!!!1!!!
Tap here to start writing
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்
கந்தர் சஷ்டி கவசம் தனை
அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
சஷ்டியை நோக்கச் சரவணபவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட
மையல் நடம் செய்யும் மயில்வாகனனார்
கையில் வேலால் எனைக் காக்கவென் றுவந்து
வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலாய் எண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
என அத்விக்காஸ்ரீ கந்த சஷ்டி பாடி முடிக்க போது வாசலில் யாரோ அளப்பு மணி அடித்தார்கள்...
" டிங் டாங்............என விடாமல் அடிக்க அந்த சத்தத்தில் கடுப்பு ஆகி.... யாரு அது இப்படி பெல் அடிச்சுகிட்டு இருக்கிறது நிம்மதியா பூஜை கூட பண்ண விடாம , என திட்டி கொண்டே போய் கதவை திறக்க அங்கே
" ஹாய் , நாங்க இப்போ தான் பக்கத்து பிளட் புதுசா குடி வந்து இருக்கோம் கொஞ்சம் காபி பவுடர் கிடைக்குமா என அவன் வந்து நிற்க "
முதலில் அவனை பார்த்த உடன் அதிர்ந்தவள் பிறகு.. சாரி நான் காபி குடிக்கிறது இல்லை நீங்க போகலாம் என அவன் பதில் பேசும் முன் கதவை பட்டென்று அடைத்து விட்டு அவள் வேலையே பார்க்க நேராக கிட்சேன் சென்றாள் , அங்கே அவளுக்கு தேவையான சுக்கு மல்லி போட்டு தேநீர் போல் செய்து.. தனக்கு ஒரு கபில் எடுத்து கொண்டு மற்றோரு கபில் குழந்தைக்கு தேவையான பாலை மிதமான சூட்டில் ஆற்றி எடுத்து கொண்டு ஒரு அறைக்குள் சென்றாள் ..
அங்கே வானில் இருந்து இறங்கி வந்த தேவதை போல் இரண்டு வயது குழந்தை ஆராதனா உறங்கி கொண்டு இருந்தாள் , எவ்வளோ வேலை இருந்தாலும் எவ்வளோ நேரம் ஆனாலும் ஆத்விக்காவின் உலகம் ஆராதனா மட்டுமே , மகளுக்கு வேண்டி அவளும் ஊமை ஆகி போனாள் , சிறப்பு கல்வியியல் கல்வி படித்து விட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரியே சிறப்பு குழந்தைக்கான தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறாள். அன்று மகாபாரதத்தில் எப்படி காந்தாரி தன் கணவனுக்காக கண்ணை கட்டி கொண்டு பார்வையற்றவள் ஆகினாரோ அதே போல் ஆத்விக்காவும் தன் மகளுக்குக்காக குரலற்றவள் ஆகி போனாள் .
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro