6
" இது நட்பா..காதலா.. காமமா.. ஈர்ப்பா..
எதன் முதல் படி இது என்று புரியவில்லை..
ஆனால் இந்த நாணம்.. புன்னகை.. பிடித்திருக்கிறது.."
" வது சான்ஸே இல்ல போ.. என்னயே இவ்வளவு வெட்கப்பட வைக்கிறியே. ஆனா எப்பவும் பசங்க தான பொண்ணுகளுக்கு கவிதைலாம் எழுதுவாங்க? ஆனா இது எனக்கும் புதுசா ஒருமாதிரியா புடிச்சு இருக்கு. உள்ளுக்குள்ள செமயா இருக்கு"
"யாருக்கு எது வருதோ பண்ணுவோம். வது வா? 😍 "
"ஆமா அதான் உனக்கு நிக்நேம், அப்படி தான் உன் பேர சேவ் பண்ணி இருக்கேன். உன்ன பாத்துட்டு வந்த அன்னைக்கே "
" என் வாட்பேட் பிரண்ட்ஸ் சில பேர் அப்படி கூப்பிடுவாங்க ஆனா நீங்க சொல்லும் போது அது தனி கிக் தான் "
"அதான் அத்தானோட மகிமை.."
இப்படியான உரையாடல்களில் ஆரம்பித்தது அவர்கள் காதல் பயணம்.
" உந்தன் கண்களை எப்பொழுதும் மறைக்காதே என்னிடமிருந்து அந்த குளிர் கண்ணாடியை கொண்டு....
என் உயிர் உன் உயிருடன் உறையாடும் வழி உன் விழி...
உந்தன் உணர்வுகளை காட்டும் கண்ணாடி உன் விழி.. அதற்கு ஏன் ஒரு முகமூடி...
எந்தன் கண்ணாடிக்கு இன்னொரு கண்ணாடி வேண்டாமே அத்தான்..."
வாட்சப்பில் தன்னவனின் முகத்தை கண்டு இரசித்துக்கொண்டு இருந்தவளுக்கு அவன் அணிந்து இருந்த குளிர்கண்ணாடியின் மேல் சுறு சுறுவென கோபம் ஏறியது. அவன் கண்களை பார்க்க விடாமல் தடுத்து விட்டது அல்லவா அது, அதனால் அதனிடம் சலித்தவள் மேற்கண்ட குறுஞ்செய்தியை அவனுக்கு தட்டிவிட்டாள்...
அவனிடமிருந்து புன்னகையே பதிலாக வந்தது. தொடக்கத்தில் உணர்ச்சிகளின் வேகத்தில் தன் சுபாவத்திற்கு மாறாய் தன் மனம் திறந்து அவளிடம் தன் அன்பை வெளிகாட்டிய பிரவீன் அதன்பின் ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை. இவளும் அவன் சுபாவத்தை விவரிக்கையில் புரிந்தது போல் தலையாட்டினாளே அன்றி முழுவதுமாய் அவன் கூறியது புரிந்ததா என்பது சந்தேகமே.
சாலை போக்குவரத்து துறை வடிவமைப்பு பொறியாளர் ஆதலால் வேலைப்பளு கூடுதலாக இருக்க இவளின் குறுஞ்செய்திகளுக்கு பதில்களும் அரிதாகவே வந்தது. இவர்கள் உறையாடலும் தினமும் இரவில் சிறிது நேரம் மட்டுமே. பகல் முழுவதும் அவனை நினைத்து கடத்தியவள், இரவில் ஆவலாக அவன் குரலை கேட்க மொட்டை மாடியில் ஆஜராகி விடுவாள். அவனும் இவளை எவ்வாரேனும் சிரிக்க வைத்து சரிகட்டிவிடுவான் அந்த நாளிற்கு ஈடாக.
முதலில் இதை உள்வாங்கி கொள்ள போராடிய வதனா சிறிது சிறிதாக தன்னை இச்சூழலுக்கு பொருத்திக்கொள்ள முற்பட்டாள். வேலை விஷயமாக பிரவீன் திடீரென கோயம்புத்தூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
" பேபி கோயம்புத்தூர் போயிட்டு இருக்கேன், சடன் பிளான் "
" சரி அத்தான், எப்போ ரிடன்? "
"இன்னும் 2 நாள் ஆகும் பேபி "
" ம்ம்.. சேப் ஜேர்னி அத்தான் "
இரண்டு நாட்கள் மூன்று நாட்களாக நீண்டது. வேலை அலைச்சலில் சரியாக அவளிடம் அவனால் பேசவும் இயலவில்லை.
" பேபி மதுரை பிராஜெக்ட்ல ஒரு பிராப்ளம், இன்னும் கொஞ்சம் முடிக்க வேண்டிய வேலை இருக்கு. சோ இன்னிக்கு கால் பண்ண முடியாது, நீ எதும் யோசிக்காம தூங்கு சரியா? "
இந்த சிறிய கால இடைவெளியில் அவளை அவன் நன்றாகவே புரிந்து வைத்து இருந்தான்.
" ஓகே அத்தான். டேக் கேர்"
" லவ் யூ டார்லிங். குட் நைட்"
அவன் எதிர்பார்த்தது போலவே இங்கு எதை எதையோ மண்டைக்குள் மாவாட்டியபடியே உறங்காமல் விழித்திருந்தாள் வதனா. எந்த நேரம் வெடிக்குமோ என்ற நிலையில் உள்ள எரிமலைப்போல் இவள் மனமும் அவன் நினைவில் குமுறிக்கொண்டு இருந்தது.
மூன்றாம் நாள் பிரிவில் கோபம் கொஞ்சம் எட்டி பார்த்தது.
" உங்களுக்கு டெக்ஸ்டிங் பிடிக்காதா? "
" ஃபீரி டைம்ல பிடிக்கும். எது பண்ணாலும் டெடிகேடட்டா பண்ணனும்"
"ம்ம்ம். சாப்டாச்சா?"
" ஓஓ. நீ இன்னும் தூங்கல? "
"தூக்கம் வரல "
"நான் வேணா தாலாட்டு பாடவா? "
"☺️ பாடுங்களேன் கேப்போம் "
"நான் பாடுனா டிரைவர் தூங்கிடுவாரு"
" கால் பண்ண போறது இல்லைல நீங்க? "
" டிராவல்ல இருக்கேன் வது, கால் கட் ஆகும். சரி பண்ரேன் இரு "
அவன் குரலை கேட்டு அமைதியாக இவள் இருக்க
" ஒரு பாட்டு அனுப்பரேன் கேளு. நல்லா தூக்கம் வரும். கேட்டுட்டே தூங்கு வது "
" சாரி அத்தான் என்னால ஒழுங்கா பேச முடில. உங்க நிலைமை புரியுது ஆனா மனசு கேக்க மாட்டேங்குது. எனக்கு இத எப்படி ஹாண்டில் பண்ணனு தெரில "
" இது சகஜம் தான், இதுவும் கடந்து போகும். யோசிக்காம தூங்கு பேபி "
"ம்ம்"
தென்றலே தென்றலே மெல்ல நீ வீசு
பூவுடன் மெல்ல நீ பேசு🎵
காதல் தேசத்திலிருந்து பாடல் ஒலிக்க,
நள்ளிரவிலும் மாடியின் நிலவின் குளுமையில் உள்ளே செல்ல தோன்றாமல் பாடலை கேட்டு படுத்து கிடந்தாள்.
🎵காதல் என்றால் கவலையா
கண்ணில் நீரின் திவலையா
நோய் ஆனேன் உயிரும் நீ ஆனேன்
இரவில் காயும் முழு நிலா
எனக்கு மட்டும் சுடும் நிலா
வாராயோ என்னை நீ சேராயோ🎵
தன் நிலையை பிரதிபலிப்பது போல் தோன்ற பாடலை கேட்க கேட்க ஏனோ இன்னும் வலி கூடுவது போல உணர்ந்தாள். கண்ணிலும் நீர் அடைப்பெடுத்து ஓடியது இலக்கின்றி
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro