#45 என்னவனே
கண்ணோடு கண்ணாகி
உன்னோடு ஒன்றாகி
உயிரோடு உறவாகி
என்னை காதலில்
திளைக்க வைப்பாயா..
நீர் இல்லா ஒரு யுகத்தை
இவ்வுலகம் தாங்கிடினும்
நீ இல்லா ஒரு நொடியிலேயே
எனை ஏங்க விடுவாயா..
இமை மூடும் வேளையிலும்
என் இதழ் அணைத்து
என்னை வழியனுப்ப
வருவாயா என் காதலனே
என்னுயிரின் என்னவனே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro