#23 இருட்டு
திடீரென்று ஏதோ என்னை சூழ
சுற்றிலும் ஒரே இருட்டு..
இதயமோ படபடக்குது பயத்தில்..
கண்களை இறுக மூடிக்கொண்டேன்..
அப்பொழுதும் அதே இருட்டு..
விழிகளைத் திறந்து கொண்டேன்..
இருட்டினூடே பார்க்க பழகிக்
கொண்டேன்..
இப்பொழுது மற்றவரிடமிருந்து
என் துக்கத்தை பதுக்கி கொள்ள
என் கண்ணீரை மறைத்து கொள்ள
என் சுயத்தை ஒழித்து கொள்ள
எனக்குதவும் என் உற்ற நண்பன்
இருட்டே..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro