#22 உணராமல் போயிருப்பேன்
கண்கள் இல்லாமல் பிறந்திருந்தால்
பார்க்காமல் போயிருப்பேன்
என்னை குத்தி கிழிக்கும்
உன் பார்வையையும்
என்னை சுண்டியிழுக்கும்
உன் உதடுகளையும்..
காது கேளாமல் பிறந்திருந்தால்
கேட்காமல் போயிருப்பேன்
என்னை கவர்ந்து இழுக்கும்
உன் பேச்சையும்
என்னை சிதறடிக்கும்
உன் சிரிப்பையும்..
இதயம் இல்லாமல் பிறந்திருந்தால்
உணராமல் போயிருப்பேன்
என்னில் கலந்துவிட்ட
உன் காதலையும்
என்னை உயிரோடு கொல்லும்
உன் பிரிவையும்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro