#39 உன் கண்களில் விழ
வானில் மின்னல் வெட்ட
நிலத்தில் மழை..
உன் கண்களில் மின்னல் வெட்ட
என் இதயத்தில் மழை..
கூர்மையான கத்தி
ஊடுறுவும் உடலை..
உன் கூர்மையான பார்வை
ஊடுறுவியது என் உள்ளத்தை..
காந்தத்தின் துருவங்கள்
ஈர்க்கும் இரும்பினை..
உன் கருவிழி என்னும் காந்தம்
ஈர்த்தது என் உணர்வினை..
சிரிக்கும் இதழ்கள்
எல்லோரிடமும் கண்டேன்..
விழிகளும் சிரிப்பதை
உன்னிடமே கண்டேன்..
உளிக் கொண்டு
சிற்பம் செதுக்கலாம்..
நீ உன் விழிக் கொண்டு
என்னுள் காதல் செதுக்கினாய்..
புதையல் தேடி
காட்டில் தொலைந்தவர்கள் உண்டு..
நானோ என்னைத் தேடி
உன் கண்களில் தொலைந்துவிட்டேன்.
தொலைந்த என்னை மீட்டுக்கொடு
மீண்டும் மீண்டும்
உன் கண்களில் விழ
இல்லை இல்லை
உன்மேல் காதலில் விழ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro