7
" பேபி சைக்காலஜி க்ளாஸுக்கு கிளம்பிட்டேன். இன்னிக்கு முதல் நாள் கிளாஸ் "
" ஓ பர்ஸ்ட் இயர் ஸ்டூடண்டா.. கலக்கு கலக்கு. அல் தி பெஸ்ட் "
ஏற்கனவே பொறியியல் முதுநிலை பட்டதாரியான வதனா, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அலுவலகத்தில் அப்பரன்டீஸாக வேலை பார்த்து வந்தாள். அங்கே நேரம் அதிகம் கிடைக்க தனக்கு ஆர்வமான சைக்காலஜியை தொலை தூர கல்வியில் படிக்க முடிவு செய்தாள். அதே நேரத்தில் கல்யாணமும் முடிவாக வேலையை ரிசைன் செய்துவிட்டாள். அவள் படிப்பதில் தனக்கு எந்த பிரச்சினையுமில்லை என பிரவீன் கூறியதால் அதனை தொடர்ந்தாள். அங்கு வார இறுதியில் மட்டுமே வகுப்புகள் நடந்தன.
என்ன விந்தை..
இதழ் ஓரம் புன்னகையை வரவழைக்கும் பாடலே விழியோரம் கண்ணீரையும் வரவழைக்குதே...
மனதை வருடும் இசையும் மனதை உருக்கும் மாயமென்னமோ...
"தெரிலயே 🤔" என்று அவனிடமிருந்து பதில் வந்தது.
"மங்குனி.. 🤦 உங்கள வச்சிட்டு என்ன பண்றது பேபி... அப்படியே உங்கள கொல்லனும் போலவும் இருக்கு கிஸ் பண்ணும் போலவும் இருக்கு. கொல்லாதீங்க அத்தான்"
" நீ என்ன பண்ணாலும் எனக்கு ஓகே பேபி "
" மிஸ் யூ சோ மச் இடியட். அழுதுட்டு இருக்கேன். இப்படியே போனா லோ பேட்டரி ஆகி சிஸ்டம் ஷட் டவுன் ஆகிரும். அப்பறம் எவ்வளவு பூஸ்ட் குடுத்தாலும் ஸ்டார்ட் ஆகாது "
" காலையில ஷட் டவுன் பண்ணு நைட் பூஸ்ட் குடுத்துக்கலாம் "
" மனுசனா மிஷினா... ஷப்பா முடில உங்களோட, கைல சிக்குங்க அப்போ வச்சுக்கறேன் " விளையாட்டாகவே இதை அனுப்பினாள் அவள்.
ஆனால் ஏற்கனவே வேலையில் டென்ஷனாக இருந்தவன் இவள் மெஸேஜால் இன்னும் கடுப்பானான்.
" லிசன் வது, இப்போ செம பிரஷர்ல இருக்கேன். ப்ளீஸ் புரிஞ்சுக்க, சொல்லறது புரிதா? "
" சாரி பேபி, நான் சும்மா தான் டீஸ் பண்ணேன். வேலை டைம்ல இனி விளையாடல சாரி "
உன்னை சீண்டாமல் இருக்கவே முயற்சிக்கின்றேன்...
(Promise 😉)
இருந்தும் சொல் பேச்சு கேட்காத பிள்ளை போல் என் இதயமும் உன்னை சுற்றியே அலைகிறதே... 🤦🏽♀
(Loosu heart)
எண்ணிய செயல் எல்லாம் இனிதே முடியும்...
இன்னல்களும் மூடு பனியென விலகும்... முகம் வாடாதே என் செல்லமே... 😘
(Thum thatha🤟🏽)
நானும் சமத்து பிள்ளையென உனக்காக காத்திருப்பேனே.. 😝
(சன்மானம் பின்னர் வசுலிக்கப்படும் 😚😚)
என்று அனுப்பியவள் அதன்பின் அவனை தொந்தரவு செய்யவில்லை.
இரவு அவளுக்கு கால் செய்தவன்
" சாரி வது இன்னிக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா போச்சா உன்கிட்ட வேற கத்திட்டேன். கால் மேல கால் வந்துட்டே இருந்தது... போட்டு குடஞ்சி எடுத்துட்டானுங்க, ஒரே தலைவலி. சாப்பிட கூட டைம் இல்லாம ஓடுது. எப்பவும் இப்படி இருக்காது, எலக்ஷன் டைம்மா. சோ இந்த ப்ராஜெக்ட்லாம் சீக்கிரம் முடிக்க சொல்லி கவர்மெண்ட் சைட்ல ப்ரெஷர். அதும் மே ஜூன் மாசம்ல இன்னும் பிஸியா போகும்.
நம்ம கல்யாணத்த வேற கரெக்டா இப்போ வைச்சிட்டாங்க (ஜூலை). நான் இதுக்கு தான் நவம்பரில் வைக்க சொன்னேன், ஜாதகம் நேரம் அது இதுன்னு வீட்ல கேக்கல" என நீண்ட தன்னிலை விளக்கம் அளித்தான் பிரவீன்.
இந்த சூழலிலும் தனக்காக தான் இவ்வளவு ப்ரயத்தனப்படுகின்றான் என்று புரிந்து சந்தோஷப்பட்டாள் வதனா. அப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு அவனுடனான உறையாடலை அசைபோட்டபடி மெத்தையில் உருண்டு கொண்டு இருந்த நேரம் அவனிடமிருந்து ஒரு ஆடியோ மெஸேஜ் வந்தது. கூடவே
"இந்த சாங் உனக்காக டெடிகேட் பண்றேன் பேபி" என்று அனுப்பி இருந்தான். ஆவலாக திறந்து பார்த்தாள் இவள்.
அதிலே
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வின் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லருக்கும் தனிமையில் செத்துவிடுமுன்
செய்தி அனுப்பு ஓ
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லி அனுப்பு ஓ
என்ற பாடல் ஒலித்தது. அதை கேட்க கேட்க இதயத்தில் ஒரு வித பரவசத்தை உணர்ந்தாள் வதனா. வார்த்தையில் தன் காதலை வெளியிட தெரியாமல் இவ்வாறாக பாடல் அனுப்பி மொழிவதை வழக்கமாக கொண்டான் பிரவீன்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro