
#40 என் மாயக்காரா
என் மூச்சில் உன் சுவாசமும்
என் மனதில் உன் வாசமும்
என் உயிரி்ல் உன் காதலும்
ஊடுறுவும் முயற்சியை
நான் தடுக்க எத்தனிக்கும்போது..
என் இதயக்கதவோ
என்னை அறியாமல்
உன்னை என்னுள் அனுமதித்துவிட..
காரிருள் மேகத்தினிடையே
சிக்கிக்கொண்ட வெண்மதியாய்..
திக்குத்தெரியாமல்
மாட்டிக்கொண்டேன்
வசீகரிக்கும் உன் புன்னகையில்..
வழித்தெரியாமல்
அலையத்தோன்றுகிறது
உன் கலைந்த முடியினிடையே
என் கை விரல்களுக்கு..
என்றேனும் ஓர் நாள்
என் முன் தோன்றி
என்னுள் மாயம் செய்வாயா..
நிழற்படத்தில் இருந்துக்கொண்டே
வித்தைகள் பல செய்யும்
என் மாயக்காரா..
என்றும் வானின் நட்சத்திரமாய்
எட்ட முடியா உயரத்தில் நீ
எட்டி விடும் உயிர்ப்புடன் நான்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro