#12 என் நண்பன் என் அவன்
நீ என் நண்பன் என
வெறும் வார்த்தையில்
சொல்கின்றேன்..
நீயே என் அவன் என
மனதில் ஆசை கொள்கின்றேன்..
உன் அருகில் வர
துடிக்கின்றது என் நெஞ்சம்..
நீயோ என் அருகில் வரும்போது
துடிக்க மறக்கின்றது என் நெஞ்சம்..
என் காதலை அறிந்து விடுவாயோ என
பதற்றம் கொள்கின்றேன்..
அதை நீ புரிந்து கொள்மாட்டாயோ என
ஏக்கம் கொள்கின்றேன்..
நட்பு என்ற சொல்லின் பின்
மறைந்து கொள்கின்றேன்..
என் காதலை மறைத்து
கொள்கின்றேன்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro