#32 கடைசி பரிசு
வெளிச்சம்
கொஞ்சம் கொஞ்சமாக மறைகிறது..
இருள்
என்னை மூடிக்கொள்ள வருகிறது..
இன்னும் சற்று நேரத்தில்
என் மூளை
தன் வேலையை நிறுத்திவிடும்..
என் வாழ்க்கை
அத்தோடு முடிந்துவிடும்..
ஆனாலும்
இது என் உயிர் பிரியும் வேளை அல்ல..
மாறாக அடுத்தவர்க்கு
என் உயிரை கொடுக்கும் வேளை..
என்னால்
ஒருவர் பார்க்க, நடக்க, பேச
போகிறார்..
நான் கொடுக்கும் கடைசி பரிசு..
இவ்வுலகத்தின் அழகினை
இதுவரை கண்டிராதவருக்கு
என் கண்களை..
நடமாட முடியாமல்
அவதிப்படுபவருக்கு
என் எலும்புகளை..
இதயம் துடிப்பதை
குறைத்து கொண்டதால்
வலியில் துடிப்போருக்கு
என் இதயத்தை..
விபத்தில் அடிபட்டு
என்னை போன்று
உயிருக்கு போராடுபவருக்கு
என் இரத்தத்தை..
உடலை மனிதருக்கு பரிசாக கொடுத்து
ஆத்மாவை கடவுளிடம்
திரும்ப கொடுப்பேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro