4
போனை கையில் எடுத்து ஹலோ என்றான் அர்விந்தன்.மறுபுறம் ஒரு பெண்ணின் குரலை கேட்டதும் குழம்பியவனாக
"யாரு பேசுரீங்க"
"நான் சங்கீதா பேசுரன்.உங்க காலேஜ் மேட் ரம்யாவோட அக்கா இருக்காள்ள ரியா , சாரி ப்ரியா அவளோட ப்ரெண்ட்.எனக்கு உங்க வைப் மைதிலிய கூட தெரியும்"
"ஓஹ் சங்கீதாவா,எதுக்கு உங்கள பத்தி இவ்வளவு அறிமுகம். உன் சீனியர் சங்கீதா பேசுரேன்னு சொல்லியிருந்தா உடனே யெஸ் சீனியர்னு சொல்ல போறன்.பரவாயில்ல உங்களுக்காச்சும் என்ன நினைவுருக்கே.ஆனா ப்ரியா மேடமுக்கு என்ன ஞாபகமே இல்ல போல.என்ன தெரியாத மாதிரியே பேசினாங்க.சரி ரம்யா இப்போ எங்க.கல்யாணம் ஆச்சா அவளுக்கு?"
இதைக்கேட்ட சங்கீதாவுக்கு உடனே என்ன சொல்வதென்று தெரியவில்லை.ப்ரியா அவனை தெரியாதவள் போல நடந்துகொண்டால் என்பதே அவளுக்கு பெரிய இடியாக இருந்தது. இதுல இவன் வேற ரம்யா எங்கன்னு கேட்கிறான்.ஏதோ ஒன்னு சரியில்லாத மாதிரி இருக்கே என்று மனதுக்குள் என்னியவள்
"ரம்யா கல்யானம் முடிச்சி இப்போ 6 மாசம்.அவ லண்டன் போய்ட்டா.உங்களுக்கு தெரியாதா"என்றால் சங்கீதா.
"இல்ல சீனீயர்.."
"உதை வாங்க போற அர்விந்த் .சும்மா பேர சொல்லியே கூப்புடு .ஒக்கே."
"சரி சங்கீதா.எனக்கு அவ கல்யானம் பன்னது தெரியாது.நான் MBA முடிச்சதும் அப்டியே சவுத் ஆப்ரிக்கா போய்ட்டன். கல்யாணம் கூட அவசரமா முடிஞ்சதால யாரயும் இன்வைட் கூட பண்ண முடியல"
"ஒஹ்ஹ் அப்போ ரம்யாக்கும் உங்க திருமணம் பத்தி தெரியாதா?"
"இல்ல சங்கீதா நாங்க கல்யானம் செய்து இரண்டே நாள்ள அப்ரோட் போயிட்டோம்"
"சரி அர்விந்த் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நாளைக்கு ஆபிஸ் வாங்க.நானும் அங்கதான் குப்பை கொட்டுறன் .நாளைக்கு சாவகாசமாக பேசலாம்.மைதிலிய கேட்டதா சொல்லுங்க "
என்று சங்கீதா கூற
"ஒக்கே சங்கீதா நாளைக்கு பார்க்கலாம்.டேக் கெயார் "என்று அவன் போனை கட் செய்தான்.
கால் கட் செய்ததும் சங்கீதாவுக்கு பெரிய குழப்பமாகி போனது.ஏனென்றால் ரம்யா,அர்விந்த் ,மைதிலி மூவரும் ரொம்ப க்லோஸ் ப்ரெண்ட்ஸ்.அதுவும் இதுல அர்விந்தும் மைதிலியும் கல்யாணம் பன்னிருக்காங்க.ஆனா ரம்யாவுக்கு அது தெரியல.என்ன நடக்குது. ஒரு வேலை இவங்க கல்யானம் லவ் மெரேஜோ.ஆனா அன்னைக்கு அர்விந்த் ரியா அப்பா கூட ஏதோ பேசிக்கிட்டு இருக்கும் போது ஏன் அப்படி சொன்னா.
காலேஜில் நடந்தது...
"ஹேய் ரியா என்னடி .ரொம்ப ஆர்வமா யார பார்த்துக்கிட்டு இருக்க?" என்று சங்கீதா கேட்க அதற்கு சுதாகரித்த ப்ரியா
"ஆஹ்.இல்லை சும்மாதான்"
"ஹேய் யாருகிட்ட கத விடுற.ஹேய் அது அர்விந்த் தானே .நான் அவன ப்ரபோஸ் பண்ணலாம் என்று இருக்கேண்டி"என்றாள் சங்கீதா விளையாட்டாக.
உடனே அவளை முறைத்த ப்ரியா"அங்க பாரு.மாமாவும் மாப்ளயும் ரொம்ப க்லோசா பேசிகிட்டு இருக்காங்க.நீ உன் கனவு எல்லாத்தையும் ஓரமா வெச்சிட்டு படிக்கிற வேலய பாரு"
"ஏது மாப்ளயா?என்னடி ரம்யா லவ் பண்றாலா"
ஏனென்றாள் . ஏனென்றால் அர்விந்த் பேசிக்கொண்டிருந்தது ரம்யாவின் அப்பாவுடன்.
"லூசு,சரி வா க்லாஸ்கு போகலாம்" என்று சங்கீதாவை இழுத்துக்கொண்டு ப்ரியா சென்றுவிட்டால்.
Bạn đang đọc truyện trên: Truyen247.Pro