9
"சாப்டியா நீ?"
"இல்ல. சீக்கிரம் கிளம்புனதுனால சாப்பிடல"
"சரி வா ஏதாச்சும் சாப்பிடு"
காஃபிடே அருகில் இருக்க, அங்கு சென்று ஆர்டர் தந்துவிட்டு அமர்ந்தனர்.
"உங்களுக்கு நான் ஒரு கிஃப்ட் கொண்டு வந்தனே" உற்சாகமாக கூறினாள் அவள்
"நானும் தான் வைச்சு இருக்கேன்" என்றான் அவன்
அவன் முகப்பாவத்தை பார்க்க ஆவலுடன் தான் கொண்டு வந்ததை அவனிடம் நீட்டினாள் அவள்
அவர்கள் செய்த ஆர்டர் வர சாப்பிட்டபடியே அவன் பிரித்து பார்க்க அதில் அவளே வரைந்து அவனுக்கு பிடித்த பொன்னியின் செல்வன் வரிகளை சேர்த்த நிழல்படம் இருந்தது.
"ஹே.. பூங்குழலியா இது? நைஸ்... நல்லா இருக்கு" அதை பார்த்து இரசித்தவாறே புன்னகையுடன் கூறினான் பிரவீன்.
இந்தா உன் கிஃப்ட் என இரண்டு பெரிய டைரி மில்க் சாக்லேட்டை நீட்டினான் அவன், ஆசையாக வாங்கி கொண்டாள் அவள்.
"நான் எம்.டெக் படிக்கும் போது நானும் என் பிரண்ட்ஸும் முக்கால்வாசி நேரம் காஃபி டேல தான் இருப்போம். மாச மாசம் ஸ்டைபண்ட் வந்துச்சா, அது எல்லாம் இங்க தான் கரையும். யாருக்கு என்ன பிரச்சினைனாலும் சமாதானம் பண்ணறதுக்கும் இங்க தான் பிராஜெக்ட் வொர்க் டிஸ்கஷனும் இங்க தான்" மென்னகையுடன் அவன் கல்லூரி நாட்களை அவளுடன் பகிர்ந்து கொண்டான் பிரவீன்.
முகத்தை பின்னிய கைகளில் தாங்கியவாறு அவன் பேசுவதையே இரசித்து கேட்டாள் வதனா. அவனும் அவளை ஆராய்ந்து கொண்டுதான் இருந்தான் என அவள் கவனிக்கவில்லை.
"கைய கொடு" அவன் அவள் கரம் பற்ற தன் கையை நீட்டினான், ஒன்றும் புரியாமல் அவளும் கையை நீட்டினாள்.
அவள் நகங்களை மென்மையாக வருடியவன் "எனக்கு இப்படி அழகா நகம் வளர்த்து நெயில் பாலீஷ் வைச்சா ரொம்ப பிடிக்கும், அதுவும் ரெட் கலர் செமயா இருக்கும் பாக்க" (கல்யாணத்திற்கு பின் அவனே எப்பொழுதும் அவளுக்கு நெயில் பாலீஷ் போட்டு விடுவான் என்று அவள் அப்போது அறிந்திருக்கவில்லை)
அவனை காண வருவதால் நேற்றைய இரவு மெனக்கெட்டு நகத்தில் லைட் பிங் நெயில் பாலீஷை பட்டை தீட்டியிருந்தாள் அவள். மற்ற நேரங்களில் எதையும் கண்டு கொள்ளாமல் சுற்றும் சோம்பேறி தான் வதனா.
அவனின் இந்த பேச்சு அவளுக்கு உள்ளுக்குள் குளு குளுவென சிலிர்த்தது.
"ஆமா உங்க பிரண்டோட வொய்ஃபுக்கு ஏதாச்சும் கிப்ட் வாங்கனும்ல. பிரக்னன்டா இருக்காங்கல சும்மா பாக்க முடியாதே. சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரலாம்னா இங்க உள்ள தியேட்டர்ல விடமாட்டாங்க வேண்டாம்னு சொல்லிட்டீங்க" என்று யோசைனையாக கூறினாள் இவள்
"அதெல்லாம் இது வர தெரியாதே. இப்போ நீ வந்துட்டல நீயே செலக்ட் பண்ணு வா"
இருவரும் கிப்ட் ஷாப்பில் நுழைந்து என்ன வாங்கலாம் என தேடினர். எதுவும் பிடிக்காமல் கடைசியில் அழகாக இருந்த ஒரு குட்டி நாய் பொம்மையை வாங்கினர்.
அவர் நண்பர் மனைவியுடன் படம் ஆரம்பிக்கும் நேரத்தில் வந்து சேர்ந்தார். ப்ளாக் பேந்தர் திரைப்படம் அப்போது தான் ஆரம்பித்து ஓடிக்கொண்டிருந்தது. இருக்கையை கண்டுபிடித்து தேடி அமர்ந்தனர் அனைவரும். படம் விருவிருப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இடைவேளை நெருங்கும் நேரம் வயிற்றில் சுல்லென இறுக்கி பிடித்தது போல் வலி ஏற்பட சரிந்து அமர்ந்தாள் வதனா.
என்ன நடக்கிறது என புரிய, செய்வது அறியாது ஒரு நிமிடம் திணறி போனாள். இடைவேளை விடும்வரை மூச்சை பிடித்து இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்தாள். ஒரு வழியாக இடைவேளை விட சங்கோஜத்துடன் தயங்கி தயங்கி பிரவீனிடம்
"இங்க சூப்பர் மார்க்கெட் ஏதாச்சும் இருக்கா? அங்க போனும்" என்றாள்
"ஏன் என்ன ஆச்சு?"
"பீரியட்ஸ் வந்துருச்சு" மெதுவாக சொன்னாள் அவனிடம். உள்ளே எங்கே போய் ஒளிந்துகொள்ள என தெரியாமல் குமைந்தாள். தேதி வரும் நாளில்லை அது என்பதால் முன்னெச்சரிக்கை இல்லாமல் வந்திருந்தாள். தன்னை தானே திட்டியவாறு அவஸ்தையுடன் கூறினாள்.
"அச்சோ. வா எங்க ஷாப் இருக்குன்னு பார்ப்போம்"
கடையை தேடி ஒரு வழியாக கடைசி தளத்தில் கண்டுபிடித்தனர்.
"கையில காசு இருக்கா?"
"ம்ம் இருக்கு. இதோ வந்துட்டறேன்"
தேவையானதை வாங்கி கொண்டு பின் படம் ஆரம்பித்து சிறிது நேரம் கழித்து வந்து சேர்ந்தனர். படம் பார்க்க ஆரம்பித்தவுடன் போக போக சகஜ மனநிலைக்கு வந்தாள் வதனா. படம் முடிந்து எல்லோரும் சாப்பிட கடை தேடி அமர்ந்தனர். அவன் நண்பனின் மனைவி வயிறு தெரிய அழகாக இருந்தார்.
"நீங்க வந்தது வீட்ல தெரியுமா?" வதனாவிடம் கேட்டாள் அவள்
"இல்ல தெரியாது" என தோளை குளுக்கினாள் வதனா
"அச்சோ" என வாய் பிளந்தாள் அவள்.
அவர்கள் வாங்கி வந்த பரிசை அவளிடம் தந்தனர்
"வாவ் க்யூட்டா இருக்கு தேங்க்ஸ்" என புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள். அவள் புன்னகைக்கும் பொழுது அவள் முகத்தில் தாய்மையின் சாயல் மிளிர்ந்தது.
"என்ன டாக்டரே ஹாயா வீட்ல என்ஜாய் பண்றீங்களா? ஹரி இங்க நீங்க இல்லாம ஹாப்பியா சுத்திட்டு இருக்காரு" என பல் மருத்துவரான அவளை கலாய்த்தான் பிரவீன்.
"பில்ஸ்லாம் ஆபிஸ்ல சப்மிட் பண்ணிட்டீயா பிரவீன்" அவன் நண்பர் கேட்க
"இல்ல இனிமே தான் ஹரி. காசு எப்ப தேவைபடுதோ அப்போ போட வேண்டியது தான்"
பிரவீன் சகஜமாக சிரித்து பேசுவதை அப்போது தான் கவனித்தாள் வதனா. அவளிடம் பேசும்பொழுது ஒருவித கூச்சத்துடன் கண்களை தவிர்த்தே பேசினான்.
சாப்பிட்டு முடித்து அவர்கள் இருவரும் கிளம்ப இவர்கள் இருவரும் டாக்ஸியில் கடற்கரையை நோக்கி சென்றனர்...
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro