5
காலையின் குளித்து முடித்து டீக்காக டிறஸ் செய்து முதல் நாள் ஆபிஸ் சென்றான் அரவிந்த்.போகும் வழியெங்கும் எப்படியும் தன்னுடைய திறமைகளை வெளிப்படுத்தி ப்ரியாவிடம் நல்ல பெயர் எடுத்து விட வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.சரியாக 6.58 ற்கு ஆபீசை அடைந்தான்.
ரிசப்சனிடம் சென்றவன் "என் பெயர் அர்விந்த். புதுசா ஜாப்ல சேர வந்திருக்கேன்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ரிசப்சனில் இருந்த பெண் அவனை பார்த்து சைட் அடித்தவளாக "வெல்கம் மிஸ்டர் அர்விந்த், வெல்கம் டு அவர் ப்ரிரம் இண்டீர்யர் .கொஞ்ச நேரம் வெயிட் பன்னுங்க.லீசா வந்து உங்களை கூட்டிட்டு போவாங்க" என்றாள்.
ரிசப்சனிஸ்ட் லீசாக்கு கால் செய்தவள் "ஹேய் லீசு செமயா ஒரு பையன் வந்திருக்காண்டி, நியூ ஜாயின்னாம்"
"லூசு ரேனு ,சும்மா அவன பார்த்து கற்பனைக் கோட்டை கட்டாத.அவனுக்கு கல்யானமாகி ஒரு வருசம் ஆகிடிச்சு.சோ பேபி நீ கொஞ்சம் அடக்கி வாசி"
"ஹேய் நிஜமாவா சொல்ர .சரி என்ன செய்ய நம்ம தலைவிதி" என்று நக்கலாக கூறிய ரேனுவை திட்டிவிட்டு ரிசப்சனிற்கு வந்து லீசா அர்விந்தை எல்லோருக்கும் அறிமுகம் செய்ய கூட்டி சென்றாள்.
ஓவ்வொருவராக அறிமுகம் செய்தவள் கடைசியாக சங்கீதாவை அறிமுகம் செய்தாள்.சங்கீதாவுடன் சிறிது நேரம் பேசியவன் கடைசியாக அவளே ப்ரியாவின் அறைக்கு அவனை அழைத்து சென்றாள்.
அறைக்குள் நுழைந்தவன் "குட்மார்னிங் மேம் "என்றான்.
உடனே ப்ரியா "ஹேய் அர்விந்த் நோ மோர் மேம் ஒக்கே.மேம் எல்லாம் நேத்தயோட போயாச்சு.கால் மீ ப்ரியா"
"சரி ப்ரியா" என்றவன் நேற்று அவள் பேசியதற்கும் இன்று அவள் பேசுவதற்கும் நேர் எதிராக தோன்றியது அவனுக்கு.ஒருவேலை இண்டர்வியூக்கு வந்தவனிடம் கொஞ்சம் கடுமையாக நடந்து கொண்டாளோ என்று எண்ணியவனை சங்கீதா உடனே கலாய்க்க ஆரம்பித்தால்
"ஹேய் ரியா அப்போ உனக்கு அர்விந்த ஞாபகம் இருக்குதானே. தம்பி நேற்றெல்லாம் ஒரே புலம்பல்.ப்ரியா மேம் கு என்ன ஞாபகமே இல்லை,நீங்களாச்சும் ஞாபகம் வெச்சிருக்கிங்கலே அப்படின்னு "என்று நக்கல் கலந்த தொனியில் பேசினாள்.
உடனே அர்விந்த் இதற்கு என்ன பதில் சொல்வது என்று முழித்தவனை மேலும் கலாய்க்க எண்ணி " ஏதோ பழைய லவ்வர சந்திச்சி அவ இவன ஞாபகம் வெச்சுக்காத மாதிரியே பீல் பண்ணாண்டி" என்றவளை உடனே அர்விந்த்
"அம்மா தாயே போதும் நீங்க போட்டு கொடுத்து என்றான்".
"அதானெ பார்த்தேன் இப்படி சொல்லிதானே ஆகனும் இல்லைன்னா வீட்ட போனதும் மைதிலி வெளுத்து வாங்கிட மாட்டா" என்ற சங்கீதாவை இருவரும் முகம் இறுக பார்த்தனர்.
இருவரின் முகமாற்றத்தையும் கவனித்தவள் கொஞ்சம் அமைதி ஆனவள் "சரி ரியா எனக்கு கொஞ்சம் வேல இருக்கு நான் கிளம்புறேன்"என்று அறையை விட்டு வெளியேறினாள்.
வெளியில் வந்தவள்
'
என்னது மைதிலி பத்தி பேசினதும் அர்விந்த் முகம் கவலையில மாறிச்சு. ஆனா ரியாவோட முகம் ஏன் அப்டி மாறனும்.சம்திங் ராங். பொறுத்திருந்து பார்ப்போம்'
என்று தன் கெபினுக்குள் நுழைந்தவள் பொறுமை என்பது இல்லாமல் உடனே ப்ரியாவுக்கு கால் செய்து
"ஹேய் ,மைதிலிய பத்தி பேசினதும் நீ எதுக்கு அப்படி ஃபேஸ் ரியாக்சன் காட்டின" என்று கேட்டதும்
அதற்கு ப்ரியா "லூசு மாதிரி உளராத.இருக்குற வேலையை பாரு" என்றாள்.
வேலயில் சேர்ந்த அர்விந்துக்கு அவனின் வேலையயும் அது பற்றிய நுனுக்கங்களையும் ப்ரியாவே அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.அவனின் டெஸ்க் அவளின் அறையிலேயே போடப்பட்டிருந்தது அவனுக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆனால் ஒரு விடயம் கவனித்தவன் கம்பனியில் மொத்தம் 22 பேர் வேலை செய்ய 16 பேர் பெண்கள். பெரும்பாலானவர்கள் அவன் படித்த அதாவது ப்ரியா ,ரம்யா,சங்கீதா,மைதிலி படித்த காலேஜை சேர்ந்தவர்கள்.அதனால்தான் என்னவோ கம்பனி உள்ளே ஒரு காலேஜ் அட்மோஸ்பியரே நிலவியது.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro