#8 மீண்டும் மிருகமாய்
மனிதம் மறந்த மனிதகுலமாய்
நாம் வாழ்ந்து வருகின்றோம்..
இரக்கம் இல்லாமல்
இறைவனை தேடி ஓடுகிறோம்..
பணம் நம் பலம் என நினைத்து
அதை நம் பலவீனமாக்கிக்
கொள்கிறோம்..
தாய் தங்கை தம் மகள் தவிர
வேறு பெண்களை போதை
பொருளாகப் பார்க்கிறோம்..
மிருகத்திலிருந்து மனிதனான நாம்
இன்று மீண்டும் மிருகமாகிக்
கொண்டிருக்கிறோம்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro