசிட்டு கூட உங்க decision சொன்ன போதும் நான் வைட் பன்னறேன்" என்றது எங்கயோ பழக்க பட்ட ஒரு பெண்ணின் குரல்
நான் அங்கிருந்த கதவு நீக்கத்தில் லேசாக எட்டி பார்த்த போது எனக்கு பெரிய அதிர்ச்சி,
"Sorry miss மும்தாஜ் நீங்க எத்தன தடவை சொன்னாலும் my first answer is my descision, you can go now" என்று அவன் கூற
அவன் முன்னால் மனைவியின் கண்களிலோ கோபம் தெரித்தது
ஆனால் கோபத்தில் இருக்கமான அவளின் முகம் அடுத்த நோடி..
ஒரு வித்தியாசமான சிரிக்கும் பாணியில் விரிந்தது..
ஆனால் அதை புன்னைகை என்றோ சிரிப்பு என்றோ யாராலும் சொல்லி விட முடியாது மொத்தத்தில் சீறல் போன்ற சிரிப்பு ஒன்றை அவள் முகத்தில் வைத்துகொண்டு
"அட்லீஸ்ட் இன்னொரு ஆளோட கம்பெனி என்பதாலயாவது என் கிட்ட கொஞ்சம் professional அ பேசலாம்னு நெனக்கிறேன் ரிஸ்வான்" என்று அவள் முகத்தில் சிரிப்பை வைத்து கொண்டு வாயில் அமிலத்தையும் கக்க,
எனக்கோ அவள்மீதுஇருக்கும் வெறுப்பு நொடிக்கு நொடி அதிமாகி கொண்டே போனது,
நான் கெட்டவளோ என்னவோ தெரியவில்லை அவன் அவளுக்கு செய்தது என்னவோ தவறு தான் என்று இருந்தாலும் என் மனம் அந்த துரோகிக்கு பரிதாபம் காட்ட மறுத்து அவன் புறமே சாய்கிறது,
இப்படி மீண்டும் ஏன் மனதிற்குள் வாதம் செய்ய அவனின்குறள் என்னை வெளியே இழுத்தது,
இப்போது அவன் கோபத்தில் நெற்றியின் நரம்பு தெறிக்க அவன் அமர்ந்து இருந்த இருக்கையை கை ரத்தம் இல்லாம வெள்ளை ஆகும் வரை பலமாக பிடித்த்துக்கொண்டு ,
"உன்னை வெளிய போக சொல்லி ரொம்ப நேரம் ஆகுது" என்று கூற
அவளோ லேசான சத்தத்துடன் ஒரு ஏளன சிரிப்போடு "எப்படி இருந்துச்சி ரிஸ் ஒரே வீட்ல நான் cheat பண்ணறேன்னு தெரிஞ்சிகிட்டே ஒண்ணா ஒரே பெட்ல ..." என்று அவள் ஆரம்பிக்க
அவன் நடுங்கும் கைகளோ அங்கிருந்த பட்டனை அழுத்தியவாறு அவன் குரல் "நடாஷா come to my office" என்றழைக்க அங்கோ பதில் இல்லை என்பதால் அவள் மீண்டும் அவள் தொடர்ந்தால்,
'அவனுக்கு தான் அதை பத்தி பேசறது பிடிக்கலன்னு தெரியுதுல்ல வேற எதுக்கு இவள் வாய மூட மாட்டேங்குறா....அங்க பாரு அவன் முகம் எப்படி சுருங்கி போச்சுன்னு'.
"நான் hug பண்ணும்போது kiss பண்ணும் போதேல்லாம் ரொம்ப வழிச்சு இருக்குல்ல" அவனின் மூச்சில் நடுக்கம் வர அவன் தான் நாற்காலியை இன்னும் இருக்க பிடிக்க...
aval வார்த்தைகளை என் கைகளோ தானாக என் வாயை பொய் மூடிக்கொண்டது...
'இவளை எப்படி இவன் லவ் பண்ணறான்...ராட்சஷி'
"எவ்வளவு நாள் பத்ரூம்ளையும் toilet லயும் அழுதுட்டு இருந்தே? " இன்னொரு முறை அவன் அந்த பட்டனை அழுத்தி
"நடாஷா" என்று இந்த முறை கத்த
அப்போது தான் லிஃடி அருகில் இருந்த மெஷினில் இருந்து அவன் குரல் வருவதை நான் உணர்தேன் ஆனால் அங்கே ஹரினி இருக்கும் வரை ஆள் வருவது கடினம்...
அவளோ லிஃட்டிற்கு நடுவில் கதவு வரும் இடத்தில் சாய்ந்தவாறு நின்றவாறு வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தவள் அவன் குறள் கேட்ட நொடி அதிர்ந்து போய் என்னை ஒரு நொடி பார்க்க ஆனால் அந்த நேரம் உள்ளிருக்கும் பிசாசு மீண்டும் அவன் இதயத்தில் கத்தியை விட மீண்டும் என் கவனம் உள்ளே இருப்பவர்களிடம் திரும்பியது,
'Oh my god oh my god....அவன் face அதுல திரும்பவும் அந்த look வருது அந்த ஒடஞ்சி போற லுக் she is hurting him...நான் இப்ப என்ன பண்ணறது"
அங்கு அவளோ அதே புன்னகையுடன்
"மொத்தமா 5 மாசம் நான் வேற ஒருத்தன் கூட படுத்துட்டு வர்றேன்னு தெரிஞ்சும் ஏன் கூட இருந்திருக்கன்ன பாவம் நீ என்ன எவலோவ் லவ் பண்ணி இருப்ப என்னை விட்டுட்டு போக எவ்வளவு யோசிச்சி இருப்ப ...ப்ச்...ப்ச்...ப்ச்...ஐயோ பாவம் but அதுக்க-"
'How dare she...how dare she hurt him like that'
இந்தமுறை நானே உள்ளே போய் அவள் செவிளில் ரெண்டு விடலாம் என்று நினைத்து கதவு திறப்பதற்கு முன்
என் தோழி என் கையை இழுத்துக்கொண்டு என்னை லிப்டிற்க்குள் இழுத்து சென்று விட்டாள்,
நானோ அவளிடமிருந்து விடு விக்க முயல அவ்ளோ விடுவதாக இல்லை கடேசியாக லிப்டிற்க்குள் போன பிறகு
"என்னை எதுக்கு இழுத்துட்டு வந்தே i have to---i have to kill that b**** with my bare hands, how dare she hurt him like that என்னை விடு நான் போய் அவளை கொன்னுட்டு வந்துடறேன்" என்று நான் கொந்தளிக்க
அவளோ என்னை வித்தியாசமாக பார்த்து விட்டு "நான் சும்மா தான் உன்னை psycho னு சொன்னேன் அதுக்காக நீ இப்படி அழுதுகிட்டு கொலப்பன்ன போறேன்னு சொல்லுவேன்னு நான் நெனக்கவே இல்லை என்னாச்சு உனக்கு, இப்ப நீ கோபமா இருக்கியா? இல்ல சோகமா இருக்கியா ? நீ என்னை ரொம்ப confuse பண்ற ron" என்றவாறு அவள் என்னிடம் tissue பேப்பரை திணிக்க அப்போது தான் நான் அழுது கொண்டு இருந்ததை உணர்ந்தேன்,
"அவன் என் அக்கா பெயரை ரெண்டு தடவ கொப்பிட்டுட்டான் நான் கீழ போகாம அவள் இங்க வர வாய்ப்பே இல்லை என்னால அவள் வேலை போய்ட கூடாது actually அவள்சொன்ன படி பார்த்தல் இங்க அவனுக்கு இன்னும் ஒரு assistant இருக்கணும் but அவங்க எங்கன்னு தெரில"என்று
அவள் தனக்குள் முனுமுனுத்துக்கொண்டே அவள் சகோதரியின் நம்பருக்கு அழைத்து அவள் கார்டை கண்டுபிடித்து விட்டதாக சொல்லிக்கொண்டே கீழ் தளத்திற்கு போகும் பட்டனை அழுத்தினால்,
நான் என் கண்களை துடைத்து விட்டு மூக்கை உரிந்தவாறு "எனக்கு பதில் தெரிந்துடுசசி "என்று நான் கூற
அவளோ குழப்பமாக 'என்ன' என்று கேட்க்க
"அவன் எதை விட்டான்னு தெரிஞ்சிடுச்சு ....emotions lots of his emotions he just masked all his emotions from me....to make me fear him...to make me hate him" என்றவுடன் என் கண்ணீர் வர..
என் தோழியோ இன்னொரு tissue வை என் கையில் திணித்து விட்டு " எப்டியோ இவ்வளவு கஷ்டப்பட்டு இங்க வந்தது ஏதோ ஒரு வகைல usefulல இருந்தால் சரி தான் " என்று முடித்ததோடு நாங்கள் கீழ் தாழ்த்தி வந்து சேர சரியாக இருந்தது...
அங்கே நேராக அவள் சகோதரி நின்றவுடன் என்ன பதில் சொல்வது என்று எங்கள் இருவருக்கும் தெரியவில்லை,
" நீங்க ரெண்டுபேரும் எப்படி லிப்ட்ல" என்று சந்தேகத்துடன் கேட்க்க ஹரிணியோ வாயை பிளந்து மூடியவாறு நிற்க
எனக்கு திடீரென்று எங்கிருந்தோ முளைத்த ஞானத்தில் "இல்ல அக்கா நாங்க இங்க உங்கள தேடினோம் but நீங்க இல்லை அதான் மேல இருப்பிங்கன்னு அங்க போய் பார்த்தோம் but அங்க யாருமே இல்ல" என்று கூற
அவள் சகோதரியோ என்னை இன்னும் சந்தேகத்தோடு "என் கார்டு இல்லாம நான் எப்படி மேல போக முடியும் ?" என்று கூற
என் முட்டாள்தனத்தால் என் அருகில் இருத்த என் தோழி விடும் எரிபார்வையும் எனக்கு தெரிந்தது,
என் நல்ல நேரமோ என்னவோ அவர் அதே தலைப்பை நீட்டிக்காலம் "actually என் பாஸ் கூப்பிட்டு போகலன்ன பிரச்சனைன்னு தான் என் colleague கார்ட்ல போய்டலாம்னு அவள கூப்பிட்டேன் but அவளும் 25th ப்லூர்ல லிப்ட் வேலை செய்யாததால மாட்டிகிட்டா...இது வரைக்கும் லிப்ட் இப்படி ஆனதே இல்ல என்ன பிரச்சனைன்னு தெரியல...whatever கார்ட கண்டு பிடிச்சி தந்ததற்கு thanks இனைக்கு மாயா வேற வேலைக்கு வராததால வேல அதிகமா இருந்ததுன்னு பாத்தாதத்துக்கு இதுல இந்த கார்டு வேற...ஒகே எனக்கு டைம் ஆகுது நான் கிழம்புறன் நீயும் அவளோட சேர்ந்து ரொம்ப கெட்டு போய்டாத...see you ஹரி bye" என்று பேசிக்கொண்டே லிப்டின் கதவு மூட aval உடன் பிறந்தவர் ஏன் கண்முன்னிருந்து மறைந்தார்....
------------
"Harry இன்னும் ஒரே ஒரு ஹெல்ப்" நாங்கள் அங்கிருந்த coffeeteria அமர்ந்திருக்கும் போது நான் மீண்டும் அவளை தொல்லை செய்ய அவளோ என்னை முறைத்து கொண்டு,
"என்னை எப்படியும் ஜெயிலுக்கு அனுப்பாம நீ விட போறதில்லை...சரி சொல்லு அதையும் கேக்கறேன்"
என்று அவள் கேட்க்க நானோ ஒரு அசட்டு சிரிப்போடு "அது இல்லா...." என்று நான் இழுக்க
அவளோ என்னை இடையில் நிறுத்தி "இழுக்காத டக்குனு matter க்கு வா " என்று கூற
நானோ என் கண்ணை இருக்க மூடிக்கொண்டு அவள் முகத்தை பார்க்காமல் விரைவாக "உன் அக்கா கிட்ட சொல்லி எனக்கு இங்க ஒரு partime job வாங்கி தர்றியா " என்று நான் கூறி விட்டு கண்ணை திறக்க முதலில் குழப்பத்தில் என்னை பார்த்து
"what?" என்று கூறியவள்
"இல்ல ஒரு partime job" என்று முடிப்பதற்குள்,
" no...never.... not going to happening...NO"
--------------
அன்று இரவு தூங்க கூடாது என்ற முடிவுடன் நான் சோபாவில் அமர்ந்தவாறு இன்று வீட்டிற்கு வருவானோ இல்லை ஆபிசில் தங்கி விடுவானோ என்ற எண்ணத்தை மனதிர்க்குள் உலாவ விட்டுக்கொண்டு இருந்தேன்,
வராவிடால் என்ன செய்வது? இன்று காலை அந்த ரட்சஷியின் வருகையால் அவனை சரியாக காண எனக்கு வாய்ப்பு கிட்டவும் இல்லை என்று என் மனதிற்குள் புலம்பிய வண்ணம் என் கண்களோ முன்னிருந்த தொலைகாட்சியை காண என் மனமோ அவனை சுற்றிக்கொண்டு இருந்தது,..
ஏன் மனப்புலம்பலை கேட்டது போல் அவன் அப்போது தான் வாசல் கதவை திறந்தான்,
அவன் வீட்டிற்குள் கால் அடி எடுத்து வைப்பதை பார்த்ததும் அவனிடம் ஓடிப்போய் அவன் கைகளுக் கிடையில் இருக்கும் உணர்வு எப்படி இருக்கும் என்பதை என்னால் சுவைக்காமல் இருக்க முடியவில்லை,
எப்போதும் என்னை தள்ளி விடுவது போல் இன்று என்னை அவன் தள்ளி விடவில்லை ஆனால் அவன் உறைந்து அமைதியாய் நின்றான்,
அவன் மனம் இன்று சரி இல்லை என்பது எனக்கு தெரிந்திருந்ததால் நான் அதற்கு மேல் அவனை தொந்தரவு செய்யாமல் அவனிடமிருந்து விலக அவனோ நெற்றியில் சுருக்கதொடு நின்று கொண்டிருந்தவன்.
" அன்றைக்கு தானே உன்னை அவ்வளவு திட்டனேன் எல்லாத்தையும் மறந்துடியா? நான் ரௌண்ட் 2 போக தயாரா இல்லன்னு சொன்னேன்ல" என்று அவன் இறுக்கமான முகத்துடன் கூற,
"well நீ ரௌண்ட் 2 போக தேவ இல்லை நான்தான் உன்னை விட்டு போற ஐடியாலேயே இல்லையே" என்று நான் முணுமுணுக்க அவனோ,
"நீயெல்லாம் பட்டு தான் திருந்த போற யாருக்கு தெரியும் may be இந்த தடவை உன் இம்சை தங்க முடியாம blackmailing ல இருந்து serial killing கு மாறலாம்" என்று சொல்லிக்கொண்டே அவன் அறைக்குள் புக,
நான் அவன் பின்னால் சென்றவாறு "atleast என்னை தேடி யாரும் வரமாட்டாங்க அதுனால உனக்கு போலீஸ் கேஸ் கூட இல்லை" என்று எனக்குள் நான் முணுமுணுக்க
அவனோ அவன் கழற்ற போன டீஷர்டை கீழே இறக்கிவிட்டு என்னை ஒரு நொடி தீவிரமாய் பார்த்தவாறு,
"அன்றைக்கு நான் சொன்னது எதுவும் பொய் இல்ல யாசின், நான் நல்லவனா இருப்பேன்னு எதிர்பார்க்காத நான் அவ்ளோ தான்" என்று அவன் கிட்ட தட்ட ஒரு களைத்த குரலில் சொல்ல,
"நான் நீ நல்லவனா இருக்கணும்னு எதிர்பாக்கல... எல்லாரும் எல்ல இடத்துளையும் நல்லவனா இருக்க முடியாதுடா நீயம் மனுஷன் தானே உனக்கும் வலிக்குல்லடா அதுதான் அப்படி பண்ணே இட்ஸ் ஓகே..." என்று நான் சொல்லி முடிக்க அவன் கோபத்துடன்,
"என்னடி என்ன ஓகே?என்ன உனக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஓக்கேன்னு சொல்றே? ஒரு பொண்ண 5 மாசமா மிரட்டி அவள் தனியா அழரத துடிக்கிறதா பாத்து சந்தோஷ படுறது தான் மனுஷ தன்மையா? உனக்கு தெரியாதா விஷயத்துல நீ தலை இடாத" என்று அவன் கோபமாக என் கண்களை பார்த்து கூற
எனக்கோ கண்களில் கண்ணீர் தேங்க ஆரம்பித்தது,
"எனக்கு தெரியும் ரிஸ்வான் 5 மாசம் ஒரு பொண்ணு அழரத பாத்து சந்தோஷப்பட்டதுக்கு இன்னும் உன்னை மன்னிகாத நீ அதை செய்றதுக்கு எவ்வளவு hurt ஆகி இருக்கணும்னு எனக்கு தெரியும் ஏன்னா நீ எனக்கு அந்த மாதிரி பண்ணி நான் உன் இடத்துல இருந்திருந்தா நான் உடஞ்சி இருப்பேன், ஏன்னா அப்ப கூட திடீர்னு உண்ண விட்டுட்டு என்னால போக முடியாது ஏன்னா உண்ண தவற வேற யாரும் எனக்கு இல்லை, தினமும் உண்ண பாக்கும் போதெல்லாம் உள்ள செத்து போற மாதிரி இருக்கும் இருந்தாலும் நீ இல்லாம போறதுக்கு அது மேலன்னு தோணும், என்ன ஏமாத்துனதுக்கு உன்னதிட்டனும் அடிக்கணும்னு தோணும் இருந்தாலும் உனக்கு தெரிஞ்சிட்ட இதெல்லாம் முடிஞ்சிடும்னு எனக்கு தெரியும்...அந்த கோபத்துல அந்த வலியில நான் கூட தான் உண்ண மாதிரி ஏதாவது யோசிச்சிருப்பேன், என்ன இவ்ளோவ் ஹர்ட் பண்ண உண்ண ஏதாவது பண்ணனுன்னு எனக்குதான் தோணும்.....இதையெல்லாம் செஞ்சும் என் அழுகை எல்லாம் முடியிறதுக்கு என் வலியெல்லாம் மறத்து போறதுக்கு என் உணர்ச்சிகள் எல்லாம் காணாம போறதுக்கு எவளோ காலம் ஆகும்னு எனக்கு தெரியல, இதெல்லாம் நீ எப்படி தாங்கிக்கிட்டேன்னு தெரியல, may be நீ இதை நான் உன்கிட்ட இருந்து தள்ளி இருக்கணுங்குறதுக்காக சொல்லி இருக்கலாம் ஆனால்--"
"SHUT UP" நான் என் மனதை கொட்டி முடிப்பதற்குள் இடையில் அவன் ஆவேசக்குரல் இடி போல் முழங்க தரையை பார்த்து பேசிக்கொண்டிருந்த நான் அதிர்ந்து அவனிடமிருந்து ஒரு அடி பின் எடுத்து வைத்திட,
"JUST SHUT UP....இதுக்கு மேல ஒரு வார்த்த..." என்ற அவனின் சிவந்த கண்களும் நடுங்கும் கைகளும் என் மனதிற்க்கு இன்னும் பயமூட்டினாலும் பக்கத்திலிருந்தும் மனதில் தள்ளி நிற்கும் அவனை எப்படியும் எட்டி பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை,
" ஆனால் riz-"
"நான் தான் பேசாதேன்னு சொல்லறது உன் காதுல விழாழ?" என்ற வாறு அவன் என் தோழ் புஜங்களை பிடித்து தள்ளியதில் நான் சோபாவின் மேல் போய் விழ
இருவரும் அடுத்த வந்த நிமிடங்களில் அதிர்ச்சியிலிருந்து மீள வில்லை...
.
.
.
.
நான் சிறிது நேரத்திற்கு பிறகு தலை நிமிர்ந்து பார்த்த போது அவன் இன்னும் அதே இடத்தில் என்னை பார்த்தவாறு சிலை போல் நிற்பதை கண்டேன்,
முதலில் பயப்படுவதா பரிதாபப்படுவதா என்று தெரியாமல் குழம்பிய நான் மீண்டும் அவன் கண்களில் திகில்கலந்த கோபத்தை கண்ட நான் சற்று தயக்கத்துடன் ஒரு முடிவெடுத்தேன்,
.
.
மீண்டும் அவன் அருகில் போய் நின்று அவன் கழுத்தின் மேல் கைபோட்டு என் தொழுக்கும் கழுத்திற்கும் இடையில் அவன் தலை யை வைத்து கொண்டு,
"Its ok...its ok...let it go...எல்லாம் சரி ஆயிடும்" என்று நான் மிக லேசாக சொல்ல அப்போது தான் தோள்களில் ஈரத்தை உணர்ந்தேன்,
அவன் மீது இருந்த என்னுடைய பிடி இறுக்கமானது,
அடுத்தநொடி அவன் என்னால் மூச்சு விட முடியாத அளவிற்கு கட்டிக்கொண்டு அழ அவனோடு சேர்ந்து நானும் குலுங்க ஆரம்பித்தேன்...
"it's ok....it's ok da அழறதுல ஒன்னும் தப்பில்லை நல்லா அழுதுடு...ஒன்னும் இல்ல" என்று நான் அவன் தலையை கோதி விட்டவாறு சொல்ல
இன்று மாலை அவள் அவனை வார்த்தைகளால் கிழித்த போது அவனின் முகம் மீண்டும் ஞாயபகத்திற்கு வந்ததும் என் கண்கள் கலங்க ஆரம்பிக்க நான் இன்னும் அவனை எனக்குள் இழுத்து கொண்டேன்...
---------
Hey readers... hope you enjoyed the chapter,
so..what do you think going to happen after this...
Rizwan character patthi enna ninaikkireen ga indha storyla ungalukku pidicha character a enakku comment pannunga...Pls vote and comment your opinions :-)
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro