🕵27🕵
அன்று மாலை ஹிரணியுடைய குழந்தையை பார்க்கவென்று ஜெய்யின் குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனை சென்றிருந்தனர்.
அங்கே தாய், சேய் இருவரின் நலம் விசாரித்து, அகிலுடன் சற்று நேரம் கேலிப் பேசி கலகலத்து விட்டு அதே மனநிறைவுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினர்.
"அச்சோ... அந்த க்யூட் குட்டி எவ்வளவு அழகு இல்லை, தொட கூட தேவையில்லை பக்கத்தில் விரலை கொண்டு போனாலே சிவக்க ஆரம்பித்து விடுகிறது. அப்பா... என்ன சாப்ட் ஸ்கின்?" என்று வீட்டிற்கு வந்து வெகு நேரமாகியும் கன்னத்தில் கை வைத்தபடி சிலாகித்த மணியை கண்டு நகைத்தார் செண்பகம்.
"ஏய்... நீ முன்னே பின்னே குழந்தையையே பார்த்ததில்லையா இப்படி சிலிர்க்கிறாய்?"
"அய்யோ அத்தை... அக்கம்பக்கத்தில் பார்த்திருக்கிறேன் தான் ஆனால் இப்படி பிறந்த குழந்தையாக இல்லை, ஒரு சில மாதங்களாவது வளர்ந்த குழந்தையாக. இந்த குட்டிப்பாப்பா இருக்கிறாளே... ச்சோ... அவளை விட்டு வரவே எனக்கு மனம் வரவில்லை!" என்று மீண்டும் தான் கண்டு வந்த பட்டுக் குழந்தையின் நினைவில் களிப்புடன் மூழ்கினாள் மணிகர்னிகா.
"ம்ஹும்... இது சரிப்படாது இவளை நீ எப்படியோ சமாளித்துக் கொள்ளடா, நான் போய் தூங்குகிறேன். திலக் வேறு வீட்டிற்குள் வந்து நுழைந்தும் நுழையாததுமாக எனக்கு தூக்கம் வருகிறது என்று போய் படுத்து விட்டான்!" என்றபடி எழுந்து தன்னறைக்கு சென்றார்.
அதுவரை அறையில் ஏதோ ஒரு வேதனையோடு கேவிக் கேவி அழுதுக் கொண்டிருந்த திலக், செண்பகம் வரும் அரவம் கேட்டு வேகமாக கன்னங்களில் வழிந்த நீரை துடைத்து விட்டு திரும்பி படுத்து விழிகளை இறுக்க மூடி தூங்குவது போல் நடித்தான்.
அருகில் வந்தமர்ந்த செண்பகம் அவன் உறங்குவதாக நினைத்து தலையை மென்மையாக வருடி விட்டு மெல்ல தானும் படுத்துக் கொண்டார். எதிர்புறம் திரும்பியிருந்தவனின் விழிகள் மீண்டும் நீரைப் பொழிந்தது.
வெளியே கூடத்தில் அமர்ந்திருந்த ஜெய்சங்கரோ தன் மனைவியின் ஆனந்த நிலையை கண்டு பரவசமாகி தனக்குள் விஷமம் பூக்க ஓசையில்லாமல் அவளை நெருங்கினான். தன்னுலகில் மெய்மறந்து இருந்தவளின் ஆப்பிள் கன்னத்தை சட்டென்று கடித்து விட்டு வேகமாக எழுந்து தங்களறைக்கு ஓடினான்.
அவன் செயலால் உண்டான வலியில் ஆ... என்று அலறியபடி கன்னத்தை பிடித்தவள் மறுநொடி, "யூ... இடியட்!" என கூவி பொங்கியெழுந்த சினத்துடன் வேங்கையென அவனை தேடி உள்ளே விரைந்தாள்.
அவளின் வரவை எதிர்பார்த்து கதவின் மறைவில் தயாராக காத்திருந்தவன் புயலென உள்ளே நுழைந்தவளை சுதாரிக்க கூட இடமளிக்காமல் இழுத்து இதழோடு இதழாக சேர்த்தணைத்தான்.
அவனிடமிருந்து விலக வெகுவாக திமிறியவளை தனக்குள் அடக்கி சுவைத்தவன் மெல்ல மேலேறி கடித்த கன்னத்தை உதட்டால் ஒற்றியெடுத்தான்.
"சாரிடா மம்மூ..." என்று கொஞ்சியவனை, "ம்க்கும்... ஒன்றும் வேண்டாம், போடா!" என தள்ளி விட்டு சென்று கட்டிலில் அமர்ந்தாள்.
"எனக்கு எப்படி வலிக்கிறது தெரியுமா?" என்று உதட்டை பிதுக்கி கன்னத்தை தேய்த்துக் கொண்டு சிணுங்கியவளின் அருகில் சென்றமர்ந்து தன் கரங்களால் அவள் தோளை சுற்றி மாலையாக வளைத்துக் கொண்டான் ஜெய்.
"இட்ஸ்... ஜஸ்ட் ஃபார் ஃபன் டா செல்லம்!" என்று சமாதானம் பேசினான்.
'நம் மணியா அடங்குவாள்?'
"என்ன ஃபன்னா? இப்பொழுது நான் காண்பிக்கிறேன் பாருங்கள் என் பங்கு ஃபன்னை!" என்றபடி அவனை மெத்தையில் சரித்தவள் அவன் மேலேறி கன்னம், காது, மூக்கு என அனைத்தையும் கடிக்க தொடங்கினாள்.
"ஆ... ஏய் ராட்சசி... இரத்தக்காட்டேரி... நான் ஒரே ஒரு தடவை தான்டி உன்னை கடித்தேன், நீ என்ன உன் இஷ்டத்திற்கு கணக்கு வழக்கில்லாமல் என்னை கடிக்கிறாய்? ஆ... வலிக்கிறது விடுடி..." என்று அவள் கிடுக்கு பிடியிலிருந்து விடுபட போராடினான் ஜெய்.
"ஓ... வலிக்கிறதா? நன்றாக வலிக்கட்டும். இனி இவளை கடிக்கலாமா என்கிற எண்ணம் கூட உங்களுக்கு தோன்றக்கூடாது. வலிக்கிறதாமில்லை... என்னை கடிக்கும் பொழுது மட்டும் இனித்ததல்லவா?" என்று எகிறியவளை தடுத்தவன், "நிஜமாகவே இனிக்க தான்டி செய்தது!" என்றான்.
ஒரு கணம் அவன் பேசும் பாஷை புரியாமல் விழித்தவள் பின்பே அதன் அர்த்தம் உணர்ந்து முகம் சிவக்க, "ச்சீய்... பொறுக்கி ராஸ்கல், எப்படி பச்சையாகப் பேசுகிறாய்?" என்று அவனை சரமாறியாக அடிக்க ஆரம்பித்தாள்.
தன் மேல் விழுந்த அடியை தூவும் மலர்களாக எண்ணி உல்லாசமாக நகைத்தவன் சட்டென்று மணியை தனக்கு கீழே புரட்டி அவள் கண்ணோடு கண் பார்த்தான்.
"என்ன சொன்னாய்... பொறுக்கி ராஸ்கலா? பொறுக்கி என்ன செய்வான் என்று இப்பொழுது காண்பிக்கிறேன் பார்!" என கண்ணடித்து அவளிடம் குனிந்தான் ஜெய்.
"ஐயோ... இல்லை வேண்டாம் வேண்டாம், இனிமேல் அப்படியெல்லாம் சொல்ல மாட்டேன்!" என்று சிணுங்கியவளின் பேச்சை அவள் கணவன் மதிப்பதாக இல்லை.
பல மணித்துளிகள் கடந்த பின்னர் லேசாக மூச்சு வாங்கியபடி தனக்கு மறுபுறம் திரும்பி படுத்திருந்த மணியின் நடுமுதுகில் இதழை ஒற்றி அவளை சிலிர்க்க செய்தவன், "பேபிமா!" என கிசுகிசுத்து இறுக அணைத்தான்.
வார்த்தைகளின்றி மௌனித்திருந்தவளின் காதை செல்லமாக கடிக்க சென்றவன் சற்று முன்னர் ஏற்பட்ட அனுபவத்தால் சுதாரித்து இதழ்களால் கவ்வினான்.
"என்னடி படபட பட்டாசு அமைதியாக இருக்கிறாய்?"
அவன்புறம் திரும்பி அவனை கட்டிக் கொண்டவள், "எனக்கும் அதேமாதிரி குட்டிப்பாப்பா வேண்டும் மாம்ஸ்!" என்று குழந்தையாக மாறி கொஞ்ச அவள் கன்னத்தில் முத்தமிட்டவன், "அதற்கு தான்டி செல்லம், மாமா இவ்வளவு தூரம் உழைத்து கொண்டு இருக்கிறேன்!" என்று அவளை கேலி செய்தபடி வேண்டுமென்றே இல்லாத வியர்வையை துடைக்க, ச்சீய்... என்று சிவந்தவள் அவன் தோள் வளைவில் நறுக்கென்று கடித்து வைத்தாள்.
"ஆ... ஜெய்... உன் பெண்டாட்டியை ஒன்றும் தெரியாத பாப்பா என்று நினைத்தாயாடா, சும்மாவே அவளுடைய அடாவடியை உன்னால் சமாளிக்க முடியாது. இதில் அவளுக்கு அதிகமாக வேறு ஒரு போர்க்கலையை கற்றுக் கொடுத்து விட்டாயே!" என தன்னை குறித்து புலம்பியவனை கண்டு கலகலவென்று நகைத்தாள் மணி.
"ஒரே சிரிப்பு தான்!" என்று செல்லமாக கடிந்தபடி அவள் கன்னம் கிள்ளியவனின் கரத்தை எடுத்து விரல் நுணியில் முத்தமிட்டவள் அவன் மார்பில் தலைசாய்த்துக் கொண்டாள்.
மணியின் சுருள் கூந்தலில் விரல்களை விட்டு அளைந்தபடி விளையாடிக் கொண்டிருந்த ஜெய் ஏதோ நினைவில் சட்டென்று வாய்விட்டு சிரித்தான்.
அவன் உடல் குலுங்கியதில் தலையை உயர்த்தியவள் புருவம் முடிச்சிட, "என்னை திருமணம் செய்து கொண்டதில் உங்களுக்கு பைத்தியம் கியித்தியம் எதுவும் பிடித்து விட்டதா ஜேபி!" என்று சீரியஸாக வினவினாள்.
அவள் தலையை தட்டியவன், "அது ஒன்று தான்டி இப்பொழுது குறையாக இருக்கிறது!" என்று நகைத்தான்.
"அப்புறம் எதற்கு இந்த உரத்த சிரிப்பு புரியவில்லையே?" என்று புருவங்களை வில்லாக வளைத்தாள்.
"பெரிய மகாராணி... பேச்சைப் பார்!" என்று அவன் காதை திருக, "இல்லையா பின்னே... என்றும் என் ஜேபியின் இதயராணி தானே நான்?" என மிடுக்காக வினவினாள்.
"ஆமாம்டி தங்கம்... அதை யார் இல்லையென்று சொன்னார்கள், என்றும் என் இதயத்தின்... ஏன் இந்த வீட்டின் மகாராணியே நீதானேடா கண்ணம்மா!" என்று அவளை திருப்பி அணைத்து கொண்டு கொஞ்சினான் ஜெய்.
"அது..." என்று கெத்து காண்பித்தவள், "ஆமாம் எதற்கு சிரித்தீர்கள் என்று நீங்கள் இன்னும் காரணம் சொல்லவில்லையே?" என கேள்வி எழுப்பினாள்.
"ஆமாம்... நீ சொல்ல விட்டால் தானே, அன்று முதலிரவின் பொழுதும் அப்படித்தான் என்னை பேச விடாமல் திசை திருப்பி விட்டாய்!" என்றபடி அந்நாளின் நினைவில் அவள் கழுத்தில் முகம் புதைத்தான் ஜெய்.
"ஹேய்... டோன்ட் டச்... டோன்ட் டச்... கீப் டிஸ்டன்ஸ். உண்மை வெளிவருகிற வரை என் பக்கத்தில் வரக்கூடாது, திசை மாறுபவர் தலைவர் தான் பிறகு என் மேல் பழியை போடுவது!" என்று பழிப்பு காண்பித்தபடி அவனை தள்ளி விட்டாள் மணி.
மேலும் சிரித்தவன் சீலிங்கில் சுற்றும் மின்விசிறியை பார்த்தவாறு ரசனையுடன் பேசினான்.
"ஆக்ட்சுவலி... சின்ன வயதிலிருந்தே என்னிடம் ஒரு கெட்டப் பழக்கம் இருக்கிறது. என்னவென்றால்... நான் நடிகர் ஜெய்சங்கரின் தீவிர விசிறி அவருடைய படங்களை நிறைய பார்ப்பேன் என்று ஏற்கனவே உன்னிடம் சொல்லியிருக்கிறேன் அல்லவா. அதனுடைய பாதிப்பெல்லாம் இரவில் தான் அதிகமாக கனவாக வெளிப்படும். அருகில் உறங்கும் அம்மாவை நன்றாக உதைத்து விடுவேன். அவர்களும் வலி தாங்காமல் மிகவும் புலம்பி விட்டு இனிமேல் படம் பார்த்தாய் என்றால் உன்னை உண்டு இல்லையென்று செய்து விடுவேன் என மிரட்டுவார்கள். அதற்கு பயந்து தவிர்க்க முயன்றாலும் ஆர்வம் தாங்காமல் ஒருசில நேரம் பார்த்து விடுவேன். அப்பொழுது எல்லாம் உன்னை அதாவது மனைவியை வைத்து தான் கேலிப் பேசுவார்கள். உனக்கு திருமணம் செய்து வைத்து என் மருமகளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்டா அப்படி இப்படி என என்னை ரொம்ப கலாய்ப்பார்கள். நாம் இருவரும் காதலிக்கிறோம் என தெரிந்ததும், அச்சோ... மணி சின்னப்பிள்ளை பாவம்டா என கேலி செய்தார்களா... நீங்கள் கொஞ்சம் சும்மா இருங்கள், அவளை மட்டும் நான் உதைத்தேன் என்றால் என்னை கீழே உருட்டி தள்ளி விட்டு அவள் நிம்மதியாக கட்டிலில் படுத்து தூங்குவாள் என்று அவர்கள் வாயை அடைத்தது திடீரென்று நினைவு வந்து சிரிப்பு வந்து விட்டது!" என முறுவலித்தான்.
அவன் கூறுவதையெல்லாம் அமைதியாக கேட்டு கொண்டிருந்தவள், "நானெல்லாம் அப்படி செய்ய மாட்டேன்ப்பா... உங்களை கீழே தள்ளி விட்டு தனியாக தூங்குவதற்காகவா திருமணம் செய்து கொண்டேன்?" என்று கேள்வி எழுப்பினாள்.
அவள் குணம் அறிந்தவன், "அப்புறம்?" என எதிர்பார்ப்புடன் வினவினான்.
"நான் என்ன செய்வேன் தெரியுமா?" என்றவள் சட்டென்று அவன் மீதேறி படுத்தாள்.
"இப்பொழுது எப்படி உதைப்பீர்கள்?" என்று கண்ணடித்தவளை ஒரு தினுசாக பார்த்தான் ஜெய்.
"என்ன?"
"இப்படி படுத்தாய் என்றால் என்னால் உடலை அசைத்து உதைக்க முடியாது என்பதெல்லாம் சரி தான். ஆனால் என் மீது இப்படி அரைகுறையாக படுத்தாய் என்றால் நடக்கும் வேறெதற்கும் நான் பொறுப்பில்லை!" என்று கண்சிமிட்டினான்.
அப்பொழுது தான் அவன் மீது ஏறிய அவசரத்தில் ஆடைகள் சற்றே நழுங்கியிருப்பதை கண்ட மணி வேகமாக இறங்க முயல, "எங்கே ஓடுகிறாய்? லெட்ஸ் தி கேம் ஸ்டார்ட் நவ்!" என்றபடி அவளை தன்னோடு சேர்த்து இறுக்கினான் ஜெய்.
மறுநாள் இரவு உணவு முடிந்து செண்பகமும், மணியும் தங்களுக்குள் சுவாரசியமாக எதையோ பேசியபடி சமையலறையில் பாத்திரங்களை ஒதுங்க வைத்துக் கொண்டிருக்க, திலக் இலக்கில்லாமல் டிவி திரையை வெறித்துக் கொண்டிருந்தான்.
சற்று முன்னர் தான் அறைக்கு சென்ற ஜெய் அலுவலக வேலை ஒன்றின் தொடர்பாக லேப்டாப்போடு போராடிக் கொண்டிருந்தான்.
ஏதோ சிந்தனையிலிருந்த திலக்கின் முகத்தில் ஒருவித தீவிரம் தோன்றி விழிகள் சீற்றத்தில் மின்னியது. மெல்ல சுற்றுப்புறத்தை கவனமாக நோட்டமிட்டவன் மெதுவாக எழுந்து சென்று டைனிங் அறையில் இருந்த பழம் வெட்டும் கத்தியையும், அடுத்து ஹால் கப்போர்டில் இருக்கின்ற டூல்ஸ் பாக்ஸில் இருந்து பெரிய கூரிய ஆணி ஒன்றையும் கையில் எடுத்தான்.
மீண்டும் ஒருமுறை விழிகளை உருட்டியவன் தன் கையில் இருந்ததை மறைவாக பிடித்தபடி வீட்டிற்கு வெளியே சென்றான்.
தன் வேலையில் மூழ்கியிருந்த ஜெய்சங்கருக்கு திடீரென்று விக்கல் எடுக்க அருகில் வாட்டர் பாட்டிலை தேடியவன் அது இல்லாமல் இருக்கவும், தண்ணீர் குடிக்க வேண்டி அறையை விட்டு வெளியே வந்தான்.
அதேநேரம் திலக் பம்மி பம்மி வெளியே செல்வதை புருவம் முடிச்சிட கவனித்தவன் ஓசையின்றி மறைவாக சென்று ஜன்னலருகே நின்றுப் பார்த்தான்.
சுற்றும்முற்றும் ஆராய்ந்த திலக் தன் கையில் இருந்ததை வெளியில் நீட்ட ஜெய்யின் விழிகள் திகைத்தது. அதைவிட மேலும் அவனுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அவனுடைய வண்டியின் டயரை சுற்றி விட்டு புன்னகைத்த திலக் அதை குத்த வேண்டி ஆணியை ஓங்கினான்.
______________________________________
போங்க பிள்ளைங்களா... இனிமேல் நான் ஸ்டிரிக்ட் ஆபிஸர் 😈😈😈 ஸோ... ரொமான்ஸ் கட்! 😉😉😉 அனைத்து விண்ணப்பங்களையும் நிறைவேற்றி விட்டேன். 😍😍😍
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro