கல்லூரி -5
Thanks to all for your support and I am blessed to get it.
Happy birthday @aaradhana_adithya I am updating all other books for you.
****
பள்ளி காலங்களில் முதல் நாளில் அறிமுக படுத்தி கொள்ள சொல்வார்கள். நமக்கே அலுத்து விடும்.
காந்தி , நேரு இவர்களா நம்முடன் படிக்கிறார்கள். பெயர் தெரியாத ஒரு பள்ளி, யாரென்று தெரியாத ஒரு அப்பா அம்மா. கொடுமையாக இருக்கும்.
அதே தான் இங்கயும் நடந்தது. சிவில் இன்ஜினியரிங் படிக்க வந்தவனிடம் போய் நீ என்னவாக போகிறாய் என்று கேட்டார்கள்.
அவன் B.E சிவில் இன்ஜினியரிங் படித்து விட்டு டாக்டர் ஆக போகிறானா என்ன ??
இந்த அளவுக்கு எரிச்சலாக போய்கொண்டிருக்கும் பொழுது கூட சாமுவேலிற்கு ரசிக்க தான் தோன்றியது.
ஏனென்றால் அவள் அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தாள்.
அவளும் சென்னை தான். ஒரே ஊரில் இருந்து கொண்டு எப்படி பார்க்காமல் இருந்தேன் என்று ஒரு நிமிடம் யோசித்தேன். பிறகு, அது ஒரு ஊரா!! இல்லை அது ஒரு கடல்!!
பக்கத்துக்கு தெருவில் கூட யாரையும் தெரிந்து கொள்ளமுடியாது. கோடிக்கணக்கான தெருக்கள் இருக்கும்.
அந்த செமஸ்டற்கு அவன் " ஆங்கிலம் , இன்ஜினியரிங் மேத்ஸ், பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர், இன்ஜினியரிங் கிராபிக்ஸ் " இதெல்லாம் படிக்க வேண்டும்.
அவனின் வகுப்பு ஆசிரியர் Dr . சந்திரசேகர், அவர் மேத்ஸ் department இல் சீனியர் ஆசிரியர். முதலாம் ஆண்டில் மொத்தம் 32 பிரிவுகள். ஒவ்வொரு பிரிவுகளிலும் 60 பேர் படிக்கிறார்கள். ஒரு பிரிவில் மட்டும் 59 மாணவர்கள் மட்டும் தான்.
4 பிரிவுகளுக்கு ஒரு ஒருங்கிணைப்பாளர். மேத்ஸ் department தலைவர் தான் டீன். ரொம்ப கண்டிப்பானவர். பார்க்க தான் டம்மி மாதிரி , ஆனா மம்மி அளவிற்கு செய்வார்களாம். மம்மி என்றால் நம் வீட்டில் இருக்கும் அம்மாக்கள் அல்ல , எகிப்து பிரமிடில் இருக்குமே அது தான் !!
9:15 வகுப்பு ஆரம்பித்து விடும். நேரத்திற்கு உள்ளே வந்து விட வேண்டும் இல்லை என்றால் 9.16 இக்கு சுற்றி இருக்கும் 4 கதவுகளும் அடைக்க பட்டுவிடும். அதிலும் மதிய இடைவேளையில் மாணவர்கள் உள்ளே இருக்க கூடாது என்று விதிகள் வேறு (மாணவிகளுக்கு இந்த விதிகள் கிடையாது).
திடிரென்று சாமுவேலிற்கு ஒரு சந்தேகம். கல்லூரியை சுற்றி காட்டும் பொழுது ஒரு கூட்டம் அதிகமாக வாயாடினார்களே அவர்கள் எங்கே ??
முதல் நாளே வரவில்லையா ??
ஆங்கிலம் எடுக்கும் ஆசிரியர் இன்ஜினியர்களை நக்கல் பண்ணிகொண்டிருந்தார். பல பேர் பயந்துவிட்டார்கள்.
மதிய இடைவேளை வந்தது. ஒவ்வொரு பிரிவிற்கும் 2 ஆசிரியர்கள் வந்து பசங்களை வெளியே போக சொன்னார்கள்.
ஜெயிலில் இருக்கும் தீவிரவாதிகளை கூட இப்படி நடத்த மாட்டார்கள்.
அனைவரும் வெளியே வந்தோம் உடனே கதவுகளை பூட்டு போட்டுவிட்டார்கள்.
" அவர்களின் அம்மாக்கள் கூட இப்படி பார்த்து கொள்ள மாட்டார்கள் " என்றான் ஒருவன்.
ஒரு பையன் சாமுவேலிடம் " ஜி , எதாவது அழகான பெண்ணை பார்த்திர்களா உள்ளே ?" என்று கேட்டான் .
பெண்ணை பார்கவில்லை , ஒரு தேவதையை தானே பார்த்தோம். என்று நினைத்துக்கொண்டு இல்லை என்றேன்.
" எந்த கிழவியை பாத்துக்க இந்த ஏற்பாடு செய்றாங்க??" என்று நக்கலாக கேட்டு விட்டு சென்றுவிட்டான்.
அறைக்கு வந்து அப்பாவிற்கு தொடர்பு கொண்டு முதல் நாள் பற்றி கூறிவிட்டு வந்தான். அறையில் கணேஷ் அவனுக்காக காத்திருந்தான். அவனை பார்த்த சாமுவேல் உற்சாகமாய் " ஜி , அவளும் நானும் ஒரே கிளாஸ் தான்"
கணேஷிற்கு என்னவென்று புரிவதற்கே 2 நிமிடம் ஆகிற்று. " ஜி கலக்குங்க. பெயர் என்ன ??"
அப்பொழுது தான் சாமுவேலிற்கு ஞாபகம் வந்தது அவளை பார்த்துக்கொண்டே இருந்தோமே தவிர அவள் பேசியதை கவனிக்கவில்லை என்று.
தெரியவில்லை என்று சொன்னவுடனே " என்ன ஜி சொல்லுரிங்க , எங்க கிளாசில் திருக்குறள் சொல்லுவது போல் திரும்ப திரும்ப 4 முறை அறிமுக படலம் நடத்திட்டாங்க."
" எங்க கிளாசிலும் அப்படி தான் " என்றான் சாமுவேல்.
" அப்ப எப்படி பெயர் தெரியாம இருந்தது ?" சிறிது நேரம் கணேஷ் யோசித்துவிட்டு " அப்போ பார்த்துக்கொண்டே இருந்தியா? எதையும் கவனிக்கவில்லை அப்படி தானே ?"
சாமுவேல் சிரித்தான் அவன் சிரிப்பிலே தெரிந்தது அப்படி தான் என்று. சாப்பிட சென்றார்கள். பருப்பு சாதம் , பீட் ரூட் பொரியல்& அப்பளம். எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம்.
கணேஷிற்கு தான் எல்லாமே பிடிக்குமே. சாமுவேலிற்கும் இது பிடிக்கும் அதனால் நன்றாகவே சாப்பிட்டான்.
கல்லூரி சென்றோம். அடுத்து பிசிக்ஸ் கிளாஸ். ஆசிரியர் வந்து "அறிமுக படுத்தி நொந்து போய் இருப்பிங்க அதனால் நான் கேட்க வில்லை " என்றார். ஆனால் சாமுவேலிற்கு திரும்ப சொல்லவேண்டும் போல இருந்தது.
அதனை தொடர்ந்து அனைவரையும் பிசிக்ஸ் லேப் செல்ல சொன்னார்கள். பெயர் வரிசையின் படி சாமுவேல் போய் அமர்ந்தான்.
அவன் பெயர்க்கு நேராக 15 என்று குறிப்பிட்டு இருந்தது. அடுத்தது 16 அவள் வந்து அவன் அருகில் அமர்ந்தாள்.
சாமுவேலிற்கு இறக்கை கட்டி பறப்பது போல் இருந்தது. என்ன வாழ்க்கை டா இது என்று அவனையே கேட்டு கொண்டான்.
அங்கு உள்ள ஆசிரியை சொன்னார்கள் " இந்த செமஸ்டர் முழுதும் இது தான் உங்கள் இடம் யாரும் மாற கூடாது "
ஆனால் சாமுவேலிற்கோ இந்த செமஸ்டர் மட்டும் தானா ? ? என்று தோன்றியது.
வாழ்க்கை முழுதும் இப்படியே இருந்தால் என்ன தப்பு ??
****
How was the chapter?
What do you think about the story till now?
Take care be safe and stay blessed.
-Yagappar
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro