#18 இசை
மழலையின் சிரிப்பொலியும்
இசை தான்
பெற்ற அன்னைக்கு..
அலைகளின் உரசலும் இசை தான்
கடற்கரை மணலுக்கு..
பூச்சிகளின் ரீங்காரமும் இசை தான்
நடுநிசி இரவுக்கு..
மகளின் கொலுசொலியும் இசை தான்
அவளை நேசிக்கும் தந்தைக்கு..
மழைத்துளியின் சப்தமும் இசை தான்
அதை தன்னில் ஏந்தும் நிலத்துக்கு..
காதலியின் சிணுங்கலும் இசை தான்
அவளை ரசிக்கும் காதலனுக்கு..
எல்லா ஓசையும் இசை தான்
இயற்கையை நேசிப்பவனுக்கு..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro