#1 கடவுள்
உனக்கென யாரும் இல்லை எனும்
நினைப்பு வரும்போதே
உனக்கு ஞாபகம் வரும் அவரை..
பகிர்ந்து கொள்ள முடியா
சோகங்களையும்
சொல்லி அழ முடியும் அவரிடம்..
யாருக்கும் தெரியாமல் நீ செய்த
அனைத்தும்
தெரிந்து கொண்டவர் அவரே..
உனக்கு தேவையான அனைத்தும் நீ
கேட்காமலே
உனக்கு தருபவர் அவரே..
அவரே கடவுள்..
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro