
#42 மனநோயா
பல வண்ணங்களில் மழைத்துளி
என்மீது வரைந்தது ரங்கோலி..
சிறகடித்து பறந்து வந்து
என் கை மீது அமர்ந்த பட்டாம்பூச்சி
எனக்கு மட்டும் காட்சியளித்தது
கருப்பு வெள்ளையில்..
நிறமுள்ளவை எல்லாம்
நிறமற்றவையாக
நிறமற்றவை எல்லாம்
நிறமுள்ளவையாக..
பார்வை கோளாறா இல்லை
பருவ கோளாறா..
உன்னருகே அமரும் நேரம்
என்னுள்ளே நேரும் மாற்றம்..
எனக்கு மட்டுமே நிகழும் மனநோயா
இல்லை உன்னுள்ளும் அதே நோயா..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro