#37 கல்லூரி நட்பு
முதன்முதல்
அருகருகே அமர்ந்தபோது
தெரிந்துக் கொண்டோம்
பெயர்களை..
சேர்ந்து மதியம்
உணவருந்தும் போது
ருசித்துக் கொண்டோம்
அடுத்தவர் வீட்டு சமையலை..
சிறுசிறு குறும்புகள் செய்ததால்
வெளியேற்றப் பட்டோம்
வகுப்பறையிலிருந்து..
ஆசிரியரிடமிருந்து
திட்டு வாங்கி அழுது
பின் சிரித்து கொண்டோம்
அதையே நினைத்து..
கல்லூரி நாள் விழாவில்
கொண்டாடித் தீர்த்தோம்
ஆடல் பாடல்களால்..
சுதந்திர பறவையாய்
சுற்றித் திரிந்தோம்
சுற்றுலாவில்..
சின்ன சின்ன சண்டைகளாலும் சந்தோஷங்களாலும்
புரிந்துக் கொண்டோம்
ஒருவரை ஒருவர்..
விட்டுக் கொடுக்க பழகியதால்
நெருக்கமானோம்
ஒருவரையும் விட்டுக்கொடுக்காமல்..
நாட்கள் சென்று வருடங்களாக
அறிவை மட்டுமல்ல
வளர்த்துக் கொண்டோம்
நம் நட்பையும்..
இன்று
கல்லூரிக் காலத்தின் கடைசி நாள்..
வகுப்பறை மேசையில்
கல்வெட்டாய் நம் பெயர்களை
செதுக்கிச் செல்கிறோம்..
சோகம் இழைந்தோடும் புன்சிரிப்பை
புகைப்படத்தில் பதியவிட்டு செல்கிறோம்..
நினைவலைகளோடு சேர்த்து நம் முகவரியையும்
ஆட்டோகிராப் புத்தகத்தில்
எழுதிச் செல்கிறோம்..
வருடாவருடம் இதே நாளில் சந்திப்போம் என
நடக்காது என தெரிந்தும்
சத்தியம் செய்து செல்கிறோம்..
நாம் நண்பர்களானோம்
பிரிவின் கொடுமை
தெரியாததால் அல்ல
நட்பின் இனிமை புரிந்ததால்..
நாம் கல்லூரியை விட்டுச் சென்றாலும்
நம் வகுப்பறை சுவர்கள்
என்றுமே
நம் நட்பினை எதிரொலிக்கும்..
************************************
I dedicate this poem to all my best buddies in college who shared my best and worst moments..
I also dedicate this to anithabi , ashtrini , sridevisa and elcin004
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro