#38 உன் பிறந்தநாள்
உன் பிறந்தநாள் அன்று
கைக்குலுக்கி வாழ்த்து சொல்ல
ஏங்கும் என் மனதிடம்
எப்படி சொல்வேன்
இனி நீ உன் ஒரு பிறந்தநாளையும்
என்னோடு
கொண்டாடப் போவதில்லை
என்பதை..
உன் பிறந்தநாளன்று
உன்னை ஆச்சரியப்படுத்த
பரிசோடு காத்திருந்து
உன்னை கட்டியணைத்து
கன்னத்தில் முத்தமிட்டு
வாழ்த்து சொன்ன
ஞாபகங்கள் மட்டும்
என் நெஞ்சை வருட
நீ சந்தோஷமாக வாழ
இறைவனிடம் மன்றாடி
இதயம் நிறைந்து வாழ்த்துகிறேன்..
இனியொரு ஜென்மம்
உன்னோடு வாழக்கிடைத்தால்
உன் பிறந்தநாளன்று
உன்னை எப்படி ஆச்சரியப்படுத்த
என்ற யோசனையோடு
உன் முன்னாள் காதலி..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro