Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

உசுரு நரம்புல நீ - 8

"மனசு வாசனை வீசுந் திசையில
உன்னத் தேடி ஓடுனேன்
கலைஞ்ச காத்துல எந்த மூச்சு
உன்னக்காட்டும் தேடுனேன் "

லிரிக் : விவேக்.

"don't give up buddy, அவன்
உண்மையிலேயே உன்ன விரற்றதுக்காக சொல்லி இருந்தான்னா உன் கிட்ட முழு கதையை சொல்லி இருக்க சான்ஸ் இல்ல, அவன் சொன்ன கதையில் ஏதாவது ஒரு தப்பு பண்ணி இருப்பான் யோசித்து பாரு" என்றாள் அவள்,

எனக்கோ அவ்வளவு தகவல்களையும் தலையில் போட்டுக் கொண்டதால் இன்னும் தலை வழி தான் அதிகமானது.

எனவே நான் அதை பற்றி யோசிப்பதை தற்காலிகமாக தள்ளி வைத்து விட்டு என் முன் தோன்றி மறையும் தண்ணீர் குமிழிகளை பார்த்துக்கொண்டு தூரத்தில் கேட்க்கும் ஏதோ ஒரு குழந்தையின் சிரிப்பொலியை கவனித்த வாறு அமர்ந்திருக்க என் மனம் அமைதியாக தொடங்கியது.

என் தோழி என் கையில் வந்து அந்த சூடான ஸ்வீட் கார்னை திணிக்கும் வரை என் மனம் அங்கிருந்த நீர் போல அலைகள் இல்லாமல் அமைதியாகவே இருந்தது பிறகு இருவரும் சம்மந்தமே இல்லாமல் அங்கிருக்கும் ஒவ்வருக்கும் நாங்களாக ஒரு கதை சொல்லி சிரிக்க ஆரம்பித்து விட்டோம்...

"ஏய் அங்க இருக்குரங்க பாரு அந்த couple அந்த பையன பாத்தா ஸ்கூல் கட் பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கு ஆனால் அந்தம்மா.... எப்படியும் 35 இருக்கும்-- கண்டிப்பா தள்ளிட்டு தான் வந்திருப்பான்" என்றாள் ஹரினி

எனக்கோ என்னதான் அவள் கூறுவது சரி தானோ என்று தோன்றினாலும் தெரியாத ஒரு ஆளை அப்படி குறை கூறுவதற்கு என் மனம் கேட்கவில்லை..

"hey ஏன் அப்படி சொல்லரே maybe அவங்க brother sisterஅ இருக்கலாம் ஏன் அவனுக்கு அம்மாவா கூட இருக்கலாமே" என்று நான் கூற

அவளோ நீ ஒரு குழந்தை என்பது போல் என்னை பார்த்து என் தலையை தட்டிவிட்டு..

"நீ இன்னும் நிறைய வளர வேண்டி இருக்கு ரான்...எந்த அம்மா அவள் பையன் கைய விடாம பிடிச்சிகுட்டு--4 வயசு பையன் கைய்யா பிடிச்சுக்கிட்டு இருந்தா பரவா இல்லை அவன் தொலைஞ்சி போய்டுவான்னு பண்ணுராங்கன்னு சொல்லலாம்--- அப்பறம் அந்தம்மா அவனுக்கு விடற looku....கண்டிப்பா ஏதோ affair case தான்" என்று அவள் கூற

நானோ நெற்றியை சுருக்கி உதட்டை குவித்த வாறு "but அவங்கள பத்தி தெரியாம அப்படி சொல்லறது த-" என்று நான்சொல்லி முடிப்பதற்கு முன்னாள் அந்த ஜோடி என் கண் முன்னாலேயே முத்தமிட என் தொண்டை குழியில் வார்த்தைகள் சிக்கி கொண்டது.

என் முகத்தை பார்த்த என்தோழியோ சிரிக்க ஆரம்பித்து விட்டாள் ஆனால் என் மூளையோ அதற்கும் வேலை செய்வது போலில்லை...

"b-b-but...Public ல அதுவும் lip..."என்றவாறு என் குரல் நின்று விட அவள் இன்னும் பலமாக சிரிக்க ஆரம்பித்து விட்டாள்....

இப்படி சற்று நேரம் அர்த்தமில்லாத வார்த்தைகளும் கனமில்லாத வாதங்களுமாக என்மனம் கொஞ்சம் லேசானது,

கல்லூரி விடும் நேரம் நெருங்க இருவரும் மீண்டும் ஒரு பஸ்ஸை பிடித்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தோம் இடையில் என் தோழியோ பஸ் ஸ்டாப்பில் இறங்கியவுடன் அவளுக்கு பசி எடுப்பதால் அருகில் அவள் வழக்கமாய் போகும் ஒரு cafe அழைத்து சென்றாள்...

"அங்க இருக்கற சமோசா சூப்பரா இருக்கும் வா உணக்கு வாங்கித்தர்றேன்...." என்றவளை நான் சந்தேகமாக பார்க்க,

"ஓகே ஓகே சமோசா மட்டும் இல்ல அங்க இருக்குற வெய்ட்டரும் சூப்பரா இருப்பான் அதுக்காகதான் அங்க அடிக்கடி போவேன்...but சமோசவும் நல்லா இருக்கும்...அப்பறம் என் அக்கா வேற அங்க பக்கத்துல தான் வேலை பக்குறா so அதை ஒரு சாக்கா வெச்சி அடிக்கடி போறது தான்...அது சரி இவ்ளோ நாள் உன்கிட்ட நான் தான் அவன் நல்லா இருக்கான் இவன் நல்லா இருக்கான் அப்படி இப்டின்னு பேசி்க்கிட்டு இருக்கேன் உனக்கு அதுல எல்லாம் இன்டர்ஸ்ட் இல்லையா?" என்று அவள் எப்போதும் போல மளமளவென வாயாட ஆரம்பிக்க...

எனக்கோ அப்போது தான் என் கடந்த கால நான் ஏறக்குறைய இப்படி தான் இருந்தேன் என்பது தோன்றியது....

அவனை நான் சந்திக்காமல் இருந்தால் இப்போதும் அப்படித்தான் இருந்திருப்பேன் என்பது என் மூளைக்கு தோன்றியது.

"ஏன் இல்லை... நான் அதெல்லாம் நல்லா சைட் அடிப்பேன் but என்ன எனக்கு பிடிக்கிறவங்க ஒண்ணு கேட்டவங்களை இருக்காங்க இல்ல அவங்களுக்கு வேற யாரையும் பிடிச்சிடுது " என்று நான் கூற அவளோ சற்று யோசித்து விட்டு..

"அப்போ நீ இன்னைக்கு சொன்ன உன் ஆளு கெட்டவன் லிஸ்டா? இல்ல அவனுக்கு வேற யாரையும் பிடிச்சி இருக்குற லிஸ்டா?" என்று அவள் கேட்க்க நானோ சிறிது நேரம் யோசித்து விட்டு...

"ரெண்டுலயும் கொஞ்சம் வச்சிகவேன்" என்று கூற

அவளோ முகத்தை சுருக்கிக்கொண்டு மூச்சை இழுத்தவாறு "கஷ்டம் கஷ்டம்" என்று கூறியவாறு ஒரு கஃபேக்குள் இழுத்து சென்றாள்

நாங்கள் இருவரும் ஓரமாக ஒரு கண்ணாடி சுவற்றின் அருகில் அமர; நானோ வெளியே கட்டிடங்களையும் கார்களை வேடிக்கை பார்க்க அவளோ அருகில் யாரையோ தேடினால்,

"யாசீ...யாசீ...இங்க பாரு?" மெதுவாக கூற

நான் திரும்பி பார்க்க அங்கோ கண்களை திரும்பி பார்கவைக்கும் அளவிற்க்கு ஒருவன் ஆனால் அவன் முகத்தில் தான் புன்னகையின் முகவரி கூட தென்படாத அளவிற்க்கு ஒரு இறுக்கம்...

நான் அவனை பார்த்துவிட்டு என் தோழியிடம் பேச திரும்பிய இடத்திலோ அவளை காணவில்லை,

வேறு திசையிலிருந்து அவள் குரல் வரவே நான் திரும்பி பார்க்கவும் சரியாக இருந்தது,

"திரும்பவும் நீயா? நான் தான் அன்னைக்கே என் கிட்ட இந்த லவ்வு கிவ்வுனுலாம் வந்து நிக்காதே எனக்கு டைம் இல்லன்னு சொன்னேன்ல...திரும்ப ஏன் வந்தே?" என்று அவன் கேட்க

அவள் முகத்தில் இருந்த புன்னகையோ கொஞ்சமும் குறையவில்லை,

"இல்ல இன்னக்கி நான் நம்ம friends அ இருக்கலாமான்னு கேக்க வந்து இருக்கேன்" என்று அவள் கூற

அவனோ அவளை தலையில் அடிபட்டு மூளை கலங்கிய ஆளை பார்ப்பதுபோல் அவளை பார்க்க..

அவளோ எதற்கு அசராமல் இன்னும் பல்லை காட்டியவாறு...

"atleast ஒரு hi bye சொல்ற அளவுக்கு..."என்று அவள் முடிப்பதற்குள்

அவன் இதை திருத்த முடியாது என்பது போல் தலையை ஆட்டிவிட்டு வேறு புறம் செல்ல,

"atleast நான் வேணுன்னா உன் வேலைக்கு ஹெல்ப் பண்றனே table cleaning food serving...."என்று அவன் பின்னால் சத்தம் போட

அவனோ காதில் விழங்காதது போல் உள்ளே சென்று என்று விட அவளோ ஒரு குலம்பிப்போன முகத்துடன் என் எதிரில் வந்து அமர்ந்தவாறு,

"இவனுக்கு என்ன பிரச்சனை...நான் பாக்க நல்லா தானே இருக்கேன் எதுக்கு இப்படி ஓடி ஓடி போறான்"

என்று என்னை பார்த்து கேட்ட போது நான் சிரித்து விட கூடாது என்று முயன்று கொண்டிருந்தேன்...

"ஹேய்...நீ எதுக்கு இப்போ சிரிக்கிற?...அவன்தான் வந்த லக்க use பண்ணிக்காம பாக்காம போரான்ன நீ வேற" என்று கூறியவாறு அவள் அருகில் இருக்கும் காப்பியை எடுத்து குடிக்க ஆரம்பிக்க,

"உண்மையிலேயே லவ் பண்ணுரியா?" என்று சிரிப்பை விழுங்கி விட்டு கேட்க்க,

"ப்ச்...இல்ல அன்னைக்கு நான் அவன் கிட்ட என்னென்னவோ பண்ணி பேச ட்ரை பண்ணா என்னை கவனிக்கவே இல்லை இதே மாதரி தான் எழுந்து நடக்க ஆரம்பிச்சிட்டான் so அவன நிக்க விக்கிறதுக்கங்க ஒரு பிட்ட போட்டேன்.....அவனும் first shock ல நின்னுட்டான்....எப்படியோ நான் நெனச்சது நடந்துடுகிச்சுல..." என்று அவள் கூற

டீயை குடித்துகொண்டிருந்த எனக்கோ புறை என்ற ஆர்பித்து விட்டது,

"fraud...fraud...ஏண்டி இந்த மாதிரி எல்லாம் பன்னரா அந்த பையனுக்கு உண்ண புடிக்க ஆரபிச்சுட்டா என்னடி பண்ணுவ" என்று நான் அவளை கண்ணடிக்க அவளோ அசால்டாக...

"அப்படியே அவனுக்கு என்ன புடிச்சிட கிடுச்சிட போகுது" என்று அவள் தனக்கு முனகிக் கொண்டிருக்க

அது பாதி கேட்டுக் கொண்டு என் வலது புறம் திரும்ப ஏதோ பழக்கப்பட்டது என் கண்ணில் பட நாம் வெடுக்கென்று அந்த திசையில் பார்க்க

என் கண்களை என்னாலே நம்ப முடியவில்லை எனவே கண்ணை கசக்கிவிட்டு மீண்டும் அங்கு பார்க்க அப்போதும் அவன் மறையவில்லை அங்கே தான் நிர்க்கிறான்...

அவன் அப்போது அவன் காரிலிருந்து இறங்கி அருகில் நின்ற ஒருவரோடு பேசிரவாறு எப்படியும் 30 தளங்கள் இருக்கும் அந்த எதிர் buildingகை நோக்கி அவன் நடப்பதை கண்டேன்...

"யாசீ...yaaseeeeeee...."என்று என் தோழியின் குரல் என்னை எழுப்ப...

"அங்க என்ன பாதுகுட்டு இருக்க?" என்று அவள் கேட்க்க நானோ என் விரலை நீட்டி அவன் நிற்கும் அங்கு அருக்கில் இருப்பவனிடம் பேசிக்கொண்டு- இல்லை கிட்ட தட்ட கட்டளையிட்டுக் கொண்டு இருக்கும் அவனை காட்ட...

"ஒஹ்ஹ்ஹ...அவனா... நல்லாதான் இருக்குறான் but அவன் இதுக்கெல்லாம் செட் ஆக மாட்டான்" என்று அவள் கூற

எனக்கு அவள் கூறியதில் சில கேள்விகள் இருக்க அதில் முதலில் வெளியே வந்தது,

"ஏன் செட்டாக மாட்டான்?" என்று நான் கேட்க்க அவளோ சலித்து கொண்டு,

"ஏன் அக்கா அங்க தான் வேலை பாக்கிறா அவன் தான் G.T.& groups ஓட vice chairman slash managing director அதோட அவன் அந்த கம்பெனியோட chairman gabriel thomas ஓட friend னு சொல்லிக்கிறாங்க...நான் இது வரைக்கும் mr.G face கூட பார்தில்லை...but do you know he is number one eligible batchelor india-" என்று அவள் அவனை விட்டு வேறு ஒருவன் தலைப்பிற்கு செல்ல நானோ இடையில் நுழைந்து,

"உனக்கு எப்படி அவனை பற்றி நிறைய தெரியுது?" என்று அவன் நின்ற இடத்தின் புறம் தலையை திருப்பி கூற,

"அதுவா... என் அக்காவால தான்...அவனோட அசிஸ்டெண்ட்ல ஒருதியா வேலை பாற்குறா தினமும் வீட்டுல இவன் புராணம் தான் ஓடுது ஒரே சிடு மூஞ்சி ராட்சன், ரத்த வெறி பிடிச்ச காட்டேரி, நரகத்துல இருந்து பூமிக்கு வந்த அரக்கன்னு...அப்பப்பப்பா" என்று அவள் கூற,

"ஏன் அவன் அவ்ளோ மோசமா?" என்று நான் என் மனதில் உதித்த கேள்வியை அவனை மீண்டும் பார்த்தவாறே கேட்க்க,

அவளோ மீண்டும் அவனை பார்த்துவிட்டு

"இல்ல அப்டின்னு சொல்லிட முடியாது அவளே அப்பப்ப

'கோபமா இருந்தாலும் அழகுக்கு மட்டும் குறையில்லை'

'எதுக்கு அழகா இருக்கவங்களுக்கு எல்லாம் இவ்வளவு திமிரு'

'இந்த face அ பாத்துட்டு எப்படி என்னால ஒழுங்கா concentrate பண்ண முடியும்னு எல்லாம் சொல்லி இருக்கா..."

என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன்னால்....

நான் அதிர்ச்சியில் அவள் முகத்தை பார்த்து "உன் அக்காக்கு அவனை புடிக்குமா?" என்று கேட்க்க

அவளோ என்னை வித்தியாசமாய் பார்த்துவிட்டு என் தலையை அவனை பார்ப்பதுபோல் திருப்பி

"அங்க பாரு அந்த face அ யாருக்கு தான் பிடிக்காதுன்னு நினைக்கிற...(அதுவும் சரிதான்) என் அக்கா அவனுக்கு வந்த proposal ல இருந்து flirt வரைக்கும் எல்லாத்தையும் சொல்லி சிரிசிக்கிட்டு இருப்பா...(இது வேறயா?) என்ன தான் அவனை பார்த்தால் ஒரு danger aura form ஆனாலும் பொண்ணுங்க அவங்க வேலையை மிஸ் பண்ணாம பாக்குரங்க... (அய்யோ இவனுக்குமா fan following இருக்கு?).....பத்தாததுக்கு அவன் கொஞ்ச player type னு கூட கேள்--"(what...What...What...???)

"என்னா?" அவள் முடிப்பதற்குள் நான் உணர்ச்சி வசப்பட்டு கத்திவிட

அவளோ முதலில் சுற்றியிலும் பார்த்துவிட்டு என்னை பார்த்து விட்டு....

"ஆமா ஒவ்வொரு பார்ட்டிக்கும் புது புது பொண்ணுகளோட போட்டோக்கு போஸ் கொடுத்தால் வேற-wait a minute... நீ இப்படி எல்லாம் ரியாக்ட் பண்ண மாட்டியே? நீ எதுக்கு அவன் மேல் இண்ட்ரஸ்ட் காமிக்கிற... நீதான்..." என்றதோடு பேசுவதை நிறுத்தி விட்டு

'இவன்தான் அவன்னு சொல்லிடாதே'

என்பது போல் என்னை பார்க்க...நானோ குரலை சரி செய்து விட்டு...

"அவன் தான் இவன்"

"சொல்லிட்டா சொல்லிட்டா சொல்லிட்டா" என்று தலை முன்னிருந்த டேபிளில் முட்டிக்கொண்டாள்...

-----------

"இவன் கிட்ட போய் எப்படி டி மாட்னா--இல்லை correct ஆன question இவன் எப்படி உன் கிட்ட மாட்டினான்? Facebook crusha? போட்டோல பார்த்து லவ் பண்ணுரியா? இல்ல கண்ட உடன் காதலா? Wait a minute இவன்தான் அந்த கல்யாணமாயி டிவோரேஸ் ஆன வில்லன் ex husband அ?...." என்று அவள் ஏகப்பட்ட கேள்வியை ஒரே நேரத்தில் கேட்க்க

நானோ என் கையை அவள் முகத்திற்கு முன் காட்டி நிறுத்தி விட்டு,

"ஸ்டாப்...என் கிட்ட எதுவும் கேக்காத நான் அவன இப்போ பாக்கணும் அதுக்கு ஒரு வழி சொல்லு" என்று நான் கேட்க்க உறைந்து நின்ற அவளோ சற்று நேரம் கழித்து...

"எப்படி டி? இப்பதான் பால்குடி மாறாத பச்சை புள்ள மாதிரி பேசுனே அதுக்குள்ள..." என்று நோந்து கொண்டவள்,

"harry..." என்று நான் அவளை மீண்டும் அழைக்க

அவளோ "இரு மாட்டேன்னு சொன்ன ஒடனே மட்டும் என்ன விட்டுடவா போற இரு வர்றேன்.... அய்யோ my sweetheart வேற எங்க போனான்னு தெரியலையே ஆளையே காணோம்" என்று அவள் சுற்றிலும் பார்த்து கொண்டு தயக்கமாக எழ...

நானோ அவள் கையை பிடித்து இழுத்து கொண்டு "அவன் இந்நேரம் உன் தொல்லை தாங்க முடியாம வேலையை விட்டு போய் இருப்பான்" என்று கூறிக் கொண்டே அங்கிருந்து வெளியேறியந்த கட்டிடத்தை நோக்கி நடக்க,

"இப்படியெல்லாம் அபசகுணமா பேசுனா அப்பறம் உண்ண விட்டுட்டு நான் மட்டும் road cross பண்ணிடுவேன் அப்பறம் நீ இங்கேயே நிக்க வேண்டியதுதான் உனக்கு அந்த hot monster கிடையாது" என்று என் பலகீனம் தெரிந்து அவள் என் கையை உதறி விட,

நானோ அவள் கையை மீண்டும் பிடித்து கொண்டு "சும்மா சும்மா சொன்னேன் harry நீ உன் sweetheart கல்யாணம் பண்ணி 19 தடவ ஹனிமூன் போய் 10 குழந்தைக பெத்துப்பீங்க okya?" என்று கூற

அவளோ என்னை திரும்பி பார்த்துவிட்டு "உன் கணக்கே சரி இல்லையே" என்று அவள் கூற

நானோ கண்களை சுருக்கி கொண்டு "ஆமா நான் கணக்குல கொஞ்ச--" என்று நான் சொல்வதற்கு முன்னாள்

அவளோ " எனக்கு 19 ஹனிமூன்க்கு குறைஞ்சது 25 குழந்தையாவது வேணாமா?" என்று கேட்க்க

நானோ அங்கு அவளை முறைத்தவாறு "seriously harry நீ 25...ஏன் தனியா ஸ்கூல் கட்டி நடத்த போறியா" என்று நான் ஒரு நொடி என் நோக்கத்தை மறந்து அவளிடம் கேட்க்க...

"இல்ல அந்தமான் நிகோபார்ல ஐலான்டு் வாங்கி புது கவர்மண்ட் நடத்த போறேன்" என்று அவள் கூற

நான் பதிலுக்கு அவளிடம் இன்னும் மோசமான காரணம் சொல்வதற்கு முன்னாள் அவள் கையயை தூக்கி என்னை நிறுத்த சொல்லிவிட்டு என் முன்னால் இருப்பதை கையை விரித்து காட்ட அப்போது தான் நான் அந்த கட்டிடட்துற்குள் வந்து நிற்பதை உணர்ந்தேன்....

என் முன்னிருக்கும் சுற்றுப்புறமோ பலதரப்பட்ட பழுப்பு நிறங்களும் வெள்ளையும் கண்ணாடிகளுமாக கண்முன் பளபளக்க என்காலடி பட்டு இடம் கறைபடிந்தால் என்னை யாரும் ஏசிவிடுவார்களோ என்று அஞ்சும் அளவிற்க்கு தரை மினுமினுத்தது,

அங்கு என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்த என்னை ஏசியில் இருந்து வரும் குளிர்காற்று சிலிர்க்க வைத்தது...

என் கண்முன்னோ ஒரு முடி கூட இடம் மாறாமல் உடையில் ஒரு சுருக்கம் இல்லாமல் முகம் வரைந்து வைத்ததா என்று நினைக்கும் அளவிற்க்கு ஒரு சறுக்கலும் இல்லாத பொம்மைகள் போல் பெண்கள் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருக்க எனக்கோ நான் வேற்று கிரகத்திலிருந்து வந்த அகோரமான ஏலியன் போல் ஒரு உணர்வு அடிவைற்றிலிருந்து ஆரம்பித்தது...

'தினமும் இவங்கள எல்லாம் பார்த்துட்டு தானே அவன் என்னை பார்க்குறான் அப்ப எப்படி என்னை பிடிக்கும்' என் மணப்பேய் என்னை பிய்க்க தொடங்கியது,

"so... இப்ப நம்ம என்ன பண்ண போறோம்" என்று நான் பதற்றத்துடன் மெல்லிய குரலில் கேட்க்க.

"no idea" என்பது தான் அவளின் பதில்....

-------------

"so 30th floor ல தான் அவன் office இருக்குன்குற" நான் அவளை பார்த்து கேட்க்க,

அவள் என்னை பாராமல் நேராய் இருக்கும் லிஃப்டை பார்த்தவாறு தலையை ஆட்ட...

நானோ பெருமூச்சுடன் என் தலை தொங்க போட்டு கொண்டு நெற்றியை தேய்த்து கொண்டு "அதோட இங்க இருந்து லிப்ட் குள்ள போறதுக்கே id கார்ட் இல்லாம போக முடியாது?" என்று முன்னிருப்பவர் id கார்டை மெஷினில் காட்டி பச்சை விளக்கு எரிய அவர் உள்ளே செல்ல நான் அதை பார்த்தவாறு கூற....

"நான் அவன பாக்காம போறதா இல்லை" என்று நான் கூற,

அவளோ என்னை எரிக்கும் அளவிற்க்கு ஒரு பார்வையை விட நானோ முன்னாள் நடக்க ஆரம்பித்தேன் அவளோ என் கையை பிடித்துக்கொண்டு "நில்லு எங்க போற" என்று கேட்க்க,

"30th floor" என்று நான் கூற

அவளோ "எப்படி" என்க,

"எப்படினா?... ஸ்டெப்ஸ்ல தான்" என்று நான் அவளிடம் பாலின் நிறம் வெள்ளை என்று கூறும் தோணியில் கூற,

அவளோ கோபத்துடன் "are you mad? அங்க நீ போய் சேருறதுக்கு முன்னால ஒரேடியா போய் சேர்ந்துடுவ" என்று அவள் கூற நானோ விடா பிடியாக,

'அவனை நேராய் பார்த்து ஒரு வாரம் ஆகுது'

"எனக்கு அவன பாக்கணும்" என்று மீண்டும் அதையே கூற....

அவளோ முதலில் பல்லை கடித்த வாறு என்னை கண்டவள் பிறகு,

"இங்க பாரு யாருக்காவது உன் மேலே சந்தேகம் வந்தாலே வாட்ச் மேன கூப்பிட்டு உன்னை வெளிய தள்ளிடுவங்க இதுல நீ மேலே போற---"என்று அத்துடன் உறைந்து நின்றவள்,

"கொஞ்சம் இங்கேயே இரு"என்றவள்

கைபேசியை எடுத்து கொண்டு பேச சென்றாள்,

வந்தவுடன் என்னை அங்கிருந்த ஓய்வு அறைக்கு அழைத்து சென்று என் தலையில் இருந்த ஷாலை கழட்ட சொல்ல

நானோ என்ன என்று கேட்க்க அவள் அதை காதில் வாங்காமல் தலையில் வைத்திருந்த பின்னை எடுத்தவாறு,

"நல்லவேளை இங்க முஸ்லிம் staffsக்கு ஹிஜாப் allowed இல்லன்னா உன்னை ஒடனே கண்டு பிடிச்சிடுவங்க" என்றவாறு tissue பேப்பரால் என் முகத்தை துடைத்து விட்டு அவள் பையில் இருந்த காஜல் மற்றும் லிப்ஸ்டிக்கை கையில் எடுத்து என் முகத்தில் வரைந்து விட்டு மீண்டும் என் ஷாலை அவளே பின் செய்து விட்டு

"perfect"என்றவாறு அவளும் முகத்தில் வரைய ஆரம்பித்தாள்...

"என்ன பண்ணற" என்று நான் கேட்டதற்க்கு பதில் கூறாமல்

என்னை வெளியே இழுத்து சென்றவள் "இங்க தான் என் அக்கா வேலை செய்கிறாள் என்று சொன்னேள்ள" என்றவாறு நாங்கள் நேராக செல்ல

எங்கள் முன்னால் கண்ணில் குழப்பத்துடன் நிற்பதோ கிட்ட தட்ட அவளை போன்ற தோற்றம் கொண்ட அவளின் அக்கா...

"நான் உனக்கு சிக்னேல் கொடுக்கும் போது first நீ போ பின்னால நான் வர்றேன 1st floorla வெய்ட் பாண்ணு" என்று அவள் கூற

முதலில் எனக்கோ ஒன்று புரியவில்லை ஆனால் பிறகு அவள் அக்காவிடம் பேசிக்கொண்டு இருக்கையில் அவளுக்கு தெரியாமல் அவள் பாக்கெட்டில் கைவிட்டு அவளின் கார்டை எடுத்து என் கையி திணித்த போது தான் எனக்கு புரிந்தது...

நான் அவள் கூறியதுபோல் முதலில் லிஃட்டில் ஏறி முதல் மாடியில் காத்திருக்க

தோழியும் தோன்றினால் "எப்படி வந்த அக்கா என்னனு கேக்கலையா?" என்று நான் கேட்க்க

அவளோ ஒருபக்க சிரிப்புடன் "இல்ல அக்காவோட id card அ காணமாம் அததேடிக்கிட்டு இருந்ததால என்னை கவனிக்கல" என்று அவள் கூற,

"ச்சோ பாவம் harry நம்ம வேணுன்னா அவங்க கிட்ட கொடுத்துடலாம்" என்று நான் கூற

அவள் என்னை பார்த்து நீ ஒரு முழு லூசு என்பதுபோல பார்வையை வீசிவிட்டு

"கொடுத்துட்டு அப்பறம் என்னால 30 floor எல்லாம் ஏற முடியாது" என்றதோடு லிஃட்டிற்குள் ஏறினோம்...

"ஒரு வேலை நிறைய தப்பு பண்ணுறோமோ" என்று நான் கூறியதற்கு முறைத்தவள்

பிறகு நான் "இருந்தாலும் இதுவும் த்ரில்லா தான் இருக்கு" என்று நான் அவளிடம் கூற

என்னை புறம் திரும்பி "and that why you're my best friend" என்று தோளில் கைபோட்டுக் கொண்டு அவள் கூறி முடிப்பதற்கு லிஃட்டின் கதவு திறந்தது

நாங்கள் 30 வது மாடியை வந்தடைந்தோம்.

"ஓகே உன் முகத்துல இருந்து முதல்ல அந்த ஸ்டுபிடிட்டிய அழிச்சிட்டு professional மாதிரி முகத்த வச்சிக்கோ" என்று அவள் என்னிடம் கூற

நானும் கீழே இருந்த பெண்களை போல ஒரு பிளாஸ்டிக் புன்னகையை முகத்தில் மாட்டிக்கொண்டு முன் நடந்தேன்....

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro