
#34 முதுமைக் காதல்
அன்று உன் கைப்பிடித்து நடக்க
ஆசைப்பட்டேன்
உன் மென்மையான கைகளை
தொடுவதற்காகவே..
இன்றும் ஆசைப்படுகிறேன்
எனக்காக உழைத்து
ரேகை அழிந்து போன உன் கைகளை
பொக்கிஷமாய்
பற்றிக் கொள்வதற்காக..
அன்று உன்னை
அணைத்து கொள்ள ஆசைப்பட்டேன்
வாலிப வயதின் சுகம் அறிய..
இன்றும் ஆசைப்படுகிறேன்
தளர்ச்சியால் நடுங்கும் உன் உடலை
அரவணைத்து கொள்வதற்காக..
அன்று சண்டையிட்டு கொண்டோம்
ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளாதலால்..
இன்றும் சண்டையிடுகிறோம்
ஒருவரை ஒருவர்
விட்டுக் கொடுக்காமல்..
அன்று ஆசைப்பட்டேன்
வாழ்ந்தால் உன்னோடு தான் என்று..
இன்று உன்னோடு வாழ்ந்த பின்
ஆசைப்படுகிறேன்
சாவும் உன்னோடு தான் என்று..
அன்று ஆசைப்பட்டேன்
காதல் மயக்கத்தில்
உன்மடியில் தலை சாய்க்க..
இன்றும் ஆசைப்படுகிறேன்
இறப்பின் விழிம்பில்
கடைசியாய் ஒருமுறை
உன்மடியில் தலைசாய்க்க ..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro