Chào các bạn! Vì nhiều lý do từ nay Truyen2U chính thức đổi tên là Truyen247.Pro. Mong các bạn tiếp tục ủng hộ truy cập tên miền mới này nhé! Mãi yêu... ♥

41

சரியாக 7 வருடம் கழித்து.....

திடீரென்று ஒரு நாள் ரேனுவின் தந்தை மாரடைப்பில் இறக்க எல்லோரும் ரேனுவின் வீட்டில் இறுதிச்சடங்கிற்கு வந்திருந்தார்கள்.எல்லோருடைய பிள்ளைகளும் ஸ்கூல் செல்லும் வயதை அடைந்திருந்தனர்.சங்கீதாவுக்கு இரண்டும் ஆண் பிள்ளைகள்.ரம்யாவுக்கு ஒரு பெண் இரண்டு ஆண் என்று 3 பிள்ளைகள்.நம் காதல் ஜோடிக்கு நிஷா மட்டுமே.எல்லா சடங்கும் முடிந்திருந்த தருனம் தீபக் தன் நான்கு பிள்ளைகலோடும் 7 வருடம் கழித்து இந்தியா வந்திருந்தான்.அவன் அவ்வப்போது எல்லோருடனும் பேசுவான்,ஆனால் அவன் பிள்ளைகளுடன் வந்திறங்கியதை கண்ட எல்லோருக்குமே ஆச்சரியம்.யாரிடமும் கூறாமல் திருமணம் முடித்துக்கொண்டான் என்று எல்லோருக்குமே அவன் மீது கோபம் வந்தது.ஆனால் சங்கீதா அவனை எரித்துவிடுவது போல பார்த்தால்.ஏனென்றால் ரேனுவுக்காக கடைசிவரை அவன் காத்திருப்பேன் என்று கூறிவிட்டு இப்படி பிள்ளைகளுடன் வந்தது அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.உற்றார் சொந்தங்கள் எல்லாம் கலைந்து செல்ல நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் இரவு உணவை உண்டு விட்டு ஆளுக்கு ஒரு பக்கமாக பேசிக்கொண்டிருக்க தீபக்கிடம் தனியாக வரும்படி கண் ஜாடை காட்டி விட்டு சங்கீதா சென்றாள்.

தீபக்கும் அவள் அருகில செல்ல "நாயே நீயெல்லாம் ஒரு மனிசனாடா.முதல்ல நீ கல்யாணம் பன்னத ஏன் சொல்லல.இரண்டவது கல்யானம் பன்ன நீ என்ன மயிருக்கு இங்க வந்த. ஏதோ அன்னைக்கு பெரிய டயலாக்லாம் விட்டுட்டு போன.ரேனுவுக்காக காலம் பூரா காத்திருப்பேன்னு..இதுதான் நீ காத்திருக்குற லட்சனமா..7 வருசத்துல 4 பிள்ளைங்க.ஒவ்வொன்னும் ஒவ்வொரு ஜாடைல..அவ அம்மா என்ன.........."என்றவள் அப்போதுதான் கவணித்தால் தீபக்கின் ஒவ்வொரு பிள்ளையும் வேறு வேறு ஜாடையில் இருந்தனர்.பெண் பிள்ளைகள் இருவரில் ஒருவர் ஜபனீஸ் சாயலிலும் இன்னொருத்தர் ஆங்கிலேய சாயலும்,ஒரு பையன் கறுப்பினத்தவனாகவும் மற்றவன் மத்திய கிழக்கு சாயலிலும் இருந்தார்கள்

"டேய் இவங்கள்ளாம்...."என்று இழுத்தவளை

"அடி அவசரக்குடுக்கை சங்கீ டார்லிங்..இவங்கெல்லாம் என் பிள்ளைங்கதான்.ஆனா எனக்கு பிறக்கல்ல.என் ஸ்வீட் ஹார்ட் அளவுக்கு என்னால ஆர்பனேஜ்லாம் நடத்த முடியல. ஏதோ நம்மலால முடிஞ்சது 4 பிள்ளைகள எடுத்து வளர்த்துகிட்டு இருக்கன்.நல்லா தமிழ் சொல்லிக்கொடுத்திருக்கன்.இனிமே நாங்க இந்தியாலதான் செட்டில் ஆகப்போறோம்.உன் ஹஸ்பண்ட் கிட்ட சொல்லி மத்த ப்ரொசீஜர்ச பார்க்க சொல்லு"என்றவனை கையை பிடித்து இழுத்துக்கொண்டு அவனின் பிள்ளைகளிடம் சென்றவள்

"சைல்ட்ஸ்,,கேன் யூ டூ மி எ பேவர்"என்று ஆங்கிலத்தில் கேட்ட சங்கீதாவை

"சொல்லுங்க ஆண்டி"என்று நால்வரும் தமிழில பேச சங்கீதா அப்படியே சாக் ஆனாள்.ஏனென்றால் அவனின் பிள்ளைகள் அவ்வளவு சரலமாக தமிழ் பேசினார்கள்.

"உங்கப்பா அதோ இருக்காங்கலே ஆண்டி அவங்கள் லவ் பன்னாரு.ஆனா அவங்க நம்ம ப்ரெண்ட்சா மட்டுமே இருப்போம்னு சொல்லிட்டாங்க.இப்போ நீங்க போய் கேட்டா அவங்க வேனாம்னு சொல்ல மாட்டாங்க.சோ,கேட்குறீங்களா.உங்கள்களுக்கும் அம்மா வந்த மாதிரி இருக்குமே"என்றவளை

பெரியவள் ஜபனீஸ் பெண் காயத்திரி "இல்லை ஆண்டி,அப்பாக்கு எமோசனால் ப்ளாக் மெயில் பன்ன பிடிக்காது.எங்களுக்கும் அதுல இஷ்டமில்ல"என்றாள்.சங்கீதா அப்போதுதான் கவனித்தால் பெரியவளுக்கும் எப்படியும் 10 வயது இருக்கும் என்று.இந்த வயதில் இப்படி ஒரு பக்குவமா என வியந்தவள்

"சரி நீங்க எல்லோரு நல்லவங்களாவே இருங்க.நானே போய் கேட்கிறேன்"என்று வேகமாக எல்லோரும் இருந்த இடத்துக்கு செல்ல தீபக்கும் அவனது பிள்ளைகளும் சங்கீதாவை தடுக்க வந்தும் முடியாமல் நின்றனர்.

"ஹேய் எல்லோரும் இங்க பாருங்க.இவங்க எல்லோரும் நம்ம தீபக் தத்தெடுத்து இருக்கிற பிள்ளைங்க.இவன் இன்னமும் இந்த லூச நினைச்சிக்கிட்டு கல்யாணம் பன்னாம இருக்கான்.இந்த எரும ஏதோ லட்சியம் கனவுனு சொல்லிக்கிட்டு திரியுது.இப்ப என்ன பன்னலாம் "என்றவளை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தனர்.ஏனென்றால் தீபக் இப்படி ஒரு நல்ல காரியம் செய்வான் என யாரும் கனவிலும் நினைக்கவில்லை.எல்லோருமே அமைதியாக இருக்க ரேனு விடம் சென்ற ப்ரியா

"ரேனு ப்ளீஸ், உன் லைப்ப நீ வாழுடா.அதே போல உன் கனவுகளையும் நிறைவேத்திக்க.தனியா இல்ல தீபக் கூட சேர்ந்து.ஏன்னாக, அவன பார்த்தியா உன் கனவுகளை அவனோட கனவுகளா நினைச்சுக்கிட்டு வாழ்ராண்டா.உன்ன எவ்வளவு நேசிச்சிருந்தா அவன் இப்படி செஞ்சிருப்பான்னு கொஞ்சம் யோசிடா"என்றவளை ரேனு எதுவும் கூறாமல் நேரடியாக தீபக்கிடம் சென்று

"ஏண்டா இதை என்கிட்ட சொல்லல.டெய்லி என்கூட பேசுர நீ முக்கியமான விசயத்தை மறைச்சிட்ட பார்த்தியா "என்றவளை

"இல்லடா.."என்று தீபக் இழுக்க இவர்கள் இருவருமே இதை பேசி தீர்த்துக்கொள்ளட்டும் என்று மற்றவர்கள் ஒதுங்கி இருந்தனர்.

யாரும் எதுவும் பேசாமல் இருக்கும் போது காயத்திரி (அதாங்க நம்ம ஜப்பான் பொண்ணு)

"ரேனும்மா,எங்களுக்கு அப்பா கிடைச்சாச்சுமா.நாங்க அம்மான்னு நினைக்குறது உங்களைத்தான். நீங்க எங்கள உங்க பிள்ளைங்களா நினைச்சா அப்பா கூட சேர்ந்துக்கோங்க இல்லன்னா...நாங்க எல்லோரும் உங்களுக்கு பிள்ளைங்களா ஆயிடுறம்..எப்படின்னு யோசிக்கிறிங்களா,நாங்க உங்க ஆர்பனேஜ்ல சேர்ந்துர்ரோம்"என்றவளை தீபக்

"காயூ என்ன பேசுற.உன்கிட்ட சொல்லிர்க்கேன்ல யாரையும் எந்த சந்தர்ப்பத்துலயும் எமோசனல் ப்ளாக்மெயில் பன்ன கூடாதுன்னு "என்று எகிறியவனை சங்கீதா

"ஏய் எதுக்கு அவகிட்ட எகிர்ர..அவ சொல்ரதுல என்ன தப்பு.நீ அம்மா இல்லாம எப்படி அவங்கள் வளர்ப்ப.காயூ சொன்னதுதான் கரக்ட்.இந்த சின்ன பொண்ணுக்கு தெரிஞ்சரிஞ்சது எருமை மாடு மாதிரி இருக்குற உனகு தெரியலயா.சரி ரேனு நீ இப்போ என்ன சொல்ல போற"என்று சங்கீதா ball ஐ அவள் பக்கம் மெதுவாக தள்ளிவிட்டால்.

ரேனு எதுவுமே யோசிக்காமல் "காயூமா நீங்க சொன்ன உங்களோட செகண்ட் ஆப்சனான நீங்க எல்லோரும் எனக்கு பிள்ளைகளாக ஆகலாம்டா"என்றவளை சங்கீதா எரித்து விடுவது போல பார்க்க தொடர்ந்து ரேனு

"என் ஆர்பனேஜ்ல இல்ல,உங்க வீட்ல உங்ககூட,உங்க அப்பா கூட நம்ம எல்லோரும்"என்றவளை காயூ ஓடிச்சென்று அனைக்க என்ன நடக்கின்றது என்று புரியாமல் மற்ற குழந்தைகள் முழிப்பதை பார்த்து அவர்களையும் ரேனு கை நீட்டி அழைக்க எல்லோரும் சென்று "அம்மா" என்று ஒரு சேர கூப்பிட்டதை என்னி எல்லோரும் சந்தோசப்பட்டனர்.

"ஹ்ம்ம்ம்கும்" என்று இருமிய தீபக் "ஏண்டா செல்லங்களா நீங்கள்ளாம் போய் விளையாடுங்க.அம்மாகிட்ட கொஞ்சம் அப்பா பேசனும்" என்றவனை ரேனு நேரடியாகவே

"தீபக் உண்மைலயே மனப்பூர்வமாத்தான் நான் சொல்ரே.என் தோழான் ,என் காதாலனாகாமல் என் கணவனாகப் போகின்றான்" என்று கவிதை மாதிரி கூறியவளை எல்லோரும்

"அட அட,கவிதை கவிதை ,படி படி"என்று குனா கமலை போல கலாய்த்தனர்.மரண வீடு திடீரென்று இப்படி கலகலப்பாக மாறியது எல்லோருக்குமே சந்தோசம்.

அடுத்த முகூர்த்தத்திலேயே தீபக்-ரேனு திருமணம் நடந்து முடிக்க முதல் இரவு அறைக்குள் ரேனுவை அனுப்ப தயாராகிய ப்ரியா "ஹேய் எங்களுக்குத்தான் பெர்ஸ்ட் நைட் முறைச்சிக்கிட்டே போச்சு.நீயாச்சும் போய் பெர்ஸ்ட் நைட்ட ஒழுங்கா கொண்டாடு..இல்லன்னா ஜீவா சுமி (@zeeraf )மாதிரி,இல்லன்னா சரவனன் செல்வி (@dharshinichimba) மாதிரி அப்புறம் ஹிரன்மயி-அகில் (@deepababu) மாதிரி நீயும் வேஸ்ட் பன்னு "என்றால் .

ரேனு நக்கலாக சிரித்தவள் "அடப்போ ப்ரியா..நானாச்சும் வேஸ்ட் பன்னுறதாவது.இன்னும் பத்து மாசத்துல புது மெம்பர் இருக்கும் என் கைல "என்று கட்டை விரலை உயர்த்திகாட்டி விட்டு சென்றாள்.

மேல் சொன்ன எவரைப்போலவும் இல்லாமல் முதல் இரவு முதல் இரவாகவே சிறப்பாக அமைந்தது.

காலையில் நேரத்துக்கு எழும்பிய ரேனு சமையல் செய்து கொண்டிருந்த ப்ரியா,சங்கீதாவைக்கான கிட்சன் வந்து

"ஹாய்.குட்மார்னிங்க்"என்றவளை சங்கீதாவும் ப்ரியாவும் கோபமாக முறைக்க ப்ரியாவோ

"ஏண்டி .நைட் அவ்வளவு படிச்சி படிச்சி சொன்னேனே.நாங்கல்லாம் வேஸ்ட் பன்ன மாதிரி நீயும் பன்னிடாதன்னு.இப்ப என்னடான்னா இவ்வளவு ஏர்லியா எந்திரிச்சிருக்க.அப்படின்னா..."என்றவளை ரேனு

"மேடம்.அதெல்லாம் கரக்டா நடந்துச்சு.அதான் ஐயா முடியாம டயர்ட்டாகி இன்னும் குறட்டை விட்டு தூங்கிக்கிட்டு இருக்காரு"என்று புன்னகைத்தவள் சங்கீதாவிடம்

"ஆமா சங்கீ.ப்ரியா ஏதோ நாங்கல்லாம் வேஸ்ட் பன்ன மாதிரின்னு சொல்ரா.சோ நீயும் வேஸ்ட்தான் பன்னியா"என்றவளை முறைத்த சங்கீதா

"அத ஏண்டி கேட்குற.நான் சும்மா ஒரு பெயருக்கு டய்ர்ட்டா இருக்கு தூங்கலாமா என்று கேட்டதுதான் தாமதம்.கொண்டு வந்த பாலை குடிச்சிட்டு பக்கி பய தூங்கிட்டான்.அதுக்கு அப்புறம் அவன தூக்கத்துல இருந்து எழுப்பி..அது பெரிய கதை.அத சொல்லனும்னா ஒரு நாள் பத்தாது"என்றவளை ப்ரியா

"இவ ஒருத்தி எப்ப பாரு நாராசமாவே பேசிக்கிடு இருப்பா" என்றவளை ரேனு

"ஆமா ப்ரியா சங்கீதா சமைக்குறா.நீ என்ன பன்ற கிட்சண்ல"என்றவளை சங்கீதா

"அங்க பாரு, அவ தங்கச்சிகாரி அவளுக்கும் கிட்சனுக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லி குழந்தைங்கள பார்த்துக்குற வேலய பொறுப்பெடுத்திருக்கா.இவ சீப் குக் கிற்கு எடுபுடி வேல பார்க்க வந்திருக்கா" என்று வார ப்ரியா வெட்கம் தாலாமல் தலையை குனிந்து வெங்காயம் வெட்டுவதில் மும்முரமாக இருந்தால்.

Bạn đang đọc truyện trên: Truyen247.Pro