9
சரியா 6.50 எல்லாம் ப்ரியா அர்விந்தின் வீட்டு வாசலில் ஹார்ன் அடிதுக்கொண்டு நின்றால்.உடனே அவளின் காரின் சத்தத்திற்கு வெளியில் வந்தவன் "ஹேய் ரியா வா உள்ள.அம்மா உன்ன பார்க்கனும்னு சொல்ராங்க "என்றான்.
"ஹேய் இல்லப்பா இன்னொரு நாள் வரேன் இன்னைக்கு வேண்டாமே"என்றவலை கட்டாயப்படுத்த விரும்பாமல்
"சரி ஒரு 15 நிமிசம் வெயிட் பன்னு.நிஷாவ ரெடி பன்னிட்டு வர்ரேன்"என்றவனை நக்கலாக
"நிஷாவ ரெடி பன்ன போறியா இல்ல நீ ரெடியாக போறியா.தயவு செஞ்சி இன்னைக்காவது ஜீண்ட்ஸ் டிசர்ட்ல வாடா "என்றால்
"சரி" என்று சொல்லிவிட்டு உடனே உள்ளே சென்றான்.
அவனும் நிஷாவும் ரெடி ஆகி அவர்களின் ரூமை விட்டு வெளி வந்த வேலை பேபி பிங்க் கலரில் இளர் நீல மெல்லிய வேலைப்பாடு இட்ட சாரி அணிந்து ,தேவதை போல அவனது தாயுடன் பேசிக்கிண்டு இருக்கும் ப்ரியாவை கண் கொட்டாமல் அப்படியே பார்த்து சிலை என நின்றான் நம் நாயகன்.
அவனைக்கண்ட அவனது தாய் "டேய் அப்படியே நம்ம ரம்யா போலவே இருக்காடா இந்தப் பொண்ணு.என்ன கொஞ்சம் உயரம் கம்மி.அதுவும் பெருசா இல்லை.இரட்டைப் பிள்ளைங்களா என்று கேட்டால் அதுவும் இல்லயாமே.இது அந்த வாலுக்கு அக்காவாமேடா"
"ஆமாமா ஒரு வருசம் தான் பெரியவ.சரிமா என் ஆபிஸ் கொலீக் சங்கீதா வீட்ல எல்லாருக்கும் பார்ட்டி போய்ட்டு வந்துர்ரேன்.நீ ரெஸ்ட் எடுமா.நான் நிஷாவையும் கூட்டிட்டு போறன்" என்றவனை ப்ரியா இடை மறித்து
"அம்மா நீங்களும் வாங்களன்.ஒன்னா போய்ட்டு வரலாம் "என்றால்.
உடனே அரவிந்தின் அம்மா "இல்லம்மா இன்னைக்கு எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு.இன்னொரு நாளைக்கு நான் வரேன்.இப்ப நீங்க போய்ட்டு வாங்க என்றார்.
ப்ரியா உடனே அதறகு "சரிமா நாங்க போய்ட்டு வாரம்" என்று விடைபெற்றாள்.
ப்ரியா காரை ஸ்டார்ட் செய்ய அர்விந்தும் நிஷாவும் அவள் அருகில் உட்கார்ந்தனர்.நிஷாவின் டிரஸ்ஸ கவனித்த பரியா "ஹேய் குட்டிம்மா நீங்களும் நானும் ஒரே கலர் டிரஸ்ஸா" என்றாள்.
அதற்கு நிஷா கெக்கே பெக்கெ என்று தனக்கு தெரிந்த பாசையில் பேசி சிரித்தால்.அப்போதுதான் கவனித்த அர்விந்த் நிஷாவிற்கு பேபி பிங்க் கலரில் கவுன் அணிவித்திருந்தான்.அதற்கு ஒரு படி அதிகமாக அவன் இளர் நீல டிசர்ட் போட்டிருந்தான்.
காரை ஸ்டார்ட் செய்தவளிடம் "ஆமா 9 மணிக்குதானே சங்கீதா பார்ட்டி ஸ்டார்ட் என்றால் .இப்போ 7.15. இவ்லோ ஏர்லியா நாம சங்கீதா வீட்டுக்கா போறம்" என்றவனை பார்த்து முறைத்தவலாக
"ஒன்னும் பேசாம இரு" என்று கூறிவிட்டு காரை சீரான வேகத்தில் செலுத்தினால்.
கார் நேராக பீச் ரேட்டிற்கு செல்ல ப்ரியாவோ அந்த டிரைவிங்கை ரசித்த வண்ணம் உதட்டில் ஏதோ ஒரு பாடலை முனு முனுத்துக்கொண்டு வந்தால்.உடனே ஒரு ஐஸ்கிறீம் வண்டியை கண்டதும்
"ஹேய் அர்விந்த் ப்ளீஸ் எனக்கு ஐஸ்கிறீம் வேனும் வாங்கிக்கொடுடா" என்று கெஞ்சினால்.இப்படி இரு அழகு தேவதை அருகில் இருக்க அவன் என்ன செய்வான் தன்னிலை மறந்து "சரிமா" என்று கூறிவிட்டு இரண்டு ஐஸ்கிறீம் வாங்கினான்.
காருக்கு அருகில் வந்து அவளிடம் ஒன்றை நீட்ட அவளே "ஹேய் இரண்டும் எனக்குதானே "என்றாள்.
அவனோ "இல்லை.ஒன்னு உனக்கு,ஒன்னு எனக்கு"
"போடா தடியா ,இது இரெண்டுமே எனக்குதான்.உனக்கு வேனும்னா இன்னும் இரண்டு வாங்கிக்க.அதுலயும் ஒன்ன எனக்கு கொடு"என்றவளை
குழந்தை போல எப்படி செல்லமாக அடம்பிடிக்கிறாள் என்று என்னி மனதுக்குள் சிரித்துக்கொண்டான்.
அர்விந்த் அறியாமலே அவனுக்குள் ப்ரியா அவளின் குழந்தைத் தனத்தால் உள் நுழைய தொடங்கிவிட்டால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro