#35 சண்டையிட்ட நாட்கள்
நீ என்னை நெருங்கி வர வர
நான் சுவாசிக்கும் காற்றில்
உன் வாசம் பரவ..
உன் கைகளில்
என் முகம் தாங்கி
வசீகரிக்கும் உன் கண்களால்
என் கண்ணீர் துடைத்து..
காற்றில் விழுந்த
என் கற்றை முடியை
காதோரம் ஒதுக்கும் போது
உன் விரல் தீண்ட..
என் இடையினை ஸ்பரிசித்த
உன் கைகள்
என்னை உனக்குள்
இழுத்துக்கொள்ள..
நானோ நித்திரையிலிருந்து
விழித்துக்கொள்ள..
படுக்கையின்
ஒரு ஓரம் நான்
மறு ஓரம் நீ
வி்ட்டுக்கொடுக்காததாலும்
புரிந்துக்கொள்ளாததாலும்
வந்த 'சண்டையோ' நம் நடுவினில்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro