Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

பகுதி -1

கல்லூரி!! இந்த வார்த்தை எனக்கு ஒரு பொறுப்புணர்வை கொடுக்கிறது. நான் இப்போது 18 ஐ நெருங்கி கொண்டிருக்கிறேன்.

என் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. எண்களில் தவறு இருக்கலாம் ஆனால் அவைகள் அதிகமாகவே உள்ளன.

ஒரு பொறியியல் கல்லூரியில் இருக்கை பெறுவது என்றால் பெரிய விஷயமாக இருக்காது, ஆனால் இப்போது பெரிதாக ஏதோ சாதித்தது போல் உணர்கிறேன். என்னால் MIT அல்லது PSG போன்ற கல்லூரிகளில் சேர முடியவில்லை, ஆனால் என் கல்லூரி ஒரு நிலையான கல்லூரியாக உள்ளது.

நான் கல்லாரியின் விடுதியில் தங்கி படிக்க போகிறேன் .நான் எப்பொழுதும் என் அம்மாவின் செல்லம். இதுவரை என் பெற்றோர்களை சார்ந்தே இருந்ததால் விடுதி என்றாலே சந்தோசமாகவும் அதே நேரம் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது.

சென்னை : நவீன நகரம் அதோடு நாகரிகம் வாய்ந்த நகரம் என்றும் சொல்லலாம். பெரிய பெரிய வளாகங்கள், கடற்கரைகள்,ிளப் என்று பரந்து விரிந்திருக்கும் நகரம். என் பெற்றோர்கள் என்னை இந்த சூழலில் வளர்த்து படிக்க வைத்ததால் என்னவோ எனக்கு சென்னை மொத்தமும் நன்றாகவே தெரியும். சென்னையில் அதிகமான கல்லூரிகள் இருந்தும் என்னுடைய அப்பா என்னை மதுரையில் படிக்க வைக்க விரும்பினார்.





மதுரை : " கோயில்களின் நகரம் " என்றும் " தூங்கா நகரம்" என்றும் அழைக்கப்படும். காலத்திற்கு ஏற்ற மாதிரி இந்த உலகம் மாறினாலும் இந்த நகரத்தில் தமிழர்களின் மரபு என்றும் மாறாது. இந்த நகரத்திலும் இரண்டு மிக பெரிய வளாகங்களும் உள்ளன. என்ன ஒன்று எனக்கு அறவே பிடிக்காத கிளப் இன் இரவு வாழ்க்கை மற்றும் இல்லை.

இந்தியாவின் தூய்மையான நகரமாகவும் மரபுகள் நிறைந்த நகரகமகவும் இந்த மதுரை சிறந்ததாகும். இதன் காரணமாகவோ என்னவோ இங்குள்ள மக்கள் " நானும் மதுர காரன் தான் டா" என்று பெருமையோடு சொல்வார்கள்.

இந்த மாணவர்களுக்கான விடுதியில் கீழ்த்தளம் மற்றும் மேலே இரண்டு மாடிகளும் உள்ளது. கீழ்த்தளம் முழுவதும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக.சீனியர்களின் கேலி,கிண்டலுக்கு முற்றிலும் தடை செய்யபட்டிருந்தது. நான் எனது விடுதியின் வார்டன்ஐ போய் சந்தித்தேன்.தற்பொழுது தற்காலிக அறைகள் தான் கொடுக்கப்படும் என்று கூறி என்னை அறை என் 121 இற்கு செல்ல சொன்னார்.

அறைகள் அனைத்தும் ஒரு செவ்வக வடிவில் இருந்தன மற்றும் ஒவ்வொரு மூலையில் கழிவறைகள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.நடுவில் உள்ள காலியிடம் துணிகள் காய வைப்பதற்கு, அப்படி ஏதும் காயவில்லை அங்கு ஏனென்றால் அனைவரும் புதிது.







அங்கு நான்கு தாழ்வாரங்கள் இருந்தது. என் அறை மூன்றாவது தாழ்வாரத்தில் இருந்தது, இதில் 121-130 எண் கொண்ட அறைகள் இருந்தன.

நான் அறையின் வாசலில் சென்று நின்று உள்ளே கவனித்தேன். உள்ளே படுக்கைகள் ஏதும் இருக்கவில்லை(ஏனென்றால் பராமரிப்பிற்காக சென்றுள்ளது என்றும் விரைவில் வந்து விடும் என்றும் சொன்னார்கள்). அங்கே நான்கு மாணவர்கள் இருந்தார்கள். அதில் ஒருவன் அறையின் இறுதியில் சற்று குட்டையாக பளிச்சென்று இருந்தான். அவன் அருகில் சற்று அவனை விட உயிரமாக ஒருவன் நின்றிருந்தான்.மூன்றாமவன் இரண்டமவனின் அதே உயரம் கொண்டு சாதரணமாக இருந்தான்.நான்காவதாக ஒருவன் வெளிர் என்ற நிறமும் சற்று பருமனாகவும் இருந்தான்.

அவன் வாசலில் நான் நிற்பதை பார்த்து சிரிப்போடு என்னை அழைத்தான் " வாங்க ஜி இந்த ரூம் தான" என்று.

இந்த அறைக்கு அவனே சொந்தகாரன் போல அவன் நடந்து கொண்டாலும் அவனை தடுக்காமல் தொடர்ந்தேன். என் வீட்டில் தனி அறையில் படுத்தே பழகிய நான் இந்த இடம்,அறை அனைத்தும் புது விதமாக தோன்றியது










அறையின் வாசலில் மற்ற காலணிகள் இருப்பதை பார்த்து விட்டு என்னதையும் விட்டுவிட்டு உள்ளே நடந்தேன். அறையின் விளிம்பில் என் பொருட்கள் அனைத்தையும் வைத்தேன்.

மற்ற மூவரும் ஏதோ படத்தில் மூழ்கி இருந்தார்கள். என்னை வரவேற்றவன் மட்டும் என் அருகில் வந்து அமர்ந்து " ஜி உங்க பேர் என்ன? என் பேர் கணேசன். வயிற பாத்தாலே தெரிஞ்சிருக்கும்".

என் பெயரை கூறினேன். எனக்கு ஒரே பதற்றம் ஏனென்றால் அந்நியர்களுக்கு மத்தியில் இருப்பதால் தான். வெளியே சென்று என் அப்பாவிற்கு தொடர்பு கொண்டு நடந்த அனைத்தையும் கூறிவிட்டு அறைக்கு திரும்பினால் அதே இன்முகத்தோடு கணேசன் என்னை வரவேற்றான். " என்ன ஜி காலேஜ் ல என்ன எதிர் பார்க்கறீங்க" . ஒரு சிரிப்போடு " தெரில ஜி எல்லா படத்துலயும் காட்றாங்கல அதுல பாதி அளவு செமயா இருந்தாலே போதும் " .

" நான் சின்ன வயசுல இருந்தே பாய்ஸ் ஸ்கூல் ஜி . 8 th வரை எதுமே தெரியல 9 th வந்ததும் தான் என்னடா படத்துல பொண்ணுங்க கூட செமயா என்ஜாய் பண்றாங்க, நம்ம என்னடானா பாய்ஸ் ஸ்கூல்ல இருக்கோம்ன்னு தோன ஆரம்பிச்சிடுச்சு"








என்னால சிரிப்ப கட்டுபடுதவே முடியல. அவன் திரும்பவும் தொடர்ந்தான் " 10 th வரை இப்படி தான். 11 th விருதுநகர்ல படிக்க போனேன். அட!! அப்படி பாக்காதப்பா. அந்த மாவட்டத்துல தான் நிறைய டாப்பர்ஸ் இருக்காங்க அதே மாதிரி அங்க போய் எத்தன பேர் வாழ்கை ஒன்னும் இல்லாம ஆகிருக்கு தெரியுமா ".

" அங்க ரெண்டு பிளாக் இருந்துச்சு அதுல நிறைய பொண்ணுங்க செமயா இருந்தாங்க. நானும் இந்த ரெண்டு வருஷமும் நமக்கு சரியான வேட்டை தான்னு முடிவு பண்ணிட்டேன்." என்றான்.

நான் சிரித்துகொண்டே " கலக்குங்க ஜி. நான் என் ஸ்கூல்ல ஒண்ணுமே பன்னல ஏன்னா என்னைய அங்க எல்லார்க்கும் தெரியும் அதனால அமைதியா நல்ல பையனா இருந்தேன்"

ஒரு பெருமூச்சுவிட்டுவிட்டு தொடர்ந்தான் " போயா !! நாங்க போய் கிளாஸ்ல உக்காந்தோம். மொத்தம் 60 பேர் 10 பெஞ்சுல உகாந்தோம்.ஒரு பெஞ்ச்க்கு 4 பேர் தான் உக்காரணும் நாங்க 6 பேர் உக்கந்துருந்தோம். மித்த 10 பெஞ்ச்ச பொண்ணுங்களுக்குன்னு விட்டு வச்சோம் ஒருத்தன் கூட கம்ப்ளைன்ட் பன்னல ".

" பின்ன என்ன ஜாலி தான ஜி " என்றேன்.

அவன் சொன்னான் " அப்ப சார் கிளாஸ்க்கு வந்தாரு, ஏன்டா இப்படி உக்காந்துருகீங்கன்னு எங்கள பாத்து கேட்டாரூ. உடனே நாங்க பெஞ்ச் பொண்ணுங்களுக்கு சார் ன்னு சொன்னோம். அதுக்கு அவர் இப்ப பொண்ணுங்கலாம் அந்த பிளாக்ப்பான்னு சொல்லிட்டாரு. எல்லாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்பறம் எங்கள அறிமுக படுத்திகிட்டோம்."






எனக்கு சிரிக்காம இருக்க முடியல " ஜி நீங்க ரொம்ப பாவம்".

அவன் கேட்டான் " ஜி காலேஜ்லயாவது பொண்ணுங்கள நம்ம கூட தான உக்கார வைப்பாங்க இல்லனா வேற காலேஜ் தான் போகணும்"

நாங்கள் அனைவரும் சிரித்தப்படி கண்டிப்பா நம்ம கிளாஸ்க்கு அவங்கலாம் வந்துடுவாங்கன்னு சொன்னோம் .

அப்பொழுது ஒரு பையன் வந்து நமக்கு இது இரவு சாப்பாடு நேரம் என்று கூறினான். நாங்கள் அனைவரும் எழுந்து சாப்பிட சென்றோம்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro