#20 காலங்கள் ஓடும்
நேற்று தான் நடந்ததோ
என்னும் நினைவுகள்
காலப்போக்கில் மங்கிப்போன
தருணங்களாய்..
முன்பு பார்த்து பழகிய முகங்களும்
இன்று கடந்து செல்லும்
நம்மை அறியாதவர்களாய்..
ஒன்றாய் கூடியிருந்த உறவுகள்
வருடங்கள் செல்ல செல்ல
திசைக்கு ஒருவராய்..
நம்முடனே இருந்தவர்கள்
காலத்தின் கட்டாயத்தில்
இவ்வுலகை விட்டு சென்றனரே..
ஒருமுறை நாம் கழித்த நேரங்கள்
இன்றோ அக்கணம் ஒருபோதும்
என் வாழ்வில் கடக்கவில்லை
என தோன்றுமே..
காலங்கள் ஓடும்..
குணங்களும் மாறும்..
நரைகளும் தோன்றும்..
இதயத்துடிப்பும் நிற்கும்..
இருக்கும்போதே வாழ்ந்துவிடு..
நினைப்பதை அடைந்துவிடு..
இன்பத்தை கொடுத்துவிடு..
துன்பத்தை தாங்கிவிடு..
காலத்தை அனுபவித்துவிடு..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro