#14 மன்னித்து விடு
மன்னித்து விடு
நீ என்னை மறந்து போன பின்பும்
உன்னை நினைத்து இருப்பதால்..
மன்னித்து விடு
கனவாய் வாழ்வில் நுழைந்து
கொடுங்கனவாய் மாறி போன
காதலை
இன்னும் மறக்காமலிருப்பதால்..
மன்னித்து விடு
நீ பரிசாய் தந்த கண்ணீரை
இன்னும் என் கண்களில் சுமப்பதால்..
மன்னித்து விடு
இந்த காதலை மறந்து விட்டதாய்
நடித்து
இன்னும் அதை என்னுள் மறைத்து
வைப்பதால்..
மன்னித்து விடு
முடிந்து விட்டது என தெரிந்தும்
இனி விடியாது என புரிந்தும்
இன்னும் இன்னும் இன்னும்
உன்னை காதலிப்பதால்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro