#41 யார் நீ
மெல்ல என் தேகம் தழுவிச் செல்லும்
மழைச் சாரலா நீ..
இல்லை என் கேசம் வருடிச் செல்லும்
மென் காற்றா நீ..
உன் ஒற்றை புன்னகையில்
என்னை சுழற்றியடித்த
சூறாவளியோ..
உன் ஒற்றை பார்வையில்
என் இதயத்தை உலுக்கிய
பூகம்பமோ..
என் பாதம் அள்ளி அணைத்து
முத்தமிடும் கடல் அலையா நீ..
என் நாசி நுழைந்து மூச்சில் கலந்த
மலரின் வாசமா நீ...
யார் நீ..
உன்னுள் என்னை காண்கிறேன்
உன்னால் என்னை காண்கிறேன்
யார் நீ..
நானாக இருந்த என்னை
நாமாக வாழ தூண்டியது..
யாருடா நீ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro