#24 வேண்டும்
பூவோடு வண்டுகள் பேசும் வேளை
உன்னோடு காதல் பாஷை
பேச வேண்டும்..
வானோடு நீலம் கலந்திடும் வேளை
உன் முகம் காண வேண்டும்..
கடல் காற்றோடு ஈரம் சேரும் வேளை
உன் தோளில் தலை சாய்க்க
வேண்டும்..
நிலவோடு விண்மீன் கைக்கோர்க்கும்
வேளை
உன் கைப்பிடித்து நெடுந்தூரம் செல்ல
வேண்டும்..
இதயத்தோடு காதல் கலக்கும் வேளை
உன் உயிரோடு என் உயிரைக் கலக்க
வேண்டும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro