#48 பிரிவே.. பிரிந்து செல்..
பிரிவின் வலி என்ன என்று
நானும் உணர தொடங்கினேன்
சிரித்து பேசி மகிழ்ந்த நிகழ்காலம்
நாளை முதல்
கடந்தகால நினைவுகளாய்
மாறிப் போகும் போது..
இன்பத்திலே சிரிப்பை
பகிர்ந்து கொண்டு
துன்பத்திலே தோள் கொடுத்து
என்னை தாங்கிய நண்பர்களே
பிரியத் தோன்றவில்லை..
சில நேரங்களிலே
உயிர் தோழிகளாய்
சில நேரங்களிலே
உடன்பிறவா சகோதரிகளாய்
எந்நாளும் என்னோடு
எனக்காக இருந்த
என் உற்ற சிநேகிதிகளே..
பிரிவு வெறும் வார்த்தை தான்..
பிரிவு நம் மனதிற்கு இல்லை..
இனியும் தொடரும்
நம் நட்பின் பயணம்
பிரிவை பிரித்துவிட்டு்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro