இதயத்தை ஏதோ ஒன்று -2
இது ஒரு கனவு நிலை கலைத்திட விரும்ப வில்லை கனவுக்குள் கனவாய் என்னை நானே கண்டேனே...
லிரிக்: தாமரை.
அன்று நேரம் 10 மணி இருக்கும்,
நேற்று கூறியதுபோல் இன்றும் என் கணவன் மதிய உணவிற்கு வீட்டிற்க்கு வர போவதில்லை என்ற அந்த தகவலை சொல்லிவிட்டு வேலைக்கு சென்றுவிட்டான்,
நான் என் திருமண வாழ்கையை பற்றி வியந்தவளாக பால்கனியில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தேன்,
கடந்த வாரங்களில் ஊரில் சொந்தங்களுடன் இருந்ததால் ஒன்று தெரியவில்லை,
ஆனால் இப்போது தனியாக வீட்டிற்குள் யாரும் இல்லாமல் இருப்பது வெறுமையாக உள்ளது,
நானும் நேற்றே வீட்டில் உள்ள மூலை முடுக்கை எல்லாம் சுத்தம் செய்துவிட்டேன் இனி செய்வதற்கு எதுவும் இல்லை,
எவ்வளவு நேரம் தான் தொலைக்காட்சிக்குள் தலையை விட்ட வாறு இருப்பது,
தோழிகளும் அவரவர்கள் கணவர் குழந்தை வேலைகள் என பரபரப்பாக இருக்க அவர்களை தொந்தரவு செய்யவும் எனக்கு மனமில்லை,
தோழியின் குழந்தையை பாக்க ஆசையாக இருந்தாலும் அங்கு அவளை போய் விடுவதற்கு ஆளில்லை-
என்று அவள் எண்ணத்திற்கிடையில் அவள் கைபேசி் ஒலிக்க அவள் அதை எடுத்து காதிலே வைத்து
"ஹல்-" என்று அவள் முடிப்பதற்குள்,
"யாசின் எப்படி இருக்க? எங்க இருக்க? நீ இங்க பெங்களூர் வந்துட்டேன்னு சொன்னங்க? ஒரு கால் பண்ண மாட்டியா? கல்யாணம் முடிஞ்ச உடனே friends எல்லாம் அவ்ளோவு தானா?" என்று அவள் தோழி அவள் முதல் வார்த்தை பேசி முடிக்கும் முன் அவள் மூச்சு விடாமல் பேச,
அவள் ஒரு பெருமூச்சுடன்,
"பேசி முடிச்சிட்டியா? நேத்து தான் ஊருக்கு வந்து சேர்த்தேன், நீ வேற குழந்த husband னு busya இருப்ப எதுக்கு disturb பண்ணனுதான்"
"லூசு அதுதான் இப்போ அம்மா azee அண்ணா கூட தானே வந்தாங்க, இப்ப அத்த வேற பேரனை பாக்குறதுக்கு இங்க வந்துடாங்க, இப்பல்லாம் அவனை என் கைல feed பண்ண மட்டும் தான் தர்றாங்க நான் வெட்டியா தான் இருக்கேன்"
அவள் வழக்கம் போல் புராணத்தை ஆரம்பிக்க,
எனக்கு இதலோரம் புன்னகை வந்தது,
Farah எப்போது அழைத்தாலும் கணவனையும் குழந்தையையும் பற்றி ஏதாவது குறை கூறவில்லை என்றால் அவளுக்கு அந்த நாள் ஓடாது,
ஆனால் அவளின் பாசத்தின் வெளிப்பாடு இப்படி தான் இருக்கும் என்பதை இப்போது தான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்,
"அப்பா மாதிரி கண்ணுவச்சிருக்கன் பாரு" "அப்பா மாதிரியே பிடிவாதம்" "அப்பவும் மகனும் சேர்த்து என்ன கொள்ளுரங்கன்னு" ஏதாவது சொல்லுவாள் ,
ஆனால் அவர்கள் மீது அவள் அளவில்லாமல் பாசம் வைத்திருப்பது அவளை பார்த்த எல்லோருக்கும் தெரியும்,
"ok குழந்தய அம்மா பாத்துகுறாங்க, உன் டெவில் எங்க போயிட்டாரு?" அவள் கணவனை எப்போது அழைக்கும் பெயர் அதுதான்,
நான் கனவில் கூட இவர்கள் இருவரும் திருமணம் ஆகி இருக்கும் என்பதை யூகிக்கவில்லை,
இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீண்டு வரவில்லை,
"எல்லாம் அந்த devi- வெய்ட் ok இப்போ கதவை தெர" என அவள் பாதியில் நிறுத்த,
அவள் குழப்பத்தில் "ஹஹ்?" என்க அதே சமயத்தில் அவள் காலிங் பெல் அடித்தது,
"farah?"
"நான் தான் அது கதவை ஓபன் பண்ணு" என்றாள்
நான் மடமட வென வாசலுக்கு போய் பார்க்க,
அங்கு அவளோ பெரிய புன்னகையுடன் கையில் ஒரு பைலை வைத்து கொண்டு நிற்கிறாள்,
நான் அவளுக்கு பின்னால் யாரும் இருக்கிறாரா என்று பார்த்துவிட்டு,
"யார் கூட வந்தே வெளில யாரையும் காணோம்" என்று அவள் சொல்லும் தருணத்தில் அவள் லிவிங் ஏரியவிற்குள் வந்து நின்றபடி,
"அது தான் இன்னொரு good news, officially i got my lisence" என்று அவள் பற்கள் முப்பத்திரண்டும் தெரியும் அளவிற்க்கு புன்னகைக்க என்னை அறியாமல் எனக்கே புன்னகை வந்தது,
"really?..." என்று அவளும் குஷியாக,
பிறகு அவள் சொன்ன வாக்கியம் மனதை திரும்பவும் ரீவைண்ட் ஆக அந்த சிரிப்பு குலப்பமானது,
"இன்னொரு good news னா? அப்ப first one என்ன?" என்று கேட்க,
அவள் இதழ்களை மூடி சிரித்தவாறு, 'first one நீயும் fazi யம் என் கூட காலேஜ் வர போறீங்க" என்று சிறு பதற்றத்துடன் சொன்ன அவள் அத்துடன் நிற்காமல்,
"ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் யாஸீன் மாட்டேன்னு சொல்லாதே நான் azee அண்ணன் கிட்ட கூட கேட்டுட்டேன் அவரு ok னு சொல்லிட்டாரு, நா உனக்கு வேர எல்லாம் ரெடி பண்ணிடென்" என்று அவள் அந்த கண்களில் நட்சத்திரம் மின்னுவது போல் வைத்துக் கொண்டு அவள் கெஞ்ச அவளுக்கு இல்லை என்று சொல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில் நான் ஆகி விட்டேன்,
"but நான் இதை பற்றி இன்னும் எதுவும் யோசிக்கவே இல்லையே இன்ன கோர்ஸ் பண்றது and all that... அப்புறம் முக்கியமா என்னோட செர்ட்டிபிகேட்ஸ் அதெல்லாம் ஊர்லள்ள இருக்கு" என்று நான் காரணம் தேட,
அவளோ வைத்திருந்த பைலை என் கையில் தந்து, " உன் செர்ட்டிபிகேட்ஸ்...இப்ப என்ன கோர்ஸ் பண்ணனுன்னு முடிவு பண்ணு" என்றால் அது இலேசானது போல,
நான் என் கணவன் சொல்லும் வரை மேற்படிப்பு என்று ஒன்றுள்ளதையே உணராமல் இருந்தேன்,
அவன் சொல்லியதை பார்த்தால் நானும் படித்து முடித்தால்தான் இந்த உலகில் ஏதோ ஒரு வகையில் பிழைக்க முடியும் போல் இருக்கிறது....
அவனை பற்றி ஒரு முறை சிந்தித்த குற்றத்திற்காக அவன் எண்ணங்களால் என் மனது சூழப்பட்டது,
அதை பற்றி யோசிக்க கூடாது என நினைத்திருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் என் நினைவுகளை ஆட்க்கொள்கிறான் அவன்,
"எனக்கு பெட் share பண்ணுறது பிடிக்காது பக்கத்துல சோபா இருக்கு நீ அங்க தூங்கிக்கோ"
"அங்க அம்மா கேப்பாங்கன்னு உண்ண உள்ள தூங்க விட்டேன் இப்பதான் extra ரூம் இருக்கே நீ அங்க தங்கிக்கொ"
"இல்ல நீ எனக்காக எதுவும் செய்ய தேவ இல்ல let me do my things"
"Don't touch my things"
"I will clean my room for my self"
'அவனபத்தி யோசிக்காதே....அவன யோசிக்காத... யாஸீன் வேற ஏதாச்சும்-'
என்று எனக்கு நானே அறிவுரை கூறி கொண்டிருந்த என்னை என் தோழியின் குரல் வெளியே இழுத்தது,
"ஏதாச்சும் சொல்லு யாசீ..." என்று அவள் குழந்தை போல் சிணுங்க,
நானும் இப்போது நடப்பதை பார்த்தால் இதுவும் நான் கைபிடித்தவனின் திட்டகளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்று நினைத்த வாறு அவளிட தலையை ஆட்டி வைத்தேன்,எதுவும்
அவளுக்கு கொல்லை சந்தோஷம், என் கையை பிடித்தவாறு வீட்டிற்குள் வட்டம் போட ஆரம்பித்து விட்டாள்,
" thanks thanks thanks thank you so much, i love you" என்று சொல்லியவாறு அவள் என் கன்னத்தில் முத்தமிட நானோ சிரித்தவாறு கன்னத்தை துடைத்து கொண்டு,
" இதெல்லாம் உன் புருஷனோட நிப்பாடிக்க" என்று நான் பொய் எச்சரிக்கை இட அவளோ உதட்டை குவித்துக்கொண்டு,
"ஏன்டாச் செல்லம் என் brother வந்தப்பரம் என் kisses உனக்கு அழுத்து போடுச்சா ஹாஹ்?" என்று அவள் உதட்டை குவித்தபடி மீண்டும் உம் சத்தத்தோடு என்னருகில் வர நான் அங்கு சோபாவில் இருந்த காஷனை எடுத்து அவள் முகத்தில் எரிய முதலில் அதிர்ச்சியில் நின்ற அவள் பிறகு தெளிவாகி அவளும் இன்னொரு கேஷனை எடுத்து என்மேல் எரிய ஆரம்பித்தாள்....
சில நிமிடங்கள் கழித்து,
"you cheated on me with my brother yasee i feel used" என அவள் சோபாவின் ஒரு ஓரத்தில் போய் விழ,
"hey நீ தான் முதல்ல என் biggest crush ஓட affair வச்சிருந்து விட்டு நீ என்ன சொல்றியா?" என நான் நேர் முகத்தை வைக்க முயற்ச்சி செய்து பின்பு சிரித்து விட,
அந்த ஒரு நொடி அவள் முகம் கவலையில் சுருங்கி விட்டு என் சிரிப்பை பார்த்ததும் கோபத்துடன் என் மீது இன்னொரு தலை அணையை எடுத்து வீசியவாறு "எருமை" என்று முனங்க,
என்னால் சிரிப்பை கட்டு படுத்த முடியவில்லை, ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு நினைப்பில் இப்போதிருக்கும் அவள் கணவனை பிடித்திருப்பதை நான் வெளி படுத்தி விட்டேன் அதிலிருந்து எப்போது நான் இந்த தலைப்பில் அவளை சீண்டினாலும் உடனே கவிழ்ந்து விடுவாள்,
சரி அவள் கணவன் பார்ப்பதற்கு அழகன் இல்லை எந்தது யாராலும் சொல்லிவிட முடியாது,
அதற்காக அழகாய் இருப்பவர்களை எல்லாம் நான் காதலிக்கிறேன் என்று அவள் நினைத்தால் அவள் கணக்கு படி இப்போது எனக்கு குறைந்தது 50 காதலர்கள் இருக்க வேண்டும்,
அத்துடன் இந்த ஓட்டத்தில் ஏதோ ஒரு இடத்தில் எனக்கு விஷயம் தெரியும் முன்பே அவளுக்கு அவன் தான் சரியான ஜோடி என்று என்மூளையில் எங்கோ ஓரிடத்தில் பதிவாகிவிட்டது,
அதற்கு மேல் அவனை சகோதர வகையை தவிர வேறெந்த வகையிலும் என்னால் என்ன முடியவில்லை,
அதனால் தானோ என்னவோ அவள் முகத்தை பார்த்த பிறகு என்னால் சிரிப்பை என்னால் கட்டுபடித்த முடியவில்லை,
"இ--இன்னும் -நீ-நீ எனக்கு --ஹாஹ் ஹ--- for god shake I'm married now..Farah நீ மட்டும் உன் face அ அப்போ பார்த்து இருக்கணும்..ஹாஹ்ஹாஹ"
அவள் என் கிண்டலை பொறுக்க முடியாமல்,
"போதும்... போதும்...மூச்சு நின்னுக்க போகுது" என்று அவள் இந்த முறை சோகத்தில் உதட்டை குவித்து கொண்டு சற்று முறைத்தவாறு கூற,
"அடிப்பாவி அந்தாலு என்னன்னா vodofone puppy மாதிரி உன் பின்னாலேயே சுத்திக்கிட்டு இருக்காரு நீ என்னடான்னா இதுக்குல்லாம் அலட்டிக்கிற, கவலை படாத என்னால இன்னும் உன் brother அ லவ் பண்றதை நிறுத்த முடியல, you're safe" என் அவள் வழக்கம் போல் வார்த்தைகளை வாந்தி எடுக்க,
அவள் தோழியோ குழப்பத்தில் "லவ் பண்ணுறத நிறுத்த முடியுமா"என்று கேட்டால்
'அப்பாடா நம்ம slip up அ கவனிக்கல' என்ற வாறு அவள் தோழியின் முகத்தை பார்க்க அதில் சுருக்கங்கள் விழுந்திருக்க,
எனக்கோ அவள் மீது சற்று கவலை எழ, நான் அவளுக்கு என்ன பிரச்சனை என்று கேட்க தொடங்கும் சமயத்தில்,
"யாசின் நான் ரொம்ப குண்டா தெரியிரனா?" என்று அவள் சற்று பதற்றத்துடன் கேட்க்க,
"ஏன் அப்படி கேக்குற இப்போ?" என நான் ஒரு சந்தேகக்குறளுடனே கேட்டேன்,
"இல்ல இந்த டெவில் தான்....குழந்த பெத்துகிட்டதுல இருந்து ஒரு distance ஆவே இருக்கான், அதுக்காக பாக்காம பேசாமன்னு இல்ல நல்ல தான் பேசுறேன் but... but.."
என்று அவள் தன் சோகத்தில் மூழ்க ஆரம்பிப்பதற்கு முன்,
"என்ன but...லூசு நீ இப்ப தானே குழந்தை பெத்துட்டு இருக்க கொஞ்சம் நாள் உண்ண fayas கூட தனியா ஸ்பெண்ட் பண்ண வேடலான்னு நெனச்சு இருப்பான், சும்ம்மா எல்லாத்துக்கும் உன் குட்டி brain ன ஓவர் வொர்க் பான்னாதே, நீ என் எடத்துல இருந்து அவன் எப்படி உண்ண பார்க்கிரான்னு பார்த்து இருக்கணும்..." நான் சொல்லி முடிப்பதற்கு முன் அவள்,
"அதில்லை யாசீ fayas பிறந்ததுல இருந்து இதுவரை என்னோட அவன் தனியா பேசனதே இல்ல ஒண்ணு அவன் லேட்டா ஆகி வீட்டுக்கு வருவான் இல்லனா குழந்தையோட விளையாடிக் கொண்டு இருப்பான், என் கூட சரியா பேசுரதே இல்ல.."
என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் அவள் கைபேசி அடித்தது,
"fazil?...நான்...இல்லாடா ரொம்ப தூரம் எல்லாம் போகல, ம்ம்...traffic signs எல்லாம் பார்த்து தான் ஓட்டுரென், இல்ல ரொம்ப தூரம் எல்லாம் போகலடா...இல்ல...இல்ல drive பண்ணிட்டு பேசலடா...நான் இங்க azee அண்ணா அப்பார்ட்மெண்ட் வரைக்கும் வந்திருக்கேன், என்ன யாரு கூடவா? நீ தானே நா காலேஜ் போக ஒத்துகிட்டா தன்னால drive பண்ணலான்னு சொன்னேன், அதுக்கு...ஹே இதெல்லாம் ரொம்ப ஓவரு சொல்லிட்டேன்...மொதல்ல நீ phone அ cut பானு நான் வந்து பேசிக்கிறேன்"
என்று அவள் கணவனுடன் அவள் சடசடவென வெடிக்க நானோ அவளை 'இந்தால பற்றி தான் இவ்வளவு நேரம் பேசிக்கொண்டு இருந்தியா' கேட்க்கும் விதமாக அவளை பார்க்க அவளோ ஒரு அசட்டு சிரிப்போடு தலையை சொரிந்து விட்டு...
"இல்ல யாசீ"
"ஒன்னும் தேவையில்லை எனக்கு தெரியும் நீ இப்புடி ஒரு நிமிஷத்துக்கு ஒரு மைலுக்கு யோசிப்பேன்னு" என்று நான் அவள் பேசியதை மடக்கிவிட்டு,
"ok sister-in-law இப்ப உங்களுக்கு டீ வேணுமா coffee வேணுமான்னு சீக்கிரம் சொல்லுங்க இல்லனா எனக்கு இஞ்சி எலக்காலாம் போட்டு நசிச்சுன்னு ஒரு டீ குடிக்கணும் போல இருக்கு நானே செலக்ட் பண்ணிடுவேன், wait a minute உன்கிட்ட எதுக்கு கேக்குறேன்? நான் டீயை போடறேன் இருந்து குடிச்சிட்டு போ" என்று நான் பிதற்றிக்கொண்டு கிச்செனுக்குள் சென்றேன்,
அவளும் என் பின்னே வந்து நின்றவாறு, "சரி இஞ்சி எங்க?" என்று கேட்க,
"Fridge ல கிறீன் கலர் மூடி போட்டு boxல இருக்கும் பாரு... நல்லவேளை உன் அண்ணன் செம்மையா சமைக்கிறான் இல்லனா நான் அவ்ளோவ் தான், எனக்கு tea coffee ய தீவிர வேற ஒன்னும் பண்ண வராது,என் வீட்டுல எப்படி make up போடனுன்னு சொல்லி தந்தவங்க சமைக்க சொல்லி தராம போய்ட்டாங்க, நேத்து எனக்கு சேர்த்து அந்த yammy பிரேட் ஆம்லெட் பண்ணி கொடுன்னு சொன்னதுக்கு என்ன மொற மொறக்கிறான் தெரியுமா seriously farah எப்படி இவன இவ்ளோவ் நாள் புரிஞ்சிக்கிட்டியோ தெரியல, அந்த faceல எதுனா reaction வருதா பாரேன் எப்போ பாத்தாலும் மொறச்ச மேனிக்கமே இருக்கான்..." என்று என்பாட்டிற்கு அளறிக்கொண்டு போக என் தொழியோ சிரித்தபடி எனக்கு இஞ்சியை தட்டி கொண்டே,
"இதை நீ என் கிட்ட கேக்குற?..ஹஹ்ஹா...ok அது என்னோட brother எனக்கு அவன life long தெரியும், என்னால அவன ஓரளவுக்கு புரிஞ்சிக்க முடியும்னு வச்சிகலாம் but நீ அவன் கூட மிஞ்சி மிஞ்சி போன ஒரு மூணு நாள் இருந்து இருப்பியா? உனக்கு எதுக்கு அவன அவ்வளவு பிடிச்சது?"என்று அவள் கண்களில் சீண்டலும் உதட்டில் சிரிப்புமாக கேட்க்க,
என்னை மறுக்க விடாமல் அவள் மீண்டும்,
"இல்லன்னு மட்டும் சொல்லாதே கொன்னுடுவேன்,எனக்கு நல்ல தெரியும் அவன உனக்கு புடிக்கும்னு"
நானும் அவனை எதனால் பிடிக்க ஆரம்பித்தபிது என்று அலச, எனக்கு எதனால் என்று இன்றும் உறுதியாக தெரியவில்லை,
அவனை பார்த்த முதல் சந்திப்பில் பிடித்தது என்று சொல்லவே முடியாது, முதலில் அவனை பார்க்க என்னவோ வித்தியாசமாக இருந்தது
பிறகு நான் அவ்ளோ கெஞ்சியும் அவன் உதவி செய்ய மறுத்தது எனக்கு வெறுப்பாக இருந்தது ஆனால் எனக்கு வேறு வழி இல்லை நான் அங்கு வெறு ஒரு தமிழ் தெரிந்த ஆளை தேட வாய்ப்பு இல்லை,
பிறகு இருவரும் சென்ற பயணங்களில் அவன் பேசியது மிக குறைவு பேசியது எல்லாம் நான்தான், என்னதான் அப்போது அவன் உதவி எனக்கு தேவை பட்டாலும்
எனக்கு முதலில் அவன் மீது இருந்த நம்பிக்கையே மிக குறைவு, ஆனால் நேரம் போக போக அவன் வாயை பிராண்டாமல் என்னால் இருக்க முடியவில்லை,
முதலில் அவனிடம் அவன் ஊர் எது? பெற்றவர்கள் எங்கே? திருமணம் ஆகி விட்டதா என்று நான் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஒரே முறைப்பு மட்டும் தான் எனக்கு பதிலாக இருந்து, அன்று நான் ரயிலை தவற விட்டதற்கு அப்புறம் தான் அவன் உக்கிரம் ஆனான்,
ஏகப்பட்ட 'முட்டாலும்' ஏகப்பட்ட 'இப்படி உயிரை வாங்குற' கடந்த பிறகு ஓரளவுக்கு அமைதி ஆனான்,
அப்போது தப்பு என்னுடையது என்று நான் விளங்கி கொண்டதால் நான் வாயை திறக்கவில்லை,
ஆனால் அன்று hotel லில் ஒன்றாக தங்க வேண்டும் என்ற உடன் மீண்டும் என்னால் பேசாமல் இருக்க முடியவில்லை,
இந்த ஆள் யாரோ எவனோ இவனுடன் எப்படி நான் ஒன்றாக ஒரு இரவை செலவழிப்பது என்று பதற்றத்தில் பயத்திலும் மீண்டும் என் பிதற்றலை ஆரம்பித்து விட்டேன்,
அவனோ எதற்கும் பதில் சொல்லாமல் முறைக்கும் நிலைக்கு மீண்டும் வந்து விட்டான்,
ஆனால் எனக்கோ தூக்கம் வந்தது போல் இல்லை அவனையும் என் பேச்சு தூங்க விட்டது போல் இல்லை,
பிறகு ஒரு கட்டத்தில் கட்டிலில் இருந்து படக்கென்று எழுந்து அமர்தவன் என் வாயை மூடாவிட்டால் பலகேணி வழியாக வெளியே எரிந்து விடுவேன் என்று சொன்ன காரணத்தினால் வேறு வழியின்றி அமைதியானேன்....
ஒரு சிலநிமிடங்களுக்கு...
"ரிஸ் தூங்கிட்டியா" என்று மீண்டும் லேசாக குரல் எழுப்பிய உடன் மீண்டும் எழுந்து அமர்தவன் என்னை ஒரு களைத்த முகத்துடன் பார்த்து விட்டு சிறிது நேரம் அமைதியை இருந்தவன் பேச ஆரம்பித்தான்.
"இன்னக்கி கேரளாவில் நான் 3௦c project ஒண்ணா ok பண்ணனும் you know what c is? தமிழ் ல கோடினு சொல்லுவாங்க, உனக்கு அதுக்கு எத்தன zero வருநாவது தெரியுமா?" என்றவாறு அவன் குரல் உயர்தது பிறகு அதை கட்டுக்குள் கொண்டு வந்து விட்டு,
" அதுனால கூட இல்ல எங்க boss கேரளா ல மட்டும் தான் bussiness இன்னும் start பண்ணல, இந்த project ஓகே ஆனா என் boss ரொம்ப சந்தோஷ படுவாறு எனக்கு இக்ரிமெண்ட் கிடைக்கும்னு நா ரொம்ப சந்தோஷமா இருந்தேன், so அதே சந்தோஷத்தோடு என் assistant இருக்கான்ல நாளைக்கு நான் வேலையை விட்டு தூக்க போறனே same அசிஸ்டண்ட் என் கார check பண்ணி readyய வைக்க சொல்லிருந்தேன், அவன் அந்த வேலையை பண்ணல அதுனால நான் இங்கே பாதி வந்தப்பரம் தான் என் டியர்லா ஏர் கம்மியா இருக்குரத கவனிச்சேன் ஓகே பக்கத்துல எங்கேயாவது பாத்து சரி பண்ணிக்கலாம்னு நெனச்சிருந்தேன், ஆனால் அப்பறம் எவனோ கீழ போட்டு இருந்த பாதி பீர்போட்டில்ல சிக்கி டயர் fullலா போச்சி சரி அது போகட்டும்னு ஸ்டெப்மினிய மாத்தலாம்னு பாத்தா அதே பொறுப்பான அசிஸ்டண்ட் அதை கூட பாக்காம விட்டு இருக்கான் அவனுக்கு கால் பண்ண try பண்ணி அவன் phone அ எடுக்காம செம்ம கடுப்புல நான் என் கம்பெனி staff கிட்ட போனே பண்ணி கத்திக்கிட்டு இருந்தப்ப தான் ஒரு லூசு பொண்ணு வந்து என் மொபைலை ல கீழ தள்ளி விட்டு ஓடச்சிடுச்சு, இதுக்கு மேல என்னால யாரையும் contact பண்ண முடியாதது பத்தாதுன்னு அந்த லூசு பொண்ணு அட்ட மாதிரி என் கூடய ஒட்டிக்கிட்டு அவள நான் அவ ஊருக்கு போய் விட்டே ஆகணும்னு சொல்லுது, அதுகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுன்னு முடிவு பண்ணி அந்த தொல்லைய train ஏத்தி விட்டுட்டு நான் வந்த வழியே பாத்து போகலாம்னு போனேன் ஆனா அந்த இம்சை என்ன விடாம தோரத்தணும்னு முடிவு பண்ணி நானும் அது கூட வரணும்னு அழுது பாக்ரவன் எல்லாரும் என்னவோ நான் அவளை கர்பம் ஆக்கி ஏமாதிட்டு போன்ற மாதிரி பாக்குராகேனு நானும் தலை எழுத்துன்னு கூட போக சம்மதிசிச்சேன், ஆனால் இதுக்கு மேல சூழ்நிலை மோசமாக வாய்ப்பே இல்லன்னு நெனச்சது தப்புன்னு அந்த இம்சை திரும்பவும் எனக்கு நிரூபிச்சி இன்னும் என்ன தூங்க விடாம, என்ன சிடு மூஞ்சின்னு ஆரமிக்ச்சு, என ரேப்பிஸ்ட்டுன்னு முடிவு பண்ணி இப்ப என்ன உண்மையாவே கொலை காரண ஆக்க try பண்ணிக்கிட்டு இருக்கு அந்த லூசு....என் sutiuation ல இருந்தா..... நீ என்ன பண்ணுவே யாசீன்"
என்று அவன் பக்க கதையை அவன் அவிழ்த்து விட அதை கண்களை விரித்தவாறு கேட்டு கொண்டிருந்த எனக்கு என்ன சொவதென்றே புரியவில்லை,
"ம்ம்....ம்ம்ம்..." என்று நான் எச்சிலை விழுங்க அவன் புருவத்தை தூக்கியவாறு என்னை கேள்வியாய் பார்த்தான்,
எனக்கோ வாயிலிருந்து கடைசி வரை வார்த்தைகள் வரவில்லை கொட்டாவி தான் வந்தது, "எனக்கு...எனக்கு...தூக்கம் வருது" என்று என்று ஒரு சங்கட சிரிப்புடன், திரும்பவும் நான் தரையில் படுத்துக்கொண்டேன்,
அப்போதிருந்த சரியாக 15 வினாடிகளில் எனக்கொரு யோசனை வந்தது,
நான் பக்கென்று எழுந்து, "riz உன் meeting எப்பொன்னு சொன்ன?"
அவனோ அடிவயிற்றிளிருது ஒரு சீரொலியை எழுப்பிவிட்டு, "நாளைக்கு காலையில் 10 மணிக்கு இப்போ அதை தெரிஞ்சு எண்ணாகிட போகுது அது தான் என் phone போய்டுச்சு கார் போயிடுச்சு, அதோட சேர்த்து என் gps போயிடுச்சு..." என்று அவன் புலகிம்ப,
"அதுனால என்ன இப்போ உன் கிட்ட தான் பர்ஸூம் லெப்டோப்பும் இருக்கே, நம்ம old way யயே use பண்ணி அந்த இடத்துக்கு போகலாம்" என்று அவள் உற்சாகமாக சொல்ல அவனோ,
"and what am I supposed to understand from this conversation" என்று அவன் படுக்கையின் ஓரத்தில் உள்ள கட்டையில் தலையை முட்டிக்கொண்டு பேச,
"Simple....call a taxi-" என்ற என்னை மடக்கி "for that we required mobile" என்று அவன் கூற,
"ok then நம்ம பஸ்ல போலாம்" அதையும் மடக்கி,
"உனக்கு மலையாளம் வாசிக்க தெரியுமா? ஏன்னா எனக்கு சுத்தமா வாசிக்க தெரியாது"
பிறகு நான், "may be நம்ம யார் கிட்டயாவது கேட்டு-"
"உனக்கு மலையாளம் பேச தெரியுமா? ஏன் கேக்குரேன்ன எனக்கு அதுவும் தெரியாது" என்று அதற்கும் அவன் ஒன்றை சொல்ல,
"you know what? Give me the name of the place நம்ம நாளைக்கு உன் மீடிங்க முடிச்சிட்டு தான் ஊருக்கு போறோம்" என்று சொல்லிவிட்டு நான் கண்ணை முடியாதுதான் அடுத்த நாள் காலை 5 மணிக்கு அவன் தான் என்னை எழுப்பினான்,
"மீட்டிங் 10 மணிக்குனு சொன்னே?" என்று நான் குழப்பத்துடன் கேட்க்க,
"எப்படியும் இன்னொரு தடவை try பண்றதுன்னு முடிவு பண்ணியாச்சு இப்பவே தொழுதுட்டு கெளம்புனா தான் வழிகேட்டு போறதுக்கு சரியா வரும்" என்றவாறு அவன் கைக்கொடுக்க நானும் தலையை ஆட்டியவாறு எழுந்து நின்றேன்....
"ஏய் யசீன் பால் பொங்குது பாரு" என்று என்தோழி என்னை அழைக்க நான் மீண்டும் என் நினைவுகளில் இருந்து நிஜத்திற்குள் வந்து விழுந்தேன்....
A/N:please vote and comment your opinions....
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro