#19 உன்னை தேடினேன்
என் விழிகள் உன்னை தேடின
கண்ணோடு கண்கள் நோக்க..
என் உதடுகள் உன்னை தேடின
இதழோடு இதழ் இணைக்க..
என் கைகள் உன்னை தேடின
விரலோடு விரல் கோர்க்க..
என் பாதங்கள் உன்னை தேடின
காலோடு கால் நடக்க..
என் இதயம் உன்னை தேடியது
நெஞ்சோடு நெஞ்சம் சேர்க்க..
என் காதல் உன்னை தேடியது
உயிரோடு உயிரை கலக்க..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro